மக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 1 அக்டோபர், 2013

இறப்புக்குப் பிறகும் மக்கள் மனத்தில் இடம் பிடித்த அரசு ஊழியர்

இறப்புக்குப் பிறகும் மக்கள் மன த் தில் இடம் பிடித்த அரசு ஊழியர்

எஸ். சசிதரன்
Comment (5)   ·   print   ·   T+  
வெங்கட்ராமனுக்கு வைக்கப்பட்டுள்ள அஞ்சலி கட்அவுட்
வெங்கட்ராமனுக்கு வைக்கப்பட்டுள்ள அஞ்சலி கட்அவுட்
'மனிதாபிமானம் செத்துவிட்டது' என்று நம்மில் பலர் அடிக்கடி கூறுவதை கேட்டிருக்கிறோம். உண்மையிலேயே மனிதாபிமானம் செத்துவிட்டதா? இல்லை, நெஞ்சில் ஈரம் உள்ளவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது அவ்வப்போது நிரூபிக்கப்பட்டு வருகிறது.
கட்சி கூட்டம், திருமண நிகழ்ச்சி, காது குத்து, பிறந்த நாள் விழா போன்றவற்றுக்கு பேனர் வைக்கப்படுவது தெரியும். ஆனால் சமீபத்தில் பெரம்பூரில் மறைந்த அரசு ஊழியர் ஒருவரை வாழ்த்தி பேனர் வைக்கப்பட்டிருந்தது.
அந்தப் பகுதியின் (68 -வது வட்டம்), சென்னை பெருநகர் குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரிய இளநிலை பொறியாளராக பதவி வகித்து, பணியின்போது உயிர்நீத்த பி. வேங்கடராமனை வாழ்த்தியே அந்த பேனர் வைக்கப்பட்டிருந்தது. மற்ற அரசு ஊழியர்களுக்கு விதிவிலக்காக திகழ்ந்திருக்கிறார் வெங்கட்ராமன்.
புகார் செய்தால் தொலைபேசி ரிசீவரையே எடுக்காத பல அலுவலர்கள் இருக்கையில், வெங்கட்ராமனின் செல்போன் எண் தெரியாதவர்களே அந்த பகுதியில் இல்லை என்ற அளவுக்கு அனைவரிடமும் அவர் நெருங்கி பழகி வந்தார். கூப்பிட்டவுடன் ஓடோடிச் சென்று மக்களுக்கான பணிகளை செய்து வந்தார். அரசு ஊழியர்கள் மத்தியில் இவர் ஒரு விதிவிலக்காக திகழ்ந்தார் என்பதை பெரிய உருவப்படத்துடன் கூடிய பேனர் விளக்கியது.
கடந்த ஆண்டு, செப்டம்பர் 26-ந் தேதி நள்ளிரவு, பெரம்பூர் மதுரைசாமி மடம் தெருவில் உள்ள சாக்கடைக்குழியில் ஏற்பட்டிருந்த அடைப்பை நீக்கும் பணியை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது விஷவாயு தாக்கிய தொழிலாளியை காப்பாற்ற முயன்று வெங்கட்ராமனும் உயிரிழந்துள்ளார்.
வெங்கட்ராமனுக்கு வேறு பகுதிக்கு மாற்றல் கிடைத்தது. ஆனால் அங்கு பணியில் சேருவதற்கு முன்பாக 68வது வட்டத்தில் பெரும் பிரச்சினையாக இருந்த பாதாள சாக்கடையை சீர்செய்யும் முயற்சியில் கடந்த செப்டம்பர் 26ம் தேதி 3 ஊழியர்களுடன் பணியில் இறங்கினார்.
வாசுதேவன் தெரு, மரியநாயகம் தெரு என்று இரு தெருக்களில் 4 சாக்கடைக் குழிகளை சுத்தம் செய்துவிட்டு கடைசியாக மூன்று தெருக்கள் சந்திக்கும் சாக்கடைக்குழியை சுத்தம் செய்ய தொழிலாளர்கள் வந்தனர். சாக்கடைக் குழிக்குள் இறங்கிய ஊழியர் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தார் அவரைக் காப்பாற்ற மேலே இருந்த மற்ற ஊழியர்கள் தயக்கம் காட்டினர்.
ஆனால் பொறியாளராக இருந்த போதிலும் இளகிய மனம் படைத்த வெங்கட்ராமன் தயங்காமல் குழிக்குள் இறங்கி அந்த தொழிலாளியைக் காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரும் விஷவாயு தாக்கி உயிரிழந்தார். வெங்கட்ராமன் இறந்த தகவல் தெரிந்து அப்பகுதியினர் வேதனையில் ஆழ்ந்தனர்.
அவரை மறக்கமுடியாமல், அவரது நினைவாக பொதுமக்கள் அப்பகுதியின் நினைவஞ்சலி பேனர் வைத்துள்ளனர். இது குறித்து பேனரை வைத்த நலச்சங்கத்தின் தலைவர் ஜி.தரணிசிங், 'தி இந்து' நிருபரிடம் கூறுகையில், 'சார், அவர் நல்லா செஞ்சாரு. அதுக்காக பேனர் வச்சிருக்கோம்' என்றார்.
அவர் மேலும் கூறுகையில், 'நான் 50 ஆண்டுகளாக இப்பகுதியில் வாழ்ந்து வருகிறேன். அவரைப் போன்ற பொதுமக்கள் குறைகளை உடனுக்குடன் தீர்க்கும் அதிகாரியைப் பார்த்ததே இல்லை.
தி.நகரில் உள்ள வீட்டில் இருந்து காலை 8 மணிக்கெல்லாம் பெரம்பூர் பகுதிக்கு வந்துவிடுவார். ஒரு தெரு விடாமல் பம்பரம் போல் சுற்றி சுற்றி வந்து குறைகளைத் தீர்ப்பார். வருவதற்கு நேரம் பிடிக்கும் என்றாலும் அதை பற்றி முன்கூட்டியே தெரிவித்து, எங்களது அலைச்சலைத் தவிர்ப்பார் என்றார்.
தனது கடமையைச் செய்ய மறுக்கும் பல அதிகாரிகள் மத்தியில், நள்ளிரவில் பகுதி மக்களின் குறையை தீர்க்க வந்து, தன்னுடன் வந்த தொழிலாளியின் வேதனையைப் பார்க்க முடியாமல் உதவப் போய் போனால் வராத தனது உயிரை விட்ட வெங்கட்ராமனுக்கு வீர வணக்கம்!

சனி, 21 செப்டம்பர், 2013

மக்கள் மீது கல்வீசினார் திண்டுக்கல் சார் ஆட்சியர்



கைவீசம்மா கைவீசு.. இது அந்த காலம்...: மக்கள் மீது கல்வீசினார் திண்டுக்கல் சார்  ஆட்சியர்
திண்டுக்கல்: "எஜமான்.. சாமி' என, அரசு அதிகாரிகளை, அந்தக்காலத்து மக்கள் பணிவாக அழைப்பர். அதிகாரிகளும்,
தங்களால் முடிந்த வரை, மக்களுக்கு நல்லது செய்வர். இந்தக் காட்சிகளை இப்போது பார்ப்பது ஆபூர்வம். தற்போது, அதிகாரிகளும் அப்படி இல்லை.. மக்களும் மாறி விட்டனர். இதில் சில அதிகாரிகள் மட்டும் விதிவிலக்கு. இந்த விதிவிலக்கிலும் வித்தியாசமானவர், திண்டுக்கல் சப்- கலெக்டர் பி.மதுசூதனரெட்டி. கோபம் வந்தால்... என்ன செய்வார் என்றே தெரியாது. கையில் கிடைத்ததை தூக்கி வீசுவார். "டென்ஷன்' உச்சத்தில் இருந்தால், கல்லையும் எடுத்து எறிவார். இது கதை இல்லைங்க...நிஜத்திலும் நிஜம். இனி, அவரின் "டெர்ரர்' கதையை படிங்க..

மதுசூதன ரெட்டி, 29, சப் கலெக்டராக செப்., 6 ல், பொறுப்பேற்றார். சிறுமலையில் தங்கியுள்ள இவர், நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு, வனத்துறை "செக் போஸ்ட்' சென்றார். வனவர் சுந்தரராஜனிடம் தகராறு செய்து, "பெஞ்சை' தூக்கி வீசினார். அங்கு வந்த, பஸ் டிரைவர் மணியின் மொபைல் போனை பறித்தார். எதனால் இப்படி நடந்து கொள்கிறார்? என புரியாத வனத்துறையினர், ஒருவழியாக, சமாதனம் செய்து அனுப்பினர். கலெக்டர் வீட்டிலும்: நேற்று காலை 8 மணிக்கு, கலெக்டரின் முகாம் அலுவலகம் சென்ற அவர், போலீஸ்காரர் பசுபதியின் "வாக்கி-டாக்கி' யை பறித்தார். அவர் யார் என்பது தெரியாத பசுபதியும் தகராறு செய்தார். மற்ற போலீசார் சமரசம் செய்து அனுப்பினர்.


கல்வீசம்மா..கல்வீசு:

நிலக்கோட்டை கரியாம்பட்டி கிராமத்தினர், ஒரு பிரச்னை தொடர்பான விசாரணைக்கு, நேற்று மதியம் 12 மணிக்கு, சப் கலெக்டர் (ஆர்.டி.ஓ.,) அலுவலகம் வந்தனர். "சமரசம் செய்து வைப்பார்' என, நினைத்தவர்களுக்கோ அதிர்ச்சி. அவர், மக்கள் மீதே "பாய' துவங்கினார்; அதுமட்டுமா... வெளியில் வந்து கற்களை எடுத்து வீசினார்; இதில், பாண்டி என்பவர் காயம் அடைந்தார். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்று, புதிதாக பதவிக்கு வந்துள்ள இவர், ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்பது புரியாத புதிராக உள்ளது. மக்களுக்கு சேவை புரிய கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல், இப்படியா கெட்ட பெயர் எடுப்பது; அவருக்கு என்ன தான் பிரச்னை; அவருக்கே வெளிச்சம். இதுகுறித்து கலெக்டர் வெங்கடாசலம் கூறுகையில்,""சப்-கலெக்டர் புது பணி நியமனம் என்பதால், பணியில் வேகமாக உள்ளார். பிரச்னைகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது,'' என்றார்.


8ம் வகுப்பு படித்த நிருபர்கள்:

சப்-கலெக்டரிடம் கருத்து கேட்க, பத்திரிகை நிருபர்கள் சிலர், அவரது அலுவலகம் சென்றனர். ""8 ம்வகுப்பு படித்த நீங்கள், நிருபராக இருக்கிறீர்கள். உங்களிடம் பேச, நான் தயார் இல்லை. அனைவரும் வெளியேறுங்கள். கலெக்டரிடம் பேசி கொள்ளுங்கள்,'' என, கதவை சாத்தினார்.

புதன், 12 ஜூன், 2013

மக்களுக்கெல்லாம் உதவ வேண்டும்!

மக்களுக்கெல்லாம் உதவ வேண்டும்!
 
கண் பார்வையற்றவராக இருந்தாலும், எம்.ஜி.ஆரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, மக்களுக்கு உதவும், கொளஞ்சி: நான், பெரம்பலூர் மாவட்டத்தின், கிளியூர் குக்கிராமத்தில் பிறந்தவன். மஞ்சள் காமாலையால், ஏழு வயதிலேயே, இரு கண்களிலும், பார்வை இழந்தேன். எனினும், ஊரார் ஏளனமாக நடத்தாமல் ஊக்கமளித்ததால், பார்வை இல்லாததை ஒருபோதும் உணர்ந்ததில்லை. திருச்சி, புத்தூர் பார்வையற்றோர் பள்ளியில் படிக்கும் போது, பிரெய்லி முறையில் வாசிக்க கற்றுக் கொண்டேன். பார்வையற்ற நிலையிலும், சரியாக வாசிப்பதை ஆச்சரியத்துடன் பார்த்த, முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆர்., என்னை தொட்டு பாராட்டினார். ஓட்டப் பந்தயத்திலும் பங்கேற்று, அவர் கையால் முதல் பரிசு வாங்கிய போது, "நீ நல்லா படிச்சு பெரிய ஆளா வரணும்; மக்களுக்கெல்லாம் உதவணும்' என, என்னை ஊக்கப்படுத்தினார். லயோலா கல்லூரியில், பி.ஏ., தமிழ் படிக்கும் போது, என் தந்தை இறந்ததால், படிப்பை தொடர முடியாமல், பேசின் பிரிஜ்ஜில், "டெலிபோன் பூத்' நடத்தி, குடும்பத்தை காப்பாற்றினேன். படிப்பு முடிந்ததும், சேர்ந்த மாவட்டமான பெரம்பலூர் பேருந்து நிறுத்தத்தில், ஒரு பங்க் கடை போட்டு, தொழில் செய்தேன். நான் தினமும் பெரம்பலூர் செல்வதால், தாலுகா மற்றும் கலெக்டர் அலுவலகத்துக்கு கொடுக்க வேண்டிய மனுக்களை, கிராமத்தினர், என் மூலம் கொடுத்தனுப்புவர். நானும் இதில் தன்னார்வத்தோடு ஈடுபட்டு, பல பேருக்கு முதியோர் பென்ஷன் வாங்கி தந்திருக்கிறேன். அரசின் திட்டங்களை ஆர்வத்தோடு அறிந்து, என் கிராம மக்களுக்கு பெற்று தருகிறேன். உள்ளாட்சி பிரதிநிதியாக, கட்சி வேறுபாடின்றி, கிராம மக்களின் நியாயமான கோரிக்கைகளை, அரசு அதிகாரிகளிடம், முறையாக விண்ணப்பித்து நிறைவேற்றுகிறேன். பதவி என்பது, சம்பாதிப்பதற்கான வழி கிடையாது. அது ஊருக்கு உழைக்க கிடைத்த வாய்ப்பாக கருதினேன். 43 வயது மாற்றுத் திறனாளியாக இருந்தாலும், மக்களுக்கெல்லாம் உதவணும் என்ற வார்த்தைக்கு கட்டுப்பட்டு, இன்றும் உதவி செய்கிறேன்.

புதன், 28 நவம்பர், 2012

பெண் தொழிலாளர்கள் மருத்துவத்திற்கு நிதி திரட்டும் மக்கள்

தி  ல் மர்தம் பெறும் பெண் தொழிலாளர்கள் : குடும்ப ச் சூழலால் உண்டியல் ஏந்தி நிதி திரட்டும்  ஊர் மக்கள்

கும்மிடிப்பூண்டி: தொழிற்சாலையில் இருந்து, வீடு திரும்பிய பெண் தொழிலாளர்கள் சென்ற வேன் விபத்துக்கு உள்ளாகி, இரு பெண்கள் இறந்தனர். படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வரும் மூன்று இளம்பெண்களின் குடும்ப ஏழ்மையின் காரணமாக, கிராம மக்கள் ஒன்று திரண்டு சிகிச்சைக்கு நிதி திரட்டி வருகின்றனர்.
நஷ்டத்தால் மூடல்
கும்மிடிப்பூண்டி அடுத்த, கவரைப்பேட் டை அருகே, கீழ்மேனி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்கள் உஷா, 21, உமா, 21, லலிதா, 21, பரமேஸ்வரி, 20, லாவண்யா, 21, வள்ளி, 30, ஆகியோர் அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில், மூன்று ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்தனர்.
இத்தொழிற்சாலை, நஷ்டம் காரணமாக ஒரு மாதத்திற்கு முன் மூடப்பட்டது. சோழவரம் அருகே, சோழிப்பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் அந்த நிர்வாகத்தின், மற்றொரு தொழிற்சாலைக்கு அவர்கள் வேலை செய்ய அழைக்கப்பட்டனர்.தங்கள் கிராமத்தில் இருந்து வெகு தொலைவிற்கு செல்ல வேண்டிய நிலையில், குடும்ப சூழல் காரணமாக வேலைக்கு சென்றனர். கீழ்மேனி கிராமம் மட்டுமின்றி சின்னம்பேடு, கவரைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, இப் பெண்கள், தொழிற்சாலை நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த வேன் மூலம் வேலைக்கு சென்று வந்தனர்.கடந்த, 23ம் தேதி வேலை முடிந்து மேற்கண்ட பெண்கள் வேனில் வீடு திரும்பியபோது, பஞ்செட்டி அருகே முன்னால் நின்றிருந்த டிராக்டர் மீது வேன் மோதி கவிழ்ந்தது.
உண்டியல் ஏந்தி நிதி...
சம்பவ இடத்தில் உஷா, உமா, உயிரிழந்தனர். உடன் பயணித்த லலிதா, பரமேஸ்வரி, வள்ளி, ஆகியோர் படுகாயத்துடன் சென்னை ஸ்டான்லி மற்றும் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.முதுகு எலும்பு முறிந்து சிகிச்சை பெற்று வரும் லலிதாவின் வருமானத்தை நம்பி அவரது குடும்பம் உள்ளது. இதேபோன்று மற்ற இரு பெண்களும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், சிகிச்சை அளிக்க முடியாமல் அவர்களது குடும்பத்தார் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். அவர்களுக்கு உதவ எண்ணிய கிராம மக்கள் ஒன்று திரண்டு "சிகிச்சை நிதி' என, பெயர் இடப்பட்ட உண்டியல் ஒன்றை ஏந்தி வீடு வீடாகச் சென்று நிதி திரட்டி வருகின்றனர்.இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில்,"விபத்தில் இரு பெண்களை பலி கொடுத்த நிலையில், சிகிச்சை பெற்று வரும் மற்ற மூன்று பெண்களை அரசும், தொழிற்சாலை நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை. தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் அரசின் கதவை தட்டுவதற்கு எங்களுக்கு போதிய நேரமில்லை. முதலில் சிகிச்சைக்கான ஏற்பாட்டை செய்ய வேண்டும் என்பதால் உண்டியல் ஏந்தி நிதி திரட்டுகிறோம்' என, தெரிவித்தனர்.
உடனடி சிகிச்சை



இதுகுறித்து, சம்பந்தப்பட்ட தொழிற்சாலையின் மனித வள துறை மேலாளர் ஆண்டர்சன் கூறுகையில், ""சிகிச்சை பெற்று வரும் மூன்று பெண் தொழிலாளர்கள் உடனடியாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப் படுவார்கள்'' என, தெரிவித்தார்.

வியாழன், 15 நவம்பர், 2012

"மக்களால் அங்கீகரிக்கப்படவேண்டும்!'

சொல்கிறார்கள்:
"மக்களால் அங்கீகரிக்கப்படவேண்டும்!' 

 சிலம்பாட்டத்தில் சிறந்து விளங்கும் முகமது இப்ராஹிம்: நான் இளங்கலை ஆங்கில இலக்கியம் முடித்துள்ளேன். தற்போது, பி.எட்., படித்து வருகிறேன். ஐந்து வயதில், சிலம்பம் விளையாட கற்றுக் கொண்டேன், 12 வயதில், "கலை இளமணி' விருது பெற்றது, எனக்குப் பெரிய ஊக்கத்தை ஏற்படுத்தியது. சில, "டிவி' நிகழ்ச்சிகளிலும், என் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறேன்.தற்போது மிமிக்ரி, தப்பாட்டத்தில் பயிற்சி எடுத்து வருகிறேன். பள்ளி, கல்லூரிகளில், 400க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து, பரிசு பெற்றிருக்கிறேன். தேசிய அளவில், ஏழு தங்கப் பதக்கங்கள் வென்றிருக்கிறேன். சிலம்பம், நேரடி கம்புச் சண்டை, வாள் வீச்சு, சுருள் வீச்சு, கம்பு வீச்சு போன்ற விளயாட்டுகளில், தேசிய அளவிலும், மாநில அளவிலும், தங்கப் பதக்கங்கள், விருதுகள் வென்றிருக்கிறேன்.மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில், சிலம்பாட்டத்திற்கான, டிப்ளமோ படிப்பு முடித்துள்ளேன்.என் தந்தை அப்துல் மஜீத், டெய்லர் பணி செய்கிறார்; தாய் இல்லத்தரசி. வீட்டில், தகுந்த இடவசதி கூட கிடையாது. கஷ்டமான சூழ்நிலை என்றாலும், என் ஆர்வத்தையும், திறமையும் புரிந்து, உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவர் தந்தை. நான் வெளியில் நிகழ்ச்சி செய்யும் போது, கூடவே இருந்து, எல்லா உதவிகளும், ஏற்பாடுகளும் செய்வார்.சிலம்பம், வாள் வீச்சு போன்ற கலைகளை, யார் நிர்பந்தமும் இல்லாமல், நானாகவே விரும்பி கற்றேன். சிறுவனாக இருக்கும் போது, விளையாட்டாக பழக ஆரம்பித்தது, பின்னாளில் அதுவே, என்னை சாதனையாளனாக மாற்றியது. நான் செய்யும் சாதனைகளில், மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுத் தந்தது, புரூஸ்லீ தன் திரைப் படங்களில் பயன்படுத்திய சாகசங்களில் ஒன்றான, "நன்சாகூ'வை, இரு புறமும், தீயை எறிய விட்டு பல கோணங்களில் சுழற்றுவது தான். சிலம்பாட்டத்தில் இன்னும், பல சாதனைகள் புரிய வேண்டும். என் திறமை மக்களால், அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதே, என் ஆசை.

வெள்ளி, 19 அக்டோபர், 2012

வெறுப்பில் உள்ளனர் மக்கள்

வெறுப்பில் உள்ளனர் மக்கள்!

பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி, கோவையிலிருந்து எழுதுகிறார்: சமீபகாலமாக, தமிழக அமைச்சர்கள் நான்கு பேர் கொண்ட குழுவினர், 40 தொகுதிகளிலும், ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துகின்றனராம்; அவர்கள், ஏதாவது மக்கள் நலப்பணிகளை ஆய்வு செய்ய போகின்றனரா என்றால், அது தான் இல்லை.வரும், 2014ல் நடக்கப் போகிற, எம்.பி., தேர்தலுக்காக, செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்துகின்றனர். போகட்டும், அதில், யதார்த்தமான பேச்சுகளையாவது பேச வேண்டாமா?"ஜெ.,வைப் பார்த்து, அமெரிக்காவே அச்சப்படுகிறது; ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ் என, இன்ன பிற நாடுகளும் பயப்படுகின்றன' என்கிறார் ஒரு அமைச்சர்.

இன்னொரு அமைச்சரோ, "இந்த நாட்டை ஆள, அனைத்து திறமைகளும் ஒருங்கே கொண்ட, ஒரே தலைவர், ஜெ., தான்' என்று, புளகாங்கிதம் அடைகிறார். மற்றொருவரோ, "அம்மாவே பிரதமர்; அவரை பாரதப் பிரதமராக அமர்த்தியே தீருவோம்' என்று குதூகலிக்கிறார்.இதெல்லாம் சாத்தியமா; இப்போது அவசியமா... தமிழக மக்கள், அவரை முதல்வராக தேர்ந்து எடுத்த பணி, முற்றிலும் நிறைவடைந்து விட்டதா? தமிழக மக்கள், எல்லா வகையிலும் தன்னிறைவு பெற்று, சந்தோஷமாக வாழ்கின்றனரா?அத்தியாவசியமான தேவைகளுக்காக, அன்றாடம், வீதியில் நின்று போராடி, போலீசாரிடம் அடியும், உதையும் வாங்கி, மக்கள் கஷ்டப்படுவதை அமைச்சர்கள் அறிவரா? ஒரு மணி நேர மின்வெட்டு, படிப்படியாக முன்னேறி, 14 மணி நேரம், 18 மணி நேரமாக அதிகரித்ததால், தொழில்கள் முடங்கி, விரக்தியில், தொழிலாளர்கள் விழி பிதுங்கி நிற்பது தெரியுமா? டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் என்று, நாள் தோறும் பலர் இறந்து வருவதையும், விலைவாசி விண்ணை முட்டிக் கொண்டிருப்பதையும் தான் அறிவரா?இப்படி, பல்வேறு பிரச்னைகள் விஸ்வரூபம் எடுத்து வரும் வேளையில், அது, கட்சித் தொண்டர்களை பாதிக்கக் கூடாது என்பதற்காக, "அம்மாவே பிரதமர்' என்று கோஷம் போட்டு, அமைச்சர்கள், வேஷம் போடுவது தேவையா?
இப்போது தேர்தல் வந்தால், அ.தி.மு.க., ஒரு, "சீட்' கூட பெறாது என்பது தான் உண்மை. மக்கள், அந்த அளவிற்கு வெறுப்பில் உள்ளனர். ஆட்சி, அதிகாரம், சுகவாசம் என்ற திளைப்பில் உள்ள ஆட்சியாளர்கள், இதை உணர்வரா?

செயல்வீரர்கள் கூட்டத்தை நிறுத்தி, அர்ப்பணிப்பு உணர்வோடு, மக்கள் நலப்பணிகளை, ஊர் ஊராகச் சென்று மேற்கொள்வரா... இல்லை, செவிடன் காதில் ஊதப்பட்ட சங்கா?

சனி பகவான்மிரட்டியிருப்பாரோ?
என்.கந்தசாமி, மதுரையிலிருந்து எழுதுகிறார்: "தமிழகத்தின் இருள் என்று நீங்குகிறதோ, அன்று தான், கறுப்புச் சட்டை அணிவதை, இந்தக் கருணாநிதி நிறுத்துவான்; அதுவரை, 24 மணி நேரமும், கறுப்புச் சட்டை அணிந்திருப்பான்' என்று, தி.மு.க., தலைவர் போட்ட சபதம், நான்கு நாட்களில், "புஸ்வாணம்' ஆகிவிட்டது.
இப்படி, இவர், நான்கு நாட்களோடு, கறுப்புச் சட்டை அணிவதை நிறுத்தி விட்டாரே என, கண்ணீர் வடிப்பவர்களுக்குச் சொல்ல விரும்புவது யாதெனில்...

கருணாநிதி கனவில், சனி பகவான் தோன்றி, "நாத்திக சிகாமணியே... கறுப்பு நிறம் எனக்குப் பிடித்த நிறம்; அதை, ஆத்திகர்கள் அணிவது தான் உத்தமம். அடிக்கடி கொள்கைகளையும், கோட்பாடுகளையும் மாற்றி, பகுத்தறிவாளர் வேஷம் போடுபவர்
களுக்கு, கறுப்புச் சட்டை அணியும் யோக்கியதை இல்லை. "எனவே, இதை உடனே நிறுத்தி, வழக்கம் போல வெள்ளைச் சட்டையும், மஞ்சள் துண்டும் அணிந்து கொள். அப்படி செய்யத் தவறினால், உன் பேரன் தயாநிதி இருக்கும் ரகசிய இடத்தை, நான் வெளிச்சம் போட்டுக் காட்டி விடுவேன்!' என்று, மிரட்டியிருப்பாரோ என்னவோ!அதனால் தான், பாவம், தி.மு.க., தலைவர் அஞ்சி, நடுங்கி, கறுப்புச் சட்டையைத் தூக்கி கடாசி விட்டார் போலும்.இனி, கறுப்புக் கண்ணாடி கூட அணிய மாட்டார்; தி.மு.க., கொடியில் இருக்கும் கறுப்பு வண்ணத்தையும் நீக்கி, மஞ்சள் நிறத்தை, தி.மு.க., கொடிக்கு வழங்கலாம்!"கறுப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு' என்ற பாட்டை, இனி, அவர் கண்டிப்பாக, கேட்கவே மாட்டார். கறுப்பு என்ற வார்த்தையையே, தன் அகராதியிலிருந்து நீக்கி விடுவார். கறுப்பு மீது, அவருக்கு வந்திருக்கும் வெறுப்புக்கு, என்ன காரணம் என்பதை, இப்போது, உடன்பிறப்புகள் உணர்ந்திருப்பர்.கறுப்புப் பணத்தை எல்லாம், வெள்ளைப் பணமாக்க, கருணாநிதி, தீவிர முயற்சி மேற்கொள்ளலாம். சனி பகவான், கருணாநிதியை நன்றாகவே ஆட்டுவிக்கிறார்! -தினமலர்