ஞாயிறு, 24 ஜனவரி, 2010

கற்க பள்ளியில்லா தமிழனுக்கு செம்மொழி மாநாடு

பதிந்தவர்_கனி on January 23, 2010
பிரிவு: கட்டுரைகள், பிரதானச்செய்திகள்

தமிழீழ மக்களை கொன்று குவிக்க உதவி வழங்கிய கொலைஞர் அவர்கள் எமது மக்களின் செங்குருதியில் ஒரு மாநாட்டை நடத்த இருக்கிறார். அதற்கு பெயர் செம்மொழி மாநாடு. என்னைப் பொறுத்தவரை அது செங்குருதி மாநாடு ஏனெனில், தமிழினம் செல்வச்செழிப்பாக வாழ்ந்து கொண்டிருக்கும்போது தான் அந்த மொழி செழிப்பாக வாழ்வதை முன்னிட்டு செம்மொழி மாநாடு நடத்தலாம். ஆனால், இன்று தமிழை ஆங்கிலம் கலந்த தமிழ் அல்லாமல் தமிழை தமிழாக எந்த இனம் வாழ்க்கையில் கடைபிடித்து வந்ததோ அந்த இனமே இன்று அழிந்து செயலிழந்து கிடக்கிறது. அதுவும் இந்த செங்குருதி மாநாடு நடத்து கொலைஞர் அவர்களால்.

இவ்வாறு இருக்கும் போது இன்று மலேசியாவில் தான் முதன் முதலாக செம்மொழி மாநாடு நடந்திருக்கிறது. எனவே, மலேசிய குழு கலந்து கொள்ள வேண்டும் என்று மலேசிய பிரதமரிடம் கொலைஞர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதை விட மலேசியாவில் தமிழர்களிற்கு நல்ல முறையில் உதவி செய்து மற்ற இனத்தவருடன் சரிசமமாக வாழ வைப்பதற்காக நன்றியும் தெரிவித்திருக்கிறார் கொலைஞர்.

இந்த கொலைஞர் செங்குருதி மாநாட்டிற்கு மலேசியா குழு வருகைத்தருவனூடாக உலகிற்கு செங்குருதி மாநாட்டை சிறப்பாக நடத்தியதாக தனக்கு தானே பெருமை சேர்ப்பதற்காக இவ்வாறு மலேசியாவை புகழலாம். அதற்கு அந்த குழுவில் வந்தவர்களும் மலேசியாவில் தமிழர்களின் நிலையை மறைத்து புன்னைகைத்திருக்கலாம். இருப்பினும் மலேசியாவில் ஒரு குடும்பம் ஐந்து வருடங்களாக மின்சாரம் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்களே அவர்களிற்கு இந்த மலேசியா அரசாங்கமோ அல்லது தமிழ்நாட்டு அரசாங்கம் மலேசியா அரசாங்கம் மூலமோ ஏதும் நடவடிக்கை எடுத்ததா இல்லை. மக்கள் எவ்வாறு வாழ்கிறார்கள்? தமிழினம் வாழவில்லை தமிழ் மொழி வாழவில்லை. செம்மொழி மாநாடு மட்டும் பெரும் பொருட்செலவில் நடக்க வேண்டிய தேவை என்ன?…

தமிழே தெரியாமல் தமிழ் நாட்டில் ஒருதலைமுறையை உருவாக்கி வைத்துக்கொண்டு அவர்கள் மூலமாக பிழைப்பு நடத்தும் கொலைஞர் மலேசியாவில் கல்வி கற்பதற்கு வழியில்லாமல் எத்தனை தமிழ் உறவுகள் தவிக்கின்றது என்று தெரியுமா? சிறந்த பெறுபேறு எடுத்த மாணவர்கள் அதாவது 7ஏ எடுத்த மாணவர்கள் அதற்குரிய வகுப்புக்களில் சேர்க்கப்படாமல் 5ஏ எடுத்த வகுப்புக்களில் சேர்க்கப்படுகின்றனர். காரணம் தமிழ்மொழியை அவர்கள் ஒரு பாடமாக கருதியதால். இப்படி தமிழ் மொழியை ஒரு அறிவு சார் கல்வியாக கருதாத மலேசியா, தமிழிற்கு இப்படியான ஒரு அவலநிலை இருக்கும்போது செம்மொழி மாநாடு யாருக்கு மொழிக்கா? கொலைஞரின் பெருமைக்கா?…

கூலாய் பெசார் தோட்டத் தமிழ் பள்ளி அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் மாணவர்கள் பெரிதும் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். கல்விகற்க வசதியில்லாமல் நாள்தோறும் மலேசியாவில் தமிழ் மாணவர்கள் வருந்திக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் செம்மொழி மாநாட்டை மக்கள் கேட்டார்களா? மக்கள் பேசும் மொழி. எம்மொழி சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறது எம்மொழியை சிறப்பித்து செம்மொழி மாநாட்டை நடத்துங்கள் என்று மக்கள் கொலைஞரை கேட்டார்களா? மொழி பேசும் மக்களிற்கா செம்மொழி மாநாடு? தற்பெருமை தேட நினைக்கும் கொலைஞருக்காகவா செம்மொழி மாநாடு நடத்தப்படுகிறது. தமிழினமே சிந்தியுங்கள்.

தமிழகத்திற்கு அடுத்தபடியாக மலேசியாவிலேயே அதிக தமிழ் பள்ளிகள் இருப்பதாக கூறிய மலேசிய குழு அங்கு தமிழ் பள்ளிகள் எந்த மாதிரியான நிலையில் இருக்கின்றது?.தமிழ் மொழிக்கு மற்ற மொழிகளுடன் ஒப்பிடுகையில் சரிநிகரான நிலை கொடுக்கப்படுகிறதா? என்று அவர்கள் கூறினார்களா?…அல்லது கொலைஞர் தான் கேட்டாரா? தமிழ் மக்கள் மீது அக்கறையுடன் செம்மொழி மாநாட்டை நடத்தும் தலைவராக இருந்தால் கேட்டிருப்பார். தற்பெருமைக்கு செம்மொழி மாநாடு நடத்தும் தலைவராச்சே கொலைஞர் எப்படி தமிழ் மக்களின் நிலை பற்றி கேட்பார்?..

மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகள் எப்போது விடிவு வரும் என்று ஏங்கித்தவித்துக் கொண்டிருக்கும்போது தமிழ் மொழிக்கு மாநாடு தேவையா? தமிழினமே சிந்தியுங்கள். தமிழை தமிழாக வளர்த்த எமது இனம் இன்று சிறைகளிலும் வதை முகாம்களிலும் சித்திரவதைப்பட்டுக்கொண்டிருக்கிறது. இரண்டு இலட்சம் தமிழினம் இருபத்திரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரகள் தமிழீழ மண்ணில் விதைக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கு யார் காரணம்? இத்தனை கொடுமைகளும் யாரின் துணையுடன் நடந்தேறியது?

தமிழனின் வாழ்வில் தான் தமிழினத்தலைவர்கள் செம்மொழி கொண்டாடுவார்கள். தமிழனின் சாவில் செம்மொழி கொண்டாடுபவர்கள் யார்?..மக்களே சிந்தியுங்கள்..

நீதியான ஒரு தமிழனுக்குரிய ஒழுக்கத்துடன் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி கூறியிருக்கிறார் ஒரு தமிழனாக இருந்துகொண்டு “ஈழத்தமிழர்களுக்கு துரோகமிழைத்த இந்தியாவின் பரவசி மாநாட்டையும் கருணாநிதியின் செம்மொழி மாநாட்டையும் நான் புறக்கணிக்கின்றேன்” என்று, தமிழினம் இப்படியான ஒரு தலைவரையே எதிர்பார்த்து நிற்கிறதே தவிர பதவிக்காக தன் இனத்தையே அழிக்கும் தலைவரை அல்ல.

தமிழை வளர்க்க தமிழீழ விடுதலைப்புலிகள் 60 000 ஆயிரம் தமிழ்பெயர்கள் கொண்டு புத்தகம் வெளியிட்டது மட்டுமல்லாது தமிழ் பெயர்களை வைக்கும் குழந்தைக்கு தமீழீழ வைப்பகத்தில் வங்கிக்கணக்கு அவர்களால் திறந்து கொடுக்கப்பட்டது. அது மட்டுமா, தமிழீழ தொலைக்காட்சியில் தமிழ் எவ்வாறு வளர்க்கப்பட்டது? தமிழீழப்பகுதியில் எங்கு திரும்பினாலும் தமிழ் வார்த்தைகள், தமிழ் சொற்பதங்கள் இவ்வாறு தமிழை வளர்த்த தமிழீழம் ஏற்படுத்த விரும்பாத செம்மொழி மாநாட்டை சன் டீவி, கலைஞர் டீவி என்ற தலைப்புடன் தமிழைக் கேவலப்படுத்தும் தமிழ் வார்த்தைகளே பயன்படுத்தப்படாத தொலைக்காட்சிகளை நடத்துபவர்களிற்கு என்ன தேவைக்கு செம்மொழி மாநாடு?..

தமிழை விரும்பிய தமிழை வளர்த்த எமது உடன் பிறப்புக்கள் சிங்கள காமவெறியர்களால் கற்பழித்து கொல்லப்பட்ட போது அவர்களின் கற்பு மட்டுமல்ல தமிழ் மொழியின் கற்பும் அழிக்கப்பட்டுவிட்டது என்பது தமிழ் வளர்த்தவனுக்கு தான் தெரியும். தமிழை அழித்த கொலைஞருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், தமிழனை அழிக்க ஏவிவிட்டவர் இவரல்லவா…..

தமிழினமே முழுமையாக வாழாத இந்த உலகில் தமிழ் மொழி முழுமையாக வாழாத இந்த உலகிற்கு செம்மொழி மாநாடு எதற்கு?……….

http://meenakam.com/?p=2146

http://meenakam.com/?p=3754

http://meenakam.com/?p=3654

— மீனகம்

(Visited 207 times, 207 visits today)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக