செருமனி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செருமனி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 29 மே, 2013

செருமானியப் பேருந்தில் தமிழில் விவரம்

 செருமானியப் பேருந்தில் தமிழில் விவரம்
 
திருவள்ளுவன் இலக்குவனார் shared Muthu Krishnan's photo.
காரணமான ஈழத்தமிழர்களுக்கும் செருமன் அரசிற்கும் பாராட்டுகள்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
"ஜேர்மன் நாட்டிலும் தமிழ் பெயர் பலகையோடு பேருந்து சேவை "

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

செருமனியில் தமிழ்ச் சுவடி!



செருமனியில் தமிழ்ச் சுவடி!
செருமனியில், தமிழ் ஓலைச் சுவடிகளை ஆராய்ந்து பாதுகாத்து வரும், பேராசிரியர் உல்ரீகே நிகோலஸ்: நான், ஜெர்மனியின், கொலோன் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வருகிறேன். ஆரம்பத்தில், தமிழர்களின் பூர்வீக அறிவும், தொல்காப்பியம் போன்ற சங்ககால இலக்கிய, இலக்கணங்களும், வாய்மொழியாகத் தான், பரம்பரை பரம்பரையாக பகிரப் பட்டன.
பிற்காலத்தில் தான், பண்டைய தமிழர்களின் பூர்வீக அறிவு, ஓலைச் சுவடிகளில் பதியப்பட்டது. எழுதுவதற்கான ஓலைச் சுவடிகளை தயாரிப்பது, மிகக் கடினமாக இருந்ததால், ஓலைச் சுவடிகளில் வார்த்தைகள், வரிகள், வாக்கியங்கள், பத்திகள் என, எங்கும், கொஞ்சம் கூட, இடம் விடாமல் எழுதினர்.

உலகின் பல்வேறு முக்கிய நூலகங்களில் இருக்கும் தமிழ் ஓலைச் சுவடிகள், எந்தெந்த நூலகங்களில் உள்ளன என்ற அட்டவணையை, எங்கள் பல்கலைக் கழகம் தயாரித்துள்ளது. அது போல், ஜெர்மனியில் உள்ள, ஆசிய ஓலைச் சுவடிகளின் அட்டவணையை தயாரிக்கும் திட்டத்தின் கீழ், எல்லா தமிழ் ஓலைச் சுவடிகளின் அட்டவணையையும், எங்கள் பல்கலைக் கழகம் தயாரிக்கிறது.இவற்றில், பெரும்பாலும் இலக்கிய நூல்களே உள்ளன. அறிவியல் சம்பந்தப்பட்ட சுவடிகள், வான சாஸ்திரம், காமசாஸ்திரம், மருத்துவம், தத்துவம் முதலிய சுவடிகளும் கிடைத்துள்ளன. மருத்துவத்தில், பெரும்பாலும் சித்த மருத்துவ சுவடிகளும், சில நாட்டு வைத்திய சுவடிகளும், தத்துவத்தில் தமிழ் சைவ சித்தாந்தம் பற்றியும் கிடைத்துள்ளன.
கணக்கு வகை ஓலைச் சுவடிகளும் கிடைத்துள்ளன. அதிகபட்சமாக, தமிழகத்தின் செட்டிநாட்டு பகுதியில் எழுதப்பட்ட, வியாபாரக் கணக்குகளும், வீட்டுக் கணக்குகளும், தனிச் சிறப்புடைய கோவில் கணக்குகளும், காது குத்து, கல்யாணம் போன்ற, வீட்டுச் சடங்குகளுக்கான கணக்குகள் கூட, ஓலைச் சுவடிகளாக உள்ளன.தென்னிந்திய தட்ப வெப்ப நிலை காரண மாக, 300 ஆண்டுகளுக்கு மேல், சுவடிகள் நீடிக்காது என்ற காரணத்தால் தான், உ.வே சாமிநாதய்யர், ஓலைச் சுவடிகளை தேடிச் சேகரித்து, பிரதி எடுத்து பாதுகாத்தார்.




வியாழன், 22 செப்டம்பர், 2011

செருமனியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்களது விடுதலைவீச்சு நிகழ்வு !

ஜேர்மனியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்களது விடுதலைவீச்சு நிகழ்வு !

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு வலுவூட்டும் வகையில் புதிதாக இணைந்துள்ள அரசவை உறுப்பினர்களது அறிமுக நிகழ்வாக விடுதலைவீச்செனும் மக்கள் அரங்கம் பொதுநிகழ்வு ஜேர்மனியில் ஏற்பாடாகியுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசவையின் யாப்பினை ஏற்றுக் கொள்ளாமல், தாமாக விலகியவர்களின் இடத்தினை நிரப்பும் பொருட்டு, வாக்குகளின் அடிப்படையில் அடுத்த நிலையில் இருந்த பிரதிநிதிகளே, இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் புதிய உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைக்கமைய நா.த.அரசவையில் வாக்கெடுப்பின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவின் பிரகாரம் 16 புதிய மக்கள் பிரதிநிதிகளும் யாப்பை ஏற்றுள்ளனர்.
அந்தவகையில், ஐரோப்பிய நாடுகளில் உள்ள புதிய அரசவை உறுப்பினர்களான மக்கள் பிரதிநிதிகளின் அறிமுகஅரங்கம் ஜேர்மனியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் சனிக்கிழமை (17-09-2011) மதியம் 14:00 மணிக்கு Gartenverein NORA , Eberstr 46 , 44145 Dortmund இடத்தில் நிகழ்வு இடம்பெறுகின்றது.
இந்நிகழ்வில் உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலசந்திரன், பிரதிஅவைத் தலைவர் சுகன்யா புத்திசிகாமணி, அரசியல் வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் கனகேந்திரம் மாணிக்கவாசகர், தகவல்துறை துணை அமைச்சர் சுதர்சன் சிவகுருநாதன், நிதித்துறை துணை அமைச்சர் நடராஜா ராஜேந்திரா, கல்வி கலாச்சார சுகாதாரத்துறை துணை அமைச்சர் இராஜரட்ணம் ஜெயசந்திரன், அமைச்சரவைச் செயலர் முருகையா சுகிந்தன் ஆகிய மக்கள் பிரதிநிதிகள் நிகழ்வில் பங்கெடுக்கின்றனர்.
புதிய அரசவை உறுப்பினர்களது விபரம் :
கனடா :
நிமல் விநாயகமூர்த்தி
வின் மாகாலிங்கம்
ஜெயபாலன் அழகரட்ணம்
சிறிசங்கர் சின்னராஜா
கென்றி கிருபைராஜா
தனபாலன் மார்க்கண்டு
டென்மார்க் :
இளையராஜ் கண்ணன் சிதம்பரநாதன்
ஜேர்மனி :
வாசுகி தனகராஜா
சுப்பிரமணியம் பரமானந்தன்
தணிகா சுப்பிரமணியம்
பிரியதர்சினி மனோகரன்
நோர்வே :
தோமஸ் அலோசியஸ்
பிரித்தானியா :
மணிவண்னன் பத்மநாபன்
நிமலன் சீவரட்ணம்
சொக்கலிங்கம் யோகலிங்கம்
சிவயூசம் சுகுமார்
நாதம் ஊடகசேவை