வெள்ளி, 1 மார்ச், 2019

கலைமாமணி விருதாளர்களுக்குப் பாராட்டுகள்! அரசிற்கு நன்றி! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

கலைமாமணி விருதாளர்களுக்குப் பாராட்டுகள்!  அரசிற்கு நன்றி!

தமிழ்நாடு அரசு 201 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்குவதாக அறிவித்துள்ளது. விருது பெறும்  அனைவருக்கும் பாராட்டுகள்!  2010 ஆம் ஆண்டிற்குப் பின் கலமாமணி விருது வழங்காமை குறித்து கலைமாமணி விருதுகள் வழங்குவதைக் காலங்கடத்துவது ஏன்? என
 எழுதியிருந்தோம். தொடர் நடவடிக்கை எடுத்த பொழுது இயல் இசை நாடக மன்றித்திலிருந்தும் தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறையிலிருந்தும் நம் மடலை அரசிற்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டினர். அவ்வப்பொழுது நாமும் நினைவூட்டினோம். 23.02.2019 அன்று  தாய்மொழி நாளுக்கு வாழ்த்திய முதல்வருக்குப் பாராட்டுகள்! 
என எழுதிய கட்டுரையில் கலைமாமணி விருது வழங்காமை குறித்தும் குறிப்பிட்டிருந்தோம். எனவே, தமிழக அரசு மேலும் காலங்கடத்தாமல் விருதுகளை அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.  
விருதுகள் பெறும் பலரும் நம் நட்பு வட்டத்திலும் அறிமுக வட்டத்திலும் உள்ளவர்களாகவும் தக்கவர்களாகவும் உள்ளனர். விருது பெறும் கலைஞர்கள் அனைவருக்குமே நம் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை. (திருவள்ளுவர், திருக்குறள் 672)
என்னும் தமிழ் நெறியை இனியேனும் அரசு பின்பற்றுவதாக!
– இலக்குவனார் திருவள்ளுவன்

கலைமாமணி விருது பெறும் கலைஞர்கள்

[முன் குறிப்பு: அரசாணையில் உள்ளவாறே பிறமொழிச்சொற்களும் கிரந்த எழுத்துகளும் இடம்பெற்றுள்ளன. மாற்றித் திருத்த இயலவில்லை.}

வியாழன், 28 பிப்ரவரி, 2019

திராவிடக் கொள்கை விளக்க அறிக்கை : சிறப்புப் பொதுக்கூட்டம்

அகரமுதல
மாசி 21, 2050   செவ்வாய்   5.3.2019 மாலை 6.30 – 8.30 மணி
இடம்:  நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றம், பெரியார்திடல், சென்னை-7திராவிடக் கொள்கை விளக்க அறிக்கை (DRAVIDIAN MANIFESTO) சிறப்புப் பொதுக்கூட்டம்

தலைமைகலி.பூங்குன்றன்

வரவேற்புரைவழக்குரைஞர் அருள்மொழி

சிறப்புரைதமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

பேராசிரியர் சுப.வீரபாண்டியன்

– திராவிடர் கழகம்

அளவளாவல் – திரு சி.எசு.நடராசன்

அகரமுதல
மாசி 19, 2050  ஞாயிற்றுக்கிழமை 3.3.2019  மாலை 4.00

குவிகம் இல்லம்

ஏ6, மூன்றாம் தளம்,வெண்பூங்கா அடுக்ககம்,   

24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர்,

சென்னை 600 017

அளவளாவல் – திரு சி.எசு.நடராசன், தேசியச் சொற்கள்(National Words ) நூலாசிரியர்

தருமபுரி மண்டலத் திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

மாசி 18, 2050  சனிக்கிழமை 2.3.2019 மாலை 3 மணி இடம்: பெரியார் மன்றம், தருமபுரி
தருமபுரி மண்டலத் திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
அமைப்பு: தருமபுரி, திருப்பத்தூர், ஒசூர், கிருட்டிணகிரி
தலைமை: வீ.சிவாசி (தருமபுரி மண்டலத் தலைவர்)
வரவேற்புரை: கோ.திராவிடமணி (தருமபுரி மண்டலச் செயலாளர்)
முன்னிலை: இளையமாதன் (மாவட்டத் தலைவர், தருமபுரி),
அகிலா எழிலரசன் (மாவட்டத் தலைவர் திருப்பத்தூர்),
பெ.மதிமணியன் (மாவட்டத் தலைவர், கிருட்டிணகிரி),
சு.வனவேந்தன் (மாவட்டத் தலைவர், ஒசூர்)
தொடக்க உரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
கருத்துரை: தஞ்சை பெரியார்செல்வன் (தலைமைக் கழகப் பேச்சாளர்),
ஊமை.செயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்),
கே.சி.எழிலரசன் (பெரியார் அறக்கட்டளை உறுப்பினர்)
பொருள்: வேலூரில் நடைபெற உள்ள மார்ச்சு 10, 2019 மணியம்மையார் நூற்றாண்டு தொடக்க விழா மாநாடு
நன்றியுரை: வண்டி ஆறுமுகம் (மண்டல இளைஞரணிச் செயலாளர்)
ஏற்பாடு: தருமபுரி மண்டலத் திராவிடர்கழகம்.

பெருமா அம்மா அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல்

அகரமுதல

மாசி 18, 2050  சனிக்கிழமை 2.3.2019 காலை 11 மணி

இடம்: பெருமா அம்மாள் இல்லம், மாரவாடி

பெருமா அம்மா அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல்

தலைமை: ஊமை.செயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்)

படத்தைத் திறந்து வைத்து நினைவேந்தல் உரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்)

முன்னிலை: இளையமாதன் (மாவட்ட தலைவர், தருமபுரி),
வீ.சிவாசி (மண்டலத் தலைவர், தருமபுரி),
கோ.திராவிடமணி (மண்டலச் செயலாளர்)
நினைவேந்தல் உரை: வ.முல்லைவேந்தன் (மேனாள் அமைச்சர், திமுக),
 தடங்கம் பெ.சுப்பிரமணி (மாவட்ட செயலாளர், திமுக),
உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்),
கி.கோவேந்தன் (மாநில அமைப்புச் செயலாளர், விசிக),
பி.என்.பி.இன்ப சேகரன் (சட்டமன்ற உறுப்பினர்,திமுக.பென்னாகரம்),
 கோவி.சிற்றரசு (மாவட்டச் செயலாளர், இந்தியத் தேசியக் காங்கிரசு), 
கே.சி.எழிலரசன் (பெரியார் அறக்கட்டளை உறுப்பினர்),
எம்.எசு.இராமன் (எ) எழிலன் (மாநிலச் செயற்குழு உறுப்பினர், விசிக),
எசு.தேவராசன் (மாவட்டச் செயலாளர், இ.பொ.க.மா.பொ.க.),
ஏ.குமார் (மாவட்டச் செயலாளர், [இ.பொ.க. (மா.)]
நன்றியுரை: ஊமை. மு.கருணாநிதி (பெங்களூரு)

திங்கள், 25 பிப்ரவரி, 2019

ஈ.வெ.இரா.மணியம்மையார் நூற்றாண்டு விழா : பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி

மாசி 12, 2050 செவ்வாய் 26.02.2019 காலை 10.00 தஞ்சாவூர், திருச்சி, செயங்கொண்டம்

கவனயீர்ப்புப் போராட்டம்

கவனயீர்ப்புப் போராட்டம் மாசி 11, 2050 திங்கள் 25.02.2019 முற்பகல் 10மணி -நண்பகல் 12மணி
10, தெளனிங்கு தெரு எதிரில்/OPPOSITE 10 DOWNING STREET, இலண்டன் / LONDON, SW1  [அருகிலுள்ள தொடருந்து நிலையம்:  Westminster]
தாயகத்தில் நடைபெறும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார், உறவினர்கள், பொதுமக்களால் நடத்தப்படும் கவனயீர்ப்புப்  போராட்டத்திற்கு பிரித்தானியத்  தமிழர் பேரவை முழு ஆதரவு வழங்குகிறது.
மேலும், இப்போராட்டத்தில் தாயகத்திலும் புலம்பெயர் நாட்டிலும் பொதுமக்கள் அனைவரையும் மிக எழுச்சியுடன் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

பிரித்தானியத் தமிழர் பேரவை

தமிழின அழிப்பைத் தமிழீழத் தேசம் மறக்கவோ மன்னிக்கவோ போவதில்லை! – உருத்திரகுமாரன்

அகரமுதல
தமிழின அழிப்பைத் தமிழீழத் தேசம் மறக்கவோ மன்னிக்கவோபோவதில்லை! – உருத்திரகுமாரன்
 இலங்கை அரசின் தமிழின அழிப்பைத்  தமிழீழத்  தேசம் வரலாற்றில் மறக்கவோ மன்னிக்கவோ போவதில்லை. சிங்களத்தின் இனஅழிப்பே தமிழீழத் தாயகம் உருவாகக் காரணமாக இருந்தது என்பதனை வரலாறு பதிவு செய்யும் போது இனஅழிப்பில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் அமைதியாக உறங்குவார்கள் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
 கடந்த பெப்பிரவரி மாதம் 15ஆம் நாள் வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் நடந்த ஒரு பொதுக்கூட்டமொன்றில், அங்குக் கூடியிருந்த தமிழ் மக்களை நோக்கித் தலைமையர் இரணில் விக்கிரமசிங்க கடந்த காலப் போர்ச் சிக்கல்களுக்கு ‘மறப்போம் மன்னிப்போம்’ என்ற வகையில் நல்லிணக்கம் காணவேண்டும் எனக் கோரியமை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே உருத்திரகுமாரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 இது குறித்து அவர் விடுத்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 தென்னாப்பிரிக்காவில் வெள்ளையினத்  துவேசத்தால் நிகழ்ந்திருந்த இனப்படுகொலைக்குத் தீர்வாக அங்கு உண்மை – நல்லிணக்க ஆணையம் (Truth and Reconciliation Commission) நியமிக்கப்பட்டு வழக்கு, தண்டனை எதுவும் இல்லாமல் நிகழ்ந்த சிக்கல்கள், மன்னிக்கப்பட்டு நல்லிணக்கம் உருவானது போல, இலங்கைத் தீவிலும், அப்படியானதொரு உண்மை – நல்லிணக்க ஆணையம் (Truth and Reconciliation Commission) நியமித்து, கடந்த காலப் போர்ச் சிக்கல்களுக்கு ‘மறப்போம் மன்னிபோம்’ என்ற வகையில், நல்லிணக்கம் உருவாக்கப்பட வேண்டுமென்று  இலங்கையின் தலைமையர் கோரியுள்ளார். இதற்கான ஆணைக்குழுவை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்-
 இனப்படுகொலைக்கு உள்ளான தென்னாப்பிரிக்க கறுப்பர்கள்,அரசியல் விடுதலை பெற்று ஆட்சியில் இருந்தவாறு, வெள்ளையர்களை மன்னித்த தென்னாப்பிரிக்க எடுத்துக்காட்டு, இனப்படுகொலைக்கு உள்ளாகிஉரிமைகள் மறுக்கப்பட்டு, அடிமைகளாக இருக்கும் ஈழத் தமிழருக்குப்பொருந்தாது. தென்னாப்பிரிக்காவின் சிக்கல் வேறு. ஈழத் தமிழர்களின் சிக்கல் வேறு. இரண்டையும் ஒன்றுடன் ஒன்று ஒப்பிடமுடியாது.
 தென்னாப்பிரிக்காவின் மொத்த குடித்தொகையில் 8.9 விழுக்காட்டைக் கொண்ட வெள்ளையர்கள் பெரும்பான்மைக் கறுப்பின மக்களை இனவெறி/இன ஒதுக்கல் (Apartheid) என்று சொல்லப்படுகின்ற இன வெறுப்புக்  கொள்கையின் கீழ், பெருந்தொகையான கறுப்பினத்தவர்கள் இனப்படுகொலைகளுடன் கூடிய பாரிய இன ஒடுக்குமுறைக்கு உள்ளாகினர்.
 ஆனால் நெல்சன் மண்டேலா தலைமையிலான ஆப்பிரிக்க தேசியக் காங்கிரசு, தீரத்துடன் போராடி 1995ஆம் ஆண்டு வெள்ளையின வெறுப்பு ஆட்சியாளர்களைத் தோற்கடித்துக், கறுப்பர்களின் கையில் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டது. இதன் ஊடாக இனத்துவேச வெள்ளையர்கள் தோற்கடிக்கப்பட்டு ‘Apartheid’ என்ற இனவெறி வரலாற்றில் இருந்து அகற்றப்பட்டது. அத்துடன் ஒடுக்கப்பட்ட கறுப்பர்களின் கைக்கு ஆட்சி அதிகாரம் மாறியது. வெற்றிபெற்ற கறுப்பர்கள் எட்மண்டு தூட்டூ (Desmond Tutu) என்ற கறுப்பினத் தலைவரின் கீழ் மேற்படி விசாரணைக் ஆணையத்தை அமைத்து, வெள்ளையர்களுக்கு மன்னிப்பு அளித்தமை வரலாற்றில் நீதிமான்கள் அளித்த மன்னிப்பாக அமைந்தது.
 ஆனால் இலங்கையின் நிலைமை அப்படியல்ல. ஒன்றரை இலட்சம் தமிழ்மக்களை இனஅழிப்பு புரிந்த ஆட்சியாளர்களும், அந்த இனமும் தொடர்ந்தும்அதிகாரத்தில் உள்ளார்கள். இனஅழிப்பு புரிந்த இனத்தின் கையில் அரசியல் அதிகாரம் அப்படியே உள்ளது.
 இங்கு அரசியல் இறைமைக்காகப் போராடிய தமிழ் மக்கள்ஆக்கிமிரமிக்கப்பட்டவர்களாய்;, படுகொலை செய்யப்பட்டவர்களாய்அவமானத்துடன் வாழ்கின்றனர். அத்துடன் இனஅழிப்பு புரிந்த சிங்களஇராணுவம் தொடர்ந்தும் தமிழ் மண்ணை தம் இரும்புப் பிடிக்குள்வைத்திருக்கிறது.
 இங்கு யார் யாரை மன்னிப்பது?
 இனஅழிப்பின் ஊடான ஆக்கிரமிப்பை மன்னித்துத் தம்மை அதிபர்களாக ஏற்றுக் கொள்ளுமாறு இலங்கையின் தலைமையர் இரணில் கோருகிறார். இத்தகைய அதிபர் அங்கீகாரத்தைத்தான் அவர் நல்லிணக்கம் என்று சொல்கிறார்.
 அரசியல் இறைமைக்காகப் போராடிய தமிழ் மக்களின் அடிப்படைஉரிமைகள் எட்டப்படாமலே உள்ளன. அரசியல் தீர்வு என்பது; பொய்க்கதையாகவே ஆகிவிட்டது. போருக்குக் காரணம் தமிழ் மக்கள் அல்லர். அவர்களின் அடிப்படை பிறப்புரிமைகளை மறுத்து, அவர்கள் மீது இனப்படுகொலைக்கான படுகொலைகளை இலங்கையின்  படைத்துறை- காவல் தரப்பினர் கட்டவிழ்த்து விட்ட நிலையிற்தான் போர் வெடித்தது. அந்தப் போரைச் சிங்களத் தேசமே உருவாக்கியது. இந்தப் போரைத் தமிழ் மக்கள் எதிர் கொள்ளத் தள்ளப்பட்டார்கள்.
 இப்போது இனஅழிப்புக்கு உள்ளான தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதற்கு மாற்றாக இனப்படுகொலையாளிகளை மன்னிக்குமாறு தமிழ் மக்களை, இலங்கையின் தலைமையர் இரணில் கிளிநொச்சியில் நின்று கோரியுள்ளார். இங்கு இனஅழிப்புக்குப் பொறுப்பான அரசியல் தலைவர்களும், படைத்தளபதிகளும் தண்டிக்கப்பட வேண்டியது தவிர்க்கப்பட முடியாதது.
 சிறுபிள்ளைக்குக் கூறுவதுபோல முற்றிலும் வேறுபட்ட, அரசியல் தீர்வு காணப்பட்ட, கறுப்பின மக்களின் கைக்கு அரசியல் அதிகாரம் மாற்றப்பட்ட, கறுப்பின மக்களால் வெள்ளையர்களுக்கு அளிக்கப்பட்ட மன்னிப்பை இலங்கைத்தீவின்  சிக்கலுக்கு இரணில் பொருத்தப் பார்க்கிறார். இது அறிவியல் குறைபாட்டின் காரணமாய் நடைபெற்றதொன்றல்ல. சிங்களத்தின் மீதுவிழுந்துள்ள தமிழின அழிப்புக் குற்றச்சாட்டில் இருந்து சிங்களத் தேசத்தைக்காப்பாற்றத் திட்டமிட்ட வகையில் இரணில் இதனைச் செய்கிறார். இதற்குத் தமிழர் தலைவர் எனக் கூறிக் கொள்வோர் சிலரும் சாமரம் வீசுகின்றனர்.
 இலங்கைத்தீவில் தமிழின அழிப்பைப் புரிந்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தில்இருக்கின்ற சிங்கள இனத்தலைவர்களுக்கும், படையினருக்கும், நீதிமறுக்கப்பட்டிருக்கும், நீதிக்காகப் போராடும் தமிழ் மக்கள் எவ்வாறுமன்னிப்பு அளிக்க முடியும்? எவ்வாறு இனவழிப்பை மறந்து விட முடியும்?
 இனப்படுகொலை நடந்து பத்தாண்டுகளாகியும் சிங்களத் தலைவர்கள் யாரும் தமிழ் மக்களுக்கான நீதி பற்றி இன்னும் சிந்திக்கும் நிலையில் இல்லை. மாறாகத் தமிழின அழிப்பை வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். இந் நிலையில் சிங்களத் தேசத்துடன் இணைந்து வாழ்வது என்பது ஒத்துவராது – சாத்தியப்படாது. உரிமைகள் மறுக்கப்படும் ஒரு தேசம் ஒடுக்கும் தேசத்தோடு நல்லிணக்கம் பேசுவது என்பது அதிபர்-அடிமை உறவு நிலையாகும். எனவே முதலாவதாகத் தமிழர் தேசத்துக்கு நீதி கிடைத்தாகவேண்டும்.
 “இனப் படுகொலையைப் பிரிவினை மூலம் மட்டுமே ஈடு செய்ய முடியும்.” (“Genocide can be compensated only by secession”) என்ற கூற்று இங்கு கருத்தில் எடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஐநா மனிதஉரிமைகள் ஆணையத்தில் பன்னாட்டுப் போர்க்குற்றக் கூட்டு விசாரணைக்காகச் சிங்கள ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட காலஅவகாசம் முடியும் நிலையில், இனஅழிப்புக் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காகத் தமிழர்களிடம் இருந்து இரணில் மன்னிப்புப் பத்திரம் கோருகிறார். தமிழ் மக்களுக்கு நீதியையும், அரசியல் உரிமையையும் வழங்குவதற்கு மாற்றாக, இனப்படுகொலை புரிந்த சிங்களத் தலைவர்களையும், கொல்லும் இயந்திரம்(Killing Machine) எனச் சொல்லப்படுகின்ற சிங்களப் படையினரையும் காப்பாற்றுவதற்கு இனப்படுகொலைக்கு உள்ளான தமிழ் மக்களின் வாயிலாக மன்னிப்புப் பத்திரம் பெற்றுப் படுகொலையாளிகளைப் பாதுகாக்க முற்படுகிறார். இது நல்லிணக்கம்,மன்னிப்பு என்ற சொற்களின் பேராலான இன்னொரு மோசமானஇனஅழிப்புச் சிந்தனை கொண்ட அரசியலாகும். இது குறித்துத் தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். 
 இவ்வாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் விசுவநாதன் உருத்திரகுமாரன் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.