புதன், 8 ஜூன், 2011

இலங்கை மீது பொருளாதாரத் தடை: மத்திய அரசுக்கு தமிழகம் கோரிக்கை

தமிழக அரசிற்கும் சட்ட மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் பாராட்டுகள். வெற்றியில் பெரும்பங்கு வகித்த தமிழ் உணர்வாளர்களை மதித்தும் மனித நேய அடிப்படையிலும் துணிந்து இத்தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வருக்கும் பாராட்டுகள். தமிழ் ஈழத்தை உலக நாடுகள் ஏற்க வேண்டும் என ஒரு தீர்மானமும்  சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


இலங்கை மீது பொருளாதாரத் தடை: 
மத்திய அரசுக்கு தமிழகம் கோரிக்கை
First Published : 08 Jun 2011 01:09:23 PM IST

சென்னை, ஜூன் 8- இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, இன்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இத்தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்தார். அப்போது அவர் பேசியதாவது:இலங்கையில் சம உரிமைக்காக போராடி வரும் தமிழர்களை முற்றிலும் அழிக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டது. பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள், மருத்துவமனைகள் மீதும் குண்டுகள் வீசப்பட்டன. இலங்கை அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக ஐநா சபை பொதுச்செயலரால் நியமனம் செய்யப்பட்ட குழு கண்டறிந்துள்ளது. எனவே, போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐநா சபையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். மேலும், சிங்களர்களுக்கு இணையாக, தமிழர்களுக்கு அனைத்து குடியுரிமைகளும் வழங்கப்பட வேண்டும். இதற்காக, இலங்கை அரசின் மீது மற்ற நாடுகளுடன் இணைந்து பொருளாதாரத் தடையை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை தமிழக சட்டப்பேரவை கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு ஜெயலலிதா தனது உரையில் குறிப்பிட்டார்.  இத்தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டு பேசினர். முதல்வரின் பதில் உரைக்கு பின்னர் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது.

+++++++++++++++++++++
  இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவேண்டும்; சட்டசபையில் ஜெயலலிதா தீர்மானம்
சென்னை, ஜூன். 8-
 
தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று ஒரு தனி தீர்மானத்தை தாக்கல் செய்து முன்மொழிந்து பேசினார். அதன் விவரம் வருமாறு:-
 
தமிழனின் பண்பு யாருக்கும் தாழ்ந்தவனாக இருப்பதல்ல. யாரையும் தாழ்த்துவதல்ல என்றார் பேரறிஞர் அண்ணா. இப்படிப்பட்ட உயரிய எண்ணத்தைக் கொண்ட தமிழர்கள் உலகெங்கும் பரவி இருக்கிறார்கள். மொழி மற்றும் கலாச்சார பாரம்பரியத்தில் ஒற்றுமையுடன் திகழும் இலங்கைத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கும் இடையே உள்ள தொப்புள் கொடி உறவு அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
 
இலங்கைக்கு விடுதலை கிடைத்து விட்டாலும், அங்கு வாழும் தமிழர்கள் அவர்கள் நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படு வதை எதிர்த்து, இலங்கைத் தமிழர்கள் பல்லாண்டு காலமாக போராடி வந்தனர். இவர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை உணர்ந்து தேவையான அரசமைப்புச் சட்டத்திருத்தங்களை கொண்டு வந்து, தமிழர்கள் கவுரவத்துடனும், சம உரிமையுடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்காமல் அவர்களை முற்றிலும் ஒழித்துக்கட்ட இலங்கை அரசு நடவடிக்கை எடுத்தது.
 
பரவலாக குண்டுமழை பொழிந்து அப்பாவி மக்களை கொன்று குவித்தது. மனிதர்கள் வாழும் இடங்களின் மீதும், மருத்துவ மனைகள் மீதும் குண்டுகளை வீசியது. மனிதாபிமான முறையில் செய்ய வேண்டிய உதவிகளை செய்ய மறுத்தது. உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்தவர்கள் என்று சந்தேகப்படக்கூடியர்கள் உள்பட இந்தச் சண்டையில் பலியானவர்கள் மற்றும் எஞ்சியுள்ளவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது.
 
இலங்கை அரசை விமர்சிப்பவர்கள் மற்றும் ஊடகங்கள் உள்பட போர்ப் பகுதிக்கு வெளியே இருப்பவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது. போன்ற கடுமையான, நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக்களை உள்நாட்டுப்போரின் போது இலங்கை அரசு நிகழ்த்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால் நியமனம் செய்யப்பட்ட குழு கண்டறிந்து இருக்கிறது.
 
எனவே, இத்தகைய போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும், தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி, சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழவகை செய்யும் வரையில், அனைத்து குடியுரிமை களையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை இந்திய அரசை கேட்டுக் கொள்கிறது.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
இதையடுத்து இந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் பேசினார்கள். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பதில் உரைக்கு பிறகு தீர்மானம் நிறைவேறியது.

தில்லியின் அதிகார மையத்தில் சூழ்ந்திருக்கும் மலையாளிகளின் பட்டியல்

தில்லியின் அதிகார மையத்தில் கொசுபோலச் சூழ்ந்திருக்கும் மலையாளிகளின் பட்டியலைப் பாருங்கள்!




                      தில்லியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கேரளாதான் அனைத்து நன்மைகளையும் அள்ளிக் கொண்டு போகும்! காரணம் அனைத்துத் துறைகளையுமே அவர்கள் தங்கள் கைகளுக்குள் வைத்திருக்கிறார்கள்! கருணாநிதி தன் கட்சிக்கு அமைச்சர் பதவிகளைத் தேடும்போது இரண்டு காரியங்களை மட்டுமே கருத்தில் கொள்வார்.
முதலாவதாக தன் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்கு அந்தப் பதவிகள் வேண்டும் இரண்டாவதாக அப்பதவிகள் காசு பார்க்கக்கூடியதாக அது இருக்க வேண்டும்! இனமாவது மண்ணாங்கட்டியாவது!ஆட்சி அதிகாரத்தை வந்தேறிகளிடம் விட்டால் இதுதான் கதி! கருணாநிதியைச் சொல்லிக் குற்றமில்லை! வாக்களித்து ஆட்சியில் குந்த வைத்த நீயும் நானுமே இதற்குக் காரணம்!
தில்லியின் அதிகார மையத்தில் கொசுபோலச் சூழ்ந்திருக்கும் மலையாளிகளின் பட்டியலைப் பாருங்கள்! உறிகிறார்கள்! நாட்டின் குருதியை உறிஞ்சி எடுத்து தன் மக்களுக்கும் மாநிலத்திற்கும் கொண்டுபோய்ச் சேர்கிறார்கள்!
மலையாளிகளின் முதல் எதிரி தமிழர்கள்தான்! ஈழத் தமிழர்களைக் கொன்றொழிக்கும் கொடூரத்திற்கும் முற்றாகத் துணைபோனவர்கள் அவர்களே! நமது மாநிலத்திலிருந்து கேரளாவிற்கு செல்லும் வண்டிகளை அவர்கள் நடத்தும் விதம் அடிமையினும் கேடு கெட்டது! ஆனால் நாமோ தமிழகத்தில் அவர்களின் நிறுவனங்களுக்குச் சென்று பொருள் வாங்கி, சாயா குடித்து கொழுக்க வைக்கிறோம்! சிந்தியுங்கள்
  1. என். பெர்னான்டஸ் -ஜனாதிபதியின் செயலாளர்,
  2. வி.கே.தாஸ் -ஜனாதிபதியின் தனிச் செயலாளர்,
  3. டி.கே.ஏ. நாயர் -பிரதமரின் முதன்மைச் செயலாளர்,
  4. என்.நாராயணன்-பிரதமரின் பிரதான ஆலோசகர்,
  5. பி.ஸ்ரீதரன்-நாடாளுமன்ற சபாநாயகரின் தனிச் செயலாளர்,
  6. கே.எம். சந்திரசேகர் -அமைச்சரவைச் செயலாளர்,
  7. ருத்ர கங்காதரன்- விவசாயத் துறைச் செயலாளர்,
  8. மாதவன் நம்பியார் -விமானப் போக்குவரத்துத் துறைச் செயலாளர்,
  9. நிருபமா மேனன் ராவ் -வெளியுறவுத் துறைச் செயலாளர்,
  10. சத்தியநாராயணன் தாஸ்-கனரகத் தொழில்துறைச் செயலாளர்,
  11. ஜி.கே.பிள்ளை -உள்துறைச் செயலாளர்,
  12. சுந்தரேசன் -பெட்ரோலியத் துறைச் செயலாளர்,
  13. கே.மோகன்தாஸ் -கப்பல் துறைச் செயலாளர்,
  14. பி.ஜே.தாமஸ் -மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர்,
  15. சிவசங்கர் மேனன் -தேசிய பாதுகாப்பு ஆலோசகர்,
  16. சுதா பிள்ளை -திட்டக் கமிஷன் செயலாளர்,
  17. வி.கே.சங்கம்மா -வடகிழக்கு மாநிலங்களின் கவுன்சில் செயலாளர்,
  18. ஆர். கோபாலன் -நிதிப் பணிகள்துறை இயக்குநர்,
  19. கே.பி.வி.நாயர் -செலவீனங்கள் துறைச் செயலாளர்,
  20. கே.ஜோஸ் சிரியாக் -வருவாய்த் துறைச் செயலாளர்,
  21. ஆர்.தாமஸ் -வருமான வரித்துறைச் செயலாளர்,
  22. வி.ஸ்ரீதர்- சுங்கத் துறைச் செயலாளர்,
  23. பி.கே.தாஸ் -அமலாக்கப் பிரிவு சிறப்பு இயக்குநர்,
  24. ஏ.சி.ஜோஸ்-கதர் வாரியம்,
  25. சி.வி.வேணுகோபால் -பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளர்,
  26. ஸ்ரீகுமார் -இயக்குநர், மத்திய கண்காணிப்பு ஆணையகம்.
  27. பிரதமரின் அலுவலகத்தில் இவருக்கு அடுத்தப்படியாக செயல்படும் மூத்த அதிகாரி கோபாலகிருஷ்ணன். இவரும் கேரளாவைச் சேர்ந்தவர்.
  28. கே.எம். சந்திரசேகர்- அமைச்சரவைச் செயலாளர்,
  29. சி.கே. பிள்ளை - உள்துறைச் செயலர் ,
  30. நந்த குமார் - கூட்டுறவுத்துறைச் செயலாளர்,
  31. பி.கே. தாமஸ் - தகவல் தொழில் நுட்பத்துறைச் செயலர்,
  32. ரகு மேனன் - செய்தி ஒலிபரப்புத் துறை செயலாளர் ,
  33. ராமச்சந்திரன் - நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலாளர் ,
  34. ரீட்டா மேனன் - ஜவுளிச் துறை செயலாளர்,
  35. கங்காதரன் - கால்நடை பராமரிப்புத் துறைச் செயலாளர்,
  36. சாந்தா ஷீலா நாயர் - குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர்,
  37. விசுவநாதன் - சட்டத்துறை செயலாளர்,
  38. மாதவன் நாயர் - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர்.
‘‘நமது நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களான 543 பேரில் 20 பேர்தான் கேரளாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள். அதிலும் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் 15 பேர்தான். ஆனால், இவர்களில் அமைச்சர்களாக இருப்பவர்கள் ஐந்து பேர்.
அவர்கள்:
  • ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி,
  • வெளிவிவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி,
  • விவசாயத் துறை இணையமைச்சர் கே.வி. தாமஸ்,
  • உள்துறை இணையமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன்,
  • ரயில்வேத் துறை இணையமைச்சர் ஈ.அகமது,
வெளிவிவகாரத்துறை இணையமைச்சராக இருந்து பதவி விலகிய சசி தரூரையும் சேர்த்தால் ஆறுபேர்!
சோனியா வீட்டிலும் ஆட்டிப் படைப்பவர்கள் மலையாளிகள்தான். சோனியாவின் ஓட்டுனர் ரவீந்திரன், சமையல்காரர் அங்கம்மா அங்கணங் குட்டி, தோட்டக்காரர் தாமஸ், சந்தைக்குப் போய் வருபவர்கள், சமையல் உதவியாளர்கள், தோட்டப் பராமரிப்பு உதவியாளர்கள் என்று எல்லாருமே மலையாளிகள்தான். அதேபோல, சோனியா காந்தி வீட்டைச் சுற்றிலும் பாதுகாப்புக்காக தில்லிக் காவல்துறையினர் அறுபது பேர் இருக்கிறார்கள்.
அவர்களில் ஐம்பது பேர் கேரளாக்காரர்கள். இப்படி நாட்டின் பிரதான நிர்வாக இடங்கள் அனைத்திலும் கேரளக்காரர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள்.
நாட்டின் 30 பெரிய மாநிலங்களில் மிகச்சிறிய மாநிலம் கேரளா. ஆனால் மத்திய அரசுத் துறை செயலாளர்கள் 53 பேரில், 19 பேர் அதாவது 33 விழுக்காட்டிற்கு மேலானவர்கள் கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் என்று கணக்குச் சொல்லப்படுகிறது.
இவர்களில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தில் பணியாற்றி, பின்னர் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டவர்கள். இதர சிலர், வேறு மாநிலங்களில் பணியாற்றி, மத்திய அரசு பணிக்கு வந்தவர்கள்.

இத்தகைய நிலையில் இன்றைக்கு இந்தியாவை ஆண்டு கொண்டிருப்பது எந்த மாநிலம்? என்ற சந்தேகமே தேவையில்லை. இந்த அசாதாரணமான நிலைமையினால்தான் இன்றைக்கு கேரளாவுக்கு சாதகமாக காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழர்களின் நலன் புறக்கணிக்கப்படுகிறது
--
என்றும் தமிழ் உணர்வுடன்
அன்புடன்,

எதற்கெடுத்தாலும்


எதற்கெடுத்தாலும் நீ ஒதுக்கீடு கோட்டாவில் கல்லூரிக்கு வந்தவன்தானே!...


இவ்வாண்டு மே மாதம் 8 ஆம் தேதி இந்து ஏட்டில் ஒரு செய்தி.

சண்டிகர் மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் நூலகத்தில் தற்கொலை செய்து கொண்டார் என்பதுதான் அந்தச் செய்தி.

ஏன் அந்தத் தற்கொலை? படிப்பில் அக் கறையில்லையா? புரிந்து கொள்ளும் திறன் இல்லையா? அதெல்லாம் ஒரு மண்ணாங் கட்டியும் கிடையாது.

பட்டமேற்படிப்பில் இறுதியாண்டு பயிலும் இந்த மாணவர் படிப்பில் படுசுட்டி - ஒரு பாடத்தில் கூடத் தோல்வி அடைந்த தில்லை.

கெட்டிக்கார மாணவன் ஏன் தற்கொலை செய்து கொண்டானாம்?

மாணவன் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதுதான் பிரச்சினையே!. ஒரு தாழ்த்தப்பட்ட மாணவன் கெட்டிக்காரனாக இருக்கிறானே என்ற ஆத்திரம்.

எதற்கெடுத்தாலும் நீ ஒதுக்கீடு கோட் டாவில் கல்லூரிக்கு வந்தவன்தானே! என்னும் உயர்ஜாதி பார்ப்பனப் பேராசிரியர் களின் கேலி - கிண்டல்!

மாணவன் மன உளைச்சலுக்கு ஆளானான். அதன் விளைவுதான் இந்தத் தற்கொலை! அந்த மாணவன் பெயர் ஜஸ் பிரித்சிங். அண்ணன் மாண்டான் என்ற வுடன் அவரது தங்கையும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இவ்வளவுக்கும் அந்தப் பெண்ணும் கணினி பாடப் பட்டதாரி.

இன்னொரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் பால்முகுந்த். டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் படிக்க வந்தவர். 2010 மார்ச்சில் தற்கொலை செய்து கொண்டார்-_ காரணம் சண்டிகர் மருத்துவக் கல்லூரி மாணவனுக்கு ஏற்பட்ட அதே நிலைப்பாடுதான். உயர் ஜாதி பார்ப்பனர்களின் கீழிறக்கமான பேச்சுகள் -சாடல்கள்தான்.

எய்ம்சில் ஜாதி பார்த்து மதிப்பெண் போடுகிறார்கள் பார்ப்பனப் பேராசிரியர்கள் என்று குமுறும் உள்ளத்துடன் மாணவர் கள் கூறியதுண்டு. தாழ்த்தப்பட்ட மாண வர்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டவர்கள் 18 பேர் என்று இன்சைட் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

டில்லி உயிரி மருத்துவ அறிவியல் கல்லூரியில் ஆராய்ச்சி மாணவர் லினேஷ் மோகன் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஏழைக் குடிசைவாசி. ஜாதி நாகம் கொட்டிய நஞ்சால் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னையில் அய்.அய்.டி. என்ற ஒரு பெரிய அக்ரஹாரம் இருக்கிறது. அங்கும் அடிக்கடி தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலை. ஆந்திராவைச் சேர்ந்த நிதின்குமார் (சித் தூரையடுத்துள்ள குத்தளம்பட்டு சொந்த ஊர்.)

பெங்களூருவில் வளாக நேர் தேர்வில் (கேம்பஸ் இன்டர்வியூ) நல்ல வேலை கிடைத்திருக்கிறது. ஆனால் தன் திட்ட அறிக்கையை முடித்துக் கொடுத்துவிட்டு பெங்களூருவுக்குச் சென்று சேர்ந்திடலாம் என்று மனக்கோட்டை கட்டியிருந்தான்.

ஆனால் பார்ப்பனப் பேராசிரியர் என்ன சொன்னாராம்? உன் பிராஜக்ட் ரிப்போர்ட் சரியில்லை. இன்னும் ஆறு மாதம் தங்கி யிருந்து அறிக்கையைக் கொடுத்துவிட்டுப் போ என்று சொல்லியிருக்கிறார். மாண வனின் ஆசைக் கோட்டை அடியோடு நொறுங்கி விழுந்தது.

கடந்த மார்ச் 24 ஆத் தேதிதான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக பெற்றோர்களுக்குத் தெரிவித்து விட்டு, பெற்றோர்கள் அதிர்ந்து ஓடி வருவதற்குள் நிதின் தன் வாழ்வை முடித்துக் கொண் டுள்ளான்.

நிதினின் மனக்கோட்டை மட்டுமல்ல; அவரின் பெற்றோர்கள் தங்கள் மனதில் நீர் ஊற்றி வளர்த்து வந்திருக்கிற கனவுகள் எல்லாம் அனலில் பட்ட பட்டாசாக வெடித்துச் சிதறிவிட்டதே!

இட ஒதுக்கீடு வாகனத்தில் ஏறியா எங்கள் கோட்டைக்குள் நுழைகிறீர்கள்? நீங்கள் எப்படி படித்து, எப்படி தேர்வு எழுதி, எப்படி வெற்றி பெறப் போகிறீர்கள் பார்க்கலாம் என்று சவால் விடும் பாணியில் உயர்நிலைக் கல்வி நிறுவனங்களில் ஆதிக் கம் செலுத்தும் பார்ப்பனப் பேராசிரியர்கள் நடந்து கொள்கிறார்கள்.

போராடிப் போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டை பார்ப்பனர்கள் நயவஞ்சகமாக நசுக்கி வருகிறார்கள்.

இந்தியா முழுமையும் இயங்கி வரும் அய்.அய்.டி., எய்ம்ஸ், அய்.அய். எம். போன்ற கல்வி நிறுவனங்களின் செயல் பாடுகள், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இடம் கிடைத்துப் படிக்கும் மாணவர்களுக் கான பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்ய சிறப்புக் குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும். அதில் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் சிறுபான்மையினர் மற்றும் மகளிர் பிரதிநிதிகள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும்.

இட ஒதுக்கீட்டுக்கு விரோதமாகச் செயல்படும் அதிகாரிகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் அமைந்த நாடாளுமன்றக் குழுவின் சிபாரிசு கறாராகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

மத்திய அரசு நடத்தும் அய்.ஏ.எஸ். தேர்வுகளில் திறந்த போட்டியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்டவர்களை - திறந்த போட்டியில் இடம் அளிக்காமல், அவர் களுக்கான எஸ்.சி., எஸ்.டி., பி.சி. பிரிவுகளில் இடம் அளித்து, ஏற்கெனவே இந்தப் பிரிவுகளில் இடம் பெற்றவர்களை வெளியேற்றும் சமூக அநீதி பல ஆண்டு காலமாக நடை பெற்றது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு உச்ச நீதி மன்றம் இப்பொழுதுதான் இதில் தெளிவான வழியைக் காட்டியிருக்கிறது. இதன் காரணமாக இடைப்பட்ட காலங் களில் நூற்றுக்கணக்கான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கிடைக்க வேண்டிய இடங்கள் சூழ்ச்சியால் பறிக் கப்பட்டனவே. இந்த இழப்புக்கு யார் பொறுப்பு? விதிகளை மீறி நடந்து கொண் டவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப் படவில்லை?

டில்லி பல்கலைக் கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகங்களில் பிற்படுத்தப் பட்டவர்களுக்குத் தகுதி மதிப்பெண் (கட் ஆஃப் மார்க்) நிர்ணயத்துள்ள முறை மிகக் கொடுமையானது -_ விஷமத்தனமானது!

திறந்த போட்டியில் கடைசி மதிப்பெண் ணிலிருந்து 10 மதிப்பெண்களைக் குறைத்து, அதுதான் இவர்களுக்கான கட்ஆஃப் மார்க் என்று அவர்களாகவே எந்த வித விதிமுறைகளுக்கும் ஆட் படாமல் ஆரிய அட்டகாசமாக நடந் துள்ளனரே!

டில்லி உயர்நீதிமன்றம் தலையில் குட்டியதற்குப் பிறகுதானே சரியான இடத் துக்கு சமூக நீதித் தேர் நகர்ந்து வந்துள்ளது.

இடைக்காலத்தில் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இருபால் மாணவர்களுக்கு என்ன நட்ட ஈடு - என்ன பரிகாரம்? தவறு செய்த நிருவாகி களுக்கு என்ன தண்டனை?

சட்டங்களையும், விதிமுறைகளையும் குழியில் தள்ளி நயவஞ்சகமாக ஆதிக்கம் செலுத்தலாம் என்ற ஒரு போக்கு ஆரியப் பார்ப்பனர்களிடம் குடி கொண்டிருக்கிறது. ஒடுக்கப்பட்டவர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை. புரிந்து கொள்ளும் தன்மையோ போராடும் உணர்வோ இல்லை.

பெரியார் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல. இந்தியாவுக்கே தேவைப்படுகிறார்; திராவிடர் கழகத்தின் பணியும் அப்படியாகத்தான் இருக்கிறது.

தமிழ்நாட்டில் இயக்க ஏடுகளும், இதழ்களும் பரவியாக வேண்டும். வெளி மாநிலங்களில் தி மாடர்ன் ரேஷனலிஸ்டு அதிக அளவில் பரவும் வகை செய்தல் பெருக வேண்டும்.

தோழர்களே, நமது கழகத்துக்கு, நமது தொண்டர்களுக்கு நமது தலைவருக்கு பணி மேலும் மேலும் கூடிக் கொண்டே போகின்றது. தயாராவீர்! தயாராவீர்!!

----------- மின்சாரம்,விடுதலை ஞாயிறு மலர், 04-05-2011



ஊழலை ஒழிக்க என்ற பாதகையின்கீழ் இந்தி எங்கே இருந்து வந்து குதித்தது

ஊழலை ஒழிக்க என்ற பாதகையின்கீழ் இந்தி எங்கே இருந்து வந்து குதித்தது?

ஊழலை ஒழிக்கும் உத்தமப் புத்திரர்கள் புற்றீசல் போல புறப்பட்டு விட்டார்கள். ஊழலை ஒழிக்கிறேன் என்று சொல்பவர்கள் பால் பொது மக்களுக்கு ஓர் ஈர்ப்பு உண்டு. அதனைப் பயன்படுத்திக் கொள்ள சிலர் முன் வருகின்றனர்.

அன்னாஹசாரே என்ற ஒருவர் காந்தியின் மறுபதிப்பாக விளம்பரப்படுத்தப்பட்டு, இதோ ஊழலை ஒழிக்க உண்ணாவிரதம் இருக்கப் போகிறார் ஒரு மகான்! பராக், பராக் என்று பத்திரிகைகள் முண்டாசு கட்டி ஊளையிட்டன.

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்பதுபோல சில திரைமறைவு உண்மைகள் வெளிச்சத்தில் வந்து வீழ்ந்தன.

இந்த ஹசாரே அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ்.காரர் - அதன் பிரச்சாரப் பொறுப்பில் இருந்தவர் என்று கூறப் பட்டது. அது உண்மைதான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடியின் ஆட்சியைப் புகழ்ந்து தள்ளினார்.
இவர் உண்ணாவிரதம் இருந்த டில்லியில் உள்ள ஜந்தர்மந்தர் மேடை என்பது ஆர்.எஸ்.எஸின் வாடை மிகக் கடுமையாக வீசும் வகையில் இருந்தது. பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். பிரச்சார மேடைகளில் இடம் பெறும் பாரத மாதா வந்து குதித்து விட்டார் - மேடை விரிப்புக்கூட காவி வண்ணத்தில்தான் வடிக்கப்பட்டு இருந்தது.

இந்த உண்ணாவிரதத்துக்காக 82 லட்சம் ரூபாய் நன்கொடை திரட்டப்பட்டது - யாரிடமிருந்து? பெரும் பண முதலைகளிடமிருந்து நன்கொடைகளைக் கணிசமாகத் திரட்டுபவர்களால் உண்மையில் ஊழலை ஒழிக்க முடியுமா என்பது நியாயமான கேள்வியாகும்.

82 லட்சம் நிதி திரட்டப்பட்டதிலிருந்து நான்கு நாள் உண்ணாவிரதத்துக்கு ரூபாய் 50 லட்சம் ரூபாய் தண்ணீராகச் செலவழிக்கப்பட்டுள்ளது என்றால் இதற்குள்ளிருக்கும் நேர்மையின் மாற்று என்ன?

லோக்பால் மசோதாவைத் தயாரிக்கும் ஆலோசனைக் குழுவில் இடம் பெறுவதற்காக ஹசாரேயால் பரிந்துரைக் கப்பட்டவர்களும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்களாக இல்லையே!

லோக்பால் மசோதா நிறைவேற வேண்டும் - அதில் நான் உறுப்பினராக இருக்க விரும்பவில்லை என்று சொல்லியிருந்தால் அவர் பெரிய மனிதர்.

தான் உறுப்பினராக இருப்பதோடு, தன்னால் சொல்லப்படுபவர்தான் அந்தக் குழுவில் இடம் பெற வேண்டும் என்று அடம் பிடிப்பதெல்லாம் நேர்மையானது தானா என்ற கேள்வி எழவில்லையா?
சுவாமி அக்னிவேஷ், ராம் மாதவ், பாபா ராம்தேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் என்கிற சாமியார் பட்டாளமும் ஹசாரேயின் பின்னால் அணி வகுக்க ஆரம்பித்து விட்டன.

பொதுவாக நாட்டில் சாமியார்களின் யோக்கியதை பற்றி நல்ல அபிப்ராயம் கிடையாது. பரலோகத்தைக் காட்டப் போகிறேன் என்று கோடி கோடியாகப் பணம் குவிக்கிறார்களே - இதன் பொருள் என்ன?

கோடிகளைக் குவிப்பதற்கு ஆன்மீகம், காவி, சாமியார் என்பது ஒரு புடம் போட்ட குறுக்குவழிமுறையே!

சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்து ஹோதாவில் குதித்துள்ள இந்த ராம்தேவ் யார்? ஆர்.எஸ்.எஸின் பசு பாதுகாப்பு யாத்திரையில் (கோ ரக்ஷா) யோகா வகுப்புகளை நடத்திக் கொண்டிருந்தவர். பத்தாண்டுகளுக்கு முன்வரை சைக்கிளில் சுற்றித் திரிந்தவர். இன்று தனி ஹெலிகாப்டரில் பறந்து திரிகிறாரே - இதற்கான பணபலம் வந்த வகை தொகை என்ன? வெளிப்படையாக விவரங்களை வெளியிடட்டுமே, பார்க்கலாம்.

இப்பொழுது உண்ணாவிரதத்தில் குதித்துள்ள பாபா ராம்தேவ் தம் உண்ணாவிரதத்தின் நோக்கத்தை எடுத்துக் கூறியுள்ளார். அதில் ஒன்று என்ன தெரியுமா?

இங்கிலீஷ் இருக்கும் இடத்தில் இந்தியைக் கொண்டு வந்து வைக்க வேண்டுமாம். எப்படி இருக்கிறது? ஊழலை ஒழிக்க உண்ணாவிரதம் என்ற பாதகையின்கீழ் இந்தி எங்கே இருந்து வந்து குதித்தது?

இதிலிருந்தே இதன் பின்னணி என்ன என்ற முகத்திரை முழம் முழமாகக் கிழியவில்லையா?
பார்ப்பனீயம், சங்பரிவார்த்தனம் என்கிற பின்னணி யோடு ஒரு கும்பல் புறப்பட்டுள்ளது. இதில் பொது மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சங்பரிவார்க் கும்பல் பெரும் சரிவை சந்தித்திருக்கும் கால கட்டத்தில், ஊழல் ஒழிப்பு என்ற குதிரையின்மீது சவாரி செய்து, மக்கள் மத்தியில் தங்கள் சட்டையை உரித்துக் காட்டுகிறார்கள். சட்டையை உரித்து விடுவதாலேயே பாம்பின் நஞ்சும் தேனாக மாறி விட்டது என்று நம்பினால் அதைவிட தற்கொலை ஒப்பந்தம் வேறு ஒன்றும் இருக்க முடியாது.

ஊழல் ஒழிக்கப்படட்டும் - வரவேற்போம்! வைத்தியரே முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள் ளுங்கள் என்று நோயாளிகள் கேட்கும்படி இருக்கக் கூடாதல்லவா!
-------- விடுதலை தலையங்கம், 04-05-2011

Thamizh kadamaigal 22: தமிழ்க்கடமைகள் 22 தமிழர்கள் தமிழ் நிலத்தின் பழங்குடிகளே

தமிழ்க்கடமைகள் 22
தமிழர்கள் தமிழ் நிலத்தின் பழங்குடிகளே
தமிழின் முதல் நூலான தொல்காப்பியத்தில் மூவேந்தர்களைப் பற்றிய செய்திகள் வருகின்றன. சங்க இலக்கியங்களில் மூவேந்தரைப் பற்றியும், குறுநில மன்னர்கள், சிற்றூர்த் தலைவர்கள், அவர்களுக்கு உட்பட்டு வாழ்ந்த மக்கள் ஆகியோரைப் பற்றியும், அவர்களின் வாழ்வியல் முறைகளைப் பற்றியும் பல அகச் சான்றுகள் காணக்­கிடைக்கின்றன. இவர்கள் அனைவரும் ஒரு மூதாதையரிடமிருந்து வந்தவர் என்பதற்குரிய அகச் சான்றுகளோ சமூகப் புனைகதைகளோ (Social Myth) எவையும் கிடைத்தில. எனினும் ஒவ்வொரு குடிவழி­யினரும் இந்த நாட்டுக்கே உரிய தொல்பழங்குடியைச் சேர்ந்தவர்களே என்பதற்கும், அவர்கள் வாழ்ந்த ஊர், நகரம் ஆகியன தொன்மை வாய்ந்தனவே என்பதற்கும் அகச்சான்றுகள் பல கிடைக்கின்றன.
ஆவினன் குடி     – முருகு. 178
எவ்வி தொல்குடி – புறம்: 202: 14
சீர்மை சிறப்பின் தொல்குடி   – கலி.105: 2
தென்திசை ஆய்குடி     –  புறம். 132: 8
தொல்குடி    – முருகு.128
தொல்லிசை நட்டகுடி   – கலி.104:15
நல்லிசை முதுகுடி      – புறம் 58:5
பண்பின் முதுகுடி – புறம். 391:9
பழங்குடி     – அகம்: 290:8
பீடுபெறு தொல்குடி     – புறம்: 289: 4
மன்பதை காக்கும் நீள்குடி    – புறம்: 335:8
முரசு கெழு முதுகடி    – கலி.105:2
வாணன் சிறுகுடி – அகம்.117:18
எனக் குடிகளின் தொன்மையினையும்,
நியம மூதூர் –  நற்.45:4
மல்லல் மூதூர்    –  நற்.319:3
அழியா மரபின் மூதூர்   –  நற். 311:5
மணல்மலிமூதூர் – நற்.319:3
பெருங்கலி மூதூர்      – நற்.321:10
ஆதியருமன் மூதூர்     – குறுந்.293:4
கம்பலை மூதூர்   – புறம் 4:1
மல்லல் மூதூர்    – புறம்: 18.12
நனந்தலை மூதூர் – புறம் 228:4
என ஊர்களின் தொன்மையின்மையும் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. தமிழகத்துப் பழங்குடிகள் வெளிநாட்டிலிருந்து வந்தவை என்பதற்கு எவ்வித அகச் சான்றுகளும் இல்லை. மாறாக இங்கேயே தோன்றி வாழ்ந்தவை என்பதையே மேற்காட்டிய எடுத்துக்காட்டுகள் உறுதி செய்கின்றன. எனவே, நாடு தழுவிய பொது வரலாறும், பொது மரபும் தமிழ் மண்ணிலிருந்தே உருப்பெறுகின்றன.
–  முனைவர் ப.கிருட்டிணன்: 
தமிழ் நூல்களில் தமிழ் மொழி தமிழ் இனம் தமிழ் நாடு: பக்கம்: 47-48


செவ்வாய், 7 ஜூன், 2011

Genocide: 30 years inmprisonment for Ruvanda military chief இனப்படுகொலை: ருவாண்டா இராணுவத் தளபதிக்கு 30 ஆண்டு சிறை

எதிர்பார்ப்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 


இனப்படுகொலை: ருவாண்டா ராணுவத் தளபதிக்கு 30 ஆண்டு சிறை

First Published : 06 Jun 2011 07:48:39 PM IST


கிகாலி, ஜூன் 6- ருவாண்டா நாட்டில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக முன்னாள் ராணுவத் தளபதிக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஐநாவின் சர்வதேச குற்றவியல் நீதி்மன்றம் தீர்ப்பளித்துள்ளது.1994-ம் ஆண்டு ருவாண்டாவில் நடைபெற்ற இனப்படுகொலையில், சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் துட்சி மற்றும் ஹுட்டு இனத்தைச் சேர்ந்தவர்கள். ருவாண்டா இனப்படுகொலையில் முக்கியப் பங்கு வகித்த அப்போதைய ராணுவத் தளபதி பிசிமுங்கு 2002-ம் ஆண்டு, அங்கோலா நாட்டில் கைது செய்யப்பட்டார்.இதையடுத்து, ஐநாவின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பிசிமுங்கு உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில், 250 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை 395 நாட்கள் நடைபெற்ற நிலையில், 1994-ல் ராணுவத் தளபதியாக இருந்த அகஸ்டின் பிசிமுங்குவுக்கு 30 ஆண்டுக் சிறைத் தண்டனை விதித்து தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இத்தீர்ப்பை வழங்கிய அசோகா டி சில்வா, இலங்கை உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், இலங்கை அதிபர் ராஜபட்ச மற்றும் ராணுவ அதிகாரிகள் போர்க்குற்றம் புரிந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இலங்கையைச் சேர்ந்த நீதிபதி ஒருவர், இனப்படுகொலை குற்றச்சாட்டில் ருவாண்டா ராணுவத் தளபதிக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திங்கள், 6 ஜூன், 2011

dinamalar picture message


dinamani article about gold: மாயத்தங்கம் மருந்தாகுமா?

கோவில் தங்கங்களில் நான்கில் ஒரு பகுதியை அரசு எடுத்துக் கொண்டாலே நிதி ஆதாரம் பெருகும்; தங்கம் விலை குறையும்; பண மதிப்பு உயரும்.திரு என்.டி.ஆர். கோவில் தங்கங்களைக் கல்விப்பணிக்கும் மருத்துவப் பணிக்கும் பயன்படுத்த முனைந்தார். மதவாதிகள் எதிர்த்துக் கெடுத்து விட்டனர். அவ்வாறு இல்லாமல் துணிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

மாயத்தங்கம் மருந்தாகுமா?

First Published : 05 Jun 2011 11:26:07 PM IST


தமிழ் சினிமாக்களில் ""கோல்டன் ஹிட்ஸ்'' வகைகளில் நிஜமாகவே தங்கம் பற்றிய பாட்டுகள் எவ்வளவோ இருக்கலாம். என்னை மிகவும் கவர்ந்த ஒரு பாட்டு ஐம்பதுகளில் ஹிட் சாங். அநேகமாக டி.ஆர். மகாலிங்கம் நடித்த திருநீலகண்டராயிருக்கலாம். எம்.கே.டி. பாகவதர் நடித்த திருநீலகண்டரே வெற்றிப்படம். டி.ஆர். மகாலிங்கம் நடித்த படம் தோல்வியுற்றாலும், ""மாயப் பிரபஞ்சமடி தங்கமே தங்கம். மதிமயங்கிக் கலங்கிடாதே தங்கமே தங்கம்'' என்று தொடரும் பாட்டில், நிறையத் தத்துவங்கள் கூறப்பட்டுள்ளன.எந்தச் சித்தர் இப்பாட்டை எழுதினாரோ, அவற்றை ஒருகணம் கண்முன் நிறுத்திப் பார்த்தால் இன்றைய உலகப் பொருளாதாரச் சீரழிவை நினைவுபடுத்துவதாயுள்ளது. அதே பாட்டின் பல்லவியைச் சற்று மாற்றி, ""மாயத்தங்கமடி பிரபஞ்சமே பிரபஞ்சம்'' என்றும் பாடலாம்.அமெரிக்கப் பொருளாதார மேதைகள் பணவீக்கத்தையும், டாலரின் வீழ்ச்சியையும் சரிசெய்ய ""கோல்டு ஸ்டாண்டர்ட்'' வேண்டுமென்று கூறுகிறார்கள். இந்தியாவிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அதுவே வழி என்ற பேச்சு வந்துவிட்டது. ஆனால், தங்கத்துக்கு எங்கே போவது?இந்தியாவில் உள்ள ஒரே தங்கச் சுரங்கம் கோலாரில் உள்ளது. பாதாளம்வரை நோண்டிவிட்டார்கள். கோலாரில் பொட்டுத் தங்கம்கூட இல்லை. 8 கிராம் தங்கம் விலை கூடிய விரைவில் ரூ. 20,000-ஐ தொடலாம்.பாலமுரளி கிருஷ்ணா, "தங்கரதம் வந்தது வீதியிலே' என்று பாடினார். திருப்பதி, மதுரை, பழனி போன்ற ஊர்க் கோயில்களில் தங்கத் தகடு பதித்த குட்டித்தேர் உண்டு. வேண்டிக்கொண்டால் லட்ச ரூபாய் பணம் கட்டி இழுக்கலாம். கவிஞர் வாலிக்கு ""தங்கத் தோணியிலே சென்று தவழும் வெண்ணிலவைப் பார்க்க வேண்டுமாம்!'' ஒருக்கால் எகிப்திய நாகரிகத்தின் சிறப்பாக பரோ மன்னர் ராம்úஸ - 2 வைத்திருந்தால் பிரமீடு கோயில்களில் அகப்படலாம். ஜீவன்முக்தி பெற தங்கத் தோணியில் நைல் நதி வழியே கடலின் எல்லையை அடைய வேண்டுமென்று எகிப்திய புராணம் கூறுகிறது. என்ன செய்வது? கோல்டு ஸ்டாண்டர்ட் வர வேண்டுமென்றால் தங்கமெல்லாம் இந்தியாவில் குவிய வேண்டுமே!பணவீக்கத்தால் பணத்தின் மதிப்பு குறைகிறது. தங்க மதிப்பை இருப்பு நிதியாக வைத்து நோட்டடிப்பைக் கட்டுப்படுத்த வேண்டும். பொதுக்கடன் - பப்ளிக் டெட் குறைய வேண்டும். அரசாங்கம் அசல் பணத்தை அளவுக்கு மீறி அச்சடிப்பு ஒருபுறம்.கள்ளநோட்டுப் புழக்கம் ஒருபுறம். கறுப்புப் பணப்புழக்கம் ஒருபுறம். இப்படிப் பணவீக்கம் ரணவீக்கம் ஆனதால் தங்க ஊசிதான் தக்க மருந்து என்று ஒருசாரார் வாதமிடுகின்றனர். தங்க நாணயம் அச்சாகுமோ?நாயக்க மன்னர்கள் தென்னாட்டை ஆண்டபோது சென்னையில் உள்ள தங்கசாலைத் தெருவில் "வராகன்' என்று பைசா அளவில் தங்கக்காசு வெளியிட்டார்கள். கிழக்கிந்தியக் கம்பெனி வெள்ளி ரூபாய் எக்ஸ்சேஞ்ச் அடிப்படையில் ஒரு வராகனுக்கு மூன்றரை அணா மதிப்பிட்டு சமஸ்தானங்களுக்கு மானியம் வழங்கியதாம். வராகனில் ""வராகமூர்த்தி'' திருவுருவம் பதிக்கப்பட்டிருக்கும்.இப்படியெல்லாம் நினைவு அலைகள் பின்னோக்கிச் செல்கிறது. முற்போக்கு சக்திகளால் நிதிப் பிரச்னை ஏற்பட்டுள்ளதால் பிற்போக்கு சக்தியான தங்கம் நம்மை ஆளப்பிறந்துவிட்டது. அமெரிக்காவில் கோல்டு ஸ்டாண்டர்டு ஏறத்தாழ வந்துவிட்டது. இந்தியாவுக்கும் வரவேண்டுமா? வேண்டாமா? என்று பொருளியல் - நிதியியல் நிபுணர்களிடையே வாக்கு வாதம் இருந்தாலும்கூட நாடே தங்கத்துக்கு அடிமையாகிவிட்ட எதார்த்தத்தைப் புரிந்துகொள்வது நன்று.பிரிட்டிஷ் இந்தியாவில் 1893-ல் ஹெர்ச்சல் கமிட்டி யோசனையை ஏற்று கோல்டு எக்ஸ்சேஞ்சு ஸ்டாண்டர்ட் உருவானது. இந்தியாவில் அதற்குமுன் வெள்ளித்தரமே செயல்பட்டது. சில்வர் ஸ்டாண்டர்ட் என்று சொல்வார்கள். 1835-ல் 165 குண்டுமணி எடை வெள்ளியில் 15 குண்டுமணி நிக்கல் கலந்து 185 குண்டுமணி எடையில் ஒரு ரூபாய் வெள்ளி நாயணம் வெளியிட்டார்கள். அந்த வெள்ளிப்பணம் இன்றுள்ள பணமதிப்போடு ஒப்பிட்டால் ரூ. 10,000 வரை இருக்கும். அன்று புதுக்கோட்டை சமஸ்தானம் வெளியிட்ட அம்மன்சல்லிக்குக்கூட பொருள் மதிப்பு உண்டு.பிரஹதாம்பாள் உருவம் அந்தச் சல்லியில் இருக்கும். 3 அம்மன்சல்லி = 1 பைசா. 3 பைசா = காலணா. மாதம் 1 ரூபாய் சம்பளம் என்றால் அந்தக்காலத்தில் ராஜ உத்தியோகமாம்!1870-ல் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கோல்டு ஸ்டாண்டர்ட் வந்தது. வெள்ளி மதிப்பு குறைந்தது. இந்தியாவில் 1894-ல் கோல்டு ஸ்டாண்டர்ட் வந்தது. எனினும் வெள்ளி ரூபாய்களை பவுண்ட் - ஸ்டர்லிங்காக மாற்றலாம். அதன்பின்னர், தங்கமாக மாற்றலாம். நாணய மாற்றுகளில் புழங்கிய வெள்ளி ரூபாய்கள், பித்தளை, செப்புக்காசுகள் எல்லாம் டோக்கன் பணங்களே. உள்நாட்டில் டோக்கன் பணங்களைக் கொண்டு தங்கமாக மாற்ற முடியாது. ஆனால், வெளிநாட்டு வணிகத்தில் ரூபாய்களைத் தங்கமாக மாற்றிக் கொள்ளலாம். இரண்டு விதமான நாணய மாற்றுகள் உருவாயின. இந்தியாவில் ரூபாய் இருப்பு நிதியும் இங்கிலாந்தில் தங்க நிதியும் வைக்கப்பட்டன.1 ரூபாய் = 1 ஷில்லிங் + 4 பென்ஸ் என்பது நாணயமாற்று. எனினும், 1914-ல் கோல்டு ஸ்டாண்டர்ட் கைவிடப்பட்டுப் பணவீக்கம் தொடங்கியது.இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர் இங்கிலாந்தின் பொற்காலம் முடிந்து அமெரிக்காவின் பொற்காலம் வந்தது. ஸ்டர்லிங் மதிப்பிழந்தது. டாலர் தங்க மதிப்பைப் பெற்றது. எனினும், 1971-ல் அனைத்துலகச் சந்தையில் ஏற்பட்ட பணப் பற்றாக்குறையை ஈடுசெய்ய அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் தங்க நிதிச் சேமிப்புக்கு ஏற்ப நோட்டு அச்சடிக்கும் நாணய மாற்று முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.அனைத்துலகச் சந்தையில் டாலரின் நிலைப்பாட்டை அனைத்துலக நாடுகளின் நிதிக் கூட்டுறவின் மூலம் நிலை நிறுத்தலாம் என்று கூறினார்.""ரிசர்வ் கரன்சி தங்கத்துடன் இணைக்காதவரை டாலர் பலவீனமாயிருக்கும் என்றும், சர்வதேச நிதிக்கூட்டுறவு பற்றி ஒவ்வொரு நாடும் பேசுமே தவிர, செயல்படாது என்றும்'' அன்றே வில்ஹம் ரோப்கி என்ற பொருளியல் நிபுணர் எச்சரித்தது இன்று உண்மையானதை அமெரிக்கர்கள் உணர்ந்துவிட்டனர். ஏனெனில், இப்போது டாலர் மட்டுமே மிகவும் பலவீனமான அனைத்துலக ரிசர்வ் கரன்சியாக உள்ளது. டாலரோடு ஒப்பிடும்போது யூரோவும் சரி ஜப்பானின் யென்னும் சரி ரிசர்வ் கரன்சியாக ஏற்கப்படாமல் இருக்கவே மேற்படி நாடுகள் விரும்புகின்றனவாம்.வளரும் நாடுகளான இந்தியா, சீனா, பிரேசில், மெக்சிகோ, ரஷியா, தென்னாப்பிரிக்கா ஒருங்கிணைந்து பிரிக்ஸ் என்ற பெயரில் ஒரு ரிசர்வ் கரன்சியை நிலைநிறுத்தும் யோசனையில் உள்ளது. மேற்படி ஆறு நாடுகளும் அனைத்துலக நிதிக் கூட்டுறவுக்கு முயல்வதன் மூலம் அங்காடி விரிவாக்கமும் இருநாட்டு வர்த்தக உறவும் மேம்படும்.பிரிக்ஸ் நாடுகள் ஒருவருக்கொருவர் அவரவர் கரன்சியையே கொடுத்து வாங்குமாம். இந்தியப் பொருளியல் வல்லுநர்கள் பிரிக்ஸ் ஆபத்தானது என்று எச்சரிக்கின்றனர். ஜப்பானும், ஐரோப்பிய நாடுகளும்கூட அவர்களின் கரன்சியை ரிசர்வ் கரன்சியாக ஏற்காமல் டாலரை மதிக்கும்போது பிரிக்ஸýக்கு அவசரம் ஏன் என்று வினவுகின்றனர். அனைத்துலக அளவில் தங்கம் வைப்புநிதிச் சொத்தாக மாறி வருவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அனைத்துலக மொத்த வைப்புநிதிச் சொத்தில் 11 சதவீதம் தங்கத்தின் பங்கு உள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, இத்தாலி போன்ற நாடுகள் தத்தம் தங்க நிதிப் பங்கை உயர்த்தியவண்ணம் உள்ளன. தங்க நிதியில் முதலிடத்தில் உள்ள அமெரிக்கா 80 %, ஜெர்மனி 69%, பிரான்ஸ் 60%, இத்தாலி 70%, சுவிட்சர்லாந்து 15% தங்கப் பங்கு உள்ளது. இங்கிலாந்தில் 15%, ஜப்பானில் 2 % மட்டுமே. எமர்ஜிங் மார்க்கெட் எக்கானமி என்று முத்திரை குத்திக்கொண்ட பிரிக் நாடுகளும் தங்கம் வாங்கத் தொடங்கிவிட்டன. ரஷியா தங்கம் வாங்குகிறது. கடந்த மூன்றாண்டுகளாக உலக நாடுகள் தங்கம் வாங்கிக் குவிக்கின்றன.சீனாவை எடுத்துக்கொண்டால் 2008-ல் 600 டன் தங்க இருப்பு நிதி இன்று 1,050 டன்களாக உயர்ந்துவிட்டது. இந்தியாவில் 300 டன் தங்கம் இன்று 500 டன்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இப்போது மொத்த வைப்புநிதியில் தங்கத்தின் பங்கு 7.5 சதவீதமாகும்.டாலரின் மதிப்பை உயர்த்த அமெரிக்கா தங்கம் வாங்கிக் குவிப்பதைப் பின்பற்றி இந்தியா அண்மையில் அனைத்துலகப் பணநிதியமாகிய ஐ.எம்.எப்.-லிருந்து 360 டன் தங்கம் வாங்கியுள்ளது. அமெரிக்காவைப்போல் இந்தியாவும் தங்கத்தில் முகம் எடுக்கத் தொடங்கிவிட்டது.எனினும், 1914-க்கு முன்பு நிலவிய கோல்டு ஸ்டாண்டர்ட் முழுமையாக ஏற்படவில்லை என்றாலும் இன்று உலக நாடுகள் தங்கத் தரத்தை நிலைப்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவது புலனாகும்.அமெரிக்காவில் மட்டும் தன்னிச்சையாக யுடாஹ் மாநிலம் கோல்டு ஸ்டாண்டர்டை அறிவித்துவிட்டது. யுடாஹைத் தொடர்ந்து 13 மாநிலங்கள் தங்கத் தரத்தை நிலைப்படுத்தி அறிவிக்கத் தொடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.2012-ல் அமெரிக்கா முழுமையாக தங்கத்தர நாணயமாற்றுச் சந்தையை அறிவித்து கோல்டு ஸ்டாண்டர்டாகும் என்று இலக்கு வைக்கப்பட்டுவிட்டது. அமெரிக்காவுக்கு ஒரு கவலையும் இல்லை. தங்கக் குவியலில் தங்கமயமாக அமர்ந்துள்ளார்கள்.இந்தியாவிலும் தங்கத்துக்குப் பஞ்சமில்லை. கடந்த 10 ஆண்டுகளில் தங்கம் தனிப்பட்ட முறையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவை ரிசர்வ் வங்கிச் சொத்து அல்ல. திராவிட தேசங்களாகிய ஆந்திரம், தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள ஆயிரக்கணக்கான கோயில்களில் உள்ள தங்கத்தையும், திராவிட தேசத்துப் பெண்களின் கழுத்தில் பூட்டியுள்ள நகைகளையும், வங்கி லாக்கர்களில் அடமானம் அல்லது பத்திரம் கருதி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள தங்கங்களையும் கூட்டினால்..... அப்படிக் கூட்டும்படி அவற்றைத் தேசத்தின் ரிசர்வ் நிதி என்று அறிவித்து அவசரச்சட்டம் இயற்றப்படுமானால், டாலரை ரூபாய் வெல்லும்.நேற்று அண்ணா ஹஸôரே, இன்று யோகாகுரு ராம்தேவ்போல், நாளை ஒருவர் மேற்படி கோரிக்கையை வைத்து தில்லி ஜந்தர் மந்தரில் உட்காரலாம். அதற்கெல்லாம் மீண்டும் தங்கக் கட்டுப்பாட்டைக் கொண்டுவந்த மொரார்ஜி தேசாய் உயிர் பெற்று வந்தால் மாயத்தங்கம் மருந்தாகலாம்.

Thamizhkkadamaigal 20 : தமிழ்க்கடமைகள் 20 நம் பணத்தில் கொழிக்கும் இந்தியை எதிர்ப்போம்

தமிழ்க்கடமைகள் 20
நம் பணத்தில் கொழிக்கும் இந்தியை எதிர்ப்போம்
‘இந்தியை எதிர்க்கவில்லை; இந்தித் திணிப்பைத்தான் எதிர்க்கின்றோம்’ என்று கூறுவதையும் நேருவின் உறுதிமொழியைச் சட்டமாக்க வேண்டும்’ என்று கூறுவதையும் நிறுத்த வேண்டும். நேருவின் உறுதிமொழி என்பது இந்தி முழுமையாக நம் மீது ஏறுவதை ஒத்திப் போடுவதுதானே தவிர, நம்மொழிக்குத் தலைமை வாய்ப்புத் தருவது அன்று. அதுபோல் இந்திமொழி இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மாநிலத்தின் அவர்களின் பணத்தில் வளர்க்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு நாம் யார்? ஆனால், அனைத்து மொழி பேசுவோரின் செல்வத்தைச் சுரண்டிக் ‘கட்டாயம் இல்லை’ என்ற பெயரில் இந்தி பரப்பப்படுவதும் வளர்க்கப்படுவதும் திணிக்கப்படுவதும் உடனடியாக நிறுத்தப்பட்டாகவேண்டும். அரசு பள்ளிக் கூடங்களில் இருந்து இந்தியை விரட்டி விட்டோம் எனக்கூறித் தனியார் பள்ளிகளிலும் தனிப்பட்ட முறையிலும் இந்தி வளர்ச்சிக்குப் பெருஞ்செலவு செய்யப்படுவது நிறுத்தப்பட்டாக வேண்டும். இந்தி வளர்ச்சிக்காகத் ‘தட்சிண பாரத இந்தி பிரச்சாரசபை’ மூலம் நமது செல்வம் செலவிடப்படுவதையும் நிறுத்த வேண்டும். இந்தியைப் படிப்போருக்கும் படிப்பிப்போருக்கும் தரப்படும் உதவிகள் நிறுத்தப்பட வேண்டும். இவை மூலமும் நடுவணரசின் பிறதுறை அமைப்புகள் மூலமும் இந்திக்குச் செலவழித்த தொகையை இழப்பீடு போல் தமிழ் வளர்ச்சிக்குச் செலவழிக்க நடுணவரசு தரவேண்டும். தொலைக்காட்சி மூலம் இந்தித் திணிப்பிற்கு இதுவரை செலவழித்தத் தொகையும் தமிழுக்குத் தரப்பட வேண்டும். மேலும் இந்தியை மட்டும் தேசிய மொழி என்றும் பிறவற்றை வட்டார மொழிகள் என்றும் அரசியலமைப்பிற்கு மாறாகக் கூறுவதை எல்லா இடங்களிலும் நிறுத்த வேண்டும். ‘தேசிய ஒளிப்பரப்பு’ என்று சொல்வதை ‘நடுவண் ஒளிபரப்பு’ என்றும் ‘மண்டல ஒளிபரப்பு’ என்று சொல்வதை ‘தமிழ்நாட்டு ஒளிபரப்பு’ என்றும் (மாநிலங்களின் பெயர்களில்) குறிக்க வேண்டும். நடுவண் ஒளிபரப்பில் இந்தி நிகழ்ச்சிகள் மட்டும் இடம் பெறுவது நிறுத்தப்பட வேண்டும். அனைத்து மாநில நிகழ்ச்சிகளும் இடம் பெறும் வகையில் இவை அமைய வேண்டும்.
- இலக்குவனார் திருவள்ளுவன்:
தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம்-ஓர் இனிய கனவு.
(தமிழ் ஆட்சிமொழி: பக்கம். 89 புதுமை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன வெளியீடு)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

ஞாயிறு, 5 ஜூன், 2011

Thamizh kadamaigal 19 : thamizh india: தமிழ்க்கடமைகள் 19 தமிழ் இந்தியா

தமிழ்க்கடமைகள் 19
  தமிழ் இந்தியா
     உலகின் மூத்த குடியான தமிழ்மக்கள் தோன்றி, வாழ்ந்த வாழும் பகுதியான ஆசியாக் கண்டத்தை நாம் ‘தமிழ்க் கண்டம்’ என்றே அழைக்க வேண்டும். ‘இந்தியா’ என்பது ‘தமிழ்த் துணைக்கண்டக் கூட்டரசு நாடுகள்’ என அழைக்கப்பெற வேண்டும்.அல்லது குறைந்தது ‘தமிழ் இந்தியர்’ என்றாவது அழைக்கப்பட வேண்டும்.
      - இலக்குவனார் திருவள்ளுவன்:
தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம்-  ஓர் இனிய கனவு. (தமிழ் ஆட்சிமொழி: பக்கம். 88
புதுமை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன வெளியீடு)