diabetics லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
diabetics லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 7 ஆகஸ்ட், 2013

சருக்கரை நோய்க்கு க் கால்கள் பலியாகா!

சர்க்கரை நோய்க்கு க் கால்கள் பலியாகா!

சர்க்கரை நோயாளிகள், பாத புண்களால், கால்கள் இழப்பதை தவிர்க்க, "ஸ்டெம்செல்' ஆராய்ச்சி மூலம் தீர்வு கண்ட, தமிழக பெண் மருத்துவர் ரேகா: நான், வேலூர் கிறிஸ்தவ கல்லூரி மருத்துவமனையில், "பேத்தாலஜி' எனும், நோய் குறியியல் துறை பேராசிரியராக பணியாற்றுகிறேன். இளங்கலை மருத்துவம் முடித்ததும், "ஸ்டெம்செல்'களை ஆராய்ச்சி செய்வதில், ஆர்வம் ஏற்பட்டது. அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலை கழகத்தில், இந்தியரான ராகேஷ் கே.ஜெயின் தலைமையில், ஸ்டெம்செல் ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். சர்க்கரை நோயாளியின் பாதங்களில் உள்ள, ரத்த குழாய்கள் பாதிக்கப்படுவதால், "புட் அல்சர்' எனும், பாத புண்கள் ஏற்படுகின்றன. இந்நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருவோரில், ஐந்து நபருக்கு ஒருவர் என்ற வீதத்தில், கால்களை முற்றிலும் இழக்கின்றனர். இப்பிரச்னைக்கு, ஐ.பி.எஸ்., எனும், "இண்டியூஸ்டு புளூரிபொட்டென்ட் ஸ்டெம்செல்'கள் தீர்வு காண்பதை கண்டுபிடித்தோம். "புளூரி' என்றால், லத்தீன் மொழியில், பன்முகத் தன்மை என்பது பொருள்.
உடலில், உறுப்புகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பவை ஸ்டெம்செல்கள். இரைப்பை, குடல், நுரையீரல் போன்றவற்றின் உட்சுவர் நரம்புகள், தோல், தசை மற்றும் எலும்புகளுக்கு வெவ்வேறு தன்மைகள் இருந்தாலும், இவையனைத்தையும் ஒரே ஸ்டெம்செல்லில் இருந்து, செயற்கையாக உருவாக்கலாம். சர்க்கரை நோயாளிகளின் தோலின் கீழ் உள்ள செல்களை எடுத்து, அவற்றை, ஐ.பி.எஸ்., செல்களாக மாற்றி, செயற்கையான ரத்த நாளங்களை உருவாக்கலாம். இது, மனித உடலில், 280 நாட்கள் வரை செயல்பட்டு, அதற்குள், இயற்கையான, புதிய ரத்த நாளங்களை உருவாக்கும். இதை மனிதர்களிடம் சோதிக்கவில்லை என்றாலும், எலிகளை வைத்து பரிசோதித்ததில், ஸ்டெம்செல்களில் இருந்து உருவாக்கப்பட்ட ரத்த நாளங்களில், ரத்த ஓட்டம் இயல்பாக இருப்பதை உறுதி செய்தோம். இந்த ஸ்டெம்செல் ஆராய்ச்சியால், இனி சர்க்கரை நோயாளியின் பாத புண்களால், கால்களை இழப்பது தவிர்க்கப்படும்.

சனி, 7 ஜூலை, 2012

இதய நோய், நீரிழிவில் இருந்து காக்கும் செம்புற்றுக் கனி

இதய நோய், நீரிழிவில் இருந்து காக்கும் ஸ்ட்ராபெர்ரி

தினமணி First Published : 07 Jul 2012 05:42:54 PM IST


பழங்களில் ஸ்ட்ராபெர்ரிக்கு என்று ஒரு தனி இடம் உள்ளது. அது ஏதோ தானாக வந்துவிட்டது அல்ல. ஸ்ட்ராபெர்ரியில் உள்ள குணநலன்கள் தான் அந்த இடத்தை பெற்றுத் தந்துள்ளது.அந்த வகையில், இதய நோய் உள்ளவர்களுக்கும், நீரிழிவு உள்ளவர்களுக்கும், அந்நோய் மேலும் பாதிப்பினை ஏற்படுத்தாமல் தடுக்கும் ஆற்றல் ஸ்ட்ராபெர்ரிக்கு இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அதில்லாமல் இந்நோய்கள் தாக்காமல் இருக்கவும் ஸ்ட்ராபெர்ரி  உதவுவதாக ஆய்வு முடிவு கூறுகிறது.

ஞாயிறு, 17 ஜூன், 2012

solkiraarkal about diabetics and solar

இளைஞர்களே! விழித்திடுக! இதய - நீரிழிவுப் பண்டுவ வல்லுநர் அரிகரன்: 

ஒருவருக்கு சர்க்கரை நோய் வருவதற்கு, இரண்டு விதமான காரணங்கள் உள்ளன. ஒன்று மரபு ரீதியாக, அதாவது ஒரு குடும்பத்தில், அம்மாவிற்கோ, அப்பாவிற்கோ சர்க்கரை நோய் இருந்தால், அவர்களின் பிள்ளைகளுக்கும், சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மற்றொன்று, மாறி வரும் வாழ்க்கை முறை. உடல் உழைப்பு குறைவது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது மற்றும் அதிக கலோரி உள்ள உணவுகளை உண்பது.கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன், 40 வயதுகளில் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகம். ஆனால், இப்போது, நிலைமை வேறு. ஏதேனும் கொறித்துக் கொண்டே , கம்ப்யூட்டர் முன் பழியாகக் கிடக்கின்றனர். இதனால், 20 - 30 வயதுகளிலேயே சர்க்கரை நோய்க்கு உள்ளாகின்றனர்.குறிப்பாக, இளைஞர்களின் உணவு முறை மோசமாக மாறிவிட்டது. இவர்கள் அதிகம் விரும்பும் உணவுகளான, பிட்சா, பர்கர், கேக், நூடுல்ஸ், பரோட்டா, பேக்கரி வகைகள் போன்ற அனைத்திலும், மைதா தான் மூலப் பொருள்.

நம் உடலில் உள்ள கணையத்தில் இருக்கும், "பீட்டா' எனும் செல்களில் தான் இன்சுலின் உற்பத்தி ஆகிறது. மைதாவில் உள்ள, "அலாக்சன்' என்ற வேதிப் பொருள், இன்சுலின் உற்பத்தியைக் குறைக்கும் வல்லமை கொண்டது. இதா லேயே, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது.மைதா சாப்பிடுபவர்கள் அனைவருக்கும், சர்க்கரை நோய் வரும் என்றில்லை. ஒவ்வொரு மனிதனுக்கும், ஒவ்வொரு விதமான உடல் வாகு இருக்கும். மைதாவை, தொடர்ந்து பயன்படுத்தும் சிலருக்கு, சர்க்கரை நோய் உண்டாகலாம்; சிலருக்கு, உண்டாகாமலும் போகலாம்.ஆனால், பரம்பரையாக சர்க்கரை நோய் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக இளைஞர்கள், மைதா உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. அடுத்த தலைமுறையை, உருவாக்கப் போகும் குழந்தைகளை, ஆரோக்கியமாக வளர்க்க வேண்டியது நம் கடமை.


"சோலார் மூலம் வேளாண்...

'சூரிய ஒளியைப் பயன்படுத்தி, தன் தோட்டத்திற்கு தண்ணீர் இறைக்கும் விஜய குமார்:என் சொந்த ஊர், கேரள மாநிலம் கலங்கல். எங்களுடையது, பாரம்பரியமான விவசாயக் குடும்பம். அப்பாவிற்கு, என்னை இன்ஜினியராக்கிப் பார்க்க வேண்டும் என ஆசை.நானும், எந்திரவியல் படித்துவிட்டு, மிகப் பெரிய நிறுவனங்களில், 40 ஆண்டுகள் வேலை பார்த்தேன். என் பிள்ளைகளும், அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டனர்.அப்போது தான், ஒரு யோசனை தோன்றியது. நம் படிப்பை, விவசாயத்திற்குப் பயன்படுத்தலாம் என, நினைத்தேன். வேலையை விட்டுவிட்டு, தோட்டத்தை வாங்கி, முழு நேர விவசாயியாக மாறிவிட்டேன்.

என் கிணற்றில், ஆண்டு முழுவதும் நீர் இருக்கும். ஆனாலும், தென்னை மரத் தோட்டத்திற்கு, சொட்டு நீர்ப் பாசனம் தான் செய்கிறேன். ஆரம்பத்தில், காய்ப்பு குறைவாக இருந்தாலும், என் தொடர் கவனிப்பில், காய்ப்பிற்கு குறைவில்லை. அந்த நேரத்தில் தான், 10 மணி நேர மின்வெட்டு பிரச்னை என்னை அசைத்துப் பார்த்தது.நேரத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல், தென்னை மரங்கள் எல்லாம், காய ஆரம்பித்தன. ஜெனரேட்டர் வாங்கச் சொல்லி, பலரும் வற்புறுத்தினர். ஆனால், என் கவனம் சோலார் பம்ப் செட் பக்கம் திரும்பியது. உடனே, அரை சென்ட் நிலத்தை, இந்த சோலார் அமைப்பிற்காக ஒதுக்கி, ஐந்து எச்.பி., மோட்டரை இயக்கும் அளவிற்கு, சோலார் பேனல்களை அமைத்தேன். தற்போது, தண்ணீர் அருவி போல கொட்டுகிறது. ஒரு மணி நேரத்தில், 6,000 முதல், 8,000 லிட்டர் வரை, தண்ணீர் இறைக்க முடிகிறது.

காலை முதல் மாலை வரை, சூரிய ஒளி இருக்கும் நேரம் முழுவதும், இந்த மின்சாரத்தைப் பயன்படுத்தி, தண்ணீரைச் சேமித்து வைத்து, அப்படியே சொட்டு நீர்ப் பாசனம் செய்கிறேன். இந்த சோலார் அமைப்பின் ஒரே பிரச்னை, இதற்கான விலை தான். விவசாயிகள் இந்த சோலார் அமைப்பை பயன்படுத்த அரசு ஊக்குவிக்க வேண்டும்.தொடர்புக்கு: 97900 05054.