web லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
web லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 24 பிப்ரவரி, 2011

thamizh web in cell: உங்கள் கைப்பேசியில் தமிழ் இணையத் தளம், தமிழில் தெரிய

உங்கள் கைப்பேசியில் தமிழ் இணையத் தளம், தமிழில் தெரிய…

உங்கள் கைப்பேசியில் தமிழ் இணையத் தளம், தமிழில்  தெரிய… www.m.opera.com போகவும். download opera mini 5.1 (English India) என்ற இணைய உலாவிக்கான (browser) மென் பொருளை, நினைவக அட்டையில் (memory card) சேமித்த பிறகு O-opera mini  என்ற சிறு படத்தோடு அந்த மென்பொருள்   உங்கள் கைப்பேசி மெனு பட்டியலில் காணக் கிடைக்கும்.
Install ஆன பிறகு start என்று அந்த மென்பொருளை இயக்கவா? என்று அனுமதி கேட்கும்.
அந்த மென்பொருள் முதன்முதலாக திறக்கும்போது மட்டும் கொஞ்சம்   நேரத்தை எடுத்துக் கொள்ளும்.
ஆப்ரா ப்ரவுசர் இணைய தளம் திறக்கப்பட்டு, பிரவுசர் அறிமுகப் பக்கத்தைக் காண்பிக்கும்.
accept கொடுத்து தொடருங்கள்.
தற்பொழுது இணைய தளங்களை திறப்பதற்கு, முழுமையாக தயாராகியிருக்கும். ஆனால் தமிழ் எழுத்துக்கள், தமிழாகத் தெரியாமல் கட்டம் கட்டமாகத் தெரியும். அதற்கு பிரசர் செட்டிங்கில் கொஞ்சம் மாற்றம் செய்ய வேண்டும்.
ஆப்ரா பிரவுசரின் அட்ரஸ் பார் போகவும். அங்கே www. என்பது போன்ற எல்லாவற்றையும் சுத்தமாக, அழித்த பிறகு… தவறில்லாமல்… opera:config என்று தட்டச்சு செய்த பிறகு ok செய்யவும்.
அந்த உலாவிப் பக்கம், மாறி செட்டிங் பக்கத்தைத் திறக்கும். அந்தப் பக்கத்தின் கீழே கடைசியாக… use bitmap fonts for complex scripts என்பதில் no என்று இருக்கும். அதை yes என்று மாற்றிய பிறகு வேறு எந்த மாற்றத்தையும் செய்யாமல் கவனமாக save செய்து, அந்த பிரவுசரை  விட்டு, வெளியேறவும்.
தவறான மாற்றங்கள் உலாவியை திறப்பதில் சிக்கலை உருவாக்கும். அப்படி ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், அந்த மென்பொருளை அழித்த பிறகு முதலிருந்து தான் தொடங்க வேண்டும்.
எல்லா மாற்றங்களையும் செய்த பிறகு மொபைலை switch off செய்த பிறகு on செய்யுங்கள்.
அவ்வளவுதான்!
நோக்கியா, சோனி எரிக்சன் தயாரிப்பு கைப்பேசிகளில் சோதித்துப் பார்த்தபோது சரியாகவே இயங்குகிறது.
- மனிதன் ( foryouths@beyouths.com )
மீனகம் தளத்தினை செல்பேசியில் காண: http://meenakam.com/?mobile என்று தட்டச்சு செய்யவும்..

வெள்ளி, 7 ஜனவரி, 2011

Web for Learn Thamizh through english: ஆங்கில வழியில் தமிழ் கற்க புதிய இணையதளம் தொடக்கம்

பாராட்டுகள். இப்போதைக்கு நடைமுறையில் இருக்கும் பிற இணைய தளங்களில்  இருந்து மாறுபட்டுத் தமிழ் மரபினையும் தமிழ் உணர்வினையும் கலந்து கற்பிக்கும் வகையில் பாடத்திட்டங்களை அமைக்க வேண்டுகிறேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


ஆங்கில வழியில் தமிழ் கற்க புதிய இணையதளம் தொடக்கம்

First Published : 07 Jan 2011 01:19:38 AM IST


சென்னை, ஜன. 6: ஆங்கில வழியில் தமிழ் கற்பதற்கான புதிய இணையதளத்தை மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எஸ். ஜெகத்ரட்சகன் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.  "காவ்யா கிரியேடிவ் மீடியா' என்ற நிறுவனத்தின் சார்பில் "தமிழ் டைஜஸ்ட்' என்ற இந்தப் புதிய இணையதளத்தின் மூலம் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் குழந்தைகள் தமிழை எளிதாகக் கற்கலாம்.  உரையாடல்கள், விளையாட்டுகள், பயிற்சிகள் மூலம் தமிழ் கற்பிக்கும் புதிய முறையை இந்த இணையதளம் அறிமுகம் செய்துள்ளது. இந்த இணையதளத்தைத் தொடங்கி வைத்து அமைச்சர் பேசியதாவது: வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தங்களது குழந்தைகள் தமிழ் கற்பதை மிகவும் விரும்புகின்றனர்.  ஏனெனில், பெரும்பாலான குழந்தைகள் இளம் வயது முதல் ஆங்கில வழியில் கல்வி கற்பதால் தமிழ் கற்க வாய்ப்பு கிடைப்பது இல்லை.  இவர்களுக்கு முதல்முறையாக இப்போது இணையதளத்தில் ஆங்கிலம் மூலம் தமிழைக் கற்க வாய்ப்பு வழங்கியுள்ளது புதிய முயற்சி ஆகும்.  தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான் ஆங்கிலத்தில் பேசுவதில் சிறப்பான திறன் பெற்று விளங்குகின்றனர்.  தாய்மொழி என்பது தாய்ப்பாலுக்கு நிகரானது. காந்தியடிகள் தனது சுய சரிதத்தை தனது தாய்மொழியான குஜராத்தியில்தான் எழுதினார். தாய்மொழியில்தான் எல்லா உணர்வுகளையும் சிறப்பாக வெளியிட முடியும்  உலகில் உள்ள எந்த மொழியைக் காட்டிலும் இனிமையும், சொல் வளமும் மிக்கது தமிழ். காந்தியடிகள்கூட திருக்குறளைப் படித்தபின் அடுத்த பிறப்பு இருந்தால் தமிழகத்தில் தமிழனாகப் பிறக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார் என்றார் அமைச்சர் ஜெகத்ரட்சகன்.

வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

பட்டுக்கோட்டையாருக்கு இணையதளம்



சென்னை,​​ பிப்.4: மக்கள் கவிஞர் என போற்றப்படும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கு தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.இந்த இணையதளத்தில் அவரது திரைப்படப் பாடல்கள்,​​ தனிப் பாடல்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.​ இணையதள முகவரி: ​www.pattukkott​aiy​ar.com​