அகரமுதல
தை 26, 2050
2019ஆம் வருடம் பிப்ரவரி 9
நேரம்:-11மணி முதல் 6 மணி வரை
கொமட்சுகவா சகுரா அரங்கம்
சப்பான் தமிழ்ச்சங்கம் தமிழர் திருநாள்
அனைவருக்கும் அன்புநிறைந்த
இனிய வணக்கம்!
இனிய வணக்கம்!
நமது சப்பான் தமிழ்ச்சங்கத்தின்சார்பாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா வரும் தை 26, 2050 /
2019 ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் 9ஆம் நாள் கொண்டாடப்படவுள்ளது என்பதைச்சப்பானில் வாழும் நம் தாய்த்தமிழ் உறவுகளுக்கு அறிவிப்பதில் அகமகிழ்வு கொள்கிறோம்.
நம் மொழி, பண்பாடு, வாழ்வியல்
சார்ந்த தமிழியல் கூறுகளை முன்னிறுத்திச் செயல்படும் நமது சப்பான் தமிழ்சங்கம் முன்னெடுக்கும் இவ்விழாவிலும் நமது தாய்த்தமிழ் உறவுகள் உவகை கொள்ளும் வகையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும், இனிய பொங்கல் விருந்தோடு கேட்கும் செவிகளுக்கும் நல்லுணவளிக்கும் விதமாக தாய்த்தமிழ்நாட்டினின்று வரவுள்ள நல்லறிஞர்களின் சொற்பொழிவுகளும் இடம்பெறவுள்ளதெனத் தெரிவித்துக்கொள்வதுடன், நமது தாய்த்தமிழுறவுகளனைவரையும் அவர்தம் உற்றார் உறவினருடனும்,சுற்றத்தாருடனும் இவ்விழாவில் கலந்துகொண்டு
சிறப்பிக்க வருமாறு உள்ளுவகையுடனும் உளமார்ந்த பேரன்புடனும் வருக!வருக! என வரவேற்கிறோம்.

சிறப்பு விருந்தினர்கள்சிறப்பு நிகழ்ச்சிகள்பற்றி மிக விரைவில் அறிவிக்கப்படுமெனத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இங்ஙனம்சப்பான் தமிழ்ச்சங்கம்கலை -பண்பாட்டுத்துறை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக