செவ்வாய், 23 மார்ச், 2010

பதுக்கல்காரர்களை தி.மு.க.​ அரசு ஊக்குவிக்கிறது: ஜெயலலிதா



சென்னை, ​​ மார்ச் 22: உணவுப் பொருட்கள் பதுக்குவோரை தி.மு.க.​ அரசு ஊக்குவிக்கிறது என்று அ.தி.மு.க.​ பொதுச் செயலாளர் ஜெயலலிதா ​குற்றஞ்சாட்டியுள்ளார்.​ இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:​ தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை அதிகரித்துவிட்டது என்று நான் ​தெரிவித்திருந்தேன்.​ ஆனால்,​​ 2009}2010}ம் ஆண்டு திட்ட மதிப்பீட்டின்படி ரூ.1.024 கோடியாக இருந்த பற்றாக்குறை,​​ திருத்திய மதிப்பீட்டின்படி ரூ.5,020 கோடியாக அதிகரித்துவிட்டது.​ அதை ஒப்பிடும்போது,​​ நடப்பு நிதியாண்டின் திட்ட ​மதிப்பீட்டின்படி வருவாய் பற்றாக்குறை ரூ.3,396 கோடி என்பது குறைவு என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.​ கடந்த ஆண்டு திட்ட மதிப்பீட்டைவிட,​​ திருத்திய மதிப்பீட்டில் கிட்டத்தட்ட 5 மடங்கு அளவுக்கு வருவாய் பற்றாக்குறை உயர்ந்திருக்கிறது.​ அதை,​​ நடப்பாண்டு திட்ட மதிப்பீட்டுடன் ஒப்பிட்டு வருவாய் பற்றாக்குறை குறைந்து வருகிறது என்று கருணாநிதி கூறியிருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது.விலைவாசி:​​ விலைவாசி உயர்வை அதிகரிக்கக் கூடிய நிதிநிலை அறிக்கையாக ​இருக்கிறதே என்ற கேள்விக்கு,​​ தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு மானியம்,​​ முதியோர் ஓய்வூதிய திட்டம்,​​ திருமண உதவி திட்டம்,​​ இலவச வேட்டி-சேலைகள் வழங்கும் திட்டம்,​​ இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம் போன்றவற்றுக்கு நிதி ஒதுக்கியது எல்லாம்,​​ ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்குதான் என்று கருணாநிதி கூறியிருக்கிறார்.​ இந்தத் திட்டங்கள் எல்லாம் எனது ஆட்சிக் காலத்திலும் செயல்படுத்தப்பட்டன.​ இதற்கும்,​​ விலைவாசி உயர்வுக்கும் என்ன சம்பந்தம்?​ நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் அரிசி,​​ சர்க்கரை,​​ பருப்பு வகைகள் எல்லாம் தி.மு.க.வினரால் கடத்தப்படுகின்றன;​ பதுக்கப்படுகின்றன.​ இதை மறைத்து,​​ ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம்,​​ அத்தியாவசியப் பொருட்களை மானிய விலையில் வழங்கும் திட்டம்,​​ ரூ.50}க்கு மலிவு விலையில் 10 மளிகைப் பொருள்கள் வழங்கும் திட்டம் ஆகியவை எல்லாம் விலைவாசி உயர்வினால் மக்கள் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்று கருணாநிதி கூறியிருப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது.​ கடந்த நான்கு ஆண்டு கால தி.மு.க.​ ஆட்சியில் வரலாறு காணாத அளவுக்கு உணவுப் பொருட்களின் விலை விஷம்போல் ஏறிக் கொண்டே இருக்கின்றன.​ இதற்கு காரணம்,​​ கடத்தல்,​​ பதுக்கல் தொழில்களை தி.மு.க.​ அரசு ஊக்குவிப்பதுதான் என்பதை மக்கள் எளிதில் அறிவார்கள்.விலைவாசி உயர்வு,​​ மின்வெட்டு,​​ சட்டம்}ஒழுங்கு சீரழிவு,​​ வேலையில்லாத் திண்டாட்டம்,​​ தொழில் உற்பத்தி,​​ வேளாண் உற்பத்தி,​​ நதிநீர்ப் பங்கீடு போன்ற மக்கள் பிரச்னைகளில் கருணாநிதி கவனம் செலுத்த வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
கருத்துக்கள்

சாத்தான் வேதம் ஓதுகிறதா? தான் செய்யாதவற்றைக் கலைஞர் செய்யட்டும் என்கிறாரா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/23/2010 3:20:00 AM

உணவுப் பொருட்களின் விலை விஷம்போல் ஏறிக் கொண்டே இருக்கின்றன. அது என்ன விஷம் போல்..வேற எதயாவது ...ஒபிட்டு பேச மாட்டார்களா ...பாவம் டா இந்த விஷம் ....

By Vignesh
3/23/2010 1:19:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக