திங்கள், 18 ஜூன், 2012

தமிழ்நாடு இந்தியாவில்தான் உள்ளதா? இலங்கைக் கடற்படை மீண்டும் அட்டூழியம்

இலங்கைக் கடற்படை மீண்டும் அட்டூழியம்:  இராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு



ராமேசுவரம், ஜூன் 17: நடுக்கடலில் மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீன்பிடிக்க விடாமல் விரட்டியதாக கரை திரும்பிய மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை புகார் தெரிவித்தனர்.  ராமேசுவரத்தில் இருந்து ஜூன் 16-ம் தேதி, சுமார் 800 விசைப்படகுகள் மீன் பிடிக்கச் சென்றன. இப்படகுகள், மீன்வளம் நிறைந்த இலங்கை கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தன. அப்போது, சூறாவளி காற்றினால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தது. இதனைப் பொருட்படுத்தாமல் இலங்கை கடற்படையினர் அங்கு ரோந்து வந்தனராம். பின்னர், மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி விரட்டியுள்ளனர். இதனால், மீனவர்கள் தொடர்ந்து மீன்பிடிக்க முடியாமல் வேகமாக கரை திரும்பினர். இதனால், தங்களுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.  வலைகள் சேதம்: ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், இலங்கை மீனவர்கள் மீன்பிடிக்கும் மன்னார், நெடுந்தீவு, இரணத்தீவு பகுதியின் கடலோரத்தில் மீன்பிடிப்பது வழக்கம். ஆனால், அப்பகுதியில் இலங்கை மீனவர்கள் மீன்பிடிக்க கூண்டு வலைகளை கடலுக்குள் வைத்திருப்பார்கள்.  இங்கு ஜூன் 16-ம் தேதி சில ராமேசுவரம் விசைப்படகுகள் மீன்பிடித்ததில், இலங்கை மீனவர்கள் கடலுக்குள் வைத்திருந்த கூண்டு வலைகளை சேதப்படுத்தி உள்ளனராம். இதனால், இலங்கை மீனவர்களுக்கு பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கூண்டு வலை சேதத்தால், இலங்கை மீனவர்கள் கோபமடைந்து உள்ளனர். இதனால், இருநாட்டு மீனவர்களின் உறவு பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கூண்டு வலைகளைச் சேதப்படுத்திய ராமேசுவரம் மீனவர்கள் யார் என்பது குறித்து, தமிழக உளவுப் பிரிவு போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஞாயிறு, 17 ஜூன், 2012

SL Navy blocks resettlement-seeking Tamils from entering Mu'l'likku'lam

SL Navy blocks resettlement-seeking Tamils from entering Mu'l'likku'lam

The occupying Sri Lanka Navy Friday morning stopped a group of 75 uprooted Tamil families, who were demanding resettlement in Mu'l'likku'lam village in Musali DS division of Mannaar district. Earlier, on Wednesday, the uprooted Tamils met the Bishop of Mannaar, Rt. Rev. Dr. Rayappu Joseph, and requested their Catholic priests to accompany them in their effort to gain access to their native village that remains occupied by the SL military since September 2007. Responding, the Parish Priests of Thoaddave'li and Chilaavath-thu'rai, Rev. Fr. Nehru and Rev. Fr. Rasiah, accompanied the villagers. However, the SL Navy camped at Mu'l'likkulam junction stopped the uprooted Tamil families stating that they had no permission to enter the village. The families immediately sat in front of the SLN camp and staged a protest till they were forced to relocate to a nearby locality, Periyaku'lam.

The officers of the occupying SLN told the protestors that they would only be provided access to enter Paraloaka Maathaa Church in their village for prayers.

When the protesting Eezham Tamils demanded access to their livelihood, to engage in fishing in their sea and to engage in agriculture in their lands, they were told they could only engage in fishing. But, the occupying SL Navy was particular in telling the people that there would be no access to their houses.

In the meantime, their village has been transformed into a military cantonment, informed sources say.

Mu'l'ikku'lam has become a strategic point of occupation to the Sri Lankan forces that aim to Sinhalicise and colonise the land and the historic waters of Eezham Tamils.

More than 4,500 civilians were forced to flee Musali division in Mannnaar district in September 2007.

Since their eviction, the people of Mu'l'likku'lam have been continuously protesting demanding their village to be opened for resettlement and have been appealing to the SL authorities for five years. All their demands were neglected by the ruling UPFA politicians.

The villagers, displaced from Musali, have been temporarily staying in Peasaalai, Thaazhvup-paddu, Keeri and in Thalaimannaar and have been subjected to various harassments by the SL military throughout the last five years.

Chronology:


Related Articles:
09.01.11   Eyewash LLRC makes even the commission members to doze off

தமிழ்ப் பல்கலை.யில் ஆட்சியரகம் கட்ட எதிர்ப்பு

தமிழ்ப் பல்கலை.யில் ஆட்சியரகம் கட்ட எதிர்ப்பு

First Published : 17 Jun 2012 01:14:06 PM IST


தஞ்சாவூர், ஜூன்16: தமிழ்ப்பல்கலைக்கழக வளாகத்தில் ஆட்சியரகம் கட்டக்கூடாதென தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் துணைவேந்தர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் வலியுறுத்தினர்.தஞ்சாவூரில் ஆயிரம் ஏக்கரில் தமிழ்ப்பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழக வளாகத்தில் காலியிடத்தில் மாவட்ட ஆட்சியரகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டுவதற்கு 61.42 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு விரைவில் கட்டுமானப் பணி தொடங்குமென அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு கட்சியினரும் தமிழ் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.இந்த வேண்டுகோளை வலியுறுத்தும் விளக்கப் பொதுக்கூட்டம் தமிழ்ப்பல்கலைக்கழகப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தஞ்சாவூர் ஆபிரஹாம் பண்டிதர் சாலையில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. கூட்டத்துக்கு இயக்க நிர்வாகி அய்யனாபுரம் சி. முருகேசன் தலைமை வகித்தார்.கூட்டத்தில், தமிழ்ப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம. ராசேந்திரன் பேசியதாவது: தமிழ்ப்பல்கலைக்கழகத்தை மக்கள் காக்க வேண்டும். பல்கலைக்கழகத்தை செம்மைப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட வேண்டும். ஆட்சியரகத்திற்கு இடம் கையகப்படுத்தினால் தமிழுக்காக நிலம் கொடுத்தவர்களின் எண்ணம் ஈடேறாது என்றார்.சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொற்கோ: பல்கலைக்கழக வளாகத்தில் ஆட்சியரகம் அமைப்பது தமிழின் பெருமையை சிதைக்கும் செயல் என்றார்.தமிழ்தேசப் பொதுவுடமைக் கட்சி நிறுவனர் பெ. மணியரசன்: பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு புலங்கள், ஆய்வரங்கங்கள் முழுமையாக செயல்படவில்லை. அவைகள் முழுமையாக செயல்படும் போது அதற்கு தற்போதைய இடமே போதுமானது இல்லை. பல்கலைக்கழகத்திற்கான அச்சுத்துறை வெளியில்தான் உள்ளது என்றார்.இதே கருத்துக்களை வலியுறுத்தி தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்க முன்னாள் தலைவர் கு. முருகேசன், பாவாணர் தமிழியக்கத் தலைவர் கு. திருமாறன், மே17இயக்க நிர்வாகி திருமுருகன்காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலர் ரா. திருஞானம், நாம்தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் அ. நல்லதுரை, விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தைஅரசன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட அமைப்புக்குழு ஜே. கலந்தர், பல்கலைக்கழக பாதுகாப்பு இயக்கம் பா. இறையெழிலன் ஆகியோர் பேசினர். பல்கலைக்கழக பாதுகாப்பு இயக்க நிர்வாகி பழ.ராசேந்திரன் நன்றி கூறினார்.

கலாம் என்றால் கலகம்தான்!

கலாம் என்பதற்கு ஐரோப்பிய ஒன்றிய அகராதி (http://eudict.com/?lang=tameng&word=%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D) கிளர்ச்சி செய்; கலாம் விளை; கலக்கு    agitate எனப்பொருள் தந்துள்ளது.  கிளர்ச்சி செய் என்பது மட்டுமல்ல பழைய அகராதியில் கலகம் என்றும் பொருள் உள்ளது.  கலகம் என்பது பேச்சு வழக்கில் கலாம் என்று ஆயிருக்கலாம்.  சொல் விளையாட்டிற்காகச் சொல்வதை எல்லாம் பெரிதுபடுத்திப்  போராடுவது  வேலையற்ற வேலை.  கலாம் சிங்களத்துடன் இணைவது தமிழ் உள்ளங்களுக்கு வருத்தத்தைத் தருவதை முதலில் அவருக்கு உணர்த்துங்கள்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++



 கலாம் என்றால் கலகமா... கருணாநிதிக்கு முசுலீம்கள் கடும் கண்டனம்
 
சென்னை: கலாம் என்றால் கலகம் என்று தவறான அர்த்தத்தைக் கூறி இஸ்லாமியர்களின் மத உணர்வுகளை திமுக தலைவர் கருணாநிதி புண்படுத்தி விட்டார் என்று இஸ்லாமிய அமைப்பும், பிற அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
சென்னையில் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில் கலாம் என்றால் கலகம் என்று தமிழில் பொருள் உண்டு என்று கருத்து தெரிவித்திருந்தார். இது அனைவரையும் அதிர வைத்துள்ளது. கருணாநிதியின் இந்தப் பேச்சுக்கு இதுவரை அப்துல் கலாம் கருத்து தெரிவிக்கவில்லை. அமைதியாக இருக்கிறார். அதேசமயம், இஸ்லாமியர்களிடையே இது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து திராவிட முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் இக்பால், கருணாநிதிக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 15-ந்தேதி தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியிடம் வருங்கால குடியரசு தலைவர் சம்பந்தமாக ஊடகங்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் இஸ்லாமியர்களின் மனதை ஈட்டியால் குத்தி கிழித்தவண்ணம் உள்ளது.
ஊடகங்கள் அப்துல்கலாமை சம்பந்தப்படுத்தி கேட்டதற்கு, கலாம் என்றால் `கலகம்'தான் என்று கருணாநிதி கூறியுள்ளார். இந்த வார்த்தையை எந்த அகராதியில் இருந்து அறிந்து சொன்னார் என்று தெரியவில்லை. ஒரு வார்த்தையின் பொருள் தெரியாமல் இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தும் விதமாக பதில் கூறியுள்ளார்.
அரபி மொழியில் கலாம் என்றால் திருகுரானை குறிப்பிடுவார்கள். அப்துல் கலாம் என்றால் அப்துல் இறைசேவகன். கலாம் இறை வார்த்தை. இதற்கு இறை போதகர் என்ற பொருளாகும்.
இவ்வளவு புனிதமான வார்த்தையை கொச்சைப்படுத்த வேண்டும் என்று எத்தனை ஆண்டுகள் தவம் இருந்தாரோ என்று தெரியவில்லை. இதற்கு உடனே மறுப்பு தெரிவிக்க வேண்டும். இதை திராவிட முஸ்லீம் முன்னேற்றக்கழகம் வன்மையாக கண்டிக்கிறது. தவறும் பட்சத்தில் இஸ்லாமியர்களை ஒன்று திரட்டி தி.மு.க. தலைவர் கருணாநிதியை கண்டித்து வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலைமை ஏற்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
http://tamil.oneindia.in/news/2012/06/17/tamilnadu-muslim-outfit-condemns-karunanidhi-for-kalam-speech-155850.html#cmntForm
 

நேருவின் ஆதிவாசி மனைவி....?

நேருவின் ஆதிவாசி மனைவி....?

-கி. இலக்குவன்
பஞ்சட் அணையைத் திறந்து வைப்பதற்காக 1959 டிசம்பர் 6ந்தேதி வருகை புரிந்த அன்றைய பாரதப்பிரதமர் ஜவகர்லால் நேருவை வரவேற்கும் குழுவில் தன்னையும் இணைத்ததற்காக 15 வயது சந்தல் இனப்பெண்ணான புத்னி மெஜான் மிகவும்மகிழ்ச்சி அடைந்தாள்.

ஆதிவாசிப்பெண்களின்பாரம்பரிய ஆடை அணிகலன்களுடன், வரவேற்பு நிகழ்ச்சியில் பஙகேற்ற அவரிடம் நேருவுக்கு மாலையணிவித்து வரவேற்கும் கவுரவம் அளிக்கப்பட்டது. அதனை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றிய அவரை, நேரு விழா மேடைக்கு அழைத்துச்சென்றார்.
சுரன்


கட்டுமானப்பணியில் பங்கேற்ற ஒரு தொழிலாளிதான் பொத்தானை அழுத்தி அணையைத் திறக்கவேண்டும் என்று கருதிய நேருவின் வேண்டுகோளுக்கு இணங்க புத்னியே பொத்தானை அழுத்தி அணையைத் திறந்துவைத்தார்.

தனக்கு அளிக்கப்பட்ட கவுரவத்தை தனது குடும்பத்தாருடன் பகிர்ந்து கொள்ளும் பரபரப்புடன் தனது கிராமமான கர்பானாவுக்குத்திரும்பிய அந்த ஆதிவாசிப்பெண்ணிற்குபேரதிர்ச்சி காத்திருந்தது.

அந்த அப்பாவிப்பெண்ணின் எதிர்காலமே இருளில் தள்ளப்பட்டது. நீ நேருவுக்கு மாலை அணிவித்ததால் நடைமுறையில் உனக்கும் அவருக்கும் திருமணமாகிவிட்டதாகப் பொருள் என்று அந்த கிராம வாசிகள் தெரிவித்தனர்.

அடுத்தநாள் ஊர்ப்பெரியவர்கள் நடத்திய கூட்டத்தில் அவள் நேருவின் மனைவியாகிவிட்டாள் என்றுதீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

அதனால் அந்த கிராமத்தைச்சேர்ந்தஎவரையும் திருமணம் செய்து கொள்ளும் தகுதியையும்அவள் இழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் ஆதிவாசிப்பெண்ணான அவள், சந்தல் இனத்தைச்சாராத ஒருவரைத் திருமணம் செய்து கொண்டதால் அந்த கிராமத்திலிருந்தே விலக்கி வைக்கப்படுவதாகவும் முடிவு செய்யப்பட்டது. 


இந்த முடிவை ஏற்றுக்கொள்ளாவிட்டால் சமூகப்புறக்கணிப்பை எதிர்கொள்ள நேரிடும்என்று அஞ்சிய அவளது குடும்பத்தார், அவளை கைவிட்டுவிட்டனர். அனாதையாக்கப்பட்டஅவளுக்குக் குடிக்கத்தண்ணீர் அளிப்பதற்குக்கூட எவரும் முன்வரவில்லை.

பஞ்சட் அணைக்கட்டுமானப் பிரதேசத்துக்கு திரும்பியஅவளுக்கு சுதிர் தத்தா என்றஒருவர் அடைக்கலம் அளித்தார் .கணவன் -மனைவியாக வாழ்ந்த அவர்களுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது. 1962ம் ஆண்டில்அவளது வேலையும் பறிபோய்விட்டது. சிறு சிறு வேலைகளை செய்து தனது பிழைப்பை நடத்தி வந்தாள். 23ஆண்டுகள் கழித்து ராஜீவ் காந்தியை சந்தித்து தாமோதர் பள்ளத்தாக்கு கழகத்தில் தனக்கு வேலைக்கு ஏற்பாடு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தாள். நேருவின் பேரனின் தயவினால் அவளுக்கு வேலை திரும்பவும் கிடைத்தது.


இதன் மூலம் எனது வயிற்றுப்பசி நீங்கியது என்ற போதிலும் தான்பிறந்து வளர்ந்த கிராமத்துக்கு திரும்ப வேண்டும் என்ற ஏக்கம் நிறைவேறவில்லையே என்ற வேதனையுடனேயே வாழ்ந்துவிட்டு கடந்த ஆண்டில் அந்த அப்பாவிப்பெண் மரணமடைந்தார். நல்ல எண்ணத்துடன்
செய்யப்பட்ட நேருவின் செயல் இத்தகைய விளைவை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் கற்பனை செய்து கூட பார்த்திருக்கமாட்டார்.

 ‘தி இந்து’  நன்றி : http://suransukumaran.blogspot.in/2012/06/blog-post_9867.html

நாம் தமிழர் கட்சி ஆவணம் - ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளப் போகும் ஆகப் பெரிய அறைகூவல்

தமிழ் ஈழ விருதாளருக்குப் பாராட்டு!

Defender of Tamil sovereignty selected for Queen's Jubilee medal in Canada

[TamilNet, Saturday, 16 June 2012, 11:13 GMT]
Showing a positive signal to the democratic struggle of Eezham Tamils, the Canadian government has selected Eezham Tamil youth activist Krishna Saravanamuttu for the award of Queen’s Jubilee Medal. 26-year-old Mr Saravanamuttu has been in the forefront advocating the need for an independent international investigation into the war crimes and genocide of Eezham Tamils by Sri Lanka. Mr. Saravanamuttu called on Canada to support the eviction of Sri Lanka from the Councils of the Commonwealth. He has also also been demanding a referendum among the Eezham Tamils on the basis of historical, earned and remedial aspects of Tamil sovereignty as the only means to check the protracted genocide of the Eezham Tamil nation.

Mr Glen Murray, the Canadian cabinet minister in-charge of universities, who nominated him for the award, told TamilNet, “Krisna has provided outstanding leadership in Canada's student movement, in his advocacy with the United Nations for justice for Tamils around the world and his leadership in building youth organizations committed to social justice and human equality.”

“He is one of our countries emerging leaders and demonstrates the personal integrity that has earned him the trust of so many and allowed him to accomplish so much,” Glen Murray further said.

Krishna is one of the 14 people nominated by the universities minister for the award, which will be presented to him on 3 July. Altogether, 60,000 Canadians will be getting the medal for their services to that country.

Krisna Saravanamuttu
Krisna Saravanamuttu
Speaking to TamilNet, Mr. Saravanamuttu, who is also currently the national spokesperson for the NCCT, said that his experience in working with activists in the student movement through the York Federation of Students and the Canadian Federation of Students remained pivotal to his own development as a political organiser. He added that he learned the links between different occupied nations and the Tamil liberation struggle through his activism in the Toronto Coalition to Stop the War, the Canadian Peace Alliance, and the Palestinian freedom movement.

He further said “While I am extremely honoured to be recognized for my contributions in Canada, as recipient of this medal, I would like to emphasise the need for the commonwealth countries, especially Britain given its colonial legacy in the island of Sri Lanka, to hold the Sri Lankan state accountable for its genocide of the Eezham Tamil people. I call upon Prime Minister Harper to keep his promise to boycott the next Commonwealth meeting scheduled in Sri Lanka until the country's human rights record improves.”

Stressing the need for an independent international investigation into the war crimes of the GoSL and a referendum among the Eezham Tamils on the basis of historical, earned and remedial aspects of Tamil sovereignty as the only means to check the protracted genocide of the Eezham Tamil nation, Mr. Saravanamuttu called on Canada to support the eviction of Sri Lanka from the Councils of the Commonwealth.

photo message of dinamalar


solkiraarkal about diabetics and solar

இளைஞர்களே! விழித்திடுக! இதய - நீரிழிவுப் பண்டுவ வல்லுநர் அரிகரன்: 

ஒருவருக்கு சர்க்கரை நோய் வருவதற்கு, இரண்டு விதமான காரணங்கள் உள்ளன. ஒன்று மரபு ரீதியாக, அதாவது ஒரு குடும்பத்தில், அம்மாவிற்கோ, அப்பாவிற்கோ சர்க்கரை நோய் இருந்தால், அவர்களின் பிள்ளைகளுக்கும், சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மற்றொன்று, மாறி வரும் வாழ்க்கை முறை. உடல் உழைப்பு குறைவது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது மற்றும் அதிக கலோரி உள்ள உணவுகளை உண்பது.கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன், 40 வயதுகளில் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகம். ஆனால், இப்போது, நிலைமை வேறு. ஏதேனும் கொறித்துக் கொண்டே , கம்ப்யூட்டர் முன் பழியாகக் கிடக்கின்றனர். இதனால், 20 - 30 வயதுகளிலேயே சர்க்கரை நோய்க்கு உள்ளாகின்றனர்.குறிப்பாக, இளைஞர்களின் உணவு முறை மோசமாக மாறிவிட்டது. இவர்கள் அதிகம் விரும்பும் உணவுகளான, பிட்சா, பர்கர், கேக், நூடுல்ஸ், பரோட்டா, பேக்கரி வகைகள் போன்ற அனைத்திலும், மைதா தான் மூலப் பொருள்.

நம் உடலில் உள்ள கணையத்தில் இருக்கும், "பீட்டா' எனும் செல்களில் தான் இன்சுலின் உற்பத்தி ஆகிறது. மைதாவில் உள்ள, "அலாக்சன்' என்ற வேதிப் பொருள், இன்சுலின் உற்பத்தியைக் குறைக்கும் வல்லமை கொண்டது. இதா லேயே, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது.மைதா சாப்பிடுபவர்கள் அனைவருக்கும், சர்க்கரை நோய் வரும் என்றில்லை. ஒவ்வொரு மனிதனுக்கும், ஒவ்வொரு விதமான உடல் வாகு இருக்கும். மைதாவை, தொடர்ந்து பயன்படுத்தும் சிலருக்கு, சர்க்கரை நோய் உண்டாகலாம்; சிலருக்கு, உண்டாகாமலும் போகலாம்.ஆனால், பரம்பரையாக சர்க்கரை நோய் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக இளைஞர்கள், மைதா உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. அடுத்த தலைமுறையை, உருவாக்கப் போகும் குழந்தைகளை, ஆரோக்கியமாக வளர்க்க வேண்டியது நம் கடமை.


"சோலார் மூலம் வேளாண்...

'சூரிய ஒளியைப் பயன்படுத்தி, தன் தோட்டத்திற்கு தண்ணீர் இறைக்கும் விஜய குமார்:என் சொந்த ஊர், கேரள மாநிலம் கலங்கல். எங்களுடையது, பாரம்பரியமான விவசாயக் குடும்பம். அப்பாவிற்கு, என்னை இன்ஜினியராக்கிப் பார்க்க வேண்டும் என ஆசை.நானும், எந்திரவியல் படித்துவிட்டு, மிகப் பெரிய நிறுவனங்களில், 40 ஆண்டுகள் வேலை பார்த்தேன். என் பிள்ளைகளும், அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டனர்.அப்போது தான், ஒரு யோசனை தோன்றியது. நம் படிப்பை, விவசாயத்திற்குப் பயன்படுத்தலாம் என, நினைத்தேன். வேலையை விட்டுவிட்டு, தோட்டத்தை வாங்கி, முழு நேர விவசாயியாக மாறிவிட்டேன்.

என் கிணற்றில், ஆண்டு முழுவதும் நீர் இருக்கும். ஆனாலும், தென்னை மரத் தோட்டத்திற்கு, சொட்டு நீர்ப் பாசனம் தான் செய்கிறேன். ஆரம்பத்தில், காய்ப்பு குறைவாக இருந்தாலும், என் தொடர் கவனிப்பில், காய்ப்பிற்கு குறைவில்லை. அந்த நேரத்தில் தான், 10 மணி நேர மின்வெட்டு பிரச்னை என்னை அசைத்துப் பார்த்தது.நேரத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல், தென்னை மரங்கள் எல்லாம், காய ஆரம்பித்தன. ஜெனரேட்டர் வாங்கச் சொல்லி, பலரும் வற்புறுத்தினர். ஆனால், என் கவனம் சோலார் பம்ப் செட் பக்கம் திரும்பியது. உடனே, அரை சென்ட் நிலத்தை, இந்த சோலார் அமைப்பிற்காக ஒதுக்கி, ஐந்து எச்.பி., மோட்டரை இயக்கும் அளவிற்கு, சோலார் பேனல்களை அமைத்தேன். தற்போது, தண்ணீர் அருவி போல கொட்டுகிறது. ஒரு மணி நேரத்தில், 6,000 முதல், 8,000 லிட்டர் வரை, தண்ணீர் இறைக்க முடிகிறது.

காலை முதல் மாலை வரை, சூரிய ஒளி இருக்கும் நேரம் முழுவதும், இந்த மின்சாரத்தைப் பயன்படுத்தி, தண்ணீரைச் சேமித்து வைத்து, அப்படியே சொட்டு நீர்ப் பாசனம் செய்கிறேன். இந்த சோலார் அமைப்பின் ஒரே பிரச்னை, இதற்கான விலை தான். விவசாயிகள் இந்த சோலார் அமைப்பை பயன்படுத்த அரசு ஊக்குவிக்க வேண்டும்.தொடர்புக்கு: 97900 05054.

தொட்டால்சிணுங்கி இலையில் புதிய வகை ஆடை

தினமலர்

உங்களின் சட்டையோ அல்லது கவுனோ, இலைகளைப் போல, வெளியில் உள்ள கார்பன் -டை- ஆக்சைடை உள்ளே இழுந்து, உங்களின் உடலுக்கு ஆக்சிஜனை தரும் என்ற தகவலை இதுவரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒளிச்சேர்க்கை போன்ற செயலைச் செய்யும் இத்தகைய உடையை கவுகாத்தியில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவன (ஐஐடி-ஜி) மாணவர் உருவாக்கியுள்ளார். குழந்தைப் பருவத்தில் இருக்கும்போது, பலர் தொட்டு விளையாடி இருக்கும் தொட்டால் சிணுங்கி இலைகளுடன் நூலை ஒன்றிணைத்து இத்தகைய ஆடையை உருவாக்கியுள்ளார். விளையாடும்போது அணிவதற்கும், மிக சிக்கலான காலநிலைகளில் அணிவதற்கும் இந்த உடை மிகவும் ஏற்றது.

விருது: உயிரியல் தொழில்நுட்பத்திலான இத்தகையை ஆடையை தயாரித்ததற்காக, ராஜதேஷ் நாத் பார்பூயியா, 27, என்பவரும், கவுகாத்தி இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் வடிவமைப்பு பிரிவு பேராசிரியர் பிரதீப் யம்மியாவரும், "சில்வர் டிசைன் விருதை' பெற்றுள்ளனர். டிசைனர்களுக்காக, ஐரோப்பிய டிசைன் சங்கம் இத்தாலியின் கோமோ நகரில் நேற்று ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட்டுள்ளது. 36 பிரிவுகளில் புதுமையான படைப்புகளை உருவாக்கியுள்ளவர்களும், நிறுவனங்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். "தங்களின் தயாரிப்பான "உயிரி ஆடை'யானது, தொட்டால்சிணுங்கி தாவரத்துடன் வழக்கமான நூலைச் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒன்றும் அதிக செலவிலானது அல்ல' என்கிறார் கவுகாத்தி ஐ.ஐ.டி.,யில் இந்த ஆண்டு வடிவமைப்பு பிரிவில் முதுகலைப் பட்டம் முடிக்கும் பார்பூயியா. "இந்த ஆடையானது வெளிப்புற சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் மாறும் தன்மை கொண்டது. இந்த வகை ஆடையை அணிபவர், வியர்வையில் நனையாமல் இருப்பதோடு, ஆக்சிஜன் குறைவான இடங்களில், அதை சீர் செய்யும் வகையில், உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் தரும் தன்மையும் கொண்டது' என்றும் அவர் மேலும் கூறினார்.

நோக்கம் என்ன? பார்பூயியாவுக்கு இந்த ஆடை தயாரிக்க உதவிய யம்மியாவர் கூறுகையில், ""மாறும் தொழில்நுட்பத்திலான இந்த ஆடையைத் தயாரிக்க எங்களுக்கு ஆறு மாதம் ஆனது. கடந்த ஆண்டு மே மாதம்தான் இதைத் தயாரித்தோம். இயற்கையான முறைகளில் உள்ள அடிப்படையான மற்றும் புதுமையான விஷயங்களையும், செயற்கையான முறையில் அவற்றை எப்படி இணைத்து அமல்படுத்துவது என்பதையும் வெளிப்படுத்துவதே தயாரிப்பின் நோக்கம்,'' என்றார். பார்பூயியாவுடன் படிக்கும் மஞ்சுநாத் பூட்டா என்பவர், தெரு வியாபாரிகள் மற்றும் பொருட்களை கூவி விற்பவர்களுக்கான, எங்கும் எடுத்துச் செல்லக்கூடிய, மடக்கும் வசதி கொண்ட சிறிய அளவிலான அலமாரி ஒன்றைத் தயாரித்து, தேசிய புதிய கண்டுபிடிப்புகள் கவுன்சிலின் கவனத்தை ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- திலீப்குமார் சர்மா -