(திருவள்ளுவர்,உலகப்பொது நூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)
2
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின். (திருக்குறள் 17)
ஆழமும் அகலும் உள்ள பரந்து விரிந்துள்ள அளவில்லாத கடலும் தன் நீர் வளத்தில் குறைந்து போகும். எப்பொழுது? எப்படி? அக்கடலில் இருந்து நீர் மேலே சென்று மழையாகி மீண்டும் அக்கடலுக்கு நீரை வழங்காவிட்டால் கடல் தன் நீர் வளத்தில் குறையும். இதைத்தான் திருவள்ளுவர் கூறுகிறார்.
‘தடிந்து எழிலி’ என்பதன் மூலம், இடிஇடித்து மின்னி மழை பெய்வதையும் பூரித்து (முகில் பெருத்து) மழை பெய்வதையும் உரையாசிரியர்கள் விளக்குகின்றனர்.
நீர் நிலைகளில் உள்ள நீர், வெப்பத்தின் காரணமாக ஆவியாகி மேலே சென்று காற்றில் கலந்து முகிலாக உருவாகிப் பின்னர் மழையாக மாறுகிறது என்பதுதான் அறிவியல் உண்மை. அவ்வாறு பெய்யும் மழை மீண்டும் கடலில் கலந்து மீண்டும் முகிலாக மாறுகிறது. இந்த நீர்ச் சுழற்சியைத்தான் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு நீரில் இருந்து எழுந்து உருவாகும் முகிலின் பெயர் ‘எழிலி’(nimbostratus). இச்சொல்லைச் சங்க இலக்கியங்களில் புலவர்கள் 33 இடங்களில் கையாண்டுள்ளனர்.
திருவள்ளுவர் தம் காலத்தில் மக்கள் நன்கறிந்த அறிவியல் உண்மையை இத்திருக்குறள் மூலம் நமக்கு விளக்குகிறார். அவ்வாறு விளக்கும் பொழுது ‘எழிலி’ என்னும் அறிவியல் கலைச்சொல்லையும் பயன்படுத்தியுள்ளார்.
திருவள்ளுவர் திருக்குறளில் இரண்டாவது அதிகாரமாக வான்சிறப்பு கூறி மழையைச் சிறப்பிக்கிறார்.
மழை இல்லையேல் உணவு இல்லை, பூசைகளும் வழிபாடுகளும் இல்லை, தானமும் தவமும் இல்லை, உயிர்கள் இல்லை, உலகமும் இல்லை என அடுக்கடுக்காகக் கூறுகிறார்.
மழை இல்லாமல் நீர்நிலைகள் மூலம் பயன்பெறலாமே! நீண்ட பரப்பிலான கடல்கள் உள்ளனவே! அவற்றின் மூலம் நீராதாரம் பெற்றுப் பயனுறலாமே எனச் சிலர் எண்ணுவர். எனவேதான், மழையின்றி நிலம் மட்டும் தன்னிலை கெடும் என எண்ணவேண்டா என்பதற்காகத்தான் கடலும் தன் தன்மை கெட்டு நீர் வளம் அற்றுப் போகும் என எச்சரிக்கிறார்.
இவ்வாறு கூறும் பொழுது, தொடக்கத்தில் தெரிவித்தவாறு மழையின் தோற்றம் குறித்த அறிவியல் உண்மையைச் சுட்டிக்காட்டுகிறார். அத்துடன் தொடக்கநிலையில் உள்ள முகிலின் பெயரான ‘எழிலி’ என்பதையும் கையாண்டுள்ளார்.
திருவள்ளுவரின் எச்சரிப்பை உணர்ந்து நாம் நீர்ச் சேமிப்பிலும் நீர்நிலைகள் காப்பிலும் மழைஆக்கத்திற்கான வழிகளிலும் கவனம் செலுத்துவோமாக.
உவா என்னும் சொல் நிலவைக் குறிக்கும். முதலில் பொதுவாக உவா என்பது முழுநிலவுநாளாகிய பௌர்ணமியையும் இருள்நிலவு நாளாகிய அமாவாசையையும் குறித்தது. பின்னர் முறையே வெள்ளுவா, காருவா என்றனர். காருவா என்பதுதான் கருத்தஉவா என்றாகி இப்பொழுது கருத்தவாவு என்று வழங்குகிறது. பல்லாயிரம் ஆண்டுகள் தொடர்ச்சியாகத் தமிழ்ச் சொற்கள் நிலைத்து வருவதற்கும் பழந்தமிழ்ச் சொற்களே மலையாளத்தில் உள்ளன என்பதற்கும் இச்சொல்லே சான்றாகும்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
"கருத்தவாவு' நாளில் குறைந்தது மழை
மூணாறு: தினமும் பெய்த பலத்த மழை, "கருத்தவாவு' நாளான நேற்று குறைந்ததால், மூணாறு பகுதி மக்கள் நிம்மதி
யடைந்தனர். கேரளாவில் ஆடி அமாவாசை தினத்தை"கருத்தவாவு' என அழைக்கின்றனர்.
இந்நாளில் பலத்த மழை பெய்யும், என்பதால், ஆடி அமாவாசை நாளில், ஆண்டுதோறும்
கேரளா அரசு விடுமுறை அளித்து வருகிறது. இந்நிலையில், ஆண்டு முழுவதும்
கேரளாவில் பெய்யும் சராசரி மழையை விட, கடந்த 2 மாதங்களில், பல மடங்கு
கூடுதலாக மழை பெய்துள்ளது. கன மழையால், நிலச்சரிவு மூலம் ஏற்பட்ட
உயிரிழப்புகள், மக்களை நடுங்கச் செய்த நிலையில், கருத்தவாவு நாளான நேற்று,
வழக்கத்துக்கு மாறாக, மழை குறைந்து வெயில் அடித்ததால், மக்கள்
நிம்மதியடைந்தனர்.
இலண்டன்: "வானிலை நிலவரத்தை முன்கூட்டியே தெரிவிப்பதில், நத்தைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன' என, லண்டன் ஆராய்ச்சியாளர்கள்
தெரிவித்துள்ளனர்.லண்டனின், யார்க் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர் ஆன்ட்ரி
கர்லோ இது குறித்து கூறியதாவது:ஒரு தாவரத்தையோ அல்லது கம்பத்தையோ நோக்கி
நத்தை நகருகிறது என்றால், நிச்சயமாக மழை வரப்போகிறது என்று அர்த்தம்.வானிலை
யில் ஏற்படும் மாறுபாடுகளை தெரிவிப்பதில் நத்தைகள் முக்கிய பங்கு
வகிக்கின்றன. மத்தியதரை கடல் நாடுகளின் பகுதிகளில் உள்ள குகைகளில்
கண்டறியப்பட்ட நத்தைகளின் ஓடுகளை பரிசோதனைக்கு எடுத்துக் கொண்டதில், அவை
பல்வேறு காலகட்டத்தில், ஈரப்பதத்துடன் இருந்தது தெரியவந்தது. இத்தாலி
மற்றும் ஸ்பெயின் நாடுகளில், விவசாயிகள் முதன் முறையாக கால்பதித்தபோது,
அங்கு, இப்போ து உள்ளது போல்,அவ்வளவு வெப்பம் மிகுந்த பகுதிகளாக இல்லை.
மாறாக, மிகவும் இதமான சூழல்தான் நிலவிவந்தது. மத்தியதரை கடல் நாடுகளின்
பெரும்பாலான பகுதிகளில், நத்தைகளின் ஓடுகளை காண முடிந்தது. நிலத்தில்
வாழும் நத்தைகள், மனிதர்களின் குணாதிசயங்களை தெரிவிப்பவையாகவும் உள்ளன.
ஸ்பெயின் மற்றும் இத்தாலியில், நத்தைகளை பல்வேறு காலகட்டங்களில் ஆய்வு
செய்ததில், அவை வெவ்வேறு விதமான வானிலை நிலவரத்தை தெரிவிப்பவையாக இருந்தன.
இந்த சோதனையின் மூலம், ஒவ்வொரு பகுதியிலும் ஏற்படும் வானிலை
மாறுபாடுகளையும் நத்தைகளால் தெரிவிக்க முடியும் என்ற முடிவுக்கு
வந்தோம்.இவ்வாறு ஆன்ட்ரி கர்லோ கூறினார்.