திங்கள், 17 மே, 2010

முத்துக்குமார் பெயரில் பாசறை: திருமாவளவன் அறிவிப்பு

முத்துக்குமார் பெயரில் பாசறை: திருமாவளவன் அறிவிப்பு

சென்னை, மே 17- முத்துக்குமார் பெயரில் பாசறை தொடங்கப்படும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்தேறி ஓராண்டை எட்டிவிட்டது. மே 18, அந்தப் பேரவலத்தின் நினைவு நாளாக உலமெங்கும் தமிழர்களால் ஆறாத் துயரத்துடன் நினைவுகூரப்படுகிறது.

விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கிறோம் என்னும் பெயரில் அப்பாவிப் பொதுமக்களை சிங்கள ராணுவம் மனிதநேயமற்ற முறையில் கொன்று குவித்ததை உலகமே வேடிக்கை பார்த்தது.

சிங்கள இனவெறியர்களுக்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் உற்ற துணையாய் இருந்து மேலும் மேலும் அவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றன.

இத்தகைய சூழலில் ஈழத் தமிழர்களைப் பாதுகாப்பதும் ஈழத் தமிழர்களுக்கான ஒரு நிலையான அரசியல் தீர்வை வென்றெடுப்பதும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் உள்ளிட்ட உலகத் தமிழர்களின் முன்னால் உள்ள பெரும் சவாலாக மைந்துள்ளது.

மே 18 - முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் இந்த நினைவு நாளில் தமிழீழ மக்களுக்குத் தொடர்ந்து துணை நிற்போம்! தமிழீழ விடுதலை அரசியலை டைகாப்போம்! என இனமான உணர்வுள்ள ஒவ்வொரு தமிழரும் உறுதியேற்போம்.

இத்தகைய உறுதியை ஏற்கும் வகையில் ஈழ விடுதலைக்காகத் தன் உயிரைக் கொடையளித்த தம்பி முத்துக்குமார் பெயரில் பாசறை ஒன்றை சென்னையில் தொடங்குகிறோம். அறவழியில் தமிழீழ விடுதலைக்கான அரசியலை முன்னெடுத்துச்செல்லும் ஒரு களமாக இந்த பாசறை மையும்.

இவ்வாறு திருமாவளவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள்

படிப்பறிவில்லாத இளைஞர்கள், தவறான அரசியல்வாதிகளால் உசுப்பிவிடப்பட்டு உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள். எங்காவது படித்தவன் ஒரு டாக்டர், ஒரு இஞ்சினீயர், ஒரு பேராசிரியர், ஒரு பேங்க் மேனேஜர், ஒரு தொழிலதிபர் இது போன்ற பிரச்சினைக்காக தீக்குளித்திருக்கிறார்களா? ஏன் இந்த பிரச்சினையை வைத்து பிழைப்பு நடத்திக்கொன்டு இருக்கும் வைகோவோ, நெடுமாறனோ, திருமாவளவனோ, சீமானோ தீக்குளிப்பார்களா? சூடா டீ கூட குடிக்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்து உயிரைவிட்ட இருபதுக்கு மேற்பட்ட இளைஞர்களை பற்றி தெரியும். ஓ.கே., இந்த பணக்காரநாடுகளில் வசதியாக செட்டிலான இலங்கை அகதிகள், இலங்கை பிரச்சினைக்காக எவனாவது தீக்குளித்து உயிரை விட்டிருக்கானா? எண்ணிப்பாருங்கள்.

By Anbarasu, Guindy
5/17/2010 5:38:00 PM

தஞ்சாவூரில் நேற்று வீரப்போராளி முத்துக்குமார் சிலை திறக்கத்தடைவிதித்துள்ளனர். எனவே, வீட்டிற்கொரு முத்துக்குமார் சிலை தந்து பாசறையின் பயணத்தைத் தொடரவாழ்த்துகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/17/2010 5:38:00 PM

வைகோவையும், நெடுமாறனையும் சமாளிக்க திருட்டு திருமாவை கருணா நன்றாக பயன்படுத்திக் கொள்கிறான். ஒரு எம்.பி பதவிக்கு விலை போன திருமா சென்னை நகர சுவர்களில் மீசையை முறுக்குகிறார். ஆனால் ராஜபக்சேவிடம் மூக்குடை பட்டு வந்தார். ஒரு பக்கம் கொலைகார காங்கிரஸுடன் கூட்டு, மறுபக்கம் ஈழத்தமியர்களுக்கு வக்காலத்து. என்ன ஒரு நாடகம்.

By நவீன் சென்னை
5/17/2010 5:37:00 PM

தலை நிமிர்ந்தோம் உன்னால்.. என்றும் அணி திரள்வோம் உன் பின்னால்.. வாழ்த்துக்கள்.. தலைவா.. வேல்...

By lokesh
5/17/2010 4:57:00 PM

rajapakshevai sanththithu avan thantha virunthai undu kaliththu vittu avan elanamaa pesiyathai kettu thalai kuninthu nindru vittu inge maar thattum ivar - oru uyirth thiyagiyin peyaraal paasarai amaikka (konjamum vetkama illai??)thahuthi atravar..

By sinthanaikkiniyan
5/17/2010 4:36:00 PM

வாழ்த்துக்கள்!.

By Human
5/17/2010 4:04:00 PM

வாழ்த்துக்கள்!.

By Human
5/17/2010 4:04:00 PM

DAI....DAI UNNAI POLA ORU MOLLAMARI, MUDICHAVUKI..YARAVATHU ERUKANGALADA..NAAAYEEEE /// RAJABAKSHE KITTA MALAR KOTHU VANGI VANDHA NAYEEEE NEYALLAM ORU THEVIDI........

By KASAMALM KARUNANIDHI
5/17/2010 4:01:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக