வியாழன், 29 நவம்பர், 2018

சப்பான் தமிழ்ச்சங்கம் : தமிழர் திருநாள் தி.பி. 2050 / கி.பி. 2019

அகரமுதல

தை 26, 2050 

 2019ஆம் வருடம் பிப்ரவரி 9

நேரம்:-11மணி முதல் 6 மணி வரை

கொமட்சுகவா சகுரா அரங்கம்

சப்பான் தமிழ்ச்சங்கம் தமிழர் திருநாள்

அனைவருக்கும் அன்புநிறைந்த
இனிய வணக்கம்!
நமது சப்பான் தமிழ்ச்சங்கத்தின்சார்பாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா வரும் தை 26, 2050 /  
2019 ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் 9ஆம் நாள் கொண்டாடப்படவுள்ளது என்பதைச்சப்பானில் வாழும் நம் தாய்த்தமிழ் உறவுகளுக்கு அறிவிப்பதில் அகமகிழ்வு கொள்கிறோம்.
நம் மொழி, பண்பாடு, வாழ்வியல் 
சார்ந்த தமிழியல் கூறுகளை முன்னிறுத்திச் செயல்படும் நமது சப்பான் தமிழ்சங்கம் முன்னெடுக்கும் இவ்விழாவிலும் நமது தாய்த்தமிழ் உறவுகள் உவகை கொள்ளும் வகையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும், இனிய பொங்கல் விருந்தோடு கேட்கும் செவிகளுக்கும் நல்லுணவளிக்கும் விதமாக தாய்த்தமிழ்நாட்டினின்று வரவுள்ள நல்லறிஞர்களின் சொற்பொழிவுகளும் இடம்பெறவுள்ளதெனத் தெரிவித்துக்கொள்வதுடன், நமது தாய்த்தமிழுறவுகளனைவரையும் அவர்தம் உற்றார் உறவினருடனும்,சுற்றத்தாருடனும் இவ்விழாவில் கலந்துகொண்டு
சிறப்பிக்க வருமாறு உள்ளுவகையுடனும் உளமார்ந்த பேரன்புடனும் வருக!வருக! என வரவேற்கிறோம்.
சிறப்பு விருந்தினர்கள்சிறப்பு நிகழ்ச்சிகள்பற்றி மிக விரைவில் அறிவிக்கப்படுமெனத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இங்ஙனம்சப்பான் தமிழ்ச்சங்கம்கலை -பண்பாட்டுத்துறை

இலங்கைக் கல்வி மேம்பாட்டு அரங்கம்(ஐ.இ.) கருத்தரங்கு

அகரமுதல

மார்கழி 21, 2049  சனிக்கிழமை

05.01.2019 பிற்பகல் 2.00-5.00

உயர்வாசற் குன்று முருகன் ஆலயம்

தலைமை: பேரா.நடராசா சிரீ கந்தராசா

இலங்கைக் கல்வி மேம்பாட்டு அரங்கம்(ஐ.இ.) கருத்தரங்கு

கருப்பொருள்:  இலங்கை வடமாகாணக்கல்வி நிலை

தொடர்பிற்கு:
சச்சிதானந்தன், தலைவர் – 07788 196426
சிவலிங்கம், செயலாளர் – 07984 079371
திருவாட்டி தேவநாதன், பொருளாளர் – 07973 287038

புதுமைப்பித்தன் அறக்கட்டளைச் சொற்பொழிவு, சென்னை

அகரமுதல

கார்த்திகை 14, 2049 வெள்ளி 

30.11.2018 பிற்பகல் 3.00

பவளவிழா கலையரங்கம்,

சென்னைப் பல்கலைக்கழகம்

புதுமைப்பித்தன் அறக்கட்டளைச் சொற்பொழிவு

பொழிஞர்:  கவிஞர் அ.வெண்ணிலா

தமிழ் இலக்கியத்துறை
சென்னைப்பல்கலைக்கழகம்

புதன், 28 நவம்பர், 2018

கவிஞர் முருகேசிற்கு அரசின் ‘நூலக ஆர்வலர்’ விருது

அகரமுதல

கவிஞர் முருகேசிற்குத்

தமிழக அரசின்

பொது நூலகத் துறை சார்பில்

‘நூலக ஆர்வலர் 2018’ விருது

வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தில் கடந்த ஏழாண்டுகளாகச் சிறப்பான முறையில் நூலக வளர்ச்சிக்கு உறுதுணையாக பல்வேறு செயல்பாடுகளைச் செய்தமைக்காக நூலக வாசகர் வட்டம் சார்பில் அதன் தலைவர் கவிஞர் மு.முருகேசிற்குத் தமிழக அரசின் பொது நூலகத் துறை சார்பில்‘நூலக ஆர்வலர் விருது – 2018’ வழங்கப்பட்டது.
தமிழக அரசின் பொது நூலகத் துறை சார்பில் ஆண்டுதோறும் மாவட்ட அளவில் நூலக வளர்ச்சிக்காகச் சிறந்த முறையில் செயல்படும் நூலக வாசகர் வட்டத்திற்கு
‘நூலக ஆர்வலர் விருது’ வழங்கப்பட்டு வருகிறது.
2018-ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் விழா கடந்த நவம்பர்-14-ஆம் நாள்  சென்னை சேத்துப்பட்டிலுள்ள எம்.சி.சி. பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்குத் தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை ஏற்றார். பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவு முன்னிலை வகித்தார்.
பள்ளிக்கல்வித் துறை – பொது நூலகத் துறை இயக்குநர் இராமேசுவர முருகன் முன்னிலை வகித்தார். தமிழக மீன்வளத்துறை அமைச்சர் து.செயக்குமார் வாழ்த்துரை
வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு நூலக வாசகர் வட்டம் தொடங்கப்பட்டது. இந்த வாசகர் வட்டத்தின் தலைவராகத்
தேர்வு செய்யப்பட்ட கவிஞர் மு.முருகேசு தலைமையின் கீழ்த், தொடர்ந்து மாதந்தோறும் ‘சந்திப்பு’ எனும் நிகழ்ச்சி நூலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தச் சந்திப்பு நிகழ்வில்,நூல் அறிமுகம், நூல் வெளியீடு, நூல் திறனாய்வு, பல்துறை வல்லுநர்களின் உரையரங்கு எனத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உரூ.1,000/- செலுத்திய 7 நூலகப் புரவலர்கள் மட்டுமே இந்த கிளை நூலகத்தில் இன்றைக்கு 190 நூலகப் புரவலர்கள் சேர்ந்திருக்கிறார்கள். உரூ.5,000/-
செலுத்தி, 4 பெரும் புரவலர்கள் இணைந்திருக்கிறார்கள். புதிதாக 8 ஆயிரம் நூலக உறுப்பினர்கள் சேர்ந்திருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல், ஆண்டுதோறும் நூலகத் தந்தை எசு.ஆர்.இரங்கநாதன் பிறந்த நாள் விழா, தேசிய நூலக வார விழா, உலகத் தாய்மொழி நாள் விழா, நூலகத்திலேயே சிறப்புத் தள்ளுபடியுடன் ஒரு வார காலம் புத்தகக் கண்காட்சி, பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டி, பாட்டுப் போட்டிகள் நடத்திப் பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளன.
நூலகத்திற்குத் தேவையான தூய்மையாக்கப்பட்ட குடிநீர் இயந்திரம், கதிரொளி(சோலார்) மின்விளக்கு, 20 நெகிழி நாற்காலிகள், 4 மர நாற்காலிகள், இரும்புப் பேழை ஒன்று, நகர மக்களிடமிருந்து நன்கொடை மூலமாக வாங்கப்பட்டுள்ளன. உரூ.30,000/- மதிப்பிலான நூல்களும் நன்கொடையாக பெறப்பட்டுள்ளன.
மேற்கண்ட செயல்பாடுகளை ஒருங்கிணைத்துச் செயல்பட்டமைக்காக நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசிற்குத், தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ‘நூலக ஆர்வலர் விருது – 2018’ விருதினை வழங்கிச் சிறப்பித்தார்.
இவ்விழாவில், திருவண்ணாமலை மாவட்ட நூலக அலுவலர் இரா.கோகிலவாணி, நல்நூலகர் விருதுபெற்ற வந்தவாசி அரசுக் கிளை நூலகர் பூ.சண்முகம், திருவண்ணாமலை மாவட்ட நூலகர் வெங்கடேசன் முதலான பலர் பங்கேற்றனர்.

விருட்சமும் நண்பர்கள் வட்டமும் – 6 ஆவது கூட்டம்

கார்த்திகை 13, 2049 / வியாழக்கிழமை / 29.11.2018 
மாலை 5.45

கிளை நூலகம், 7 இராகவன் குடியிருப்பு 3 ஆவது தெரு, 
சாபர்கான் பேட்டை, சென்னை

விருட்சமும் நண்பர்கள் வட்டமும் சேர்ந்து நடத்தும்
6 ஆவது கூட்டம்

தலைப்பு : நாலடியார் சில குறிப்புகள்
தொடர் உரை: முனைவர் வ.வெ.சு
(காசி திரையரங்கு அருகில் உள்ள சந்திப்பிலிருந்து வருகிற நேர் தெரு; அசோக்நகர் நோக்கி வரவேண்டும்)
பேசுவோர் குறிப்பு : விவேகானந்தர் கல்லூரியின் முதல்வராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இலக்கியப் பேச்சாளர். தமிழ் வளர்த்த சான்றோர் என்ற தலைப்பில் 52 கூட்டங்கள் தொடர்ந்து நடத்தி உள்ளார்.
தொடர்புக்கு : அழகியசிங்கர்  
தொலைபேசி எண் : 9444113205

செவ்வாய், 27 நவம்பர், 2018

மாவீரர் நாள் வணக்கமும் உறுதிமொழியும்

அகரமுதல

மாவீரர் நாள் வணக்கம்

தாய்மண் காக்க தம்முயிர் நீத்த மாவீரர்களை வணங்கிப் போற்றுவோம்!
விடுதலைப்போரிலும் இன அழிப்புப் படுகொலைகளிலும் உயிர்நீத்த மக்களும் மாவீரர்களே! அவர்களையும் தலைவணங்கிப் போற்றுவோம்!
அவர்கள் கனவை நனவாக்குவதே உண்மை வணக்கம் என்பதால் அவர்களின் கனவை நனவாக்குவோம்!

மாவீரர் நாள் உறுதிமொழி


“மொழியாகி,
எங்கள் மூச்சாகி – நாளை
முடிசூடும் தமிழ்மீது உறுதி!
வழிகாட்டி எம்மை
உருவாக்கும் தலைவன்
வரலாறு மீதிலும் உறுதி!
விழிமூடு இங்கு
துயில்கின்ற வேங்கை
வீரர்கள் மீதிலும் உறுதி!
இழிவாக வாழோம்
தமிழீழப் போரில்
இனிமேலும் ஓயோம் உறுதி!”

திங்கள், 26 நவம்பர், 2018

மூன்றாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு குறித்த கலந்துரையாடல், புது தில்லி



மூன்றாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு குறித்த

கலந்துரையாடல் கூட்டம்

கார்த்திகை 11, 20149 / 17.11.2018

மாலை 4.00

இந்தியப் பன்னாட்டு மையம்,

புது தில்லி

(India International centre. Lodhi Road,

New Delhi.)

புது தில்லியில்
புரட்டாசி 06-07, 2049 /   செட்டம்பர் 23 – 24,  2019 நாள்களில்
மூன்றாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு
நடைபெற உள்ளது.
இம்மாநாட்டைச் சீரும் சிறப்புற நிகழ்த்த தில்லி வாழ் ஆர்வலர் 35 பேர் கொண்ட கருத்தரங்கக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் ஏற்பாட்டில் நடைபெறுவதே இக்கலந்துரையாடல்.
தமிழார்வலர் யாவரும் இக்கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்று, இக்கருத்தரங்க மாநாட்டைச் சிறப்புற நடத்துதற்குரிய நற்கருத்துகளை நல்க வேண்டுகிறோம்.
அனைத்துலகத் திருக்குறள் கருத்தரங்க மாநாட்டு அமைப்பாளர்களான மொரிசியசு நாட்டுப் பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன் (முன்னாள் கல்வியமைச்சர் மற்றும் முன்னாள் இயக்குநர், யுனெசுகோ), சென்னை ஆசியவியல் நிறுவனத்தின் இயக்குநர், முனைவர் சான் சாமுவேல்ஆகியோர்  இக்கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்பர்.
இக்கருத்தரங்க மாநாட்டில் ஆய்வுரை வழங்க விரும்புவோர், பங்கேற்க இசைவோர் மற்றும் இது குறித்து மேலும் விவரம் அறிய விழைவோர் சென்னையில் இயங்கும் இக்கருத்தரங்கச் தலைமைச் செயலகத்தின் கீழ்வரும் முகவரியுடன் தொடர்பு கொள்க:
இயக்குநர்,
ஆசியவியல் நிறுவனம்
சோழிங்கநல்லூர் (அஞ்சல்)
செம்மஞ்சேரி, சென்னை – 600 119
மின்னஞ்சல்:    info@instituteofasianstudies.com
தொலைபேசி:   24500831, 24501851
பேசி:           9840526834
இணையத்தளம்:  www.instituteofasianstudies.com
ஆசியவியல் நிறுவனம்,
அனைத்துலகத் திருக்குறள் மையம், மொரிசியசு