வியாழன், 15 மார்ச், 2012

Boyle warns Tamil diaspora against "Stall and Delay" diplomacy at UNHRC

Boyle warns Tamil diaspora against "Stall and Delay" diplomacy at UNHRC

[TamilNet, Tuesday, 13 March 2012, 23:55 GMT]
Noting the U.S. ambassador to UNHRC Eileen Donahoe's statement that the resolution forwarded by the U.S. has been toned down from an earlier version that sought a government action plan on accountability and reconciliation by June, to now calling for the U.N. Human Rights Commissioner to report to the council a year from now on the steps Sri Lanka has taken," Professor Boyle, an expert in international law and a keen observer of Sri Lanka politics, said the U.S. Government is going along with the Government of Sri Lanka (GoSL) strategy to run the clock out on the Tamils, just as the Israelis are doing to the Palestinians with USA support. The Tamil diaspora and supporters like us should not fall into this trap, but instead come up with a entirely new strategy."

Professor Francis A. Boyle, University of Illinois College of Law
Professor Francis A. Boyle, University of Illinois
"I served as Legal Adviser to the Palestinian Delegation to the Middle East Peace Negotiations starting in the Fall of 1991. Since that time, Israel’s strategy has always been to STALL AND DELAY while they destroy the Palestinians.

"The entire world is going along with that strategy. GoSL is doing the same thing to the Tamils here. And the entire world is going along with it. We are being treated like the Palestinians. We need to come up with an entirely new strategy.

"If we proceed down this path there will never be GoSL accountability for anything. GoSL will drag it all out until the Tamils are dead. Stall for time until the clock runs out like at a basketball game or a football game when the your side is ahead. GoSL is trying to run out the clock on us," Boyle said in a note sent to TamilNet.

Chronology:


Related Articles:
08.02.12   Boyle: Appointing alleged war-criminals to UN posts, a viola..
30.01.12   Boyle: US should publicly accuse Colombo of committing war c..
18.12.11   Boyle: Tamils safety possible only under separate state
30.04.11   Boyle: Word "Genocide" missing in UN Panel's war crimes repo..
26.04.11   Ban Ki Moon, Accessory After the Fact to Sri Lanka war crime..
16.04.11   Boyle reacts to UN report: "Creating Tamil Eelam, the only r..

Queen of honesty

 சொல்கிறார்கள்

நேர்மை ராணி உமா ராணி! 


அரவக்குறிச்சி பேரூராட்சியின் நிர்வாக அதிகாரி உமா ராணி: நான் சாதாரண வரி வசூலிப்பவராக இருந்து, நிர்வாக அதிகாரியாக வந்துள்ளேன். அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு வந்து இரண்டு ஆண்டு ஆகிறது. இங்கு வந்ததும், நிர்வாகத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்து விட்டேன். இரண்டு ஆண்டுகளாக ஊழியர்கள், துப்புரவுத் தொழிலாளர்களுக்கு பி.எப்., பணம் கட்டவில்லை. பெட்ரோல் பங்க்கிலிருந்து, எலக்ட்ரிக் கடை வரை, எங்கு பார்த்தாலும் கடன். பொது நிதியில் பைசா கூட கிடையாது. இது மட்டுமல்ல, பேரூராட்சியில் நடந்த ஊழல்களை விசாரிக்க, திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் இரண்டு நாள் முகாம் நடத்தி, பொதுமக்களிடம் மனு வாங்கினர். லஞ்ச ஒழிப்பு போலீசார் முகாம் போட்டு மனு வாங்கியது, எங்கும் நடைபெறாதது. பல முக்கிய ஆவணங்கள் காணாமல் போயிருந்தன. மிகச் சீரழிந்த நிர்வாகத்தைச் சீரமைக்க, பல முயற்சிகளைக் கையாண்டேன். அதில் ஒன்று தான், எஸ்டேட் சீரமைப்பு. எனக்கு முன்பு இருந்தவர்கள் சட்டத்தை மதிக்காமல், பல மனைப் பிரிவுகளுக்கு என்.ஓ.சி., கொடுத்து, அதை விற்க ஒத்துழைத்திருந்தனர். பணம் ஒன்றே குறிக்கோளாக செயல்பட்டதால், அதில் இடம் வாங்கி, வீடு கட்டிய ஒரு குடும்பம், குடிநீரும், மின் இணைப்பும் கேட்டு வந்த போது, "இது அங்கீகாரமில்லாத வீட்டு மனைப் பிரிவு; இதற்கு கரன்ட், தண்ணீர் தர முடியாது' என்றேன். அவர்கள் கதறித் துடித்து விட்டனர். அப்போது தான் முடிவெடுத்தேன்... நம் பேரூராட்சியைச் சுற்றி, எத்தனை அங்கீகாரமில்லாத நகர்கள் உருவாகியுள்ளன என்று லிஸ்ட் எடுத்து, அதை வரிசைப்படுத்தி, பதிவாளர் அலுவலகம், தாலுகா அலுவலகம் என, பல இடங்களில் வைத்தேன். வீட்டுக்கு வீடு, நோட்டீஸ் மூலம் எச்சரிக்கை விடுத்தேன். மக்கள் தற்போது கவனமாக உள்ளனர். என் அதிரடி நடவடிக்கையால், இன்று பேரூராட்சியின் கடன்கள் அடைக்கப்பட்டு விட்டன; பொது நிதியில், 50 லட்ச ரூபாய் உள்ளது; அதில் 30 லட்சத்திற்கு, இப்போது தான் வெவ்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. மனதில் உறுதியும், நேர்மையும் இருந்தால், எதையும் சாதிக்கலாம்! வாழ்த்து சொல்ல: 0432 0230878

photo message: differently abled woman




tamils left in ilangai: மிஞ்சிய இலங்கைத் தமிழர்கள்

மிஞ்சிய இலங்கைத் தமிழர்கள்



dinamani 15.03.2012

புதன், 14 மார்ச், 2012

ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம்: சிறு பங்களிப்பு!




           ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம்: எனது சிறு பங்களிப்பு! 
 
 

இலங்கைக்கு எதிராக ஐ.நா.மனித உரிமைக் குழுவில் தீர்மானம் கொண்டு வரப்படுவதற்காக, 'இராமர் பாலம் கட்ட அணில் உதவிய' கதைபோல - நானும் ஒரு சிறு பங்களிப்பை செய்துள்ளேன்.


UNHRC - Geneva 

ஜெனீவாவில் நடந்துவரும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரானத் தீர்மானம் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை தமிழ்நாட்டின் பெரும்பாலான அரசியல் இயக்கங்களாலும், தமிழக முதலமைச்சராலும், உலகெங்கும் உள்ள மனித உரிமை அமைப்புகளாலும் வலியுறுத்தப்படுகிறது. உலகத் தமிழர்கள் ஐ.நா. மனித உரிமை அவைத் தீர்மானத்தை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 
இத்தகைய ஆதரவு குரல் எழுப்புவோரில் பெரும்பாலானோர் நேரடியாக ஐ.நா. மனித உரிமை குழுவில் வலியுறுத்தும் வாய்ப்பு இல்லை. ஆனால், மறுபுறம் இலங்கை அரசாங்கம் ஐ.நா.வில் ஓர் உறுப்பு நாடு என்கிற அடிப்படையில் தனது தூதுக்குழுவினரை நேரடியாக அனுப்பி ஐ.நா.அவையில் தீவிரப் பிரச்சாரத்தை செய்துவருகிறது. இதற்கு பதிலடி தரும் விதமாக செயல்பட்டு வருகிறது மருத்துவர் இராமதாசு அவர்களை நிறுவனராகக் கொண்டுள்ள பசுமைத்தாயகம் அமைப்பு (இதுகுறித்து மருத்துவர் இராமதாசு அவர்களின் அறிக்கையை இங்கே காணலாம்). பசுமைத் தாயகம் அமைப்பின் செயலாளர் என்கிற முறையில் அந்த முயற்சியை நான் மேற்கொண்டுள்ளேன். 
ஐ.நா. மனித உரிமைக் குழு கூட்டங்களில் பங்கேற்பதும், ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. அவைக்கு உள்ளே சென்று ஐ.நா. மனித உரிமைக் குழு உறுப்பினர்களிடம் வலியுறுத்துவதும் எல்லோராலும் சாத்தியமாகக் கூடியது அல்ல. ஐ.நா. உறுப்புநாடுகளின் பிரதிநிதிகளும், ஐக்கிய நாடுகள் அவையால் அதிகாரப்பூர்வ ஆலோசனை அமைப்புகளாக அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளும் மட்டுமே ஜெனீவாவில் உள்ள ஐ.நா. அவைக்குள் நுழைய முடியும் என்கிற நிலை உள்ளது. அத்தகைய பிரதிநிதிகள் மட்டுமே ஐ.நா. மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் நேரடியாகப் பங்கேற்க முடியும்.
தமிழ்நாட்டின் பசுமைத் தாயகம் அமைப்பினை ஐக்கிய நாடுகள் அவை அதிகாரப்பூர்வ ஆலோசனை அமைப்பாக அங்கீகரித்துள்ளது. எனவே, ஐ.நா'வின் அனைத்துக் கூட்டங்களிலும் பங்கேற்க பசுமைத் தாயகம் அமைப்பு உரிமைப் பெற்றுள்ளது. அதனடிப்படையில் 2012 பிப்ரவரி 27 முதல் மார்ச் 23 வரை நடைபெறும் ஐ.நா. மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க பசுமைத் தாயகம் அமைப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 
ஐ.நா. மனித உரிமைக் குழுவில இலங்கைக்கு எதிரான தீர்மானம் வரவுள்ள நிலையில், இக்கூட்டத்தில் இலங்கைத் தமிழ் அமைப்பினர் பங்கேற்பதே பொறுத்தமானதாக இருக்கும் என்று பசுமைத் தாயகம் கருதியது. இலங்கை அரசின் சார்பான பிரதிநிதிகள் இலங்கை அரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் நிலையில் அதற்கு எதிராக உலகத் தமிழ் அமைப்புகள் ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்று தமிழர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வேண்டும் என முன்பே முடிவு செய்யப்பட்டது.
அதனடிப்படையில் உலகளவில் இலங்கைப் போர்க்குற்ற சிக்கலை முன்னெடுத்துச் செல்லும், லண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட உலகத் தமிழர் பேரவை (Global Tamil Forum - GTF), அமெரிக்கா இலங்கை மீது தீர்மானம் கொண்டுவர தூண்டுகோலாக இருந்த வாஷிங்டனிலிருந்து செயல்படும் அமெரிக்கத் தமிழ் அரசியற் பேரவை (The United States Tamil Political Action Council - USTPAC), ஆகிய அமைப்பினர் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் ஐ.நா. மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
உலகத் தமிழர் பேரவையின் மக்கள் தொடர்பாளர் சுரேன் சுரேந்திரன் 
மருத்துவர் யெசோதா நற்குணம், 
அட்டர்னி அலி பைதூன் 
உலகத் தமிழர் பேரவையின் மக்கள் தொடர்பாளர் சுரேன் சுரேந்திரன், அமெரிக்கத் தமிழ் அரசியற் பேரவை அமைப்பின் சார்பில் ஸ்டாண் ஃபோர்ட் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் மருத்துவர் யெசோதா நற்குணம், யேல் சட்டப்பல்கலைக் கழகத்தின் தாஷா மனோரஞ்சன் (PEARL), தமயந்தி ராஜேந்திரன், இலங்கை அரசு மீது அமெரிக்காவில் போர்க்குற்ற வழக்குத் தொடுத்துள்ள அட்டர்னி அலி பைதூன் (SPEAK) - ஆகிய ஐந்து பிரதிநிதிகள் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில ஐ.நா. மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகளாக கலந்து கோண்டுள்ளனர். 
ஐ.நா. மனித உரிமைக் குழுவின் உறுப்பினர்களை நேரில் சந்தித்து அமெரிக்க தீர்மானத்துக்கு ஆதரவு திரட்டும் பணியில் பசுமைத் தாயகம் சார்பான பிரதிநிதிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இலங்கை அரசு நடத்திய துணைக்கூட்டத்திலும் இவர்கள் பங்கேற்று இலங்கை அரசுக்கு எதிரான வாதங்களை பதிவு செய்தனர். 
அந்த வகையில் ஐ.நா. அவையில் இலங்கை அரசுக்கு எதிரான நேரடிப் பிரச்சாரத்தை பசுமைத் தாயகம் அமைப்பு மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இது பசுமைத் தாயகம் எனக்களித்த நல்வாய்ப்பை பயன்படுத்தி செய்யப்பட்ட என்னாலானக் கடமை.

no hands; no legs; and no worries : கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை

கவலையும் இல்லை - 
                            ஒரு உண்மைக் கதை : நவின்.
எனது பெயர் நிக் வியூஜிசிக். (Nick Vujicic) இந்த உலகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் இருக்கக்கூடிய கோடானுகோடி மக்களின் இதயத்தில் என்னை நீங்கா இடம்பிடிக்கச் செய்த எனது தாய், தந்தையரையும், அந்தக் கடவுளையும் நான் நன்றியுணர்வோடு இந்த நிமிடங்களில் நினைத்துப் பார்க்கிறேன். என்னைப் பற்றித் தெரியாத உள்ளங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கிறேன்.

இன்று உங்கள் முன் ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பேசிக்கொண்டிருக்கிறேன். இந்த சந்தோசமான தருணத்தில் எனக்குள் இருக்கும் வலிகளை மறந்து போகிறேன். ஆனாலும் உங்களுக்காக, நான் கடந்து வந்த பாதைகளைச் சற்றே திரும்பிப் பார்க்கிறேன்.
Image
அப்பப்பா! அவை உயிர் வலிக்கும் அனுபவங்கள்! உயிரோடு இதயம் கருகும் வேதனைகள்! அவை முழுக்க முழுக்க முட்களால் ஆனவை. அவமானங்கள் நிறைந்தவை, கனம் மிக்கவை. அந்த வலியை என்னைத் தவிர இந்த உலகத்தில் வேறு எவரும் அனுபவித்திருக்க முடியாது. அனுபவிக்கக் கூடாது. ஆண்டவனிடம் நான் வேண்டி நிற்பதும் அதைத்தான். போதும்! அந்த வலி என்னோடு ஒழிந்து போகட்டும்!

எல்லாத் தம்பதியரையும் போலவே அந்த இளம் கிறிஸ்தவத் தம்பதியர் ஆஸ்திரேலியா நாட்டில் மெல்பர்ன் நகரத்தில் தனது முதல் குழந்தையின் பிரசவத்திற்காக ஆயிரமாயிரம் கனவுகளோடும், கற்பனைகளோடும் காத்துக் கிடந்தனர். கடவுள் ஒரு அழகான ஆண் குழந்தையைக் கொடுத்தார். 1982-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 04-ஆம் நாள் அதிகாலைப் பொழுதில், இந்தப் பூவுலகில் புதுப் பிறவியெடுத்தத் தன் மகனை, கிறிஸ்தவப் பாதிரியாராக இருக்கும் அந்தத் தந்தை அள்ளி முத்தமிட எத்தனிக்கையில்தான் தெரிந்தது தனது பிஞ்சு மகன் கால்களும், கைகளும், விரல்களும் முழு வளர்ச்சி இல்லாமல் பிறந்திருப்பது. எந்த மருத்துவக் காரணங்களுமே சொல்லமுடியாத ஒரு வினோதமான பிறவியெடுத்த அந்தப் பாக்கியசாலி வேறு யாருமில்லை, நான்தான். என்னைப் பார்க்க ஆவலாக இருப்பீர்கள்! இதோ அது நான்தான். இந்த நிக்.
Image
கருவில் இருக்கும்போதே தெரிந்திருந்தால்கூட எனது பெற்றோர் தங்கள் மனதளவில் தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கமுடியும். ஆனால் அனைவருடைய கேள்வியும், "கடவுள் என்பவர் கருணையுள்ளவராக இருந்திருந்தால் கை, கால்கள் இல்லா ஒரு ஜீவராசியைப் படைத்து, இந்தப் பூவுலகில் பரிதவிக்கவிட வேண்டிய அவசியம்தான் என்ன? அதுவும் ஒரு உண்மையான கிறிஸ்தவப் பாதிரியாருக்கு இப்படியொரு தண்டனையா?" என்பதுதான். என்னை மட்டும் இப்படிப் படைத்த அந்த இறைவன் எனக்குப் பிறகு என் பெற்றோருக்குப் பிறந்த தம்பி தங்கையரை அப்படிப் படைக்கவில்லை. இந்த நிமிடத்தில் என் கண்களில் கண்ணீரோடு நான் அவருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். கையும், காலும் ஏன் விரல்கள்கூட சரியாக இல்லாத ஒரு குழந்தையை அந்தப் பெற்றோர் வளர்த்தெடுக்கப் பட்ட வேதனைகள்தான் எத்தனை? அவமானங்கள்தான் எத்தனை? சில வலிகள் அனுபவித்துப் பார்த்தால் மட்டுமே விளங்கக்கூடியது. நான் நெடுநாள் பிழைக்க மாட்டேன் என்ற ஒரு நம்பிக்கை எனது பெற்றோர் மனதுக்குள் எங்கோ ஒரு மூலையில் ஒலித்துக் கொண்டிருந்தது. ஆம்! நியாயம்தானே! பிறகு நான் என்னதான் வாழ்க்கை வாழ்ந்துவிட முடியும்? எதைத்தான் சாதித்துவிட முடியும்? ஆனால் மருத்துவத் தெய்வங்கள் இது "அசல் ஆரோக்கியமான குழந்தை" என்று அடித்துக் கூறிவிட்டனர்.

குறைபாடுள்ள குழந்தையைக் கொடுத்த கடவுள் கூடவே எனது பெற்றோருக்குத் தன்னம்பிக்கையையும், தளராத தைரியத்தையும் கொடுத்திருந்தார். நான் பள்ளி செல்லும் அளவுக்கு வளர்க்கப்பட்டேன் என்று சொல்வதைவிட வார்க்கப்பட்டேன் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். நான் உடலளவில் குறைபாடு உள்ளவன் என்பதாலும், உருவத்தில் வித்தியாசப்பட்டு இருப்பதாலும் ஆஸ்திரேலிய அரசு எல்லாக் குழந்தைகளோடும் சேர்ந்து படிக்க என்னை அனுமதிக்கவில்லை. இப்போது என் அம்மா அதனை எதிர்த்துப் போராடினார். தன் மகன் படும் வேதனைகளைவிட, ஆயிரம் மடங்கு அதிகம் வேதனை அனுபவித்தவராயிற்றே! அரசுடன் யுத்தமொன்றையே நடத்தினார். ஒரு வழியாக வெற்றியையும் பெற்று, இதோ நான் பள்ளிக்குச் செல்லத் தயாராகிவிட்டேன். இப்போதுதான் வாழ்க்கை என்றால் என்ன, சமுதாயம் என்றால் என்ன, அதற்குள் எத்தனை போலித்தனம், எது எதார்த்தம், எது உண்மை என்பதையெல்லாம் வாழ்ந்து பார்க்க ஆரம்பித்தேன். நான் பூக்கள் நிறைந்த பல்லக்கில் பயணிக்கவில்லை. நான் அனைத்து மாணவர்களாலும் நிராகரிக்கப்பட்டேன். கேலி பேசப்பட்டேன். சுக்கு நூறாகக் கிழித்தெறியப்பட்டேன். ஒவ்வொருவரும் என்னை முகச்சுழிப்போடு பார்க்கும்போது உயிரோடு என்னைத் தோலுரித்த வேதனையை அனுபவித்தேன். ஊனம், பாவம் என்றெல்லாம் பரிதாபப்படுவது பேச்சளவில்தான். அத்தனையும் போலித்தனமான கண்துடைப்பு என்பதை உணர்ந்தேன். அதை அனுபவிக்கும் பொழுதுதான் அந்த துக்கத்தின் ஆழம் விளங்கும். எத்தனையோ முறை என் தாயைக் கட்டி அணைத்துக்கொண்டு "எதற்காக அம்மா என்னைப் பெற்றாய்? பிறந்த அந்த நிமிடத்திலேயே என்னைக் கொன்றிருக்கக் கூடாதா?" என்று கதறியிருக்கிறேன். துடித்திருக்கிறேன். அப்போதெல்லாம் என்னைக் கட்டியணைத்துக் கண்ணீர்விட மட்டுமே முடிந்த என் அன்னையால் எந்த ஆறுதலும் கூறமுடியவில்லை. ஆறுதல் என்பது அவ்வப்போது போடும் மருந்து போன்றது.
Image

ஆனால் இதுபோன்ற மனவேதனையை அனுபவிக்கும்போதுதான் அதன் வீச்சு என்ன என்பது புலப்படும். காரணம் என்னை அனைவருமே கேலிப்பொருளாகத்தான் பார்த்தார்கள். என் பக்கத்தில் வருவதைக்கூட அவமானமாக நினைப்பார்கள். அருவருத்து ஒதுக்குவதைப் பார்க்கும்போது நான் அப்படியே அணு அணுவாகச் செத்துப் பிழைத்திருக்கிறேன். இவற்றையெல்லாம் என் பெற்றோரிடம் வந்து சொல்லி அவமானத்தால் எத்தனையோ முறை நான் பள்ளிக்குச் செல்லாமலே இருந்திருக்கிறேன். இதற்காகவே நான் ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளி சென்றிருக்கிறேன். பலமுறை நான் தற்கொலைக்குத் துணிந்திருக்கிறேன். கோபப்பட்டிருக்கிறேன், விரக்தியடைந்திருக்கிறேன். அப்பொழுதெல்லாம் என்னை உட்கார வைத்து, பக்குவப்படுத்தி, உற்சாகப்படுத்தி, நான் அழுதால் அழுது, அரவணைத்து, சிரிக்கவைத்து, சிந்திக்கச் செய்து, ஊக்கமூட்டி என்னை, என் வயதுக்காரர்களிடம் பழகவேண்டாம், அப்படிப் பழகினால் மன அழுத்தம்தான் அதிகமாகுமென்று, என்னைவிட வயது குறைந்த குழந்தைகளோடு பழக வைத்து, பேச வைத்துப் பல நண்பர்களை எனக்கு உருவாக்கித் தந்து, என்னை இதோ உங்கள் முன் ஒரு உன்னத மனிதனாக நிற்க வைத்து, நான் பேசும் பேச்சை, தன்னம்பிக்கைச் சொற்பொழிவை ஆயிரமாயிரம் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், தொழிலதிபர்கள் அனைவரும் கேட்டுப் பிரமிக்கச் செய்த அந்த உள்ளங்கள், மனிதப்பிறவிகள் இல்லை, அவர்கள் என் தெய்வங்கள். என் பெற்றோர்கள் என்பதையும் விட எனது கண்களாய், கைகளாய், கால்களாய் எனக்கு எது வேண்டுமோ அதுவாகவோ ஆகி என்னை உங்கள் முன் நிற்கச் செய்திருக்கிறார்கள். நான் பாக்கியசாலி அல்லவா?

Image
ஆம்! நான் உடலளவில் மட்டுமே உங்களிடமிருந்து வேறுபடுகிறேன். எனக்குக் கை, கால்கள் மற்றும் விரல்கள் இல்லையே ஒழிய வேறென்ன இல்லை? உள்ளத்தளவில் உங்களைப்போன்ற அனைத்து உணர்வுகளும் உள்ள ஒரு சராசரி மனிதன்தான் இந்த நிக்.

எனக்குள்ளும் எவ்வளவோ கனவுகள், ஆசைகள், லட்சியங்கள் இருக்கின்றன. அவற்றை இதோ! என் இருபத்தைந்து வயதிற்குள் எட்டிப் பிடித்துவிடுவேன். இது சத்தியம்! எனக்கு இப்போது வயது 21. எனது 15 ஆவது வயதில் பைபிளில் ஒரு வசனத்ததைப் படித்தேன். அதிலிருந்து கடவுள், தான் இந்த உலகுக்குச் செய்ய வேண்டியதை ஒரு கண்ணிழந்தவன் மூலமாகவோ, அல்லது என்னைப் போன்ற ஒரு அசாதாரணப் பிறவி மூலமாகவோதான் செவ்வனே செய்து முடிக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டேன். நான் அந்தப் பாக்கியம் பெற்றுவிட்ட ஒரு பிறவியாகவே நினைத்துப் பெருமிதம் கொண்டேன். என் வாழ்க்கையையே நான் இந்த உலகத்துக்காக ஒப்புக் கொடுத்துவிட்டேன்
Image
நான் இப்படியொரு ஊனமாகப் பிறந்ததற்குப் பெருமைப்படுகிறேன். காரணம் எனது வாழ்க்கையை இந்த உலகத்தோடு பகிர்ந்துகொள்வதன் மூலம் எத்தனையோ சகோதர சகோதரிகளை மனதளவில் நல்வழிப்படுத்தியிருக்கிறேன். என் உருவத்தை என்னால் மாற்ற முடியாது. ஆனால் இந்த உலகத்தில் மனதளவில் ஊனப்பட்ட எத்தனையோ பரிதாபத்திற்குரிய என் தோழமைக்குரியவர்களை மாற்றியிருக்கிறேன். மறுவாழ்வு வாழ வைத்திருக்கிறேன். சிலவற்றை மாற்றமுடியாது. அதனால் சிலரையாவது மாற்ற முயல்கிறேன். உதாரணம் என் உருவம். அதை நான் மாற்றமுடியுமா? முடியாது. ஆனால் உங்களை என்னால் மாற்ற முடியும். இதோ! பார்த்தீர்களா? நீங்கள் மாறிவிட்டீர்கள். “கெட்ட நேரமென்ற ஒன்று என்றுமில்லை, நல்லவைகளைத் தொடங்க எல்லாமே நல்லநேரம்தான். இன்றே தொடங்குங்கள்!” உங்களை மறுபடியும் ஒரு மகத்தான பொழுதுகளில் சந்திப்பேன். நன்றி! வாழ்த்துக்கள்!! வணக்கம்!!கடவுளின் படைப்புகள் எப்பொழுதுமே வீணடிக்கப்படுவதில்லை. துயரமான நேரங்கள் உருவாவதில்லை, உருவாக்கப்படுகின்றன. எதையும் சரியான கண்ணோட்டத்தில் பாருங்கள்! வலி என்பது நிரந்தரம் இல்லை வாழ்க்கைதான் நிரந்தரம். நமது வாழ்க்கை என்பது பாலைவனத்தில் பயன்படும் சிறிது நேரச் செருப்புக்கள். அவற்றை பயனுள்ளதாக வாழ்ந்து விடுவோமே! அவமானங்களை, வேதனைகளைத் தூக்கியெறியுங்கள்! நேற்றைய நிகழ்வுகளைச் சந்தித்தவன் நான் இல்லை, அவன் வேறொருவன் என்று நினைத்து ஒவ்வொரு நாளும் காலை எழும்போது புதிதாகப் பிறந்ததாய் எண்ணிப் புதுப்பயணத்தைத் தொடருங்கள்!சரியான காரணம் என்னவெனில் ஒரு செய்தி இந்த உலகத்துக்குச் சொல்லப்படும்போது, அந்தச் செய்தி எந்த அளவுக்குப் போய்ச் சேருகிறது என்பது முக்கியம். அதே சமயம் அது யாரால் சொல்லப்படுகிறது என்பதும், எப்படிப்பட்ட சூழலில் சொல்லப்படுகிறது என்பதும் மிக முக்கியம். அதே வேளையில் ஒரு செய்தி உண்மையான அனுபவத்தோடும், உணர்வுகளோடும் சொல்லப்படும்போது அதன் வீச்சு பல மடங்கு இரட்டிப்பாகும் என்பதால்தான் கடவுள் என்னைப் போன்ற சிலரை உருவாக்கி எங்கள் மூலமாக இந்த உலகத்துக்குச் சில செய்திகளைச் சொல்கிறார். இது நான் அனுபவித்துணர்ந்த உண்மை. இது வேதனைகள் நிறைந்த அனுபவமாக இருப்பினும், அது தரும் முடிவுகள் இந்த உலகத்துக்குப் பயனுள்ளதாக இருப்பதால் நாங்கள் வேதனைப்படவும் தயாராகவும் இருக்கிறோம். அந்த வேதனை அதிலிருந்து கிடைக்கும் பலன்களால் ஆறிவிடப்போகிறது அவ்வளவுதான். யேசுநாதர் சிலுவையில் அறையப்படவில்லையா? இந்த அனுபவங்கள் தரும் நல்ல பலன் அந்த வேதனைகளையும், வலிகளையும் புனிதப்படுத்திவிடும்.

Image
முதலில் நான் பொருளாதாரத் தன்னிறைவு பெற்றுவிடுவேன். நான் சேவை செய்வதற்கு நானே என் சொந்தச் சம்பாத்யத்தில் நிற்பேன். எந்த உதவியையும் நான் பிறரிடமிருந்து எதிர்பாராது ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லக்கூட எனக்கென்று ஒரு வாகனமும், அதை நானே ஓட்டும்படியும் அமைத்துக் கொள்ள வேண்டும். நான் ஒரு சுயமுன்னேற்றப் பேச்சாளன். பல நிறுவனங்களில் என்னைச் சிறப்புப் பேச்சாளராக அழைத்துப் பேச வைத்திருக்கிறார்கள். எனது வாழ்க்கையின் சுவாரஸ்யங்களையும், சாதனைகளையும், கடந்து வந்த பாதைகளையும் பேசி முடிக்கும்பொழுது அவர்களின் மனதில் இருக்கும் தாழ்வுமனப்பான்மைகள் தரை மட்டமாவதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். பிரமித்துப் போயிருக்கிறேன். என் சொற்பொழிவு இந்த உலகம் முழுதும் ஒலிக்கப்பட வேண்டும். எனது வாழ்க்கை முழுதும் ஏழை, எளிய மக்களுக்கும் மனத்தால் ஊனப்பட்டு, மன அழுத்தத்தால் வாடி, தவறான பாதைகளில், போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி, எதிர்காலம் இருண்டு நிற்கும் ஒவ்வொருக்கும் நான் சேவை செய்வதற்காகக் காத்திருக்கிறேன். இவைதான் என் கனவு, லட்சியம், ஆத்ம திருப்தி எல்லாமே! நான் பிறந்த பலனை முழுமையாக உணர்கிறேன். இவற்றோடு நான் எழுதிக்கொண்டிருக்கும் கை இல்லை, கால் இல்லை, கவலை இல்லை என்ற நூலை வெற்றிகரமாக இந்த ஆண்டிற்குள் முடித்தும் விடுவேன்.

Image
உங்களிடம் என்ன இருக்கிறதோ அதை நம்புங்கள்! அதில் கவனம் செலுத்துங்கள்! வெற்றியடைவீர்கள்! என்ன திறமை இருக்கிறதெனத் தேடிப் பார்க்காதீர்கள். உங்கள் திறமையில் நம்பிக்கை வைப்பதைவிடத் தேவையில் நம்பிக்கை வையுங்கள்! அதை எளிதில் அடைவீர்கள்! விரைவில் பெறுவீர்கள்! பிறகு அதுவே திறமையாகவும் மாறிவிடும். நீங்கள் ஏதாவது சாதிக்க நினைத்தால், அதற்காகத்தான் உங்களைக் கடவுள் இங்கே அனுப்பியிருக்கிறார் என்ற நம்புங்கள். அந்த எண்ணம் உங்களுக்குத் தானாக வரவில்லை. அது அவன் ஏற்கனவே எழுதியதுதான். அதனை இன்றே காலம் தாழ்த்தாது செய்துவிடுங்கள்! நாம், காரணமில்லாமல் நமக்கு நாமே சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்கிறோம். அந்தக் கட்டுப்பாடுகள் உங்களின் வேகத்தைக் குறைக்குமே ஒழிய விவேகத்தை ஏற்படுத்தாது. இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு ஜீவராசியும் சாதிக்கப் பிறந்தவைதான். நானே சாதிக்கத் துணிந்துவிட்ட பின் நீங்கள் மட்டும் ஏன் அமைதியாய் இருக்கிறீர்கள்! உங்களால் முடியும்! நாம் சாதிப்பதற்கு எல்லை என்பது ஒன்றும் இல்லை. அவை நாம் போட்டுக் கொண்டவை. அவற்றைத் தகர்த்தெறியுங்கள்! இதோ ஒரு ஒளிமயமான பாதை உங்கள் கண்முன் தெரிகிறது. இன்றே! இப்பொழுதே புறப்படுங்கள்!! சாதனையாளர்கள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள். தொடங்கும்பொழுது எவரும் சாதனையாளனாகத் தொடங்குவதில்லை, தொடங்கியபின் எவரும் சாதனை படைக்கத் தவறியதுமில்லை! பிறகென்ன தாமதம்? தொடங்குங்கள்!! இதோ களம் காத்திருக்கிறது!

- நவின்

நன்றி : நிலாச்சாரல்

Psychological attempts to defeat the tamils

  அசூர பலம்கொண்டு சிங்களத்தை  சிதைத்துவரும் தமிழர்களை உளவியல் ரீதியில் தோற்கடிக்க முற்படும் சிங்களத்தின் சதிக்கு துணைபோகும் தமிழ் ஊடகங்கள்!!! ம.செந்தமிழ்.

அடித்து விரட்டியபோது பணிந்து போன அரசியல் தலைமைகளை வைத்து வீரம் காட்டிய சிங்களத்திற்கு திருப்பி அடித்து தமிழனின் வீரத்தை தலைவன் உணர்தியது முதல் முள்ளிவாக்காலில் அனைத்துலக சதிக்கு மத்தியில் வேறு வழியின்றி தமிழர்களது பாதுகாப்பிற்காக ஏந்தப்பட்ட ஆயுதங்களை மௌனிப்பதாக முடிவெடுத்த தருணம் வரை தமிழர்தரப்பு சிங்களத்திற்கு சிம்ம சொப்பனமாகவே இருந்து வந்துள்ளது. முள்ளிவாய்க்காலில் எல்லாவற்றிற்கும் முடிவுகட்டிவிட்டதாக சிங்களம் மார்தட்டி நின்ற வேளை விடுதலைப் போராட்டத்தின் உந்துசக்தியாக நாம் எப்போதும் இருப்போம் என்று நெற்றிப் பொட்டில் அறைந்தாற்போல் புலம்பெயர் தமிழர்கள் உணர்த்தி நிற்கின்றனர்.

களத்தில் நேரிடையாக எதிர்கொண்ட சிங்களத்திற்கு புலத்தில் உள்ள புலிகள் எங்கிருந்து எப்போது எப்படி தாக்கப் போகின்றார்கள் எனத் தெரியாது கலங்கி நின்றது. அதன் அச்சத்திற்கு சாட்சியாக பல்வேறு தரப்புகளில் இருந்து எடுக்கப்பட்ட கடின முயற்சிகளிற்கு பின்னர் இன்று ஜெனீவாவில் சிங்களத்தை சர்வதேச முற்றுகைக்குள் சிக்கவைத்துள்ளது.

இந்த சர்வதேச முற்றுகைக்குள் இருந்து தப்பிப்பதற்கு தமிழினத்தை அழிக்கும் போது துணைநின்ற இந்தியா சீனா போன்ற சக்திகளின் ஆதரவுடன் கடும் பிரயத்தனம் செய்து வருகின்றது சிங்களம்.

சிங்களத்திற்கு விரித்த வலையில் தமிழின அழிப்பின் ஆணிவேராகத் திகழ்ந்த இந்தியாவும் மாட்டிக் கொண்டு முழிக்கின்றது. சிங்களத்தை வெளிப்படையாக ஆதரிப்பது தொடர்பாக எந்தவித முடிவும் எடுக்க முடியாது சோனியா தலைமையிலான இந்திய மத்திய அரசு தவித்துவருகின்றது.

அமெரிக்கா சமர்ப்பித்துள்ள பிரேரணையினை ஆதரித்து சிங்களத்தை பகைத்துக் கொள்ளும் தைரியமும் இன்றி ஒன்றுபட்டு குரலெடுத்து நீதிகேட்கும் தமிழகத்தின் குரலிற்கு எதிராக முடிவெடுக்கவும் முடியாது ஆப்பிழுத்த குரங்கின் நிலையில் திணறிவருகின்றது காந்தி தேசம்.

தமிழினத்தை அழிக்க முடிவெடுத்த போதுகூட இவர்கள் இவ்வளவு நெருக்கடிகளை எதிர் கொண்டிருக்கவில்லை.

தாம் தற்போது எதிர்கொண்டிருக்கும் சர்வதேச நெருக்கடிகளின் பின்னணியில் புலம்பெயர்ந்த தமிழர்களது அததீவிரமான செயற்பாடுகள் இருப்பதால் அவர்களை முடக்கி மூலையில் இருத்தும் வேலைகளில் சிங்கள அரசு தீவிரம் காட்டிநிற்கின்றது.

தமிழீழத் தேசியத் தலைவரது இறுதி நிமிடங்கள் என்று கூறி சனல்4 தொலைக்காட்சி வெளியிடவுள்ள ஆவணப்படம் மூலமும் அதற்கு போட்டியாக என்று கூறிக்கொண்டு சிங்களத்தரப்பால் வெளியிடப்பட இருக்கும் பிரத்தியேக ஆவணத் தொகுப்பு மூலமும் அதனை நிறைவேற்ற சிங்களம் தீர்மானித்துள்ளது.
எந்த விடையத்தை கையிலெடுத்தால் தமிழர்களை முடக்கிவிட முடியும் என்பதை நன்குணர்ந்து காரியமாற்றும் சிங்களத்தின் சதிமுயற்சியை அங்கீகரிப்பது போன்றே தமிழ் இணையங்களின் செயற்பாடு காணப்படுகின்றது.

கொல்லப்பட்டு விட்டார் பிரபாகரன்! உறுதிப்படுத்துகின்றது சனல்4…. பிரபாகரன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக திடுக்கிடும் உண்மைகள்!... என்று சிங்களவனது மனநிலையில் ஒரு தமிழ் இணையமும்…

சனல்4 தொலைக்காட்சி நிறுவனத்திடம் புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்த “பரபரப்பான” வீடியோவும் சிக்கியது?.... இரத்தத்தை உறைய வைக்கும் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலை… என்றும் முன்னைய இணையத்திற்கு கொஞ்சமும் குறைவில்லாத உற்சாகத்துடன் இன்னொரு தமிழ் இணையமும்…

தலைவர் மகன் கொலை! புதிய ஆதாரங்கள் வெளிவந்துள்ளன… என்று இன்நொரு தமிழ் இணையமும் தனது பங்கிற்கு தலைப்பிட்டு பரபரப்பை கிளப்பி சிங்களத்தின் எண்ணத்தை செயல்படுத்தியுள்ளார்கள். இவர்களது நோக்கம் வெறுமனே தமது தளங்களிற்கு அதிகளவான பார்வையாளர்களை வரவைக்க வேண்டும் என்பதோடு நிற்காது தமிழினத் துரோகமிழைப்பதாகவே அமைந்துள்ளது.

தமிழினத்தின் விடுதலை ஒன்றையே உயிர் மூச்சாக்கி ஐ.நா. சபையில் தமிழனின் கொடி பறக்க வேண்டும் என்ற உண்ணதமான விருப்புடனும் கோடான கோடி தமிழர்களின் பிரதிநிதியாக களமாடிய தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களை மரியாதைக்குரிய சொல்லாடல்களுடன் விளிக்காத இந்த இணையங்கள் கொலைவெறியன் மகிந்தவையும் அவனதுசகாக்களையும் பதவி நிலைகொண்டும் கௌரவ பெயர்களை தவறாது பயன்படுத்தியும் வருவதில் இருந்தே இவர்களது மனவிருப்பு எப்படிப்பட்டது இவர்களது பாதை எத்தகையது இவர்களது பின்னணி எது என்று விளங்கிவிடுகின்றது.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாரன் அவர்களது இருப்புத் தொடர்பாக நாம் பலதடவை உறுதிபடத் தெரிவித்துள்ள நிலையில் மே-20 அன்று சிறிலங்கா அரசால் வெளியிடப்பட்ட புகைப்பட காணொளி ஆதாரங்கள் தொடர்பான போலித்தன்மை குறித்த தகவல்களை ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளோம்.

அந்த புகைப்படங்களையும் காணொளிகளையும் ஆதாரமாக வைத்தே சனல்4 தொலைக்காட்சியும் சிங்கள அரசதரப்பும் மீண்டும் புதிய கோணத்தில் வெளியிட உள்ளன. மூன்று வருடங்களிற்கு முன்னர் வெளிவந்த இந்த பதிவுகளை புதிய வடிவத்தில் வெளியிட்டு குளப்பத்தை உண்டுபண்ண உள்ளார்கள்.(சனல்4 தொலைக்காட்சி வெளியிட உள்ள காணொளியில் தலைவர் அவர்கள் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தவில்லை என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.ஊர்யீதமற்ற வகையில் தமக்கு கிடைத்த புகைப்படங்களையும் காணொளியையும் வைத்தே தாம் தலைவர் தொடர்பாக செய்தியை இணைத்துள்ளதாகவும் சனல்4-இன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.)

புது மொந்தையில் பழைய கள்ளு கொடுத்து ஏமாற்றுவது போன்று இன்றைய பரபரப்பான சூழ்நிலையினை குளப்புவதற்கு மீண்டும் அதனை கையிலெடுக்கத் துணிந்துள்ள சிங்களத்தின் துரோகத்திற்கு தமிழ் இணையங்களும் துணைபோவதை அவதாணிக்க முடிகின்றது.

பாலச்சந்திரனது புகபைப்பட காணொளி ஆதாரங்கள் ஏற்கனவே 2009 மே மாதத்தில் வெளியிடப்பட்ட போதிலும் இன்று அதனை சனல்4 வெளிப்படுத்தியதன் நோக்கம் வேறாக இருந்தாலும் உலகத் தமிழர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

12 வயது சிறுவன் ஒருவன் மிக மிக அருகாமையில் வைத்து சிறிலங்காப் படைகளால் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டடுள்ளான் என்பதையும் அவனுடன் சரணடைந்த ஏனையவர்கள் ஆடைகள் களையப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டு கைகள் கண்கள் கட்டப்பட்டு சுட்டுக் கொள்ளப்பட்ட விடையத்தை ஆதாரத்டதுடன் நிரூபிப்பதற்கே மீண்டும் அதனை
கையிலெடுத்துள்ளது.

ஆனால் இந்த விடையத்தை முழுமையாக புரிந்து கொள்ளாது அவசரகுடுக்குத்தனமாக செய்திகளை வெளியிட்டுள்ள இணையங்கள் ஏதோ நேற்று பாலச்சந்திரன் கொல்லப்பட்டு இன்று அதற்கான ஆதாரங்கள் புதிதாக வெளியிடப்பட்டது போன்று பரபரப்புக் காட்டியதன் விளைவு உலகத் தமிழினம் கதிகலங்கி நிற்கின்றது.

தமிழகமே இந்த செய்தியால் ஆடிப்போயுள்ளது. இந்த இணையங்களில் வந்த செய்தியை ஆதாரமாக கொண்டு தமிழகத்தில் உள்ள பத்திரிகை தொலைக்காட்சிகளில் பரபரப்புடன் செய்தி வெளியாகியிருந்தது. இதனை பார்த்தவர்கள் அவசர அவசரமாக எம்மைத் தொடர்பு கொண்டு உண்மை நிலையினை விசாரித்தவண்ணமுள்ளனர்.

இந்த பத்தி எழுதுவதற்கு சற்று முன்னர் சென்னையில் இருந்து தொடர்பிற்கு வந்த உணர்வாளர் ஒருவர் இந்த செய்தியை பார்த்தது முதல் என்ன செய்வது என்றே தெரியாதுள்ளதாகவம்.. வேலைக்கு போகாது வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதாகவும் பதற்றத்துடன் தெரிவித்தார். பின்னர் உண்மை நிலைப்பாட்டை விளங்கப்படுத்தி அவரை தெளிவுபடுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

தமிழகத்தில் உள்ள இவரை முடக்கியது போன்று உலகத் தமிழினம் முழுமையும் முடங்கிக் போய் இருந்துவிட வேண்டும் என்ற சிங்களத்தின் எண்ணத்தை எமது தமிழ் இணையங்கள் அரங்கேற்றி ஒத்தாசை செய்துள்ளன.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் நலமுடன் உள்ளார். அதனை வெறுமனே தமிழர்களை நம்பிக்கை கொள்வதற்காக கூறவில்லை. அதுதான் உண்மை. வரலாற்றில் இருந்து பாடங்களை கற்றுக் கொண்டு போராட்டத்தை முன்னெடுத்துவந்த தலைவர் இவர்கள் சொல்வது போன்று வீரவசனம் பேசியும் உணர்ச்சிவசப்பட்டும் இறுதிவரை களத்தில் நின்று மரணத்தை தேடிக் கொள்வதற்கு தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஒன்றும் தமிழ் சினிமா இல்லை என்பதை அன்பானவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களிற்கு இடம் கொடுக்காது தமிழினத்தின் விடுதலை ஒன்றையே குறிக்கோளாக கொண்டு போராடிவந்தவர் என்பது உலகறிந்த உண்மை. நிச்சயமாக சிங்களத்தால் பறிக்கப்பட்ட தமிழர்களது தாயகத்தை வென்றெடுத்து தமிழர்களிற்கான அரசை அமைக்கும் வரை ஓய்ந்துவிடப் போவதில்லை.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவரது குடும்பத்தினரது இறுதி நிமிடங்கள் குறித்து வெளிவந்துள்ள வெளிவர உள்ள தகவல்கள் எதுவும் உறுதிப்பாடு அற்றவை என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். இதுதொடர்பாக வெளிவரும் செய்திகளை அன்பார்ந்த தமிழ்மக்கள் பொருட்டாக கருதாது இருக்கும் படியும் பொறுப்புவாய்ந்த தமிழ் இணையங்கள் தமது வரலாற்று கடமையினை உணர்ந்து தமிழீழத் தேசியத்தின் அடிப்படையில் செய்திகளை வெளியிடுமாறும் உரிமையோடும் அன்போடும் ஈழதேசம் இணையம் கேட்டுக் கொள்கின்றது.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

ஈழதேசம் இணையம் அது ஈழம் அமைக்கப் பயணம்.

ஈழதேசம் இணையத்தள ஆய்வாளர் : ம.செந்தமிழ்.(13-03-2012)


Psychological attempts by treacherous politics

உணர்வைச் சிதைத்து உளவியல் தாக்கம் ஏற்படுத்தும் துரோக அரசியல் - போராளியின் மடல்

தமிழர்கள் சுயநிர்ணய உரிமையுடன் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காக கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னெடுத்துவரும் உரிமைப் போராட்டத்தை வலுவடையச் செய்யும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகளை எந்தவொரு உணர்வுள்ள தமிழனும் ஏற்றுக்கொள்ளமாட்டான்.

குறிப்பாக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இரத்தம் சிந்தி முன்னெடுக்கப்பட்டுவந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தவோ, அல்லது அப்போராட்டத்தை முன்னின்று வழி நடத்திய உலகத் தமிழர்களின் ஒரே சொத்தான தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களைக் குறை கூறவோ, அன்றி மண்மீட்புப் போரில் விடுதலைக்கு உரம் சேர்த்து வித்தாகிப் போன மாவீரர்களை விமர்சிக்கவோ எக்காரணம் கொண்டும் எக்காலத்திலும் அனுமதிக்க முடியாது.

இந்த நிலையில் சனல் 4 தொலைக்காட்சியில் தமிழீழ மக்களின் நெஞ்சங்களில் குடியிருக்கும் தேசியத் தலைவர் தொடர்பான பிழையான செய்திகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கசிந்துவரும் செய்திகளால் தமிழர்கள் எல்லோரும் கொதித்துப்போய் உள்ளனர்.

சனல் 4 தொலைக்காட்சியானது என்றுமே தமிழ்ர்களுக்கு ஆதரவாகவோ அல்லது அவர்களின் விடுதலைப் போராட்டத்தின்  நியாயத்தன்னையை வெளிப்படுத்தியோ செய்திகளை வெளியிடவில்லை.  மாறாக அவர்களுக்கு சிறீலங்காவில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாகவும், இரண்டு ஊடக வியலாளர்கள் வெளியேற்றப்பட்டதன் பின்னணியிலுமே சிறீலங்கா அரசிற்கு எதிரான தனது செயற்பாட்டை முன்னெடுத்திருந்தது.

தமிழர்களின் பலமான ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்டதன் பின் தமிழர் தாயகத்தில் நடந்துமுடிந்த முள்ளிவாய்க்கால் பேரவலமும், அதன் பின்னரான சிங்கள பேரினவாதத்தின் இனவழிப்பு நடவடிக்கைளும் தமிழர்களின் மனங்களில் ஆறாத வடுவாக பதிந்துபோன நிலையில் உளரீதியான தாக்கத்தில் அனைவரும் உறைந்துபோயிருந்த வேளையே சன்ல் 4 தொலைக்காட்சியில் முதன் முதல் வெளியான சிறீலங்கா அரச இயந்திரத்தின் தமிழர் மீதான கொடுமைகளெ சர்வதேசத்திற்கு அம்பலப்படுத்தியிருந்தது.  சர்வதேசத்தின் கண்களை சற்று திறக்க வைத்த இவ்விடையமானது தமிழர்களுக்கும் சிறு உத்வேகத்தை கொடுக்கவே சனல் 4 தொலைக்காட்சிக்கு தமது நன்றிகளை தெரிவித்த அதேவேளை அவர்களுக்குத் தேவையான வேறு சான்றுகளையும் கையளித்து சனல் 4 தொலைக்காட்சியின் உதவியுடனும், தமது திட்டமிட்ட நேர்த்தியான செயற்பாடுகளூடாகவும் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரியும், இனவிடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு தேடியும் சர்வதேச மட்டத்திலான பரப்புரைகளையும், இராஜதந்திர நகர்வுகளையும் தமிழர்களும், தமிழ் அமைப்புக்களும் முன்னெடுத்தன.

ஆனால் தமிழர்களின் நன்மதிப்பை பெற்றிருந்த சன்ல் 4 தொலைக்காட்சி நாளை வெளியிடவுள்ளதாகக் கூறப்படும் "இலங்கை கொலைக்களங்கள் பாகம்-2,  தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்" ஆவணப் பகுதியில் தேசியத் தலைவர் தொடர்பான சர்ச்சைக்குரியதும், தமிழ்ர்களால் ஏற்றுக்கொள்லமுடியாததுமான காட்சிகள் வெளிவரும் நிலையில், தமிழர்களை சிதைத்துவிடுமோ என்கின்ற பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது இவ்வாறு இருக்க சனல் 4 தொலைக்காட்சியில் எந்த விபரங்களும் வெளியிடுமுன்னரே காலம் பாத்துக் காத்திருந்த சில பச்சோத்திக் கோடாரிக் காம்புகள் தமது ஊடகங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தமது குடும்பத்தினர் சகிதம் இராணுவத்திடம் சரணடைத்ததாகவும், சித்திரவதைகளின் பின் படுகொலைசெய்யப்பட்டதாகவும் செய்திகளை பிரசுரித்துள்ளன.

எனவே இந்த செயற்பாடானது இக்காலத்திலும் எவராலும் மன்னிக்க முடியாததாகும். ஏனெனில் தேசியத் தலைவர் அவர்கள் எப்போதும் தனது குடும்பம், தனது வாழ்க்கை என்று சிறு வட்டத்துக்குள் வாழ்ந்தவர் அல்ல. மாறாக தனது நாடு, தனது மக்கள், தனது மொழி, என்று வாழ்ந்தவர். அதனால் தான் அவர் தமிழீழத் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல உலக தமிழர்கள் மத்தியிலும் மதிப்போடு போற்றப்படும் தேசியத் தலைவராக தமிழர்களின் காவல் தெய்வமாக மதிக்கப்படுகின்றார்.

பச்சோந்திகளாக தாம் பிறந்த நாட்டிற்கும், தமது தாய் மொழியான தமிழ் மொழிக்கும் தமிழர்களின் எதிர்கால சந்ததிக்கும் துரோகம் இழைக்க முன்னின்று செயற்படும் ஊடகங்களுக்கும், தனிப்பட்ட நபர்களுக்கும் நான் இவ்விடத்தில் ஒன்றை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

1987 ஆம்  ஆண்டு இறுதிக் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், அமைதிபடை என்ற போர்வையில் எமது தாயகத்தில் வந்திறங்கிய இந்திய இராணுவத்திற்கும் இடையில் மோதல்கள் தீவிரம் அடைந்த நாள் முதல் இந்திய இராணுவம் எமது தாயகத்தை விட்டு வெளியேறும் வரை எங்கு சென்றாலும் தனது கையில் 5 லீற்றர் பெற்றோலுடன் சென்றுவந்தவர். ஏனெனில் தனக்கு மரணம் எப்போதும் வரலாம். ஆனால் தான் இறந்த பின்னும் தன்னை இனம் காணக்கூடாது. அதுமட்டுமல்ல முழுமையாக தனது உடல் கிடைக்கக்கூடாது என்பதற்காக கழுத்தில் நஞ்சுக் குப்பியும், மார்போடு குண்டும், கையில் பெற்ரோலுடனும் காடுகள் எங்கும் அலைந்து திரிந்தவர். அதற்கும் மேலாக 1988 ஆம் ஆண்டு முற்பகுதியில் தென்மராட்சிப் பகுதியில் அப்போது தென்மராட்சிக் கோட்டப் பொறுப்பாளராக இருந்த பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களின் கண்காணிப்பில் மறைந்து வசித்துவந்த தனது மனைவியையும், பிள்ளையையும் காட்டுப்பகுதிக்கு அழைத்துவரும்படி தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறை பொறுப்பாளர் பொட்டு அம்மான் அவர்களையே நேரடியாக எம் தேசியத் தலைவர் அனுப்பிவைத்திருந்தார். அத்தோடு அவர்களை அழைத்து வரும் வழியில் இராணுவத்தினரிடம் மாட்ட நேரிட்டால் சைனட் அருத்தி உயிரைத் துறக்கச்சொல்லுபடியும், சைனட் அருந்தும் வாய்ப்பு தவறும் பட்சத்தில் இராணுவத்தினரிடம் சிக்கவிடாது சுட்டுக்கொல்லும்படியும் தனது பிஸ்டலையே கொடுத்து கட்டளையிட்டிருந்தார்.

அப்படிப்பட்ட எம் தேசியத் தலைவரை இப்போது குடும்பத்தினருடன் சரணடைந்ததாக கூறும் உங்களைப் போன்ற அற்பர்களின் கூற்று எம்மைச் சுட்டெரிக்கின்றது. இக்கருத்தை சிறு குழந்தைகூட ஏற்றுக்கொள்ளாது.

தலைவர் அவர்கள் நினைத்திருந்தால் தனது குடும்பத்தை பாதுகாப்பாக வெளினாடுகளில் தங்கவைத்திருக்க முடியும். எத்தனையோ சட்ட திட்டங்கள், பாதுகாப்புக்களையும் தாண்டி வெளிநாட்டிற்கு தனது பிள்ளைகளை அனுப்பியும் அவர் தனது நாட்டிற்காகவே அவர்களை படிப்பித்து ஆளாக்கி மீண்டும் தாயகம் வரவளைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைத்தவர்.

முப்படை அமைத்து முழு உலகிற்குமே எடுத்துக்காட்டாகவும், தமிழர்களின் காலக் குறியீடாகவும், வரலாற்றின் வழிகாட்டியாகவும் விளங்கும்  எம் தலைவரை பிழையாக சித்தரிப்பது என்றுமே ஏற்றுக்கொள்ளமுடியாது.

மக்கள் மத்தியில் விசக்கருத்துக்களைத் தூவி கடந்தகால போராட்டத்தையும், போராளிகளையும் தவறாக எடுத்துரைத்து போராளிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவுனிலையை விரிசலடைய வைத்து துரோக அரசியலில் ஈடுபடுவதை வன்மையாக கண்டிக்கின்றேன். குமுறும் வேதனைகளின் வெளிப்பாடுகளை உள்ளுக்குள் அடக்கிக்கொண்டு சர்வதேசப் பரப்புகளில் கட்டளைக்காக ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் சக போராளிகளும் இதே கருத்தையே கொண்டிருப்பார்கள் என நம்புகின்றேன்.

நண்பர்களையும் பகைவர்களாக மாற்றக்கூடியதே தேசியத் தலைவர் தொடர்பாக எழும் பிழையான தகவல்கள். உங்களின் இந்த செயற்பாட்டால் எமது சமுதாயமே சீர்குலைந்து சின்னாபின்னமாகப் போகும் நிலையை நீங்கள் ஏன் உணரவில்லையோ தெரியாது. தயவு செய்து நீங்கள் உண்மையான தமிழர்களாக இருந்தால் இவ்வாறான செயல்களை உடன் நிறுத்துங்கள். தவறுக்கு மன்னிப்புக் கோருங்கள். எமது தமிழும், தமிழீழ மண்னும் செழித்து வளர பாடுபடுங்கள். அதுவே உண்மையாக நீங்கள் செய்யும் நல்ல செயற்பாடாக அமையும். மரணித்துப் போன மக்களுக்கும், மாவீரர்களுக்கும் நீங்கள் செலுத்தும் உண்மையான காணிக்கையாக அமையும்.

எனவே இதனை புரிந்துகொண்டு செயற்படவேண்டும். நான் எழுதியிருக்கும் விடையங்கள் சிலரை பாதித்திருக்கலாம். இருப்பினும் இக் கருத்துக்களின் ஆளம் அவர்களுக்கு புரியும் என நினைக்கின்றேன்.

சில வேளை சிலர் அல்லது சில ஊடகங்கள் என்னை  தாக்கி எழுத முற்படுவர். என்னைப் பொறுத்தவரை இக்கருத்துக்களுக்காக என்மீது  தாக்கி வசைபாடுபவர்கள் நிச்சயமாக நான் மேற்குறிப்பிட்டது போன்று காலம் பாத்துக் காத்திருந்த  பச்சோத்திக் கோடாரிக் காம்புகளாகவே இருப்பார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இவர்களே இதுவரை காலமும் முகமூடி மனிதர்களாக தமிழர்கள் மத்தியில் நடமாடி தமிழர்களின் இன விடுதலைப் போராட்டத்தை சிதைக்க சிங்கள பேரினவாதிகளோடு மட்டுமன்றி தமிழினத் துரோகிகளோடு கூட்டாக செயற்பட்டவ்அர்கள் என்பதும் உலகத் தமிழர்களுக்கும் புரியும்.

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

நன்றி
உள்ளக் குமுறல்களுடன்...
போராளி - முகிலன்

குறிப்பிட்ட போராளி மேல் உள்ள செய்தியை இணைப்பதற்காக எமக்கு அனுப்பி வைத்த மடல் கீழ் இணைப்பு
 உலகத் தமிழர்களுக்கும், தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் வணக்கம்,

குமுறும் வேதனைகளின் வெளிப்பாடுகளை உள்ளுக்குள் அடக்கிக்கொண்டு சர்வதேசப் பரப்புகளில் கட்டளைக்காக ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் போராளிகளில் ஒருவனான முகிலன் ஆகிய நான் சில தமிழ் ஊடகங்களில் வெளியாகிவரும் செய்திகளை பார்த்து அதிர்ச்சியடைந்ததோடு, ஆத்திரமும் அடைந்துள்ளேன். தரணி போற்றும் தேசியத் தலைவரை மிகவும் இழிவாக சித்தரித்து வெளியிட்டிருக்கும் இச்செய்தினானது வேதனை மிக்கதாகவும், மன்னிக்கமுடியாததாகவும் உள்ளது. அதனால் ஆற்றமுடியாத உள்ளக்குமுறலின் வெளிப்பாடாய் இம் மடலை எழுதியுள்ளேன். தயவு செய்து இதனை படித்து உங்களிற்கு ஏற்புடையதாக இருப்பின் உங்கள் நண்பர்கள், மற்ரும் தெரிந்தவர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.

தமிழ் ஊடக நண்பர்களே உங்களின் அளப்பரிய சேவையே எமது போராட்டத்தை முன்னகர்த்தியதோடு உலகறியவும் செய்தது. அதற்கு நாம் தலைவணங்குகின்றோம். அதே வேளை தமிழ் ஊடகங்கள் எனும் போர்வையில் துரோகம் இழைக்கும் ஊடகங்களையும் நாம் மிகவும் உன்னிப்பாக அவதானித்தும் வருகின்றோம். எனவே இம் மடலை உங்கள் ஊடகங்களில் பிரசுரம் செய்ய முடிந்தவர்கள் பிரசுரம் செய்து முகமூடி மனிதர்களாக மக்கள் மத்தியில் விசக்கருத்துக்களை விதைத்துவரும் விசக்கிருமிகளை உலகத் தமிழர்களுக்கு முன்னிலைப்படுத்த உதவுங்கள் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி
போராளி முகிலன்


தலைவருக்கு முடிவுரை கட்டிவிடத் துடிக்கும் தலமைச்செயலகம்

  தலைவருக்கு சனல்4 ஊடாக முடிவுரை கட்டிவிட  துடிக்கும் தலமைச்செயலகம் என்று செயற்படும் அணியினர் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு.வே பிரபாகரன் அவர்களுக்கு முடிவுரை கட்டிவிட வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக சில தேசவிரோத சக்திகளும் இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக செயற்பட்டு வரும் சிலரும் கடும் பிரயத்தனத்தை மேற்கொண்டிருந்த போதும் அது கைகூடவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.

ஆனால் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு எப்பாடு பட்டாவது முடிவுரை எழுதிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டியிருக்கும் சிலர் புலிகளின் தலைமைச்செயலகம் தாமே என்று கூறும் அணியில் முக்கிய பொறுப்புக்களில் உள்ளார்கள் என்றும் அவர்கள் கடந்த ஆண்டே தலைவர் அவர்கள் வீரச்சாவு அடைந்து விட்டதாக அறிவிக்க இருந்தமையும் அதன் பின் அதற்கான ஆதாரத்தை சிலர் அவர்களிடம் கோரிய போது அவ்வாறான ஆதாரத்தை அவர்களால் காட்ட முடியாமல் போய்யிருந்தமை சிலர் அறிந்திருக்க வாய்ப்புள்ளது.

ஆனால் இந்த சதி வலையை சனல்4 ஊடாக நிறைவேற்ற வேண்டும் என்று தலைமைச்செயலகம் என்று கூறி செயற்படும் சிலர் முயன்றுள்ளதாக உயர்வு இணையத்திற்கு நம்பகமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது.இதே தகவல் தமிழகத்தில் உள்ள சில தமிழ் உணர்வாளர்களுக்கும் சில முக்கிய பிரமுகர்களுக்கும் கிடைத்துள்ளதாகவும் உயர்வு அறிகிறது.இதை அவர்களே எம்மிடம் தெரிவித்தும் உள்ளனர்.

தமிழக தலைவர்களுக்கும்,தமிழ் உணர்வாளர்களுக்கும் கிடைத்துள்ள தகவலின் படி சனல்4 தொலைக்காட்சிக்கு தலைவர் தொடர்பான காணொளியை ஒளிபரப்புமாறு தலைமைச்செயலக அணியினர் கோரியதாகவும் இந்த முயற்சியில் தலைமைச்செயலக குழுவினர் கடந்த ஆண்டே ஈடுபட்டதாகவும் சனல்4 தொலைக்காட்சி முன்பு வெளியிட்ட காணொளியிலேயே தலைவர் தொடர்பாக வெளியிடுமாறு தலைமைச்செயலக அணியினர் சனல்4 இடம் கோரியதாகவும் அதற்கான ஆதாரங்களை அவர்களால் சனல்4 தொலைக்காட்சிக்கு வழங்க முடியாமல் போனமையால் அப்போது அது கைநழுவிவிட்டதாகவும் நாம் அறிகிறோம்.

ஆனால் தற்போது தலைமைச்செயலக அணியினர் சனல்4 தொலைக்காட்சியுடன் நல்லுறவை பேணுவதாகவும் அதனை பயன்படுத்தி சனல்4 தொலைக்காட்சி நாளை வெளியிடவுள்ள காணொளியில் தலைவர் தொடர்பான காணொளியை ஒளிபரப்புமாறும் தலைவர் அவர்கள் கொல்லப்பட்டுவிட்டதாக கூறுமாறும் அவர்களால் சனல்4 இடம் கோரப்பட்டது.ஆனால் சனல்4 தொலைக்காட்சி அவர்களுடனுள்ள நற்புறவின் காரணமாக தலைவர் தொடர்பான காணொளியை நாளை ஒளிபரப்பவுள்ளதாகவும் ஆனால் அந்த காணொளியில் சனல்4 தலைவர் அவர்கள் கொல்லப்பட்டதாக கூறவில்லை என்றும் அதிகாரபூர்வமற்ற அந்த காணொளியையே தாம் ஒளிபரப்புவதாகவும். கூறப்பட்டுள்ளது.

தலைமைச்செயலகம் என்று கூறி செயற்படுபவர்கள் இதற்கான பதிலை அல்லது இதை மறுத்தால் எம்முடன் தொடர்புகொள்ளவும் அது தொடர்பாக ஆராய்வதற்கு உயர்வு இணையம் தயாராகவுள்ளது.

- உயர்வு (http://www.uyarvu.com/index.php?option=com_content&view=article&id=15634:-4-----------&catid=47:breaking-news-top&Itemid=67)