வியாழன், 25 மார்ச், 2010

கவின் கலை பட்டதாரிகள் உண்ணாவிரத அறிவிப்பு



சென்னை, ​​ மார்ச் 24:​ அரசு பணியிடங்களில் தங்களை நியமிக்க வலியுறுத்தி கவின் கலை பட்டதாரிகள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ​(மார்ச் 26) குடும்பத்துடன் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.இது குறித்து சென்னையில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அச்சங்கத்தின் தலைவர் பெ.​ அய்யாவு கூறியது:சென்னை மற்றும் கும்பகோணத்தில் தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் கவின் கலைக் கல்லூரிகளில் ஓவியப் படிப்பு பட்டம் பெற்ற எங்களுக்கு ​ அரசுத்துறையில் சரியான வேலைவாய்ப்பு இல்லை.​ இந்த கல்லூரிகளில் 5 ஆண்டு ஓவியப் படிப்பு முடித்து 'பி.எஃப்.ஏ.' பட்டம் பெற்றவர்களான எங்களை அரசுப் பணிகளில் அமர்த்தாமல் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையால் நடத்தப்படும் 'டி.டி.சி.' எனும் மூன்று மாதகாலப் பயிற்சிப் பெற்றவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கவின் கலைக்கல்லூரிகளில் ஓவியப் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு அரசு பணி இல்லாத நிலை உருவாகியுள்ளதால் எங்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.எனவே தமிழக அரசு,​​ கவின் கலைக் கல்லூரிகளில் ஓவியப் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஓவிய ஆசிரியர் பணிகளை நியமிக்க ​ வலியுறுத்தி குடும்பத்துடன் உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளோம் என்று தெரிவித்தார்.
கருத்துக்கள்

1.எண்ணற்ற ஓவிய ஆசிரியர் பணியிடங்கள் ஒழிவாக உள்ளன. அவற்றில் கவின்கலைப் பட்டதாரிகளையே நியமிக்க வேண்டும். 2. தொழில் நுட்பத் துறையால் நடத்தப்படும் ஓவியத் தேர்வினை நிறுத்த வேண்டும். 3. தேவையெனில் கவின்கலைக் கல்லூரிகளில் குறுங்கால ஓவியப் பயிற்சி அளிக்கலாம். 3. கவின்கலைக் கல்லூரிகள் குடிகாரர்களின் கூடாரமாகவும் கயவர்களின் புகலிடமாகவும் மாறி வருவதாகக் கடந்த பல ஆண்டுகளாக முறையீடுகள் வருகின்றன. அப்போக்கை நிறுத்த வேண்டும். 4. பணி மூப்பின் அடிப்படையில் இல்லாமல் செல்வாக்கு அடிப்படையில் பதவி உயர்வுகள் வழங்கப்படுகின்றன. இதனையும் மாற்ற வேண்டும். இத்தகைய கவின்கலை அன்பர்களின் குறைகளைக் களைய வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/25/2010 3:37:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக