காரணமான
ஈழத்தமிழர்களுக்கும் செருமன் அரசிற்கும் பாராட்டுகள்.அன்புடன் இலக்குவனார்
திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக்
காப்போம்! இனத்தைக் காப்போம்!/
விவரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விவரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 29 மே, 2013
வெள்ளி, 12 ஏப்ரல், 2013
இணையப்பதிவில் 22 இலட்சம் மாணவர் விவரம் இல்லை.
இணையப்பதிவில் 22 இலட்சம் மாணவர் விவரம் இல்லை.
தமிழகத்தில், அனைத்து பள்ளி மாணவர்களின் விவரங்களையும், ஆன் -லைனில்
பதிவேற்றம் செய்யும் பணி முடிவடைந்துள்ளது. இதில், 22 லட்சம் மாணவர்களின்
விவரங்கள் விடுபட்டுள்ளன.
நகர்ப்புறங்களில்...: தமிழகத்தில், சமீப காலமாக, அரசு துவக்கப் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கையில், கடும் சரிவு இருந்து வருகிறது. அதிலும், நகர்ப்புறங்களில் உள்ள அரசு துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், ஒற்றை இலக்கங்களில், மாணவர் எண்ணிக்கையை கொண்டு இயங்கும் நிலையில் உள்ளன. மாணவர் எண்ணிக்கை குறையும் பள்ளிகளில், மாணவர் - ஆசிரியர் விகிதத்தை கணக்கிட்டு, ஜூனியர் ஆசிரியர்கள், இடமாற்றம் செய்யப்படுகின்றனர். நகர்ப் பகுதிகளில் வசிக்கும் ஆசிரியர்கள், அதே பள்ளியில் நீடிக்கவே விரும்புகின்றனர். இதனால், மாணவர் எண்ணிக்கை குறைந்தாலும், அவற்றை, கணக்க ஏடுகளில் குறையாமல் பார்த்துக் கொள்கின்றனர். பள்ளி கணக்கேடுகளில், 30 மாணவர் இருந்தாலும், உண்மையில், அந்த பள்ளிக்கு, 15 மாணவர்கள் மட்டுமே, வந்து கொண்டிருப்பர். இந்த நிலை, பல அரசு பள்ளிகளில் காணப்படுகிறது. இப்படி கள்ளத்தனமாக காட்டப்படும் மாணவர்களுக்கான சலுகைகளை,

தனியார் பள்ளிகள்: ஒவ்வொரு பள்ளிக்கும், தனித்தனியே, "யூசர் ஐடி' மற்றும், "பாஸ்வேர்டு' வழங்கி, அனைத்து விவரங்களையும், "ஆன்லைனில்' பதிவேற்ற உத்தரவிடப்பட்டிருந்தது. இதில், தனியார் பள்ளிகளும், மாணவர்கள் குறித்த விவரங்களை பதிவேற்றம் செய்வதால், தனியார் பள்ளியில் சேர்ந்திருந்தாலும், அரசு பள்ளியிலேயே கணக்கில் வைத்திருக்கும், "போலி' மாணவர்கள் விவரங்களை, பதிவேற்றம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. விபரம் சரிபார்க்கும் போது, மாட்டிக் கொள்ள நேரிடும் என்பதால், உண்மையில் பள்ளிக்கு வரும் மாணவர்களது விவரங்களை மட்டுமே, ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்துள்ளனர். தற்போது இந்த பணி முடிவடைந்துள்ளது. கணக்கு ஏடுகளில், 1.35 கோடி மாணவர்கள் உள்ள
Advertisement
நிலையில், 1.13 கோடி மாணவர்களின் விபரம் மட்டுமே, பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.போலி பட்டியல்: கல்வித் துறை அலுவலர்கள் கூறியதாவது: ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டதால், போலி மாணவர் பட்டியலை, தொடர்ந்து கண்டுபிடிக்க முடியாத நிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. மாட்டிக் கொள்ள நேரிடுமோ என்ற பயத்தில், 22 லட்சம் பேரின் விபரங்களை ஆசிரியர்கள் பதிவு செய்யவில்லை. அதே நேரம் ஒரு சில ஆசிரியர்கள், "டபுள் என்ட்ரி' ஆனாலும் பரவாயில்லை என, போலி பட்டியலையும் பதிவு செய்துள்ளனர். இவற்றை சரி செய்யும் போது, இன்னும் பல லட்சம் மாணவர்கள் விடுபடும் நிலை உள்ளது. தனியார் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இப்பிரச்னை இல்லை. தற்போது, இவற்றை சரி செய்ய, மீண்டும் ஒரு வாய்ப்பு, பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் பள்ளிகள் ஆன்லைனில் உள்ள விவரங்களை, துல்லியமாக ஏப்ரல், 18ம் தேதிக்குள் சரி பார்க்க, உத்தரவிடப்பட்டுள்ளது. இவை நிறைவடையும் நிலையில், பள்ளிகளில் உண்மையில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, துல்லியமாக தெரியவரும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
- நமது செய்தியாளர், தினமலர் -
சனி, 20 அக்டோபர், 2012
"கடை நடத்தஅதிக விவரம் தேவை!'
சொல்கிறார்கள்
"கடை நடத்தஅதிக விவரம் தேவை!'
பல ஆயிரக்கணக்கான பெண்களை, தொழிலதிபராக மாற்றிய, டாக்டர்.நடராஜன்: ஒரு கடையை ஆரம்பிக்க வேண்டும் என்றால், முதலில், உங்கள் பகுதி மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பத்தில், என்ன தொழில், எத் தனை பேர் பணி அமர்த் தப்படுவர், எத்தனை மணி நேரம் கடை திறந்திருக்கும், விடுமுறை நாள் போன்ற அடிப்படை விவரங்களைக் குறிப்பிட வேண்டியிருக்கும்.விண்ணப்பித்த ஓரிரு நாட்களில், உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து, கடைக்கான, "லைசென்ஸ்' கிடைக்கும். பல கடைகளில் இந்த சான்றை, "பிரேம்' செய்து தொங்க விட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். ஒரு கடையை துவங்க, இந்த லைசென்ஸ் போதும். இதை, ஒவ்வொரு வருட மும் புதுப்பிக்க வேண்டும்.அனுமதி பெறாமல் கடை நடத்தும் போது, அபராதம் விதிப்பர்; அனுமதிச் சான்றுக்கான கட்டணத்தை விட, அபராதத் தொகை அதிகம். எனவே, இந்த அடிப்படை நடை முறையை, முன்னரே செய் வது புத்திசாலித்தனம்.தொழில் துவங்க, வங்கிக் கடன் பெற வேண்டும் என்றால், செய்யப் போகும் தொழில், தொழில் நடத்தும் இடம் பற்றிய விவரம், முதலீடு செய்யும் தொகை எவ்வளவு, எதிர்பார்க்கும் லாபம் குறித்த தெளிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.எஸ்.எஸ்.ஐ., அல்லது மாவட்டத் தொழில் மையத்தில் பதிந்து, முறையான சான்றுகளைப் பெற்றிருந்தாலும், இவர் என்ன தொழில் செய்யப் போகிறார், அதில் என்ன அனுபவம் இருக்கிறது, எவ்ளோ லாபம் கிடைக்கும், இந்த நபர், கடனை சரியாகக் கட்டுவாரா போன்ற கேள்விகளுக்கு, சரியான பதிலை, வங்கி மேலாளருக்கு அளிக்க வேண்டும்.அரசு விதிப்படி, தொழில் துவங்க கடன் கேட்டால், 30 நாட்களுக்குள் கடன் கொடுக்க வேண்டும். முடியாவிட்டால், 15 நாட்களில் மனு வை நிராகரித்து, அதற்கான காரணத்தை, வங்கி தெரியபடுத்த வேண்டும். கடனை முறையாக அடைத்து, நல்ல பெயர் வாங்கும் பட்சத்தில், அடுத்தடுத்து கடன் பெறுவது எளிதாகிவிடும்.லோன் வாங்கித் தருவதாகச் சொல்லி ஏமாற்றும், "புரோக்கர்'கள் அதிகம். அவர்கள் பக்கம் போகவே வேண்டாம். கடன் வாங்கி தொழில் செய்யும் போது, அதற்கான வட்டி, 12 சதவீதம், அசலும், வட்டியுமாய் அடைக்க, அதைத் தாண்டி லாபம் வருமா அல்லது கடன் அடையும் வரை, நம்மால் தாக்குப் பிடிக்க முடியுமா என்பதையும், கணக்குப் போட்டு பார்த்து கடன் வாங்குங்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)