வெள்ளி, 26 மார்ச், 2010

செம்மொழி மாநாடு இன்னும் 90 நாள்கள்: கல்லூரி மாணவர்களுக்கான விக்கிபீடியா தகவல் பக்க போட்டி



உ ​​லகத் தமிழ் இணைய மாநாட்டையொட்டி தமிழ்நாடு அரசு }​ தமிழ் விக்கிபீடியா இணைந்து கல்லூரி மாணவர்களுக்கான "விக்கிபீடியா தகவல் பக்கங்கள்' என்ற போட்டியை நடத்துகிறது.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஓர் அங்கமாக உலகத் தமிழ் இணைய மாநாடு நடைபெறுகிறது.​ இந்த மாநாட்டுக்கென ஏற்படுத்தப்பட்டுள்ள இணைய மாநாட்டுக் குழுவுக்கு,​​ கான்பூர் ஐ.ஐ.டி.​ தலைவரான மு.ஆனந்தகிருஷ்ணன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.உறுப்பினராக கனிமொழி எம்.பி.,​​ அமைப்பாளராக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பூங்கோதை,​​ ஒருங்கிணைப்பாளராக தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் டேவிதார் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் அழைப்பு:​​ கலை,​​ அறிவியல்,​​ பொறியியல்,​​ மருத்துவம்,​​ விளையாட்டு,​​ வேளாண்மை,​​ சட்டம்,​​ இயக்குநர் மருத்துவம் ​(பிசியோதெரபி),​​ சித்த மருத்துவம்,​​ பல் மருத்துவம்,​​ செவிலியர்,​​ கால்நடை மருத்துவம்,​​ பல தொழில்நுட்பப் பயிலகம் என பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு,​​ தனியார்,​​ நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கல்லூரி மாணவ,​​ மாணவியர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.தமிழ் விக்கிபீடியா போட்டி:​​ தகவல் பக்கங்கள் ஆதாரங்களின் அடிப்படையில் நடுநிலைமையுடன் அமைய வேண்டும்.​ இனம்,​​ சமயம்,​​ அரசியல்,​​ தனிநபர் குறை,​​ வேறுபாடுகள் தொடர்பாக வெறுப்பைத் தூண்டாதவாறு,​​ தமிழ் விக்கிபீடியாவுக்கு ஏற்றதாக அமைய வேண்டும்.தகவல் பக்கங்களில் உள்ள சொற்களின் எண்ணிக்கை 250 முதல் 500 வரை அமைய வேண்டும்.தகவல் பக்கங்கள் ஏப்ரல் 30}ம் தேதிக்குள் நிறைவு செய்து http:​/​/​tamilint2010.tn.gov.in​ என்ற இணையதளத்தில் அனுப்ப வேண்டும்.மேலும் விவரங்களுக்கு http:​/​/​ta.wikipedia.org என்ற இணையதளத்தைப் பார்த்து வழிகாட்டு நெறிமுறைகளைத் தெரிந்து கொள்ளலாம்.​ தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல் பக்கங்களை உலகளாவிய தமிழ் விக்கிபீடியாவில் அமைக்கப்படும்.கேமரா,​​ லேப்-டாப் பரிசுகள்...:​​ இந்தப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு லேப்}டாப்,​​ எம்.பி.​ 3 பிளேயர்,​​ டிஜிட்டல் கேமரா ஆகியவைப் பரிசாக வழங்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக