big temple லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
big temple லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 29 ஆகஸ்ட், 2012

பெரிய கோயிலும் சாய்ந்த கோபுரமும்

பெரிய கோயிலும் சாய்ந்த கோபுரமும்

நட்பு - பதிவு செய்த நாள் : 28/08/2012

உலகின்  பணக்கார  நாடுகளெல்லாம் கட்டுமானத் தொழிலில் கொடிகட்டிப் பறக்கின்றன. உலகிலேயே உயரமான கட்டடம் எங்களிடம்தான் உள்ளது எனச் சொல்வதற்காகவே கட்டப்படும் விண்ணை முட்டும் கட்டடங்களுக்காக அவர்கள் அள்ளி வீசும் இடாலர்கள், உயூரோ, திர்ரம், இரியால்  தொகையை அளவிட முடியாது! ஆனால் அவற்றைக் கட்டுவதற்காக இரவும் பகலும் உழைக்கும் கட்டுமானத் தொழிலாளர்கள் பெரும்பாலும் நம்மவர்களே! நம் மூளையும், அயராத உழைப்பும், சிந்தும் வியர்வையும்தான் அவர்களை மிளிர வைக்கிறது. ஆனால் வெள்ளையன் நம் நாட்டுக்கு வருவதற்கு முன்பு  உலகத்துக்கே கட்டுமானத் தொழிலில் நம்மவர்கள்தான் முன்னோடியாக இருந்ததாக வரலாறு சொல்கிறது!
எடுத்துக்காட்டு நம் தஞ்சைப் பெரிய கோபுரம்! உலகின் ஏழு விந்தைகளில் ஒன்றாகக் கருதப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மொத்தம் மூன்று கட்டங்களாக 177 ஆண்டுகளாகக் கட்டப்பட்டதாம். இவ்…வளவு உயரமாகக்  கட்டப்போகிறோமே, இதன் கீழே உள்ள மண்ணின் தன்மையைச் சோதிக்க வேண்டும் என்கிற அடிப்படை விவரம் கூடவா  தெரியாமல்  இருக்கும்! கட்டிய கொஞ்ச நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாகச் சாய, பிறகு  இரண்டாம் தளம், மூன்றாம் தளம்  அமைத்து மொத்தமாகச் சாய்ந்து விடாமல் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். உலகில் மிக மோசமான கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டு இந்தக் கட்டடம். ஆனால் இஃது  உலக விந்தைகளின் பட்டியலில் இன்றும் இருப்பதுதான் மாபெரும்  விந்தை!

ஆனால் நம் தஞ்சையில் உயர்ந்து நிற்கும் 216  அடி தஞ்சைப் பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில் கட்டப்பட்டதாம்! கட்டடக்கலையில் உலகையே மிரளச் செய்யும் இந்தக் கோயில் இராசராச சோழனால் கட்டி முடிக்கப்பட்டது. இந்தக்  கோபுரத்தில் உள்ள  ஒரே ஒரு பாறை மட்டும் 80தன் (80 ஆயிரம்   கிலோ) எடை கொண்டதாம்! மின்தூக்கி (கிரேன்), இடிப்பான் (புல்டோசர்) போன்ற எந்தவிதத் தொழில்நுட்பமும் இல்லாத அந்தக் காலத்தில் கட்டப்பட்டு, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் தலைநிமிர்ந்து காட்சியளிக்கும் இந்தக் கோபுரம் உலக விந்தைகளின் பட்டியலில் இடம் பெறாததே ஒரு விந்தைதான்!
கட்டுமானத் தொழிலில் நாம்தான் பேராளுமைகள் எனச் சொல்வதற்கு இதை விட வேறென்ன எடுத்துக்காட்டு வேண்டும்!
நன்றி: ‘மனதில் உறுதி வேண்டும்’ வலைப்பூ.

சனி, 18 பிப்ரவரி, 2012

தமிழின் பெருமை - கம்போடியாவில்!

நன்றி: செயா தொலைகாட்சி, கேள்வி நேரம் நிகழ்ச்சி.

உலகின் பெரிய வழிபாட்டுத்தலம் எது என்பது உங்களுக்குத் தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?


இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்று இது! இந்த அதிசயத்தைப் நம் மக்களுடன் பகிர்ந்துக்கொள்ள நான் பெருமையடைகிறேன். ஆம்  உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தளம் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில்.

இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா?, வைணவத் தளமான இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே பெரியது!!

இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் !!!


இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன் பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்" கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக "புத்த" வழிபாடு தளமாக மாற்றப்பட்டு. இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது!.

பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத்தொடங்கியது.பின்னர் 1586 ஆம் ஆண்டு  "António da Madalena" என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது, அதை அவர் "is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of." என்று கூறியுள்ளார்.

பின்னர் Henri Mouhot என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது. அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged என்று குறிப்பிட்டுள்ளார்!! பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!!

இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார்.ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது இதில் இன்னொரு சிறப்பு "கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் "தேசிய சின்னமாக"ஆட்சிப் பொறுப்பு பொறிக்கப்பட்டுள்ளது!.

இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம், கடைசியாக ஒன்று இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை!! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது!! இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே!!

இன்றும் தாய்லாந்தில் மன்னர், ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு முன் நமது திருப்பாவையை தாம் பாராயணம் செய்து பின்னர் பதவி ஏற்பதுதான் வழக்கத்தில் உள்ளது.

செவ்வாய், 5 அக்டோபர், 2010

ராஜராஜ சோழன் குறித்து அகழ்வாராய்ச்சி நடத்தாதது ஏன்? பாஜக

சென்னை, அக். 4: ராஜராஜ சோழனின் நினைவிடத்தை உறுதிப்படுத்த இதுவரை அகழ்வாராய்ச்சி நடத்தாதது ஏன் என்று முதல்வர் கருணாநிதிக்கு தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.  இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:  அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இனி நடப்பவை நல்லவையாக இருக்க வேண்டும் என்று நாட்டு மக்கள் அனைவரும் விரும்புகின்றனர். ஆனால், தமிழக முதல்வர் கருணாநிதியும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங்கும் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.  ராமஜென்ம பூமி பிரச்னை உச்சத்தில் இருந்தபோது, அயோத்தியில் தான் ராமன் பிறந்தார் என்பதற்கு என்ன ஆதாரம்? என்று கேலி பேசி மத உணர்வுகளைத் தூண்டிவிட்டதும் இவர்கள்தான். ராமர் பாலம் பிரச்னை எழுந்த போது ராமர் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தார் என்று முதல்வர் கருணாநிதி கடுஞ்சொல் உதிர்த்தார்.  அயோத்தி வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன்பு நீதிமன்றத் தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும் என்று வேதம் ஓதியவர், இப்போது மத உணர்வுகளைத் தூண்டும் விதத்தில் எழுதவும், பேசவும் தொடங்கியுள்ளார்.  ""அயோத்தியில்தான் ராமர் பிறந்தார் என்று நீதிமன்றம் அறுதியிட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.  ஆனால், ராஜராஜன் மறைந்த விதத்தையோ, அவரது கல்லறை அமைந்த இடத்தையோ நம்மால் இன்னமும் அறிய முடியவில்லை'' என்று கருணாநிதி வருந்தியுள்ளார். இது வாழைப்பழத்தில் ஊசி இறக்கும் வேலை என்பதை எல்லோரும் நன்கறிவார்கள்.  5-வது முறையாக முதல்வராக இருக்கும் கருணாநிதி, ராஜராஜ சோழனின் நினைவிடத்தை உறுதிப்படுத்த ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? ராஜராஜனின் ஆட்சிச் சிறப்புகள், நினைவுச் சின்னங்கள் குறித்து அகழ்வாராய்ச்சிகள் நடத்தாதது யார் குற்றம்? நடத்தக் கூடாது என்று யாராவது தடுத்தார்களா?  தான் செய்ய வேண்டிய கடமையைச் செய்யாமல் யார் யார் மீதே வேதனையைத் திருப்பி விடுவது ஏன்? இனியாவது தமிழகத்தின் பழம்பெருமையைக் காக்க கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொன். ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
கருத்துக்கள்

சரியான கேள்விதான். ஆனால் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். பெரிய கோயில் மத்திய அரசின் தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவேதான், அங்கு அக் கோயிலைக் கட்டிய இராசராசன் திருவுருவப் படிமைத்தைக் கூடத் தமிழக அரசால் நிறுவ இயலாமல் வெளியே அமைத்துள்ளது. முக்கடலில் மறைந்துள்ள குமரிக்கண்டச் சிறப்பை வெளிப்படுத்தும் அகழ்வாராய்ச்சிக்குச் சோவியத்து நாடு முன்வந்த பொழுது நேருவின் அரசு மறுத்து விட்டது. இந்த அடிப்படையில் கலைஞரின் கேள்விகள் நியாயமானவையே. எனினும் அதற்கான முயற்சிகளில் கலைஞரும் இறங்குவதற்கு உங்கள் வினாக்கள் உதவினால் நன்று. ஆரியக் கற்பனைக்குத் துணை நிற்கும் மத்திய அரசு தமிழக வரலாற்று உண்மைகளைப் புதைக்கவே முயல்கிறது என்பதைப் பொன். இரா. உணர வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/5/2010 5:59:00 AM
ஹிந்து ஹிந்து ஹிந்துஸ்தான் முஸ்லிம் செல்லு பாகிஸ்தான் என்று வெறி கூச்சல் போட்டு கும்பல் ஒன்று வருகிறது. கரசேவை என்று சொல்லி கடப்பாறைய தூக்கிட்டு கல்லு குடித்த குரங்கு போல கண்டதையும் உடைக்குது. அயோத்தியில் பாபர்ரோட மசூதிய இடிக்கிறான் கேட்ட பரதேசி ராமனுக்கு கோவில் கேட்ட என்கிறான். அக்டோபர் 30 இல் அப்பாவிகள் பலபேர யமலோகம் அனுப்பிவிட்டு காரசேவ என்கிறான். ஆர்.எஸ்.எஸ்., பி. ஜே. பி. , விஸ்வஹிந்து பரிசத்து இந்த அனுமாரு கூடத்துக்கு விதவிதமா பெரிருக்கு. இலங்கையவே எரித்தவன் அந்த (பரதேசி ராமன்) இராமாயண குரங்கு. இப்ப இந்தியாவையே அழிக்க பாக்குது இந்த அத்வானி குரங்கு. இந்த இராமாயண குரங்கு கூட மலையத்தானே பெயர்த்தது, இந்த அத்வானி குரங்கு எல்லாம் மசூதியா இடிக்குது. மசூதி உள்ள இடம்தானே ராமன் பிறந்த இடம் என்றால் நாங்க ஒன்னு கேட்போம் நீ பதில் சொல்ல முடியூமா? தசரதனுக்கு பத்தாயிரம் பொண்டாட்டிகள் உண்டாமே அவர்கள் வாழ்ந்து, செத்து போன இடங்கள் எங்கே என்று சொல்லு பாப்போம்.
By say
10/5/2010 5:20:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *