செவ்வாய், 5 அக்டோபர், 2010

ராஜராஜ சோழன் குறித்து அகழ்வாராய்ச்சி நடத்தாதது ஏன்? பாஜக

சென்னை, அக். 4: ராஜராஜ சோழனின் நினைவிடத்தை உறுதிப்படுத்த இதுவரை அகழ்வாராய்ச்சி நடத்தாதது ஏன் என்று முதல்வர் கருணாநிதிக்கு தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.  இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:  அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இனி நடப்பவை நல்லவையாக இருக்க வேண்டும் என்று நாட்டு மக்கள் அனைவரும் விரும்புகின்றனர். ஆனால், தமிழக முதல்வர் கருணாநிதியும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங்கும் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.  ராமஜென்ம பூமி பிரச்னை உச்சத்தில் இருந்தபோது, அயோத்தியில் தான் ராமன் பிறந்தார் என்பதற்கு என்ன ஆதாரம்? என்று கேலி பேசி மத உணர்வுகளைத் தூண்டிவிட்டதும் இவர்கள்தான். ராமர் பாலம் பிரச்னை எழுந்த போது ராமர் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தார் என்று முதல்வர் கருணாநிதி கடுஞ்சொல் உதிர்த்தார்.  அயோத்தி வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன்பு நீதிமன்றத் தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும் என்று வேதம் ஓதியவர், இப்போது மத உணர்வுகளைத் தூண்டும் விதத்தில் எழுதவும், பேசவும் தொடங்கியுள்ளார்.  ""அயோத்தியில்தான் ராமர் பிறந்தார் என்று நீதிமன்றம் அறுதியிட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.  ஆனால், ராஜராஜன் மறைந்த விதத்தையோ, அவரது கல்லறை அமைந்த இடத்தையோ நம்மால் இன்னமும் அறிய முடியவில்லை'' என்று கருணாநிதி வருந்தியுள்ளார். இது வாழைப்பழத்தில் ஊசி இறக்கும் வேலை என்பதை எல்லோரும் நன்கறிவார்கள்.  5-வது முறையாக முதல்வராக இருக்கும் கருணாநிதி, ராஜராஜ சோழனின் நினைவிடத்தை உறுதிப்படுத்த ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? ராஜராஜனின் ஆட்சிச் சிறப்புகள், நினைவுச் சின்னங்கள் குறித்து அகழ்வாராய்ச்சிகள் நடத்தாதது யார் குற்றம்? நடத்தக் கூடாது என்று யாராவது தடுத்தார்களா?  தான் செய்ய வேண்டிய கடமையைச் செய்யாமல் யார் யார் மீதே வேதனையைத் திருப்பி விடுவது ஏன்? இனியாவது தமிழகத்தின் பழம்பெருமையைக் காக்க கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொன். ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
கருத்துக்கள்

சரியான கேள்விதான். ஆனால் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். பெரிய கோயில் மத்திய அரசின் தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவேதான், அங்கு அக் கோயிலைக் கட்டிய இராசராசன் திருவுருவப் படிமைத்தைக் கூடத் தமிழக அரசால் நிறுவ இயலாமல் வெளியே அமைத்துள்ளது. முக்கடலில் மறைந்துள்ள குமரிக்கண்டச் சிறப்பை வெளிப்படுத்தும் அகழ்வாராய்ச்சிக்குச் சோவியத்து நாடு முன்வந்த பொழுது நேருவின் அரசு மறுத்து விட்டது. இந்த அடிப்படையில் கலைஞரின் கேள்விகள் நியாயமானவையே. எனினும் அதற்கான முயற்சிகளில் கலைஞரும் இறங்குவதற்கு உங்கள் வினாக்கள் உதவினால் நன்று. ஆரியக் கற்பனைக்குத் துணை நிற்கும் மத்திய அரசு தமிழக வரலாற்று உண்மைகளைப் புதைக்கவே முயல்கிறது என்பதைப் பொன். இரா. உணர வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/5/2010 5:59:00 AM
ஹிந்து ஹிந்து ஹிந்துஸ்தான் முஸ்லிம் செல்லு பாகிஸ்தான் என்று வெறி கூச்சல் போட்டு கும்பல் ஒன்று வருகிறது. கரசேவை என்று சொல்லி கடப்பாறைய தூக்கிட்டு கல்லு குடித்த குரங்கு போல கண்டதையும் உடைக்குது. அயோத்தியில் பாபர்ரோட மசூதிய இடிக்கிறான் கேட்ட பரதேசி ராமனுக்கு கோவில் கேட்ட என்கிறான். அக்டோபர் 30 இல் அப்பாவிகள் பலபேர யமலோகம் அனுப்பிவிட்டு காரசேவ என்கிறான். ஆர்.எஸ்.எஸ்., பி. ஜே. பி. , விஸ்வஹிந்து பரிசத்து இந்த அனுமாரு கூடத்துக்கு விதவிதமா பெரிருக்கு. இலங்கையவே எரித்தவன் அந்த (பரதேசி ராமன்) இராமாயண குரங்கு. இப்ப இந்தியாவையே அழிக்க பாக்குது இந்த அத்வானி குரங்கு. இந்த இராமாயண குரங்கு கூட மலையத்தானே பெயர்த்தது, இந்த அத்வானி குரங்கு எல்லாம் மசூதியா இடிக்குது. மசூதி உள்ள இடம்தானே ராமன் பிறந்த இடம் என்றால் நாங்க ஒன்னு கேட்போம் நீ பதில் சொல்ல முடியூமா? தசரதனுக்கு பத்தாயிரம் பொண்டாட்டிகள் உண்டாமே அவர்கள் வாழ்ந்து, செத்து போன இடங்கள் எங்கே என்று சொல்லு பாப்போம்.
By say
10/5/2010 5:20:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக