புதன், 26 செப்டம்பர், 2018

கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு – உவமைக்கவிஞர் சுரதா

அகரமுதல

புரட்டாசி 12, 2049 / வெள்ளிக்கிழமை / 28.09.2018

மாலை 06.30 மணி

பாரதிய வித்தியா பவன் , மயிலாப்பூர்

இலக்கியவீதியும்,  திரு. கிருட்டிணா இனிப்பகமும்

பாரதிய வித்தியா பவனும்  

இணைந்து நடத்தும்

கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு –

உவமைக்கவிஞர் சுரதா

 சிறப்புரை  : 

மேனாள் அரசவைக் கவிஞர் முத்துலிங்கம்  

தலைமை :

ஓவியக் கவிஞர் அமுதபாரதி

அன்னம் விருது‘ பெறுபவர் :

கவிஞர் காவனூர் வேலன்

தகுதியுரை : திரு துரை இலட்சுமிபதி
நிரலுரை :  முனைவர் சரவணன்
உறவும் நட்புமாக வருகை  தர வேண்டுகிறேன்.
என்றென்றும் அன்புடன்– 
இலக்கியவீதி இனியவன்

விருட்சம் இலக்கியச்சந்திப்பு : மரு.செ.பாசுகரன்

அகரமுதல

புரட்டாசி 11, 2049 / வியாழன்/ 27.09.2018 மாலை 5.45

கிளை நூலகம்,

7,  இராகவன் குடியிருப்பு 3ஆவது தெரு,   

சாபர்கான் பேட்டை, சென்னை  

விருட்சமும் நண்பர்கள் வட்டமும் சேர்ந்து நடத்தும் கூட்டம்


தலைப்பு:  வைத்தீசுவரன் கதைகள்

 சிறப்புரை: மரு.செ.பாசுகரன், சிறுகதையாசிரியர், கட்டுரையாளர்

 தொடர்புக்கு :

அழகியசிங்கர் – தொலைபேசி எண் : 9444113205


சனி, 22 செப்டம்பர், 2018

குவிகம் இல்லம் – அளவளாவல்: ஆர்.கே.இராமநாதன்

அகரமுதல

குவிகம் இல்லம் – அளவளாவல்: ஆர்.கே.இராமநாதன்

 புரட்டாசி 07, 2049 / 23.09.2018 / 05.00

இல்லம் அடைய


களி மண்ணும் கையுமாக…, அண்ணா



களி மண்ணும் கையுமாக…


இன்று (செட்டம்பர் 15) அறிஞர் அண்ணாவின் 110ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா  – 60ஆம் ஆண்டில் அடி எடுத்து வைப்பதற்குள்ளாகவே தனது இறுதிப் பயணத்திற்கு அடி எடுத்து வைத்தது – தமிழர் நல கண்ணோட்டத்தில் மிகப் பெரிய இழப்பு.
அண்ணா என்றால் அவர் முதலமைச்சர், திமுகவின் நிறுவனர் என்கிற அளவில்தான் இந்தத் தலைமுறையினர் தெரிந்து வைத்துள்ள ஒரே தகவலாகும். அண்ணாவின் சிந்தனை எத்தகையது?  விநாயக சதுர்த்தி, விநாயகர் ஊர்வலம் நடக்கும் இந்தக் காலக் கட்டத்தில் அண்ணாவைப் பேச விடுவோமா?
“களி மண்ணும் கையுமாக நாம் ஏன் இருக்கிறோம்?” என்று நான் வீரனைக் கேட்டேன். “கைவண்ணம் காணத்தானே போகிறாய், திங்கட்கிழமை நமது தீராதி தீரர்களின் வேலை என்னவாக இருக்கும் தெரியுமோ! களி மண்ணும் கையுமாக இருப்பர், வினாயக சதுர்த்தி அப்பா – அன்று வீட்டுக்கு வீடு களிமண்ணும் கையுமாக இருப்பர், யானை முகத்தானை, மத்தள வயிற்றானை, மகேசுவரன் மைந்தனை ஈரக் களி மண்ணால் செய்து எள் உருண்டையும், அப்பமும், கொழுக்கட்டையும், அவல், பொரியும் படைத்து குட்டிக் கொண்டு தோப்புக் கரணம் போட்டு, விநாயக சதுர்த்தி பூசை செய்வர் என்று வீரன் விளக்கிய பிறகே, “அடடே! அதையா சொன்னாய்? வேடிக்கைதான், களிமண்ணும் கையுமாகத்தான் இருப்பர்” என்று கூறிக் கொண்டே நான் சிரித்தேன். “கையில் மட்டுமல்ல களிமண்! மண்டையிலும் அதுவேதான்” என்றான் நண்பன் கோபத்தோடு. “திட்டாதே! தேவ நிந்தனை செய்யாதே. ஏதோ பழைய வழக்கம் நடக்கிறது” என்று நான் அடக்கினேன். அவனா அடங்குபவன்!
“வினாயகருடைய உருவத்தைக் கவனி! மனித உடல், யானை முகம், மத்தள வயிறு, ஒற்றைத் தந்தம் – நமது கடவுளின் உருவம் இதுவென்று கூறிப் பார் நாகரிக மக்களிடம். வயிறு குலுங்க நகைப்பர். அவருக்கு வாகனம் பெருச்சாளி! இது கேட்டால் எவன் தான் இந்த மக்கள் தன்னாட்சிக்கு இலாயக்குள்ளவரென்று கூறத் துணிவான்? உலக மக்களின் சார்பாளர்கள் கூட்டம் ஒன்று நடந்தால் அதற்கு உச்சியில் குடுமியுடையோனும், கழுத்திலே மண்டையோட்டு மாலையுடையோனும், காட்டெருமை முகத்தோனுமாகப் பலர் சென்றால், மற்ற நாகரிக உருவங்கள் நகைக்காவா? நீயே கூறு! சுந்தரிகள் பலர் சொகுசாக ஆடிப்பாடும் வேளையிலே மந்தி முகவதி வந்தால், கைகொட்டிச் சிரிக்க மாட்டார்களா? உண்மையிலே கூறு. ஏசுவின் உருவம் எத்தகைய கருணை பொழியுங் கண்களைக் காட்டக் காண்கிறோம். புத்தர் உருவின் முகப்பொலிவையும், சாந்தியையும் நோக்கு: பக்கத்திலே பெருச்சாளி வாகனனின் உருவத்தை நிறுத்திப்பார்! கடவுள்களின் காட்சி எனும் கூத்திலே கணபதி, ஒரு கோமாளியாகவே – விதூசகரராகவே – பாவிக்கப்படுவார்” என்று வீரன் உரைத்தான்.
இவையும் இவை போன்றவையும் வெறும் ஆரிய மதச்சேறு! தமிழர்கள் இந்த ஊளைச் சேற்றிலே உழலு மட்டும், முன்னேற்றம் ஏது? வாழ்வு ஏது?
திராவிட நாடு‘ – (12.9.1942).
தரவு :  மயிலாடன்
ஒற்றைப்பத்தி, விடுதலை 15.09.2018

கணியம் கட்டின்மை நாள் (Software Freedom Day), புதுச்சேரி

அகரமுதல

புரட்டாசி 07, 2049 ஞாயிறு 23.09.208

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

பெடிட் செமினார்(Petit Seminaire)  மேல்நிலைப்பள்ளி,

மகாத்மா காந்தி சாலை, புதுச்சேரி

கணியம் கட்டின்மை நாள்

15 இற்கும் மேற்பட்ட விளக்க அரங்குகள் உள்ளன.


வழிப்படம்: www.openstreetmap.org/way/457662096
விவரங்களுக்கு:
-கட்டற்ற கணியம்/கருவியம் அமைப்பு (FSHM)
புதுச்சேரி

-சீனிவாசன்

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிகாகோ, 2019

அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் (IATR)

10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிகாகோ

[32 ஆம் பேரவைத்தமிழ் விழா,

 சிகாகோ தமிழ்ச்சங்கப் பொன்விழா]

ஆனி – 18-22, தி.பி. 2050 / புதன் – ஞாயிறு / சூலை 3 – 7, 2019

விவரங்களுக்கு :  icsts10.org   / www.iatrnew.org  / iatr2019@fetna.org

பெஞ்சமின் இலெபோவிற்குப் பாராட்டு விழா, பிரான்சு

அகரமுதல


புரட்டாசி 07, 2049 / 23.09.2018 மாலை 03.00

உலகத் தமிழ்ச்சங்க இலக்கண விருது பெற்ற

பெஞ்சமின் இலெபோவிற்குப்

பாராட்டு விழா, பிரான்சு

பிரெஞ்சு இந்தியச் சங்கங்கள்

எளிமைச் செல்வர் சா.கணேசன் நினைவேந்தல், சென்னை

அகரமுதல


புரட்டாசி 07, 2049 – ஞாயிறு – 23.09.2018 மாலை 5.30

அண்ணா பொதுநல மன்றம்

108, ஆர்காட்டுச்சாலை, வடபழனி, சென்னை 26

எளிமைச் செல்வர் சா.கணேசன்

நினைவேந்தலும் படத்திறப்பும்

தமிழ் எழுத்தாளர் கழகம்