சனி, 27 மார்ச், 2010

அதிமுகவுடன் பாமக ரகசிய கூட்டு; வன்முறையைத் தூண்டவும் திட்டம்: கருணாநிதி திடீர் தகவல்



சென்னை, ​​ மார்ச் 26:​ பென்னாகரம் இடைத் தேர்தலில் அதிமுகவுடன் பாமக ரகசிய கூட்டு வைத்துள்ளதாக முதல்வர் கருணாநிதி புகார் தெரிவித்துள்ளார்.மேலும்,​​ வாக்குப் பதிவின்போது வன்முறையைக் கட்டவிழ்க்கவும் அந்தக் கட்சி திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.பென்னாகரம் இடைத் தேர்தல் வாக்குப் பதிவு சனிக்கிழமை நடைபெறுகிறது.​ இந்த நிலையில்,​​ ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சியினருக்கு முதல்வரும்,​​ கூட்டணியின் தலைவருமான கருணாநிதி வேண்டுகோள் விடுத்து வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:""பென்னாகரம் இடைத் தேர்தலில் வேறு எந்தக் கட்சிக்கும் ஏற்படாத காழ்ப்பும்,​​ வெறுப்பும் பாமக நிறுவனர் ராமதாஸýக்கு ஏற்பட்டு இருக்கிறது.​ அதிமுகவுக்குக் கூட ஏற்படாத அளவுக்கு அவருக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது.திமுகவைப் பற்றியும்,​​ குறிப்பாக என்னைப் பற்றியும் ஒருமையிலே பேசி தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.பென்னாகரத்தில் அண்மையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் வேண்டுகோள் விடுத்து உரையாற்றினேன்.​ அதைத் தொடர்ந்து ராமதாஸ் ஆற்றியுள்ள வன்முறைக்கான தூண்டுகோல் உரையும்,​​ எல்லோருடைய கவனத்துக்கும் வந்திருக்கும்.திமுகதான் தன்னுடைய முதல் எதிரி எனவும்,​​ அதை ஒழிப்பதுதான் தன்னுடைய முக்கிய பணி என்றும் அவர் கூறியுள்ளார்.​ அதற்காக,​​ அதிமுகவுடன் ரகசியமாக கூட்டுச் சேர்ந்து பென்னாகரம் இடைத் தேர்தலை சந்திப்பார் என்பதற்கு ஆதாரம் அவரது பேச்சில் இருந்து தெரிகிறது.தொலைபேசியில் பேசினார்:​​ இரண்டொரு வாரங்களுக்கு முன்பு என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் பேசிய பேச்சுக்கும்,​​ அந்தப் பேச்சிலே இருந்த மென்மைக்கும்,​​ திடீரென்று தீப்பொறி கக்க அவர் பென்னாகரத்தில் வெளியிட்டுள்ள கருத்துகளுக்கும் }​ மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்.அந்த ஆச்சரியத்தைப் போக்கியது அவருடைய கடந்த கால நடவடிக்கைகளும்,​​ அறிக்கைகளும்,​​ பேச்சுகளும் என்பதை அனைவரும் அறிவர்.அதிமுகவையும் கூட்டுச் சேர்த்துக் கொண்டு இந்த இடைத் தேர்தலிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற வெறித்தனமான போக்கு அந்த வட்டாரத்தில் உருவாகியுள்ளது.​ நான் மட்டுமல்ல }​ நாளேடுகளில் அவருடைய அறிக்கைகள்,​​ பேச்சுகளைப் படிப்பவர்களும் புரிந்து கொள்ள முடிகிறது.வன்முறைகளை கட்டவிழ்த்தாலும்:​​ தேர்தலின் போது,​​ அவர்கள் என்னதான் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டாலும்,​​ களப் பணியாற்றும் கட்சியினர்,​​ தோழமைக் கட்சியினர் அவைகளைப் பொருட்படுத்த வேண்டாம்.பதிலுக்குப் பதில் என்ற நிலை உருவாகாத அளவுக்கு பண்போடும்,​​ அன்போடும்,​​ அமைதி காக்கும் மனத்தெம்போடும் வாக்காளர்களைச் சந்திப்பதிலும்}வெற்றி ஒன்றில் மட்டுமே நாட்டம் கொண்டு அராஜக ஆட்டம் போட திட்டம் தீட்டி செயல்படக் கூடிய தீய சக்திகளுக்கு,​​ தீவிரவாத சக்திகளுக்கு சற்றேனும் இடம் கொடுக்கக்கூடாது.கருமமே கண்ணாயினர் என்ற முதுமொழிக்கு ஏற்ப,​​ பணியாற்றி ஜனநாயகத்தை அலுங்காமல்,​​ குலுங்காமல் காத்திட வேண்டும்'' என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
கருத்துக்கள்

வாக்காளர்களே! திமுகவின் சாதனைகளையும் தந்த வேதனைகளையும் சீர் தூக்குங்கள்! பாமக வின் தமிழ் நலப் பணிகளையும் சாதி நலப் பணிகளையும் அடுத்தவர் பக்கம் பந்தை எறிந்து விட்டுக் கை கட்டி நின்றதையும் சீர் தூக்குங்கள்! அதிமுக விற்குச் சொல்ல என்ன இருக்கின்றது? ஆளுங்கட்சியாகச் செயல்பட்ப பொழுது இருந்த நிலைகளையும் எதிர்க்கட்சியாகச் செயல்படாதிருக்கும் நிலைகளையும் சீர் தூக்குங்கள்! தனித்தனியே குற்றமும் குணமும் நாடி மிக்கவற்றைத் தொகுத்து அவற்றைத் தரப்படுத்தித் தமிழ் நாட்டில் தமிழுக்குத் தலைமை தரப் போராடும் வேட்பாளருக்கு வாக்களியுங்கள். ஒருவரும் தக்கவர் இல்லையென்றால் செல்லா வாக்காகப் பதிந்து வாருங்கள். ஒன்றும் குறைந்து போகாது. ஆனால் வாக்குரிமையைப் பயன்படுத்துங்கள்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/27/2010 2:29:00 AM

முதல்வரின் உரையையும் வன்னியர் கட்சியின்- மன்னிக்கவும் பாட்டாளி மக்கள்கட்சியின் - தலைவர் உரையையும் படிக்கும் பொழுது ஒன்று மட்டும் நன்கு புரிகின்றது. இரு தரப்பாருக்குமே வெற்றி மீது ஐயப்பாடு வந்து குழப்பத்தில் உள்ளனர். தோல்வி அச்சத்தில் கூறுகின்றவற்றை இப்பொழுது கூறுகின்றனர். திமுக வென்றால் ஊழலின் வெற்றி என்று சொல்லவும் பாமக வெற்றி பெற்றால் வன்முறையின் வெற்றி என்று சொல்லவும் வெற்றி பெற்றவர் சன நாயகம் வென்றது எனவும் தோல்வியுற்றவர் பண நாயகம் வென்றது எனக் கூறவும் ஆயத்தமாகி விட்டனர். ஆனால், யார் வென்றாலும் தோற்பது வாக்காளர்கள்தாம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/27/2010 2:28:00 AM

Need of the hour, every to win. So Requesting CEC Central Election Authority to cancel pennagaram bi-election so that "democracy" and all political party win. Otherwise democracy and everyone will be defeated by vested entity. Also CEC Central Election Authority need to amend by working with govt in way that no bi-election all over country.

By reader
3/27/2010 2:19:00 AM

This guy uses the same tactics,whenever he feels his party might loose...way back in 2006 general elections for TN assembly he just blabered AIADMK is planning to give Rs200 crore to a leading actor in TN film industry for campaign....but he never came forward to prove it.Even though his party managed to get only 90+ seats and begged support from others and still its a minority govt.

By Vignesh
3/27/2010 12:35:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக