பிரித்தானியத் தமிழர் பேரவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரித்தானியத் தமிழர் பேரவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 6 ஜூன், 2020

யாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே!


யாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே!

யாழ்ப்பாண நூலகத்தை எரித்தமை இனஅழிப்புக்கானஉள்நோக்கம் கொண்டது!
யாழ்ப்பாண நூலகம் 31 மே 1981இல் எரிக்கப்பட்டு 39ஆவதுஆண்டை எட்டியுள்ளது. இலங்கை அரசின் மூத்தஅமைச்சர்களால் தென்பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்ட சிங்களக் கும்பலொன்றினைக் கொண்டு இத் தீவைப்பு நடாத்தப்பட்டது.
நூலகப் புத்தகங்களுக்கு வேண்டுமென்றே தீயிட்டழித்த இக்கொடுமையான நிகழ்வானது, இலங்கை அரசின் தமிழர்களுக்கெதிரான இன இழிப்பு வரலாற்றில் ஒரு முதன்மை நிகழ்வாகும். தெற்காசியா எங்கும் தேடக் கிடைக்காத தொன்மைவாய்ந்த, போற்றிப் பேணப்பட வேண்டிய ஏராளமான நூல்கள், ஆவணச் சுவடிகள் திட்டமிட்டு தீயிட்டழிக்கப்பட்டமையால் தமிழர்களின் விலைமதிப்பற்ற கலை பண்பாட்டுப் பரம்பரைக் கரூவூலம் ஒன்று இலங்கை அரசினால் அழிக்கப்பட்டது.
நூல் நிலையத்தை அண்டிய பகுதிகளில் அன்று எவ்வித ஆத்திரமூட்டும் நிகழ்வும் நடைபெற்றிருக்கவில்லை. யாழ்மாவட்டக் காவல் தலைமைச் செயலகம் நூலகத்திலிருந்து கண்ணுக்கெட்டிய தூரத்திலேயே உள்ளது. முன்னாள் அமைச்சர்களான காமினி திசநாயக்காவும் சிறில் மத்தியூவும் தீவைப்பு நிகழ்ச்சியை முன்னின்று நடாத்தியுள்ளார்கள். இவை யாவும் தீயிடல் கொடுமை  நன்கு திட்டமிட்டு (intent of genocide) தமிழர் வரலாற்றின் ஆவணப்படுத்தலை  அழிப்பதற்கென்று நிகழ்த்தப்பட்ட பண்பாட்டு இனப்படுகொலை என்பதற்குச் சான்று பகர்கின்றன.
கடந்த 70 வருடங்களாக தமிழர்களுக்கெதிராக நடந்து வரும்இனப் படுகொலையை ஒரு பன்னாட்டு நீதிப்பொறிமுறையின் மூலம் வெளிக் கொண்டு வந்து நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதனையும் இலங்கையில் வடக்கு  கிழக்கு வாழ் தமிழர்களுக்குப் பன்னாட்டு ஏற்புடனான ஒரு பாதுகாப்புப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்பதனையும் பிரித்தானியத் தமிழர் பேரவை வலியுறுத்துகின்றது.
 “புத்தகங்களை எரிக்கத் துணிந்தவர்கள், மனிதர்களையே எரித்துவிடுவார்கள்” எயின்றிச்சு எயின் (சேர்மானியக் கவிஞர், எழுத்தாளர், இலக்கியத் திறனாய்வர்)
  • பிரித்தானியத்தமிழர் பேரவை

திங்கள், 2 செப்டம்பர், 2019

பிரித்தானியத் தமிழர் பேரவை- கருத்தரங்கு

அகரமுதல

ஆவணி 28, 2050 14/09/2019

மாலை 05:00 முதல் இரவு 07:30 மணிவரை

மில்டன் கீயின்சு நகர்

( 69 Downs Barn Boulevard, Downs Barn, Milton Keynes, MK14 7NA )
இலங்கைத் தமிழர்களின் அரசியல் சிக்கலின் இக்கால நிலை – கருத்தரங்கம்
 இதில் பிரித்தியானியாவிலும் ஏனைய உலக நாடுகளிலும் இலங்கைத் தமிழர்களின் அரசியல் சிக்கலின் இக்கால நிலைபற்றி கலந்துரையாடப்பட இருக்கிறது. அதில் “ஐக்கிய நாடுகள் அவையில் அரசதந்திரர நகர்வுகள்” என்பது முதன்மைக் கருப்பொருளாக இருக்கும்.
அதனைத் தொடர்ந்து மக்களின் கேள்விக்கான நேரம் கொடுக்கப்படும்.
 இறுதியாக மில்டன் கீயின்சு நகரில் பிரித்தானியத் தமிழர் பேரவைக்கான உறுப்பினர் தெரிவும் இடம்பெறும்.
அனைவரையும் தவறாது வருகைதந்து எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கானநீதியை வென்றெடுப்பதற்கு தங்கள் மேலான ஆதரவைத் தந்து எம்மைவலுப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
(ஏனைய பகுதிகளுக்கான விவரங்கள் முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளன.)
தொடர்புகளுக்கு: 02088080465  /  07508365678 /  07814486087 / 07943100035
பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF)
சங்கீதன், ஊடக ஒருங்கிணைப்பாளர்
[S. Sangeeth, BTF Media Coordinator

திங்கள், 25 பிப்ரவரி, 2019

கவனயீர்ப்புப் போராட்டம்

கவனயீர்ப்புப் போராட்டம் மாசி 11, 2050 திங்கள் 25.02.2019 முற்பகல் 10மணி -நண்பகல் 12மணி
10, தெளனிங்கு தெரு எதிரில்/OPPOSITE 10 DOWNING STREET, இலண்டன் / LONDON, SW1  [அருகிலுள்ள தொடருந்து நிலையம்:  Westminster]
தாயகத்தில் நடைபெறும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார், உறவினர்கள், பொதுமக்களால் நடத்தப்படும் கவனயீர்ப்புப்  போராட்டத்திற்கு பிரித்தானியத்  தமிழர் பேரவை முழு ஆதரவு வழங்குகிறது.
மேலும், இப்போராட்டத்தில் தாயகத்திலும் புலம்பெயர் நாட்டிலும் பொதுமக்கள் அனைவரையும் மிக எழுச்சியுடன் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

பிரித்தானியத் தமிழர் பேரவை