வியாழன், 20 மே, 2010


இலங்கை சர்வதேச திரைப்பட விழா: தமிழ்த் திரையுலகம் புறக்கணிப்பு


சென்னை,​​ மே 19:​ இலங்கையில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவை தமிழ்த் திரையுலகம் புறக்கணிக்கிறது.​ இது குறித்து தமிழ்த் திரையுலகின் அனைத்து அமைப்புகளும் புதன்கிழமை வெளியிட்டுள்ள கூட்டறிக்கை விவரம்:கடந்த வருடம் ஏராளமான தமிழர்களை கொன்று ஈழ மண்ணை சுடுகாடாக்கி மகிழ்ந்தது சிங்கள அரசு.​ அந்த மரண ஓலம் இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கிறது.​ தங்கள் உடல் உறுப்புகளை இழந்து அந்தப் போரின் நடமாடும் நினைவுச் சின்னங்களாய் வாழ்ந்து வரும் சொந்தங்களுக்கு ஆதரவை முழுவதும் தெரிவிக்கும் வகையில் வரும் ஜூன் 4,5,6 ஆகிய மூன்று நாள்கள் நடைபெற இருக்கும் சர்வதேச திரைப்பட விழாவை தமிழ்த் திரையுலகம் புறக்கணிக்கிறது.​ ​​ இந்த புறக்கணிப்பு முடிவுக்கு ஹிந்தி,​​ தெலுங்கு,​​ கன்னடம்,​​ மலையாளம் உள்ளிட்ட இந்திய திரையுலகினர் அனைவரும் ஆதரவு தர வேண்டும்.​ ​​ தான் செய்த சதி வேலைகளை மறைத்து குறுக்கு வழியில் புகுந்து புகழ் தேட நினைக்கும் சிங்கள அரசுக்கு தமிழ்த்திரை உலகின் ஒட்டு மொத்த புறக்கணிப்பு பாடமாக அமையட்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.​
கருத்துக்கள்

இந்தியாவின் சார்பில் போரை நடத்தினோம் என்றது சிங்களம். கிளிநொச்சியைக் கைப்பற்றியதும் போரை நிறுத்த திட்டமிட்ட பொழுது இந்தியாதான் அனைவரையும் அழிக்கச் சொன்னது என்றும் அறிவித்தது சிங்களம். இத்தகைய இந்தியம்தான் அயர்லாந்திலும் அடுத்து கொரியாவிலும் நடத்த அறிவித்து ஏற்பாடுகள் செய்த இந்தத் திரைப்பட விருது விழா வணிக ஒப்பந்த முகாமைக் கொழும்பில் நடத்த செய்துள்ளது. நம்மை ஆளும் கொலைகாரக் கட்சியைகத் தட்டிக் கேட்க வழியற்ற நாம் சுற்றி வளர்த்துப் பேசிக் கொண்டுள்ளோம். எனினும் இந்தியாவில் உள்ள அனைத்துத்திரைப்படக் கலைஞர்கள் மட்டுமல்லாமல் வணிக நிறுவனங்களும் கொலைவெறி வெற்றி விழாவைப் புறக்கணிக்கச் செய்து பிசுபிசுத்துப் போகச் செயவதன் மூலம் வெற்றி காணலாம். எனவே, அறிவிப்புடன் நில்லாது பிற மொழிக் கலைஞர்களையும் வணிக நிறுவனங்களையும் சந்தித்து புறக்கணிக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தி வெற்றி காண்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.

By Ilakkuvanar Thiruvalluvan
5/20/2010 2:29:00 AM

Ruling congress party still helping to kill Tamils in Sri Lanka. TAMIL NADU GOVERNMENT ALSO STILL SILENT

By cholan
5/20/2010 1:36:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக