thanjai periya koil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
thanjai periya koil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 29 ஆகஸ்ட், 2012

பெரிய கோயிலும் சாய்ந்த கோபுரமும்

பெரிய கோயிலும் சாய்ந்த கோபுரமும்

நட்பு - பதிவு செய்த நாள் : 28/08/2012

உலகின்  பணக்கார  நாடுகளெல்லாம் கட்டுமானத் தொழிலில் கொடிகட்டிப் பறக்கின்றன. உலகிலேயே உயரமான கட்டடம் எங்களிடம்தான் உள்ளது எனச் சொல்வதற்காகவே கட்டப்படும் விண்ணை முட்டும் கட்டடங்களுக்காக அவர்கள் அள்ளி வீசும் இடாலர்கள், உயூரோ, திர்ரம், இரியால்  தொகையை அளவிட முடியாது! ஆனால் அவற்றைக் கட்டுவதற்காக இரவும் பகலும் உழைக்கும் கட்டுமானத் தொழிலாளர்கள் பெரும்பாலும் நம்மவர்களே! நம் மூளையும், அயராத உழைப்பும், சிந்தும் வியர்வையும்தான் அவர்களை மிளிர வைக்கிறது. ஆனால் வெள்ளையன் நம் நாட்டுக்கு வருவதற்கு முன்பு  உலகத்துக்கே கட்டுமானத் தொழிலில் நம்மவர்கள்தான் முன்னோடியாக இருந்ததாக வரலாறு சொல்கிறது!
எடுத்துக்காட்டு நம் தஞ்சைப் பெரிய கோபுரம்! உலகின் ஏழு விந்தைகளில் ஒன்றாகக் கருதப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மொத்தம் மூன்று கட்டங்களாக 177 ஆண்டுகளாகக் கட்டப்பட்டதாம். இவ்…வளவு உயரமாகக்  கட்டப்போகிறோமே, இதன் கீழே உள்ள மண்ணின் தன்மையைச் சோதிக்க வேண்டும் என்கிற அடிப்படை விவரம் கூடவா  தெரியாமல்  இருக்கும்! கட்டிய கொஞ்ச நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாகச் சாய, பிறகு  இரண்டாம் தளம், மூன்றாம் தளம்  அமைத்து மொத்தமாகச் சாய்ந்து விடாமல் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். உலகில் மிக மோசமான கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டு இந்தக் கட்டடம். ஆனால் இஃது  உலக விந்தைகளின் பட்டியலில் இன்றும் இருப்பதுதான் மாபெரும்  விந்தை!

ஆனால் நம் தஞ்சையில் உயர்ந்து நிற்கும் 216  அடி தஞ்சைப் பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில் கட்டப்பட்டதாம்! கட்டடக்கலையில் உலகையே மிரளச் செய்யும் இந்தக் கோயில் இராசராச சோழனால் கட்டி முடிக்கப்பட்டது. இந்தக்  கோபுரத்தில் உள்ள  ஒரே ஒரு பாறை மட்டும் 80தன் (80 ஆயிரம்   கிலோ) எடை கொண்டதாம்! மின்தூக்கி (கிரேன்), இடிப்பான் (புல்டோசர்) போன்ற எந்தவிதத் தொழில்நுட்பமும் இல்லாத அந்தக் காலத்தில் கட்டப்பட்டு, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் தலைநிமிர்ந்து காட்சியளிக்கும் இந்தக் கோபுரம் உலக விந்தைகளின் பட்டியலில் இடம் பெறாததே ஒரு விந்தைதான்!
கட்டுமானத் தொழிலில் நாம்தான் பேராளுமைகள் எனச் சொல்வதற்கு இதை விட வேறென்ன எடுத்துக்காட்டு வேண்டும்!
நன்றி: ‘மனதில் உறுதி வேண்டும்’ வலைப்பூ.

திங்கள், 1 நவம்பர், 2010

கோயில் எழுப்பியவருக்கு கோயிலில் இடமில்லை


தமிழகத்தில் வானத்து நட்சத்திரங்களைப்போல மன்னர்கள் பலர் வாழ்ந்து மறைந்திருக்கின்றனர். இலக்கியங்களிலும், செவிவழிச் செய்திகளிலும் மேலும் பலரின் பெயர்கள் உலவுகின்றன. அவர்கள் எண்ணங்களில் மட்டுமே வாழ்பவர்கள்.  சிலர் மட்டுந்தான் தங்கள் வாழ்வை, ஆட்சியை, இலக்கிய வேட்கையை, மொழிப் பற்றை, கலைத் திறனை அழியாத சின்னங்களாக்கி, நம் கண் முன்னே சான்றுகளாக விட்டுச் சென்றுள்ளனர். அந்த மிகச் சிலரில் ஒருவர் ராஜராஜன்.  ஒன்றல்ல, இரண்டல்ல ஆயிரம் ஆண்டுகள் முடிந்துவிட்டன. தஞ்சைத் தரணியில் ராஜராஜனின் கலைப்படைப்பு கம்பீரமாய் நம் கண் முன்னே நிற்கிறது.  அண்மையில் அமர்க்களமாய், ஆடம்பரமாய் ஒரு விழா நடைபெற்று முடிந்த பின்னரும், அவரோ தான் எழுப்பிய அதிசயத்தின் அருகில் பிரதிபலன் எதிர்பாராதவரைப்போல நிற்கிறார்.  அவனியே அண்ணாந்து பார்க்கும் வகையில் கோயில் எழுப்பிய கோமானுக்கு, அந்தக் கோயிலின் வளாகத்தில்கூட இடமில்லை என்பது எத்தனை வேதனையானது?  ஆயினும் என்ன, அந்தக் கலைக்கோயிலைக் காண்போர் எல்லாம் அவருக்கு தங்கள் இதயத்தில் இடம் தந்துவிடுகிறார்கள். இதயத்தில் இடம் என்றால்... தேர்தலின்போது தொகுதி ஒதுக்க முடியவில்லை எனில் கூட்டணிக் கட்சிகளிடம் இதயத்தில் இடம் உண்டு என அரசியல் கட்சித் தலைவர்கள் சொல்வதுபோலல்ல. நிதர்சனமான நிரந்தர இடம்.  ஆட்சி அமைக்கக் கை கொடுத்துவிட்டு பிறகு நழுவுவது, கூட்டணியில் இருந்தாலும் அமைச்சர் பதவி கிடைக்கவில்லையே என புலம்பி வருந்துவது, வளம்கொழிக்கும் அமைச்சர் பதவி வற்புறுத்திக் கேட்டும் கிடைக்கவில்லையெனில், பதவியேற்பு விழாவில் பங்கேற்பது குறித்து மெüனம் சாதிப்பது, நாட்டு மக்களுக்கு இன்னல் எனில் மெüனத்தைக் கடைப்பிடிப்பது, வீட்டு மக்களுக்கு இன்னல் எனில் தீர்வுக்கு விடை தேடி விழுந்தடித்துக் கொண்டு ஓடுவது என இருபத்தியோராம் நூற்றாண்டு அரசியல்வாதிகள் பல்வேறு வகையான போக்குகளைக் கடைப்பிடிக்கின்றனர்.  ஆனால், ராஜராஜனோ, தனக்கு முடிசூட்டு விழா நடைபெறவிருந்த நிலையில், தானே உத்தம சோழனுக்கு முடிசூட்டி, உறுதுணையாய் இருந்து, பல ஆண்டுகள் கழிந்த பின்னரே தான் பதவிக்கு வந்திருக்கிறார் என்றால் ராஜராஜன் அல்லவா உண்மையிலேயே உத்தம சோழன்!  இன்றைக்கு அரசின் செலவில் சில ஆயிரங்களில் ஒரு திட்டப்பணி நடைபெற்றால்கூட அடிக்கல் நாட்டு விழா, திறப்பு விழா என பல விழாக்கள் நடத்தி கல்வெட்டுகளில் தங்கள் பெயரைப் பெரிய அளவில் பொறித்து, பார்த்துப் பார்த்துப் பரவசப்படுவோரைப் பார்க்க வேண்டிய பரிதாப நிலைக்கு உள்ளாகியுள்ளோம்.  சுற்றுவட்டாரத்தில் கற்களே இல்லை என்ற நிலையில், டன் கணக்கில் கற்களைச் சேகரித்து நூற்றுக்கணக்கில் கலைஞர்களைத் திரட்டி, ஓர் அதிசயம் எழுப்பிய ராஜராஜன் தன் பெயரை சில கல்வெட்டுகளில் மட்டுமே செதுக்கி வைத்திருக்கிறார் என்றால் பேர் ஆசை மீது பேராசை இல்லாத அவரைத்தான் என்ன சொல்லிப் பாராட்டுவது?  தமிழ் மீதான பற்று, இடைவிடாது நாடுகளை வென்றது மட்டுமல்ல, கரையான் அரித்த கன்னித் தமிழ் ஏடுகளைத் தேடி சமயத்துக்குச் செய்த தொண்டு என பல விதங்களில் மக்கள் மனங்களில் கலையாத புகழுடன் இன்றும் நிற்கிறார் ராஜராஜன். ஆனால், அந்தச் சோழச் சக்கரவர்த்தியின் மனதிலோ எப்போதும் "கலைக்கும்' ஒரு திட்டமிருந்திருக்கிறது.  சமய சந்தர்ப்பத்துக்குத் தக்கவாறு கூட்டணி வைத்துக்கொண்டு அடுத்தவர் ஆட்சியைக் கலைக்கும் திட்டமல்ல; கஜானாவை நிரப்ப வேண்டும் என்பதற்காக கள்ளுக்கும் மதுவுக்கும் நாட்டில் இடம் கொடுத்து, இளைஞர்கள் உள்பட குடிமக்களை குடிமகன்களாக்கி, அவர்களின் ஆறாவது அறிவையும், குடும்பத்தினரின் நிம்மதியையும், அமைதியையும் குலைக்கும் திட்டமல்ல.  இடைத்தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக எந்தப் பார்முலாவைப் பயன்படுத்தியாவது வாக்காளர்களின் உள்ளத்தைக் கலைக்கும் திட்டமல்ல. வழக்குகளைக் காட்டி மிரட்டியோ, கரன்சிக் கட்டுகளைக் காட்டி விலைபேசியோ எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை இழுத்து, கட்சிகளை பல துண்டுகளாக்கிக் கலைக்கும் திட்டமுமல்ல.  அது, இப்படி ஓர் அற்புதம் உண்டா என, உலகோர் வியந்துவியந்து போற்றும் வண்ணம் உயர் கோபுரத்துடன் கூடிய உன்னதத்தைப் படைத்து, தானே கட்டடக் "கலைக்கும்' தலைவன் என காண்போரைச் சொல்லச் செய்யும் வண்ணம் செய்யும் திட்டம். அந்தக் கலைக்கோயிலால் காலாகாலத்துக்கும் தன் பெயரை நிலைக்கும்வண்ணம் செய்யும் திட்டம்.  எவ்வித நவீன அறிவியலின் வாடையும் எட்டியே பார்த்திராத அந்தக் காலத்தில், கோபுரத்தின் நிழல்கூட நிலத்தில் விழாமல் பெருவுடையார் கோயிலை நேர்த்தியாகக் கட்டிவைத்தார் ராஜராஜன்.  அறிவியல் முன்னேற்றத்தின் அத்தனை அம்சங்களும் நாய்க்குட்டியாய் வாலாட்டிக் கிடக்கும் இக் காலத்தில், நம் ஆட்சியாளர்கள் பாலம் கட்டினால், பயன்பாட்டுக்கு வரும் முன்பே அல்லவா அது சரிந்து விழுந்து விடுகிறது!  நடப்பது மன்னராட்சிக் காலம் என்றபோதும், எதிலும் தன் வாரிசுகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் உண்மையான மக்களாட்சியைத் திறம்பட நடத்தியவர் ராஜராஜன் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.  மன்னராட்சி முடிந்து மக்களாட்சி நடக்கும் காலம் இது. என்றாலும், இது மன்னராட்சிக் காலமோ என நினைக்கவைக்கும் விதத்தில் எங்கும், எதிலும் வாரிசுகளின் ஆதிக்கத்துக்கே வழிசெய்து கொடுக்கும் நம் இன்றைய ஆட்சியாளர்களின் மக்களாட்சித் தத்துவத்தை என்ன சொல்வது?  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ராஜராஜன் சிங்கமென சிறப்பாய் படை நடத்திச் சென்று சிங்களரை அடிபணியச் செய்து சாதனை படைத்திருக்கிறார் என வரலாறு தெரிவிக்கிறது. இடைப்பட்ட இந்தக் காலத்தில்தான் தமிழனின் நிலைமை எந்த அளவுக்குப் பரிதாபமானதாக மாறிவிட்டது?  ராஜராஜனின் கல்லறை எங்கிருக்கிறது என அறிய முடியாமல் போனதுபோலவே, அந்த மறத் தமிழனின் வீரமும், ஈரமும்கூட இன்று போனஇடம் தெரியவில்லை. "சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி' என்ற பாரதியின் வரிகளுக்கு உதாரணம் கூறுமளவுக்கு அல்லவா தமிழினம் மாறிவிட்டது?  அண்டை நாட்டில் தன் சொந்தங்கள் ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டதைக் கண்டிக்காதாது மட்டுமல்ல, அந் நாட்டின் தலைவரை இங்கு வரவழைத்து பல்வேறு வகைகளில் கெüரவப்படுத்தும் செயலுக்கு சிறு எதிர்ப்புக்கூட காட்டாத இன, மொழிப்பற்றை எந்த வகையில் சேர்ப்பது?  சிங்களத்தை வென்ற ராஜராஜன் எங்கே, சிங்களத்தில் தமிழர்களை வீழ்த்த ஆவேசம் கொண்டு நின்றோருக்கு அடிபணிந்து தன் இனமாம் தமிழினம் அழிய துணை நின்ற இவர்கள் எங்கே!  சிறந்த நிர்வாகம், பாரபட்சமற்ற அணுகுமுறை, ஒளிவுமறைவற்ற ஆட்சி, கலையுள்ளம், சமயப் பொதுநிலை என எந்த வகையில், எப்படிப் பார்த்தாலும் ராஜராஜனுக்கு நிகர் ராஜராஜனே!  
கருத்துக்கள்

கட்டுரையாளர் நன்கு எழுதியுள்ளார். கடைசி 3 பத்திகளும் தடித்த எழுத்தில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். இனப்பற்றுடன் எழுதியுள்ள கட்டுரையில் பார்முலா, கரன்சி முதலான அயற்சொல் எதற்கு? இக்கட்டுரை நூல்வடிவம் பெறும் எனில் திருத்தி எழுதுக. இனி வரும் கட்டுரைகளில் அயற் சொற்கள் இன்றி எழுதுக. மொழிப்பற்றைக் குறிப்பிடுபவருக்கே மொழிப்பற்று இல்லையெனில் வேறு யாரிடம்தான் மொழிப்பற்றை எதிர்பார்க்க இயலும்?
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/1/2010 2:46:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

சனி, 25 செப்டம்பர், 2010

"பெரிய கோயிலை கட்டியது யார்?'

தஞ்சாவூர், செப். 24: தஞ்சை பெரிய கோயிலைக் கட்டியது யார் என்று முன்பு நிலவிய பல்வேறு உண்மைக்குப் புறம்பான கருத்துகளுக்கு துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கமளித்தார்.தஞ்சை பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 'இந்தியப் பெருமைக்குத் தஞ்சையின் பங்களிப்பு' என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை ஆய்வரங்கம் நடைபெற்றது.ஆய்வரங்கத்தைத் தொடக்கிவைத்து மு.க. ஸ்டாலின் பேசியது:நாம், நம்மவர், நம்முடையவை என்ற உணர்வுகள் குறைவதால், நம்முடைய உரிமைகளை நமக்கு உரிமையுள்ள உடைமைகளையெல்லாம் இழந்துவிடுகிறோம். மறந்துவிடுகிறோம் என்பதற்கு இந்தப் பெரிய கோயில் தொடர்பான ஒரு செய்தியே சான்றாக அமைந்துள்ளது.இந்தப் பிரம்மாண்ட பெரிய கோயிலைக் கட்டியது யார் என்பது குறித்து பல்வேறு கதைகள் கூறப்பட்டுள்ளன. கிருமி கண்ட சோழன் என்னும் கரிகாலனால் கட்டப்பட்டது என்றும், அவனுக்கு இருந்த குட்ட நோய் இங்குள்ள சிவகங்கை குளத்தில் நீராடியதால் நீங்கியது என்றும், ப்ரஹதீஸ்வர மஹாத்மியம் என்னும் வடமொழிப் புராணமும், தஞ்சாபுரி மஹாத்மியம் என்னும் மராட்டிய மொழி நூலும் கூறியுள்ளன.ஜி.யு. போப்கூட, காடுவெட்டிச் சோழன் என்பவர் கட்டியதாக எழுதுகிறார். இதுகுறித்து மேலும் சிலர் இந்தப் பெரிய கோயில் குறித்த உண்மைக்குப் புறம்பான பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.இக் கோயில் கண்ணில்படாமல் மறைக்கப்படக் கூடிய அளவுக்குச் சிறியதல்ல. மறக்கப்படக் கூடிய சாதாரணத் தோற்றம் கொண்டதும் அல்ல. இத் திருக்கோயில் கட்டப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்கள் இதைக் கட்டியது யார் என அறிந்திருப்பார்கள். அவர்களால் பிரம்மாண்டமான இத் திருக்கோயில் பற்றிய செய்திகள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குச் செவிவழியாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கும். என்ன காரணத்தாலோ அது தடைப்பட்டுவிட்டது.இந்நிலையில், 1886-ம் ஆண்டில், அந்த நாளைய சென்னை ஆங்கிலேய அரசாங்கம், ஹூல்ஸ் என்ற ஜெர்மன் அறிஞரைக் கல்வெட்டு ஆய்வாளராக நியமித்தது. அவர் பெரிய கோயில் கல்வெட்டுகளைப் படியெடுத்து படித்து, இதைக் கட்டியவர் ராஜராஜனே என முதல் முதலாக கூறினார். என்றாலும் 1892-ல் வெங்கையா என்பவரால் பதிப்பிக்கப் பெற்ற தென்னிந்தியக் கல்வெட்டுகள் என்னும் நூலின் இரண்டாம் தொகுதியில் உள்ள முதல் கல்வெட்டில், "பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீ ராஜராஜீஸ்வரம்' என்னும் தொடர்தான் இக் கோயிலைக் கட்டியவர் மாமன்னர் ராஜராஜன்தான் என்பதைச் சற்றும் ஐயமின்றி உறுதி செய்திருக்கிறது என்றார் மு.க. ஸ்டாலின்.
கருத்துக்கள்

குறிப்பை எடுத்துத்தந்தவர்க்குப் பாராட்டுகள். கருத்தரங்கத்தைக் கருத்தரங்கமாக ஆக்கியுள்ள துணை முதல்வருக்கும் பாராட்டுகள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By ilakkuvanar thiruvalluvan
9/25/2010 2:47:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

ஆயிரமாவது ஆண்டில் தஞ்சைப் பெரிய கோயில்



உலகப்பாரம்பரியச் சின்னமாகப் புகழ்பெற்று விளங்கும் தஞ்சைப் பெரிய கோயிலைக் காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்துசெல்கின்றனர். இச்சுற்றுலா தலத்துக்கு இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், அயல்நாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான அயல்நாட்டினர் வருவதால் நம் நாட்டின் அன்னியச் செலாவணி வருவாய் அதிகரிக்கிறது. நம் நாட்டினரும் அயல்நாட்டினரும் இக்கோயிலின் அருமை பெருமைகளை அறிந்துகொள்ள தொல்லியல்துறை தகுந்த ஏற்பாடுகளைச் செய்து சுற்றுலாவை ஊக்குவிக்க வேண்டும்.பெரியகோயில் வளாகத்துக்குள் சுமார் 200 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய ஒரு திரை அரங்கம் ஏற்படுத்தலாம். இவ்வரங்கு குளிர்சாதன வசதியுடையதாக இருந்தால் மிகவும் நன்று.இக்கோயிலைப்பற்றிய செய்திகளையும் கதைகளையும், சிற்பங்களையும், ஓவியங்களையும், குறுந்தகடுகள் மூலம் பெரிய திரையில் ஒளிபரப்பலாம். குறுந்தகடுகள் 15 நிமிடங்கள், 30 நிமிடங்கள், ஒரு மணி நேரம் காணக்கூடியதாக இருத்தல் நன்று.இதில் முக்கியமாகப் பலமொழிகளில் இக்குறுந்தகடுகள் இருத்தல் மிகமிக அவசியம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, இந்தி, ஒரியா, உருது, ஆங்கிலம், பிரெஞ்சு, டச்சு, இத்தாலி, ஜெர்மனி, போர்ச்சுகீசு போன்ற மொழிகளில் இருக்கலாம்.÷இக்கோயிலைக் காண ஏழைகளும், செல்வந்தர்களும், படித்தவர்களும், படிக்காதவர்களும், வரலாற்று ஆராய்ச்சியாளர்களும், மாணவர்களும் வருகின்றனர்.÷இந்திய மாநிலங்களிலிருந்தும், அயல்நாடுகளிலிருந்தும், வருபவர்கள் பலருக்குத் தமிழோ, ஆங்கிலமோ தெரிய வாய்ப்பில்லை. ஆதலால் இங்கு தமிழிலோ, ஆங்கிலத்திலோ எழுதிவைத்துள்ள செய்திகளைப் படித்து அறிந்து கொள்ள முடியாது. எனவே, இக்கோயிலைப் பற்றிய செய்திகளையும், கதைகளையும் தங்கள் தாய்மொழியில் கேட்டும், கோயிலின் அழகையும், சிற்பங்களையும், ஓவியங்களையும் வெண்திரையில் பார்த்தும் மகிழ்வார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை. திரையில் ஒரு மொழியில் செய்திகளைச் சொல்லும்போது அத்திரையின் அடிப்பகுதியில், அடிக்குறிப்பின் மூலம் வேறு ஒரு மொழியில் அதாவது தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ செய்திகளைத் தெரியப்படுத்தலாம். குறுந்தகடுகளின் நேரத்துக்கேற்றபடியும், அரங்கின் பராமரிப்புக்கேற்றபடியும் பார்வைக்கட்டணம் நிர்ணயிக்கலாம். குளிர்சாதன வசதியுடன் காட்டப்படும் காட்சிகளுக்கு அதிகக் கட்டணம் வசூலிக்கலாம். பொதுவாக லாப நோக்கமில்லாமலும், பராமரிக்கும் செலவுக்கேற்றவாரும் கட்டணம் வசூலித்தல் நன்று. சுற்றுலா பயணிகள் தங்கள் பொருளாதார நிலைக்கேற்றவாரும், காலநிலைக்கேற்றவாரும் குறுந்தகடுகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். அயல்நாட்டினரும், சுற்றுலா ஆர்வமுடையவர்களும், ஆராய்ச்சியாளர்களும், ஆசிரியர்களும் ஒரு மணிநேர குறுந்தகட்டினைக் காண வாய்ப்புள்ளது. தனிப்பேருந்துகள் மூலம் வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக முன்கூட்டியே முன்பதிவு செய்துகொள்ள அனுமதிக்கலாம். பள்ளி, கல்லூரிகளிலிருந்து வரும் மாணவர்களுக்குச் சலுகைக் கட்டணத்தில் இவ்வரங்கில் காட்சிகளைக் காண்பிக்கலாம். குறுந்தகடுகளில் கூறப்படும் முக்கிய செய்திகளையும், காட்டப்படுகின்ற ஒளிப்பதிவுகளையும், வல்லுநர்களைக் கொண்டு இறுதிசெய்யலாம். காட்சிகளைக் காண்பிக்கும்போது, வாத்தியங்களின் இசையைப் பயன்படுத்துதல் நலமாக இருக்கும். மேலும் கீழ்க்கண்ட செய்திகளைப் பதிவுசெய்தல் நன்று.சோழப்பேரரசின் தலைநகரான தஞ்சை மாநகரில் ஒரு பெரிய கோயிலை அருண்மொழிவர்மன் என்னும் ராஜராஜசோழன் கட்டினான். இக்கோயில் வியத்தகு தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டதால் அவனுடைய புகழ் உலகெங்கும் இன்றும் பரவியிருக்கிறது.பிரகதீஸ்வரர் ஆலயம் என்று அழைக்கப்படும் இக்கோயில், 793 அடி நீளம், 397 அடி அகலம் கொண்டது. நடுவிமானம் 216 அடி உயரத்தில் உள்ளது. உச்சியில் உள்ள கருங்கல்லின் எடை 80 டன் ஆகும். இவ்வாலயக் கட்டுமானப்பணி முடிய 4 ஆண்டுகளுக்கு மேலாயிற்று. கி.பி. 1010 -ம் ஆண்டில் குடமுழுக்கு செய்யப்பட்டதால் கி.பி. 2010 -ம் ஆண்டில் ஆயிரமாவது ஆண்டுவிழா காண்கிறது. தஞ்சை மாவட்டத்தில் மலைகளைக் காண முடியாது. ஆதலால் அருகில் உள்ள மாவட்டத்தில் இருந்தே கருங்கற்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இக்காலத்தில் உள்ளதுபோல் அக்காலத்தில் போக்குவரத்து வசதிகள் இல்லை. ஆகையால் மிகவும் இன்னலுற்றே இக்கோயில் திருப்பணி சிறப்பாகச் செய்து முடிக்கப்பட்டுள்ளது. கோயிலில் நுழைந்தவுடன் நம் கண்முன்னே காணும் மிகப்பெரிய நந்தி காண்போரைக் கவரும் வகையில் உள்ளது. சிவபெருமானின் வாகனமாகக் கருதப்படும் இந்நந்தி, ஒரே கல்லால் செதுக்கப்பட்டுள்ளது சிறப்பாகும். இது 19 1/2 அடி நீளமும், 8 1/4 அடி அகலமும், 12 அடி உயரமும் கொண்டுள்ளது. இந்தியாவில் ஒரே கல்லைக்கொண்டு செதுக்கப்பட்ட பெரிய நந்தி இதுவேயாகும். அக்காலத்தில் ராஜராஜன் இலங்கைமீது படையெடுத்து அந்நாட்டின் ஒரு பகுதியை தன் ஆட்சியின்கீழ் கொண்டு வந்துள்ளான். தன் ஆட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ள சில கிராமங்களை தஞ்சைக் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளான். இச்செய்தி அங்குள்ள ஒரு கோயில் கல்வெட்டுமூலம் தெரியவருகிறது. தஞ்சைக் கோயில் கல்வெட்டுகள் மூலம் ராஜராஜனின் மேலைச்சாளுக்கிய படையெடுப்புகளை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. இவ்வாலயத்திற்கு ராஜராஜன், அவனைப் பின்தொடர்ந்த அரசர்கள், உறவினர்கள், அரசு அதிகாரிகள் அளித்த அறக்கட்டளைகள் பற்றியும், நன்கொடைகள் பற்றியும் தெரிந்துகொள்ள முடிகிறது.மற்றொரு கல்வெட்டின் மூலம் ""ராஜராஜேச்சுவர நாடகம்'' இருந்ததாகத் தெரியவருகிறது. விழாக்காலங்களில் இந்நாடகம் தமிழ்மொழியில் நடத்தப்பட்டது. ஆண்டுதோறும் நாடகம் நடத்துவதற்கு 120 கலம் நெல் ராஜேந்திர சோழனால் வழங்கப்பட்டுள்ளது. இந்நாடகம் இப்போது கிடைக்கப் பெறவில்லை. ஆலயங்களின் கல்வெட்டுகளும், செப்பேடுகளும் எவ்வாறு சோழர்களின் சமூக, அரசியல், பொருளாதார வாழ்க்கையை விவரிக்கின்றன என்பதைத் தெரியப்படுத்தலாம்.பெரியகோயிலில் உள்ள கருவறையைச் சுற்றிக் காணப்படும் ஓவியங்களையும், ஓவியங்களில் காணப்படும் கதைகளையும் கூறலாம். காலத்தால் அழியாத ஓவியங்களை அக்காலத்தில் மூலிகைகள், பூக்கள், வேர்கள், பட்டைகள், முட்டை, வச்சிரம் போன்ற பொருள்களைப் பயன்படுத்தி வரைந்துள்ளனர்.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நம் நாட்டில் சிறப்புற்று விளங்கும் நடனக்கலை பற்றிய விளக்கங்கள் சிற்பவடிவில் இக்கோயிலில் செதுக்கப்பட்டுள்ளன. மேலும் இங்கு சுமார் 400 நடன மங்கையர்களுக்குமேல் பணிபுரிந்துள்ளனர் என்ற செய்தி வியக்கத்தக்க ஒன்றாகும். தஞ்சை கோயிலில் 13 அடி உயரமுள்ள லிங்கமும், நந்தியும் மிகப்பெரிய உருவில் காட்சியளிப்பதால் இக்கோயிலை "பெருவுடையார்கோயில்' என்று அழைக்கின்றனர். இப்பெரிய சிவன்கோயிலைக் கட்டியதால் ராஜராஜன் சிவபாதசேகரன் என்னும் பட்டப்பெயரால் அழைக்கப்படுகிறான். இந்தச் சிவன்கோயிலில் ஒரு சிறிய புத்தர்சிலை செதுக்கப்பட்டுள்ளது விந்தையாக இருக்கிறது. மேலும் நாகப்பட்டினத்தில் அயல்நாட்டு அரசனால் கட்டப்பட்ட புத்தர் கோயிலுக்கு ராஜராஜன் ஆனைமங்கலம் என்னும் ஊரை தானமாக வழங்கிய செய்தியை செப்பேட்டில் செதுக்கியுள்ளான். மேலும் திருமாலுக்கு மணலூரில் ஒரு வைணவத் திருக்கோயிலும் எடுத்துள்ளான். இதிலிருந்து இவ்வரசனின் சமயப்பொறை தெளிவாகத் தெரிகிறது. ராஜராஜனுக்குப்பின் அரசாண்ட அவனது மைந்தன் ராஜேந்திரன் தஞ்சைக்கோயிலைப் போலவே ஜெயங்கொண்ட சோழபுரத்தில் ஒரு சிவன்கோயிலைக் கட்டியுள்ளான். இத்தலமும் தமிழகத்தில் ஒரு சுற்றுலா மையமாகத் திகழ்கிறது. தஞ்சைப் பெரியகோயில் கல்வெட்டுகளும், சிற்பங்களும், கலைக்கூடங்களும், கட்டடங்களும், ஓவியங்களும், செப்புப்படிமங்களும் சோழர்களின் இயல், இசை, நாடகம், கலை, பண்பாடு, கலாசாரம், நாகரிகம் போன்றவற்றின் பெருமைகளையும், பழமையையும் பறைசாற்றுகின்றன. ஓராயிரமாண்டு பழமையான தஞ்சை பெரியகோயிலின் புகழை இத்தரணி மக்களுக்குத் தெரியப்படுத்துவது அரசின் கடமையாகும்.கட்டுரையாளர்: கல்லூரி முதல்வர் (ஓய்வு)
கருத்துக்கள்

தமிழ் வேந்தரால் கட்டப்பெற்ற தமிழர்களின் கோயில் தமிழ்நாட்டு அரசின் கட்டுப்பாட்டில் இல்லையே! தொடர்பான குழுவும் தமிழர் தலைமையில் இல்லையே!

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/19/2010 3:57:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

சனி, 24 அக்டோபர், 2009

தஞ்சை பெரிய கோயில் உரிமையை மீட்கும் வரை
போராட்டம் தொடரும்



தஞ்சாவூர், அக். 22: தஞ்சை பெரிய கோயில் உரிமையை மீட்கும் வரை போராட்டம் தொடரும் என்றார் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலருமான பெ. மணியரசன். தஞ்சையில் அவர் அளித்த பேட்டி: இந்து அறநிலைய ஆட்சித் துறை விதிகளுக்கு முரணாக, பாபாஜி பான்ஸ்லே தஞ்சைப் பெரிய கோயில் உள்ளிட்ட 88 கோயில்களுக்குப் பரம்பரை அறங்காவலராகத் தொடர்கிறார். இவரோ அல்லது இவருடைய மன்னரோ அக் கோயில்களைக் கட்டவில்லை. அக் கோயில்களுக்கு இவர்கள் சொத்து எதையும் எழுதி வைக்கவில்லை. அக் கோயில்களின் அன்றாட வழிபாடுகளுக்கும், ஊழியர்களின் ஊதியத்துக்கும் இவர்கள் சொந்தப் பணத்தை செலவழிக்கவில்லை. மேலும், இக் கோயில்களைக் கட்டிய சோழப் பேரரசர்கள் உள்ளிட்ட மற்ற மன்னர்களுக்கும் இவர்கள் வாரிசு கிடையாது. இந்நிலையில், மிகுந்த வருமானம் வரக் கூடிய தஞ்சைப் பெரிய கோயில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில், கோடியம்மன் கோயில், தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில் ஆகியவற்றில் இருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு இக் கோயில்களை மேம்படுத்தி, வசதிகளைப் பெருக்கி சுற்றுலா மையங்களாக பான்ஸ்லே மேம்படுத்தவில்லை. இந்த வருமானத்தை இப்பகுதி மக்களின் கல்வி, சுகாதாரத்திற்கும் பயன்படுத்தவில்லை. சரஸ்வதி பண்டாரம் என்ற பெயரில் சோழ மன்னர்களால் உருவாக்கப்பட்டு, நாயக்க அரசர்களால் வளர்க்கப்பட்ட நூலகம், சரபோஜி காலத்தில் சரஸ்வதி மஹால் என்ற பெயரில் விரிவுப்படுத்தப்பட்டது. இந்த நூலகம் 1918 ஆம் ஆண்டிலிருந்து பிரிட்டிஷார் நிர்வாகத்தால் முழுவதும் அரசுடைமையாக்கப்பட்டு, பொது நூலகமாக்கப்பட்டது. சங்கங்கள் பதிவுச் சட்டப்படி இந்த நூலகம் பதிவு செய்யப்பட்டது. இந்த நூலகத்திற்கும் பான்ஸ்லே குடும்பத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஆனால், பான்ஸ்லேயின் உறவினரான சிவாஜி என்பவர் நூலக ஆட்சிக் குழுவில் வாழ்நாள் உறுப்பினராக அண்மையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நூலக ஆட்சிக் குழுவின் தலைவர் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எந்த விதியின் கீழ் சிவாஜியை வாழ்நாள் உறுப்பினராக சேர்த்தார் என்று தெரியவில்லை. நூலகத்துக்கு கடந்த 15 ஆண்டுகளாக இயக்குநர் பதவி நிரப்பப்படவில்லை. மேலும், கடந்த 15 ஆண்டுகளாக தெலுங்கு, மராத்தி பண்டிதர்கள் பணியிடங்களும், ஐந்து ஆண்டுகளாக தமிழ்ப் பண்டிதர் பணியிடமும் காலியாகவுள்ளன. நூலகத்துக்கு விரைவில் இயக்குநரை நியமிக்க வேண்டும். சிவாஜியை நூலக ஆட்சிக் குழு வாழ்நாள் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். பான்ஸ்லேவை அரண்மனையை விட்டு வெளியேற்றுதல் உள்ளிட்ட உரிமை மீட்புக் குழுவின் பேரணி, ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை (அக். 24) நடைபெறுகிறது. இது தொடர்பான சுவர் விளம்பரங்களை அழிக்க துணை நின்ற மாவட்ட ஆட்சியரை எதிர்த்தும் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்றார் மணியரசன்.
கருத்துக்கள்

..IS THERE IS ANYTHING LEFT IN TAMIL NADU FOR INDIAN TAMIL SLAVES..YOU LOST TMIL AND SPEAK TAMINGLISH..YOU LOST YOUR SELF RESPECT,DIGNITY,BACKBONE...YOU ARE NOTHING LIVING CORPSES LIKE YOUR KARUNANIDHI...INDIAN TAMILS ARE SHAME FOR ENTIRE TAMIL RACE....I WONDER EVEN IN TANJAVUR ANY ONE KNOW ABOUT GREAT RAJAJA RAJA CHOLAN...

By KOOPU
10/24/2009 12:43:00 AM

The temple administration of chidambaram temple was immmediately taken over by TN Govt because it was administered by Brahmins. Will the govt. come now and take action. The dravidian govt. has no belief in GOD but the govt. wants its revenue - ok if any asks whether the govt. does provide facilities to the devotees no - all the money are swindled. If the govt. is true secular it should leave the administration of the the temple to the committee consisting of members of all castes of hindu religion. will the govt consider this . or will the hindu society fight for this.

By SAKTHIVEL
10/23/2009 8:12:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *