புதன், 27 ஜனவரி, 2010

லஞ்சம் வாங்கிய மேலூர் விஏஓ கைது



மதுரை, ​​ ஜன.25:​ திருமண உதவித் தொகை வழங்க லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புப் போலீஸôர் திங்கள்கிழமை கைது செய்தனர் (படம்).​ ​ மதுரை மாவட்டம்,​​ மேலூர் அருகே உள்ள கிடாரிப்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்.​ விவசாயக் கூலி.​ இவரது தங்கை சித்ரா.​ இவருக்குத் திருமணமாகி,​​ மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டத்தின்கீழ் உதவித் தொகை பெற கிடாரிப்பட்டி வி.ஏ.ஓ.​ மலைச்சாமியை செந்தில்குமார் அணுகியுள்ளார்.​ ​ உதவித் தொகை வழங்க ரூ.1,500 லஞ்சம் கேட்டுள்ளார்.​ இதற்காக ரூ.100 முன்பணமாகவும் வி.ஏ.ஓ.​ பெற்றுள்ளார்.​ ​ இதற்கிடையே,​​ செந்தில்குமார் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார்.​ அவர்கள் ​ ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை செந்தில்குமாரிடம் கொடுத்துள்ளனர்.​ ​ மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மீதத் தொகையான ரூ.1,400}ஐ வி.ஏ.ஓ.​ மலைச்சாமியிடம் செந்தில்குமார் கொடுத்துள்ளார்.​ அப்போது,​​ ரூ.500}ஐ செந்தில்குமாரிடமே மலைச்சாமி திருப்பித் தந்துள்ளார்.​ ​ அந்நேரம் மறைந்திருந்து கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த லஞ்ச ஒழிப்புப் போலீஸôர் மலைச்சாமியை கையும்,​​ களவுமாகப் பிடித்து,​​ லஞ்சப் பணத்தைப் பறிமுதல் செய்து,​​ கைது செய்தனர்.​ ​ 2 பேர் மீது வழக்கு:​ ​ ​ மதுரை ஆத்திகுளத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்.​ இவரது மனைவி சண்முகப்பிரியா.​ இருவருக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது.​ இவர்கள்மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தின்கீழ் உதவித் தொகை பெறுவதற்காக மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அணுகினர்.​ ​ சமூக நலத் திட்ட விரிவாக்க அலுவலர் ரேவதி(57),​ ஊர்நல அலுவலர் பழனியம்மாள் ​(52) ஆகியோர் ரூ.1,000 லஞ்சம் கேட்டனர்.​ ​ இதுகுறித்து லஞ்ச ஒழிப்புப் போலீஸôரிடம் ராஜேஷ் புகார் அளித்தார்.​ ​ ரசாயனம் தடவிய ரூ.1,000}த்துக்கான நோட்டுக்களை ரேவதி,​​ பழனியம்மாள் ஆகியோரிடம் ராஜேஷ் அளித்தபோது லஞ்ச ஒழிப்புப் போலீஸôர் அவர்களைப் பிடித்தனர்.​ ​ அவர்களிடம் கணக்கில் வராத ரூ.3,700}யும் அலுவலகத்தில் பறிமுதல் செய்தனர்.​ ​ இதுகுறித்து 2 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து மேல்விசாரணை நடைபெற்று வருகிறது.

ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக நடவடிக்கை எடுக்கின்ற்னர். நூறாயிரக்கணக்கில் கையூட்டு பெற்றவர் மீது முறையீடு தெரிவித்தும் இத்துறை நடவடிக்கை எடுக்காத நேர்வு எனக்குத் தெரியும். நடுவுநிலையுடன் நடவடிக்கை எடுப்பதாயின் நான் விவரம் அளிப்பேன். கையூட்டுகளையே ஊற்றுக் கண்ணாகக் கொண்டுள்ள இந்திய அரசியல் திருந்துவதற்கு ஒப்புக்கு மேற்கொள்ளப்படும் சிறு நடவடிக்கைகள் போதா.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvnar Thiruvalluvan
1/27/2010 2:51:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக