bharathidasan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
bharathidasan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 2 பிப்ரவரி, 2012

Saraswathy daughter of Paventhar Bharathidasan expired : பாவேந்தர் பாரதிதாசன் மகள் சரசுவதி மறைவு

பாவேந்தர் பாரதிதாசன் மகள் சரசுவதி மறைவுக்கு மலர்வணக்கம்


சரசுவதி கண்ணப்பன்(பாவேந்தரின் மூத்தமகள்,22 அகவையில் எடுக்கப்பெற்ற படம்)

பாவேந்தரின் மூத்த மகள் சரசுவதி அவர்கள் தம் 92 ஆம் அகவையில் கரூரில் 30.01.2012 இயற்கை எய்தினார், அவரின் மறைவுக்குப் புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் மலர் வணக்க நிகழ்வு நடைபெற்றது. பாவேந்தரின் மகன் திரு.மன்னர்மன்னன் அவர்கள் தலைமையில் புதுவைத் தமிழறிஞர்கள், பாவலர்கள், பெரியோர்கள் பலர் கலந்துகொண்டு மலர்வணக்கம் செய்தனர்.

பாவேந்தரின் குடும்பத்தின் சார்பில் மன்னர்மன்னன், பாரதி,செல்வம்,தென்னவன்,அமுதவல்லி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். புதுவைத்தமிழறிஞர்கள் பாவலர்மணி சித்தன், புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் மு.முத்து, திரு. வி.பி.சிவக்கொழுந்து, கவிஞர் கல்லாடன், புரவலர் ந.கோவிந்தசாமி,பேராசிரியர் தெ.முருகசாமி, நந்திவர்மன், வழகறிஞர் கோவிந்தராசன், பேராசிரியர் க.இளமதிசானகிராமன், முனைவர் மு.இளங்கோவன், முனைவர் கனகராசு, முனைவர் செங்கமலத் தாயார், பாவலர் மாநி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். மன்னர் மன்னன் ஐயா தம் தமக்கையாரின் சிறப்பினையும் அக்காலத்தில் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற திருமணச் சிறப்பு நிகழ்வுகளையும் நினைவுகூர்ந்தார்.


மன்னர்மன்னன், மு.முத்து, பாரதி,மு.இளங்கோவன், மதனகல்யாணி உள்ளிட்டோர்


மன்னர் மன்னன்,மு.முத்து,புரவலர் ந.கோவிந்தசாமி,மாநி உள்ளிட்டோர்


வி.பி.சிவக்கொழுந்து, மு.முத்து,கோ.பாரதி, வழக்கறிஞர் கோவிந்தராசு, மு.இ.

புதன், 12 மே, 2010

தமிழில் பெயரிடப்படும் படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு தொடரும்: அரசு அறிவிப்பு



சென்னை, மே 11: தமிழில் பெயரிடப்படும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரிவிலக்கு தொடர்ந்து அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அந்தத் துறையின் அமைச்சர் பரிதி இளம்வழுதி வெளியிட்ட அறிவிப்புகள்: எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர்களின் பயிற்சிக்கென மாறிவரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப அதிக துல்லியம் வாய்ந்த விடியோ படப்பிடிப்புக் கருவிகள், அதனுடன் நவீன விடியோ படத்தொகுப்புக் கருவிகள் மற்றும் நவீன துணைக் கருவிகள் ரூ. 50 லட்சம் செலவில் வாங்கி வழங்கப்படும். திரைப்படத் தொழிலுக்குத் தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் வகையில், தமிழில் பெயரிடப்படும் திரைப்படங்களுக்குக் கேளிக்கை வரிவிலக்கு தொடர்ந்து அளிக்கப்படும் என்றார் பரிதி இளம்வழுதி.
கருத்துக்கள்

முதல்வர் ஆளும் கட்சித் தலைவர் என்ற முறையில் தன் கட்சியினர் நடத்தும் அனைத்து நிறுவனங்கள் பெயர்களையும் தமிழில் வைக்க அறிவுறுத்த வேண்டும்; தங்கள் கட்சியினர் எடுக்கும் திரைப்படங்களின்அறிமுகக் கலைஞர்கள் பெயர்கள், கதைப் பாத்திரங்களின் பெயர்கள்,படப் பணியாளர்கள் பெயர்ப்பட்டியல் ஆகியவற்றைத் தமிழில்அமைக்கவும் தமிழ் முதலெழுத்து டனே பெயர்களைக் குறிக்க வேண்டுமென்றும் அறிவுரை வழங்கி நிறைவேற்ற வேண்டும். கட்சியினர் எனக் குறிக்கும் பொழுது அவரது குடுமபததினரையும் உள்ளடக்கும் என்பதையும் உணர வேண்டும். தமிழாய்ந்த தமிழன் முதலமைச்சாய் வந்தால் தமிழ் வாழும் என்னும் பாரதிதாசன் கனவு நனவாகவில்லை. இந்த இழிநிலையைப் போக்க முதல்வர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/12/2010 3:09:00 AM

Since the CM is also from cinematic field, the concession is given at the cost of exchequer.There is absolutely no way of propagating Tamil by merely naming a movie in Tamil. Within the movie, there is nothing like promoting Tamil as a language or promoting tamil culture. How long Tamils can be cheated in the name of Tamil?

By ankandasamy
5/11/2010 10:36:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *