வெள்ளி, 26 மார்ச், 2010

வாழ்க தமிழ்!வளர்க தமிழ்!வளமாகட்டும் திமுக

தமிழ்த்திரையுலகை திமுக ஆக்கிரமித்து வருவது தமிழுக்கு நல்லது என “உடன்பிறப்புகள்”கலைஞர் புகழ்பாடிவரும் வேளையில்,கலைஞரின் அரசியல் வாரிசுகள் எப்படியெல்லாம் திரையுலகில் தமிழை வளர்க்கிறார்கள்(!) என்று பார்க்கலாம்!

“காகிதப்பூ”நாடகம் மூலம் தனது துணைவியார் ராஜாத்தி அம்மையாரைத் திருமணம் செய்து கொண்ட கலைஞர்,”பூம்புகார் புரடக்சன்”மூலம் தனது மருமகன் முரசொலி மாறனுக்கு திரையுலக வாய்ப்பை ஒளிமயமாக்கினார்.அவரும் திரைப்படத் தயாரிப்பாளராக,இயக்குனராக ஆக்கப்பட்டார்.கலைஞரின் மூத்த மனைவியின் மகன் மு.க.முத்துவை திரைப்பட நடிகராக்கினார்.இப்போது அவர் மகன் திரைப்பட பின்னணிப் பாடகராக்கப்பட்டுள்ளார்.அரசியல் பவனிக்கு முன்பாக,தனது இரண்டாவது மனைவியின் இரண்டாவது மகனான மு.க.ஸ்டாலினை “குறுஞ்சிமலர்”மூலம் சின்னத்திரையில் அறிமுகம் செய்தார். பின்னர் அரசியல் வாரிசாக “துணை முதல்வராக”ஆக்கப்பட்டார். இப்போது அவரது மகன் உதயநிதி ஸடாலின் திரைப்படத் தயாரிப்பாளராக ஆக்கப்பட்டுள்ளார்.

அவரது நிறுவனத்தின் பெயர் “ரெட ஜெயன்ட் மூவிஸ் “என்ற தூய தமிழ்ப்பெயர்.தனது மகன் அழகிரியை அரசியலில் மத்திய அமைச்சராக்கியுள்ளார்.இவர் “ராயல் வீடியோ “என்ற தமிழ்ப்பெயரில் ஒரு கடை நடத்திவருகிறார்.மேலும் “ராயல் கேபிள் விஷன்”என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.இவரது மகன் துரை தயாநிதி திரைப்படத் தயாரிப்பாளராக ஆக்கப்பட்டுள்ளார்.

இவர் உருவாக்கியுள்ள நிறுவனத்தின் பெயரும் தூய தமிழ்ப் பெயரான “கிலௌடு நைன”என்பதாகும்.ஏற்கனவே முரசொலி மாறன் குடும்பத்தினர் “சன்”என்ற தமிழ்ப்பெயரில் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தி வருகின்றனர்.இப்போது “சன் பிக்சர்ஸ்”என்ற தமிழ்ப்பெயரில் திரைப்படத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.சமீபத்தில் மு.க.அழகிரி,மு.க.ஸடாலின் குடும்பத்தையடுத்து மு.க.தமிழரசு மகனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கலைஞர் தான் கலந்து கொள்ளும் திருமண நிகழ்ச்சிகளில்

தன கட்சித்தொண்டர்களுக்கு கூறும் அறிவுரை ,

”உங்கள் குழந்தைகளுக்கு, நிறுவனங்களுக்கு தமிழ்ப்பெயரிடுங்கள்.
தமிழ்மொழிக்கு முன்னுரிமை கொடுங்கள்.”
தாத்தா சொத்து பேரன்களுக்கு…

தாத்தா சொல்வதை அப்படியே வழிமொழியும் வாரிசுகளும், பேரன்களும் ஊடகங்களை ஆக்கிரமிக்கும் தமிழக அரசியல் மற்றும் தமிழ்த்திரை உலகத்தில் தமிழ்மொழியை வளர்க்க எப்படியெல்லாம் பாடுபடுகிறார்கள் என “உடன்பிறப்புகள்”திமுக-கலைஞர் புகழ் பாடுவதை பொறாமையுடன் பார்க்காதீர்கள் !

ஹரப்பா தமிழன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக