சீமான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சீமான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 5 செப்டம்பர், 2026

இணையப் பதிவுகளில் இலக்குவனார் போற்றி! – நாம் தமிழர் சீமான் + தங்கம் தென்னரசு

 

இணையப் பதிவுகளில் இலக்குவனார் போற்றி! – நாம் தமிழர் சீமான் + தங்கம் தென்னரசு






தமிழ்ப்போராளி இலக்குவனாரை எப்போதும் தவறாமல் மறவாமல் போற்றும் செந்தமிழன் சீமான் புகழுரை




தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து முனைவர் பட்டம் பெற்ற முத்தமிழ்ப்பேரறிஞர்!

அதுநாள்வரை மாணவர்கள் ஆங்கிலத்தில் கூறிவந்த வருகைப் பதிவை அன்னைத் தமிழில் “உளேன் ஐயா” என்று உரக்கச் சொல்ல வைத்த பெருமகன்!

சங்கப் பாடல்களை முதன் முதலாகச் சிறுகதை, நாடகங்கள் வடிவில் உலகத்தமிழர் உள்ளங்களில் சேர்ப்பித்த இதழியல் முன்னோடி!

தான் வகுப்பெடுத்த கல்லூரிகளில் எல்லாம் மாணவர்களுக்கு இனப்பற்றும் மொழிப்பற்றும் ஊட்டித் தன்னந்தனியனாக ஒரு தலைமுறையையே மானத் தமிழர்களாக வளர்த்தெடுத்த பெருந்தகை!

மாணவர்களிடம் தாய்த்தமிழ்ப்பற்றை ஊட்டுகிறார் என்ற காரணத்திற்காகப் பல்வேறு மாவட்டங்களுக்குப் பணியிடம் மாற்றி அலைக்கழித்தது அன்றைய காங்கிரசு அரசு!

ஆனால், அதையே வாய்ப்பாகக் கொண்டு செல்லும் இடமெல்லாம் இந்தித் திணிப்பிற்கு எதிராக இளந்தமிழ் தலைமுறையினரிடம் தமிழ் நெருப்பைப் பற்ற வைத்த புரட்சியாளர்!

நா.காமராசன், க.காளிமுத்து, கவிஞர் இன்குலாபு, பா.செயப்பிரகாசம் என 1965 ஆம்ஆண்டு நிகழ்ந்த மூன்றாம் மொழிப்போரின் முதன்மைத் தளபதிகளாக முன்னின்றவர்கள் பலரும் ஐயா இலக்குவனார் மூட்டிய புரட்சித்தீயில் பூத்த அவரின் மாணவச் செல்வங்களே!

அன்னைத் தமிழைப் பயிற்சிமொழியாக்க மறுத்து ஆங்கிலத்திற்குத் துணை நின்ற திமுக கல்வி அமைச்சரைக் கண்டித்து அன்றைய முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களால் வழங்கப்பட்ட மாநிலக்கல்லூரித் தலைமைத் தமிழ்ப்பேராசிரியர் பணியினை, தன்மானத்துடன் தூக்கி எறிந்த தமிழ் மறவர் நம்முடைய ஐயா இலக்குவனார் அவர்கள்!

மொழிப்போரை முன்னின்று நடத்தியதற்காகச் சிறையேகிய ஈகி, பெரும் புலவர் ஐயா இலக்குவனார் அவர்களின் புரட்சிகரப் பெருவாழ்வினப் போற்றுகின்ற இந்நாளில் அவர் கற்பித்தவழி நின்று தமிழ் மொழியையும் மண்ணையும் விழியெனக் காப்போம் என உறுதியேற்போம்!

மொழி காத்த தமிழ் மறவர்

ஐயா இலக்குவனார் அவர்களின்

பெரும்புகழ் போற்றுவோம்!

(ஒப்பம்)

++

தமிழறிஞர்களில் தனித்துவமானவர்; ஓய்வறியாத் தமிழ்ப் பணியாளர் பேராசிரியர் சி. இலக்குவனார் அவர்களின் நினைவுநாள் இன்று.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பாடத்தை நீக்க முடிவு செய்தபோது, அது அரசரின் முடிவாக இருந்தாலும், அதற்கு எதிராகத் துணிந்து வாதாடியவர். தான் சென்ற இடமெங்கும் தமிழ்க் கழகங்களை நிறுவியும், இதழ்களை நடத்தியும், தனித்தமிழை வளர்த்த தமிழ்க்காவலர். முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரைப் போன்ற தமிழுணர்வு பீறிட்டெழும் தலைமுறையை உருவாக்கிய ஆசிரியர். தமிழுக்காக வாழ்ந்து, தமிழுக்காகப் போராடி, தமிழைக் காக்கும் போராளிகளை உருவாக்கிய அவ்வறிஞரின் நினைவுநாளில், அவரது தமிழ்ப்பற்றையும் போராட்ட உணர்வையும் போற்றுவோம்!

– தங்கம் தென்னரசு, முகநூற்பதிவு

வெள்ளி, 24 மார்ச், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 49: சீமான் அரசியலுக்குப் பிராபகரன் பொறுப்பா?

 

ஃஃ       24 March 2023      அகரமுதல 



(தோழர் தியாகு எழுதுகிறார் 48 தொடர்ச்சி)

அன்பர் சத்தியசீலனுக்கு என் மறுமொழி:

சீமான் அரசியலுக்குப் பிராபகரன் பொறுப்பா?

“எனது நோக்கம் விடுதலைப் புலிகளை- பிரபாகரனை இழிவுபடுத்துவது அல்ல!” என்று நீங்கள் அறிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.  “அவர்கள் மீதான மதிப்பை நான் மாற்றிக் கொண்டதாகவும் நான் எங்கும் குறிப்பிடவில்லை” என்று சொல்கிறீர்கள். அப்படியென்றால், சரி. ஆனால் உங்கள் முதல் மடல் எனக்கு மட்டுமல்ல, தாழி அன்பர்கள் சிலருக்கும் கூட அந்த எண்ணத்தை ஏற்படுத்தக் கூடியதாகவே இருந்தது. உங்கள் இப்போதைய விளக்கத்தை அவர்கள் பார்வைக்கும் முன்வைக்கிறேன்.

இடதுசாரி அறிஞர்கள் புலிகளைக் குற்றாய்வு செய்கிறார்கள் என்றால், செய்யட்டும். சரியான குற்றாய்வு என்றால் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்! தவறானது என்றால் மறுக்க வேண்டியதுதான்! இதை நான் கடந்த காலத்தில் செய்துள்ளேன். பிழையாப் பெருமை (infallibility) எவர்க்கும் இல்லை. தவறு செய்யாமலிருக்க ஒரே வழி எதுவும் செய்யாமலிருப்பதுதான்!

இனவாதிகள் பிரபாகரனைப் போற்றிக் கொண்டே பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் கடுமையாகச் சாடுகின்றனர் என்று வருத்தப்பட்டுள்ளீர்கள். மணியரசனும் சீமானும் ஒரு காலத்தில் பெரியாரைப் போற்றிக் கொண்டிருந்தவர்கள்தாம்! இப்போது மாற்றிப் பேசுகின்றார்கள் என்றால் அதை அம்பலமாக்குவோம். ஆனால் “நீ பெரியாரை ஏசினால் நாங்கள் பிரபாகரனை ஏசுவோம்” என்று சிலர் கிளம்பியிருப்பதும், அவர்களது முயற்சியை “தடுத்தாடுதல்” “அடித்தாடுதல்” என்றெல்லாம் சிலர் மெருகிட்டுப் பேசுவதையும் எப்படி ஏற்க முடியும்?

சீமானை முதலமைச்சர் ஆக்கினால் ஈழம் பெற்று விடலாம் என்று சிலர் மயங்கிக் கிடந்தால் அவர்களைச் சாடுங்கள். ஆனால் இந்த மயக்கத்துக்குப் புலிகளோ ஈழத் தமிழர்களோ எப்படிப் பொறுப்பாவார்கள்? “இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என்ற சீமான் வசனத்தைப் புலிகளா எழுதிக் கொடுத்தார்கள்? தமிழ்நாட்டு முதலமைச்சர் பதவி பற்றி பிரபாகரன் என்ன கருதினார் என்று தெரிந்து கொண்டால், சீமான் பேச்சு எவ்வளவு அபத்தம் என்று விளங்கும். கலைஞர், எம்ஞ்சிஆர் யாராயினும் தமிழக அரசு இறைமையற்றதே என்பதால், அவர்கள் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை எதிரொலிக்கும் அறப் பொறுப்பு (தார்மிகக் கடமை) கொண்டவர்களாக இருந்தால் போதும் என்று பிராபகரன் ஒரு செவ்வியில் தெளிவாக்கினார். அப்படியானல் சீமான் முதலமைச்சராகி ஈழம் பெற்றுக் கொடுப்பார் என்று புலிகளோ அவர்களின் தலைமையை ஏற்ற ஈழத் தமிழர்களோ எப்படி நினைப்பார்கள்?

புலிகளின் அரசியல் மீது உங்களுக்கு ஐயப்பாடு வருவதில் தவறில்லை. ஆனால் அந்த ஐயப்பாட்டுக்கு சரியான அடிப்படைகள் இருக்க வேண்டுமே!

இனவாதிகளின் நடவடிக்கைகளுக்குப் பொருளாதாரப் பின்புலமாக “ஈழத்துச் சொந்தங்கள்” இருக்கிறார்கள் என்று நீங்கள் நம்பினால் யார் அந்த ஈழத்துச் சொந்தங்கள் என்று தெளிவுபடுத்துங்கள். ஈழத் தமிழர்களில் சீமானை ஆதரிப்பவர்களும் இருக்கலாம். அது அவர்களின் குடியாட்சிய உரிமை! ஆதரிப்பது தவறு என்று சுட்டிக்காட்டுவது உங்கள் உரிமை! என் உரிமை! ஒருசிலரின் சொல்லையும் செயலையும் வைத்து எல்லா ஈழத்தமிழர்கள் மீதும் பழி போடுவதும், அந்த அடிப்படையில் புலிகளின் அரசியல் கொள்கைகளை ஐயுறுவதும் நியாயம் இல்லைங்க!

நீங்கள் என்ன எழுதியிருக்கின்றீர்கள்? என்பதை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்:

“அவர்களை வீழ்த்தி சீமானை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்து, (முன்பு கூவினார்களே- இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று அதுபோல்) ஈழத்தைப் பெற்றுவிடலாம் என்று குறுக்கு வழியில் யோசிக்கிறார்களோ என்றுதானே கருதவேண்டியிருக்கிறது!

“மக்கள் எவ்வழி மகேசன் அவ்வழி” என்பதுபோல் இத்தகைய சிந்தனை உடைய மக்களின் தலைவரான பிரபாகரன் அவர்களையும் நாம் ஐயுறவேண்டியிருக்கிறது – அவர் மக்கள் தலைவராக விளங்கியிருக்கும் பட்சத்தில்!”

இது நீங்கள் எழுதியிருப்பதன் நேர்க் கூற்று! நான் எதையும் மாற்றவில்லை.

சீமான் நாம் தமிழர் கட்சி தொடங்குவதற்கு முன்பே தலைவர் பிரபாகரன் இறுதிப் போர்க் களத்தில் வீரச் சாவடைந்து விட்டார், தெரியும்தானே? சீமானின் “நானே முதலமைச்சர்” அரசியலுக்கோ, அதன் மீது சிலருக்குள்ள பாமர மயக்கத்துக்கோ பிரபாகரனைக் குறை சொல்வது உங்கள் வாதுரையின் சா முரண்பாடு! புரிகிறதா?

[சா முரண்பாடு = fatal contradiction]

சீமானைக் கடுமையாகக் குற்றாய்வு செய்யும் ஈழத் தமிழர்கள் பலர் உண்டு. அவர்கள் யாரும் உங்கள் கவனத்துக்கு வரவில்லை எனத் தோன்றுகிறது. சீமானுக்குப் பொருளாதாரப் பின்புலமாகப் புலம்பெயர் தமிழர்கள் இருப்பதாக நம்பச் சொல்வது பெரும்பாலும் ஒரு மாயத்திரை! உண்மையான பொருளாதாரப் பின்புலத்தை மறைக்கும் முயற்சி! அவர்கள் இல்லை என்றால், வேறு யார்? பிறகு சொல்கிறேன்.

இனவாதிகளின் அவதூறுகளை நீங்கள் ஏற்க வேண்டா. ஆனால் ஈழம் தொடர்பான திமுக அதிமுக நிலைப்பாட்டில் உங்கள் திறனாய்வு என்ன? சிந்தித்துச் சீர்தூக்கி உவத்தல் காய்தல் இல்லாமல் சொல்லுங்கள்.

உரையாடலைத் தொடர்வோம்.

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 32

வியாழன், 1 செப்டம்பர், 2022

இலக்குவனார் நினைவுநாளில் தமிழர் கோவில்களில், தாய்த்தமிழில் வழிபாடு – சீமான்

 

அகரமுதல




இலக்குவனார் நினைவுநாளில் தமிழர் கோவில்களில், தாய்த்தமிழில் வழிபாடு

“அன்னைத் தமிழில் அருச்சனை” என்ற பெயரில் தமிழ்நாடு அரசு சென்ற ஆண்டு ஒரு திட்டத்தை அறிவித்தது. அதன்படி இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்துக் கோவில்களிலும் தமிழில் வழிபாடு (அருச்சனை) செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நாம் அறிந்த வரை இந்தத் திட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப் பட்டதாகத் தெரியவில்லை.

நாடு “தமிழ்”நாடு. ஆனால், தமிழில் வழிபாடு செய்யப் போராட வேண்டிய நிலையில் தான் கடந்த 55-ஆண்டுக் காலத் திராவிட அரசுகள் இயங்கி இருக்கின்றன.

இந்நிலையை மக்களுக்கு எடுத்துரைக்கவும், மக்களும் தமிழ் வழிப்பாட்டு உரிமையைக் கோர உந்தும் வகையில், நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சிப் பாசறையும், வீரத்தமிழர் முன்னணியும் இணைந்து தமிழ்நாடு முழுவதும் “தாய்த்தமிழில் வழிபாட்டை” முன்னெடுக்கிறது.

தமிழ்நாடு முழுவதிலும் அனைத்துத் தொகுதிகளிலும் தொகுதி, மாவட்ட, நாடாளுமன்றப் பொறுப்பாளர்கள், பாசறைப் பொறுப்பாளர்கள் இணைந்து இந்து அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு முதன்மைக் கோயிலுக்குத் தத்தம் குடும்பங்களுடன் சென்று தமிழில் வழிபாடு செய்யக் கோரி, கோவில் பொறுப்பாளர்களையும் (நிருவாகத்தையும்) பூசாரிகளையும் நடைமுறையில் தமிழ் வழிபாட்டைச் செய்ய வைக்க வேண்டும்.

இதைத் தமிழுக்காக 1965-இல் பெரும் மொழிப்போரை முன்னின்று நடத்திய பேராசிரியர் சி. இலக்குவனார் அவர்களின் நினைவு நாளான செட்டம்பர் 3-ஆம் நாள் தமிழ்நாடு முழுவதிலும் முன்னெடுப்போம். இதை ஒரு நாள் நிகழ்வாக மட்டுமில்லாமல், நேரம் கிடைக்கும் போதெல்லாம், கட்சிப் பொறுப்பாளர்கள் இணைந்து குடும்பங்களுடன் அருகில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று தமிழில் வழிபாடு செய்வதை முன்னெடுக்க வேண்டும்.

மேலதிகச் செய்திகளுக்குக் கீழ்க்காணும் எண்களில் தொடர்பு கொள்ளவும்:

தலைமை நிலையம் – 044-43804084

தமிழ் மீட்சிப் பாசறை – சௌமியா (மாநில செய்தித் தொடர்பாளர்) – 9094784074

வீரத்தமிழர் முன்னணி – செந்தில்நாதன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) – 7904303147

“தமிழர் கோவில்களில், தமிழில் வழிபாடு”

இது கோரிக்கையல்ல, நமது உரிமை!

அன்புடன்,

சீமான்.






செவ்வாய், 16 ஜூலை, 2013

மீண்டும் ஒரு மொழிப்போருக்குத் தமிழ் இனம் தயாராக வேண்டும்- சீமான்

தமிழில் வாதாட மறுப்பு: மீண்டும் ஒரு மொழிப்போருக்கு த் தமிழ் இனம் தயாராக வேண்டும்- சீமான் அறிக்கை
தமிழில் வாதாட மறுப்பு: மீண்டும் ஒரு மொழிப்போருக்கு தமிழ் இனம் தயாராக வேண்டும்- சீமான் அறிக்கை
சென்னை, ஜூலை. 16–
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோட்டிற்குட்பட்ட ஒரு கிராமத்தில் தான் கட்டியுள்ள வீட்டிற்கு திட்ட அனுமதி அளிக்க கருங்கல் கிராம பஞ்சாயத்திற்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட மனுவில், மனுதாரர் சார்பில் வாதாடிய வழக்கு ரைஞரும், தமிழில் வாதாட உரிமை கோரி 2010-ம் ஆண்டில் நடந்த சாகும்வரை பட்டிணிப் போராட்டத்தில் ஈடுபட்ட போராளியுமான பகத்சிங், தனது வாதத்தை தமிழில் பேசத் தொடங்கியதும், அதனை ஏற்க மறுத்த நீதிபதி இந்திய அரசமைப்பு பிரிவு 348-ஐயும், உச்ச நீதிமன்றத்தில் ராஜ் நாராயணன் இந்தி மொழியில் வாதிட்டதை ஏற்க மறுத்து பிறப்பித்த உத்தரவையும் காரணம் காட்டி, தமிழில் வாதிடுவதை ஏற்க முடியாது என்று கூறியது மட்டுமின்றி, அதையே காரணமாகக் காட்டி மனுவை விசாரணைக்கு உட்படுத்தாமல் தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டுள்ளார். இது வேதனைக்குரிய நடவடிக்கையாகும்.
தமிழ் மொழியில் வாதிடும் வழக்குரைஞர்களிடம் வழக்கை கொண்டு செல்லாதீர்கள், அதனை நீதிமன்றம் ஏற்காது என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதாக இந்த நடவடிக்கை இருக்கிறது. இது தமிழ் மொழியை, அதன் தகுதி நிலையை இழிவுபடுத்துவதாகும். தமிழ் மொழியில் வாதாட மறுப்பது என்பது எமது இனத்தின் அடிப்படை உரிமை மறுப்பே, அதனை தன்மானமுள்ள தமிழினம் எப்படி ஏற்றுக்கொள்ளும்?
இந்திய நாடு வெள்ளையரின் காலனி ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தபோது கூட, அவன் வெளியிட்ட நாணயத்தில் தமிழில் எழுத்தப்பட்டிருந்தது. ஆனால், விடுதலை பெற்ற நாடாக இந்தியா மாறிய நாளில் இருந்து, ஒவ்வொரு துறையிலும் தமிழ் மொழிக்கு உரிய நிலை மறுக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் உயர் நீதி மன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக டெல்லியிடம் கையேந்தி நிற்க வேண்டிய நிலைதான் உள்ளதெனில், தமிழர் விடுதலை பெற்ற ஒரு நாட்டின் அடிமை இனமா? என்று கேட்கிறோம்.
தமிழ்நாட்டின் நிர்வா கத்தை, அது தொடர்பான நடவடிக்கைகளை முறை படுத்தும் சட்டமியற்றக்கூடிய அரசமைப்பு உரிமை தமிழ் நாட்டிற்கு உள்ளதென்றால், எம் மாநிலத்தில் இயங்கும் உயர் நீதிமன்றத்தில் வழக் காடு மொழியாக தமிழ் இருப்பதற்கு மட்டும் சட்ட மியற்றும் அதிகாரம் எமக் கில்லையா? எனது இனத்தின் தன்மானத்திற்கு விடப்பட்ட சவால் அல்லவா இது?
உயர் நீதிமன்றங்களில் எந்த மொழியில் அல்லது மொழிகளில் வாதிடலாம் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் அந்தந்த மாநிலங்களின் சட்டப்பேரவைக்கே உள்ளது என்கிற திருத்தத்தை கொண்டு வர தமிழக அரசு உடனடியாக முயற்சி மேற்கொள்ள வேண்டும். இலங்கை இனப்பிரச்சனையில் தானே தீர்மானங்களை முன்மொழிந்து நிறைவேற்றியதுபோல், தமிழை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக்க வகை செய்யும் அரசமைப்புத் திருத்தத்தை கொண்டு வர வலியுறுத்தும் தீர்மானத்தை தமிழக முதல்வரே கொண்டு வந்து நிறைவேற்றிட வேண்டும். அப்படிப்பட்ட முயற்சி தோல்வியுற்றால், இந்தி மொழிக்கு எதிராக கிளர்ந் தெழுந்ததுபோல், மற்றொரு மொழிப்போருக்கு தமிழினம் தயாராக வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சனி, 18 மே, 2013

காசுமீர்- தமிழ்மண் இரு போராட்டங்களும் ஒரே மாதிரியானவை: யாசின் மாலிக்

காசுமீர்- தமிழ்மண் இரு போராட்டங்களும் ஒரே மாதிரியானவை: யாசின் மாலிக்

காஷ்மீரில் நடைபெறும் விடுதலைப் போராட்டமும் தமிழ்மண்ணில் நடைபெறும் போராட்டமும் ஒரே மாதிரியானவை என்று கூறினார் பிரிவினைவாதத் தலைவரும் ஜம்மு கஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவருமான யாசின் மாலிக்.
கடலூரில் சனிக்கிழமை இன்று பிற்பகல் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் உள்ளரங்குக் கூட்டத்தில் பேசிய அவர், 
"இன விடுதலைக்கான போராட்டங்கள் அவ்வளவு எளிதாக வெற்றி பெறுவதில்லை. அதுபோல், அடக்குமுறைகள் மூலம் இன விடுதலைக்கான போராட்டங்கள் ஒடுக்கப்பட்டதுமில்லை. காஷ்மீரில் நடைபெறும் போராட்டமும், தமிழர்களின் போராட்டமும் ஒரே மாதிரியானதுதான். தமிழர்களின் இந்த இன விடுதலைப் போராட்டம் வரவேற்கத்தக்கது. ஜனநாயக முறையில் நடக்கும் இந்தப் போராட்டத்தை ராணுவத்தைக் கொண்டோ,. போலீஸைக் கொண்டோ அடக்கி ஒடுக்க முடியாது.
தமிழர்களின் போராட்டத்துக்கு எங்கள் ஆதரவு தொடரும் என்று பேசினார் யாசின் மாலிக்.

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

மீனவர்களைத் தாக்குவது வேறு யார்? சீமான் கேள்வி

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை தாக்கவில்லை எனில் தாக்குவது வேறு யார்? சீமான் கேள்வி

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கவில்லை என்றால், பிறகு தாக்குவது யார்? என்று இலங்கை அரசுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
இலங்கையை நட்பு நாடு என்று அழைக்கக்கூடாது என்றும், அதற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தங்களின் மன அமைதியை குலைப்பதாக உள்ளது என்றும், இலங்கை அரசுக்கு எதிராக கூறப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டவை என்றும் இலங்கை அயலுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தங்களின் மன அமைதியை குலைப்பதாக கூறும் சிங்கள பெளத்த இனவாத இலங்கை அரசு, தனது முப்படைகளையும் பயன்படுத்தி, ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்களை கொன்றொழித்தது தமிழ்நாட்டு மக்களின் மன அமைதியை எந்த அளவிற்கு பாதித்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கும் மனிதாபிமானமுள்ள அரசா என்று கேட்கிறோம்.
தங்களுடைய அரசுக்கு எதிரான மனித உரிமை குற்றச்சாற்றுகள் அனைத்தும் வதந்தி மற்றும் தவறான தகவல்களின் அடிப்படையில் கூறப்படும் குற்றச்சாற்றுகள் என்று கூறும் இலங்கை அரசு, பின் எதற்காக சுந்திரமான பன்னாட்டு விசாரணை ஏற்க மறுக்கிறது?
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளை இலங்கை அதிபரே நியமித்த கற்ற பாடங்களும் இணக்கப்பாடு ஆணையம் என்ற விசாரணை அமைப்பே தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதே. ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் கடந்த செப்டம்பரில் நடந்த மனித உரிமை மீளாய்வுக் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக தெரிவிக்கப்பட்ட 40 மனித உரிமை மீறல் குற்றச்சாற்றுகளில் 20 குற்றச்சாற்றுகளை உங்கள் அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறதே? உலகின் முன்னணி மனித உரிமை அமைப்புகள் நான்கும் இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் பல்லாயிரக்கணக்கில் அப்பாவித் தமிழ் மக்களை இலங்கையின் முப்படைகளும் கொன்றொழித்தன என்று ஆதாரத்துடன் கூறுகின்றனரே? இறுதி கட்ட போருக்குப் பிறகு வன்னிப் பகுதியில் இருந்த மக்களில் 1,46,679 பேர் இல்லையே, அவர்கள் என்ன ஆனார்கள் என்று மன்னார் பேராயர் ஜோசப் ராயப்பு எழுப்பிய கேள்விக்கு இன்றுவரை இலங்கை அரசு பதில் கூறாதது ஏன்?
அரசியல் சம உரிமை கேட்டு போராடிய எமது மக்களின் மீது தெற்காசிய வல்லாதிக்கங்களின் ஆதரவுடன்  போர் நடத்தி, தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்திக் கொன்று குவித்ததோடு நிறுத்திக்கொள்ளாமல், தமிழீழ தேசத்தையே முழுமையான இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்து, வாழவும் விடாமல், சாகவும் விடாமல் வதைத்துக்கொண்டிருக்கும் சிங்கள பெளத்த இனவாத இலங்கை அரசு, ஏதோ புனிதர்களைப் போல் பேசுவதை ஏற்றுக்கொள்ள இந்த உலகி்ல் ஒரு மடையனும் இல்லை என்பதை இலங்கை இனவெறி அரசு புரிந்துகொள்ள வேண்டும்.
 எங்களைப் பொறுத்தவரை, தமிழீழ விடுதலையை வென்றெடுக்காமல் எமது மக்கள் சுதந்திரமாக, அரசியல் முழு உரிமையுடன் வாழ வழியேதும் இல்லை என்பதில் உறுதியாகவுள்ளோம். அந்த இலக்கை எட்டும் வரை தமிழ்நாடு மட்டுமல்ல, உலக நாடுகளில் உள்ள தமிழர்கள் அனைவரும் தொடர்ந்து போராடுவோம்.
 ‘எல்லை தாண்டி வரும்’ தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதாக வெளியாகும் தகவல்கள் அனைத்தும் தவறானவை என்றும், அதில் உண்மை ஏதும் இல்லை என்றும் இலங்கை அரசு அறிக்கை கூறுவது வேடிக்கையாகவுள்ளது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கவில்லையென்றால் பிறகு அவர்களை தாக்குவது யார் என்பதை இலங்கை அரசு கூற வேண்டும்.
 எல்லைத் தாண்டிச் சென்று மீன் பிடிப்பதால்தான் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இரையாகிறார்கள் என்று இந்திய மத்திய அரசே இந்தியாவின் நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறது என்பதை அதன் நட்பு நாடான இலங்கை அரசு மறந்துவிட்டதா? இந்தியாவின் கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது எத்தனை முறை இலங்கை கடற்படையினரால் எமது மீனவர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். இது பற்றி ஆயிரக்கணக்கான புகார்களை எமது மீனவர்கள் அளித்திருக்கிறார்கள். ஆனால், அவைகளின் மீது நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்ற எண்ணமற்ற அரசாக இந்திய மத்திய அரசு இருப்பதால், எமது மீனவர்களுக்கு நியாயம் கிட்டவில்லை. எனவே முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கு வித்தையை அறிக்கைகளில் காட்டி ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம்.
எல்லைத்தாண்டி வந்து இந்திய கடற்பரப்பிற்குள் மீன் பிடிக்கும் சிங்கள மீனவர்களை கைது செய்யும் இந்திய கடலோர காவற்படை எப்போதாவது அவர்களை அடித்துத் துன்புறுத்தியுள்ளதா? என்று கேட்கிறோம். ஏனெனில் இந்திய அரசு உங்களை நட்பு நாடாக கருதுகிறது, ஆனால் நீங்கள் இந்திய மீனவர்களை எதிரி நாட்டு மீனவர்களாகவே கருதி தாக்குதல் நடத்துகிறீர்கள். இதனை தெரிந்தே இந்திய மத்திய காங்கிரஸ் அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்த உண்மையெல்லாம் தமிழக மக்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள். அவர்கள் அடுத்து வரும் மக்களவைத் தேர்தலில் இதற்கெல்லாம் பதில் சொல்வார்கள்.
- என்று கூறியுள்ளார்.

வியாழன், 28 மார்ச், 2013

தனி ஈழ வாக்கெடுப்பு கோரும் தீர்மானம் ஒரு திருப்புமுனை: சீமான்

தனி ஈழ வாக்கெடுப்பு கோரும் தீர்மானம் ஒரு திருப்புமுனை: சீமான்

தனி ஈழம் குறித்து வாக்கெடுப்பு நடத்தக் கோரும் தீர்மானம் ஒரு திருப்பு முனை என்று கூறியுள்ளார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை...

ஈழத் தமிழினத்தை கடந்த அரை நூற்றாண்டுக் காலமாக திட்டமிட்டு அழித்துவரும் இலங்கை அரசிடமிருந்து தங்களை விடுவித்துக்கொண்டு தனி தமிழ் ஈழத்தை அமைக்க, இலங்கையில் வாழும் தமிழர்களிடமும், புலம் பெயர்ந்து உலக நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் ஒரு பொது வாக்கெடுப்பை ஐ.நா.மன்றம் நடத்திட வேண்டும் என்கிற தீர்மானத்தை தமிழக சட்டப் பேரவையில் முன்மொழிந்து நிறைவேற்றியதற்காக தமிழக முதல்வருக்கு நாம் தமிழர் கட்சி நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறது.
 தமிழக சட்டப் பேரவையில் அனைத்துக் கட்சிகளின் பேராதரவோடு நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திருப்புமுனையாகும். தமிழீழ மக்களிடையே வாக்கெடுப்பு நடத்திட வேண்டும் என்ற கோரிக்கையை தாய்த் தமிழ்நாட்டின் சட்டப் பேரவை நிறைவேற்றியுள்ளது, இராஜதந்திர ரீதியிலான ஒரு அழுத்தத்தை இந்திய மத்திய அரசுக்கு ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி, உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்ட ஒரு அழுத்தமான செய்தியுமாகும்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இப்படியொரு தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய தமிழக முதல்வர், தமிழினத்தை அழித்தொழித்த சிங்கள பெளத்த இனவாத அரசு நடத்திய போருக்கு இந்திய மத்திய காங்கிரஸ் அரசு, ஆயுதம் அளித்ததையும், பயிற்சி அளித்ததையும், ஆலோசனை வழங்கியதையும், மிக நவீனமாக ராடார் கருவிகளை வழங்கியதையும், இந்திய இராணுவத்தின் உயர் அதிகாரிகள் இலங்கைக்குச் சென்று உதவியதையும் அழுத்தம் திருத்தமாக சுட்டிக்காட்டியுள்ளதன்மூலம், ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் மட்டுமின்றி, சர்வதேச அரங்கில் இலங்கை அரசை, தனது இராஜதந்திரத்தைப் பயன்படுத்தி காப்பாற்றி வரும் இந்திய மத்திய காங்கிரஸ் அரசின் முகமூடியை கிழத்தெறிந்துள்ளார் தமிழக முதலமைச்சர். அதற்காகவும் தமிழக முதல்வரை நாம் தமிழர் கட்சி பாராட்டுகிறது.
 தமிழினத்தை ஒட்டுமொத்த அழித்தொழிக்கும் திட்டத்துடன் நடத்தப்பட்ட அந்த போரில் சிறு பிள்ளைகள், பெண்கள், முதியவர்கள் என்று தங்கள் சொந்தங்களை பல்லாயிரக்கணக்கனில் இழந்த நம் ஈழத்து சொந்தங்களுக்கும், நாட்டை விட்டு துரத்தப்பட்டு தமிழ்நாட்டில் அகதிகளாய் வாழ்ந்துவரும் தமிழ் மக்களுக்கும் தமிழக சட்டப் பேரவை நிறைவேற்றியுள்ள தீர்மானம் நம்பிக்கையைத் தருவதாகவுள்ளது.
 தமிழினத்தின் விடுதலைக்காகவும், உரிமை மீட்பிற்காகவும் உழைத்துவரும் நாம் தமிழர் கட்சி, தமிழக முதல்வருக்கு ஒரு முக்கியமான வேண்டுகோளை விடுவிக்க விரும்புகிறது. இன்றைக்கு தமிழினத்திற்காக பேசுவதற்கு உலகில் ஒரு நாடு கூட இல்லாத நிலையில், தமிழினத்தின் உணர்வையும், நமது அழுத்தமான கோரிக்கைகளையும் ஐ.நா. அவையின் தலைமை பொதுச் செயலர் பான் கீ மூனை சந்தித்துத் தெரிவிக்க தமிழக சட்டமன்றக் குழு ஒன்றை தமிழக அரசு அனுப்ப வேண்டும். மத்திய அரசின் அங்கீகாரமற்ற ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை இலங்கைக்கு அனுப்பி, அங்குள்ள அகதிகள் முகாமில் தமிழர்கள் நன்றாக நடத்தப்படுகிறார்கள் என்று பொய்யான ஒரு அறிக்கையை மத்திய அரசுக்கு வழங்குவது அனுமதிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு, அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த சட்டப் பேரவை உறுப்பினர்கள் குழுவை ஏன் ஐ.நா.பொதுச் செயலரை சந்திக்க அனுப்பக் கூடாது?
 அப்படி ஒரு குழுவை அனுப்பி, தமிழினத்தின் உணர்வையும், தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தை ஐ.நா. பொதுச் செயலருக்கு விளக்கிட தமிழக அரசு முன்வர வேண்டும். அதுவே இத்தருணத்தில் செய்திட வேண்டிய சரியான பணியாக இருக்க முடியும்.

வெள்ளி, 26 நவம்பர், 2010

சீமான் வழக்கு: அரசை எதித்து ப் போராடுவோம்- வழக்கறிஞர் என். சந்திரசேகர்


சோனியா, இராசபக்சே ஆகியோரின் மனநிறைவிற்காகச் சீமானைக் கைது செய்து அடைத்து  வைத்திருப்பது பெரும் தவறுதான். எனினும் கவலைப்பட வேண்டா. மத்திய அரசிலிருந்து விலகலாம என எண்ணுவதாக முதல்வர் பேசியுள்ளார். அந்த நிலை வநதால் தானாகவே சீமான்  விடுதலை ஆவார். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


சீமான் வழக்கு: அரசை எதித்து போராடுவோம்- வழக்கறிஞர் என். சந்திரசேகர்

First Published : 26 Nov 2010 03:39:39 AM IST


சென்னை, நவ.25: நடிகரும், இயக்குநருமான சீமான் மீதான வழக்கில் அரசு சார்பில் வாய்தா வாங்குவது தொடர்ந்தால் போராட்டம் நடத்தப்படுமென்று சீமானின் வழக்கறிஞர் என். சந்திரசேகர் கூறினார்.  தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக பேசிதாக சீமான் மீது தொடரப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. இதில் ஆஜராக தமிழக அரசு வழக்கறிஞர் வரவில்லை. இதனால் வழக்கு டிசம்பர் 3-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.  இது குறித்து அவரது வழக்கறிஞர் சந்திரசேகர் நீதிமன்ற வளாகத்தில் கூறியது:  இந்த வழக்கு கடந்த 16-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, அட்வகேட் ஜெனரல் ஆஜராகுகிறார் என்று கூறி, அரசு தரப்பு நவம்பர் 25-ம் தேதிக்கு வாய்தா வாங்கியது.  அதன்படி, அந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வியாழக்கிழமையும் விசாரணைக்கும் அட்வகேட் ஜெனரல் வரவில்லை. இதையடுத்து டிசம்பர் 3-ம் தேதிக்கு வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.  அட்வகேட் ஜெனரல் அரசு தொடர்பான வழக்குகளில் ஆஜராவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். சீமான மீதான வழக்கில் அரசு சதி செய்கிறது. இந்த நிலை தொடர்ந்தால், தமிழக அரசை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்படும். அரசு வழக்கறிஞர்கள் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவோம். இந்த வழக்கில் அட்வகேட் ஜெனரல் ஆஜராக அரசு வலியுறுத்த வேண்டும். வாய்தா வாங்கும் அரசை கண்டிக்கிறோம் என்று வழக்கறிஞர் சந்திரசேகரன் கூறினார்.

செவ்வாய், 23 ஜூன், 2009

ஜூன் 23,2009,00:00 IST





கோவை: ""மக்கள் சிந்திக்கக் கூடாது என்பதற்காகவே, கம்ப்யூட்டர் தர வேண்டிய காலத்தில் கலர் "டிவி' வழங்கி, டாஸ்மாக் மதுபான விற்பனை நடக்கிறது,'' என சினிமா டைரக்டர் சீமான் தெரிவித்தார். ஈழ ஆதரவாளர் விடுதலை கோரிக்கை மாநாடு, கோவை - புலியகுளத்தில் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற டைரக்டர் சீமான் பேசியதாவது: தேசிய பாதுகாப்பு சட்டம் இப்போது, தேவையில்லாத காரணத்துக்காக பயன்படுகிறது. என்னை புதுச்சேரி அரசு கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கிறது; அந்த மாநிலத்தில் அப்படியொரு சட்டமே இல்லை.
புதுக்கோட்டையில் பேசும் போது, "பிரபாகரன் எனது அண்ணன்' என்று பேசி விட்டேனாம். இத்தாலி நாட்டைச் சேர்ந்த சோனியாவை, "அன்னை' எனும் போது, தமிழ் ரத்தமான பிரபாகரனை, "அண்ணன்' என்று சொல்வது தவறா? இப்படி கூறியதால் இந்த தேசத்துக்கு என்ன நஷ்டம் ஏற்பட்டு விட்டது? விடுதலைப்புலிகள் இயக்கம், இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்நாட்டு பார்லிமென்ட் கட்டடங்கள் முன், ஆயிரக்கணக்கான தமிழர்கள் பிரபாகரன் படத்துடன் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அம்மக்களின் உணர்வுகளை அந்நாட்டு அரசுகள் மதித்தன. அதுதான் உண்மையான ஜனநாயகம். ஆனால், இங்கோ தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்கிறது.
விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் இறப்பு சான்றிதழ் பெற, வெளியுறவு செயலர்கள், சிவசங்கர மேனனும், நாராயணனும் இலங்கைக்கு தனி விமானத்தில் செல்கின்றனர். "பிரபாகரன் இறந்து விட்டார்; விடுதலைப்புலிகளை முற்றிலும் அழித்து விட்டோம்' என சொல்லும் இலங்கை அரசு, ராணுவத்துக்கு ஒரு லட்சம் வீரர்கள் புதிதாக சேர்க்கப்படுவர் எனக் கூறுவது எதனால்? ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில், போராட்டம் நடத்த அனுமதியில்லை. ஏன் போராட்டம் நடத்தக்கூடாது என மக்கள் சிந்திக்காமல் இருப்பதற்காகவே, கம்ப்யூட்டர் தர வேண்டிய காலத்தில் இலவச கலர், "டிவி' கொடுக்கின்றனர்; டாஸ்மாக் மதுபானக் கடையையும் திறந்து விட்டுள்ளனர். இவ்வாறு டைரக்டர் சீமான் பேசினார்

செவ்வாய், 9 ஜூன், 2009

தமிழுணர்வு தமிழகத் தலைவர்களிடம் இல்லை




பெங்களூர், ஜூன். 8-
கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் சார்பில் இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த அந்த நாட்டு அரசையும், இந்திய அரசையும் கண்டித்தும், போரால் பாதிக்கப்பட்டு பட்டினியால் வாடும்தமிழர்களுக்கு மனித சமுதாயம் உதவவும், தமிழீழ விடுதலை போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும்பெங்களூர் கிழக்கு ரெயில் நிலையம் அருகேஉள்ள மைதானத்தில் கண்டன பொதுக்கூட்டம், மனித சங்கிலி போராட்டம்நடந்தது.
கூட்டத்தில் டைரக்டர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் பேசியதாவது:-
புலிகளுடன் இறுதி கட்டப்போர் என கூறி சுமார் 25,000க்கும் அதிகமான அப்பாவி தமிழர்களை இலங்கை ராணுவம் கூண்டோடு படுகொலை செய்துள்ளது.
இது போல பெருங்கொடுமை எங்கும் நடக்கவில்லை. போரில் புலிகள் இயக்கதலைவர் பிரபாகரனும், மற்ற தலைவர்களும் இறந்துவிட்டார் என அந்நாட்டு அரசு பொய்ப்பிரசாரம் செய்து வருகிறது. போரில் வென்று விட்டோம், புலிகள் ஒழிந்தார்கள் என்று ராஜபட்ச மார்தட்டிக்கொள்கிறார். ஆனால் இனிமேல்தான் தமிழீழ போராட்டம் தீவிரமடையப்போகிறது.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பெங்களூரில் நேற்று நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் இயக்குனர் சீமான் பேசிய போது எடுத்த படம்.
இது போல பெருங்கொடுமை எங்கும் நடக்கவில்லை. போரில் புலிகள் இயக்கதலைவர் பிரபாகரனும், மற்ற தலைவர்களும் இறந்துவிட்டார் என அந்நாட்டு அரசு பொய்ப்பிரசாரம் செய்து வருகிறது. போரில் வென்று விட்டோம், புலிகள் ஒழிந்தார்கள் என்று ராஜபட்ச மார்தட்டிக்கொள்கிறார். ஆனால் இனிமேல்தான் தமிழீழ போராட்டம் தீவிரமடையப்போகிறது.
போரில் தமிழர்கள் வசித்த நிலப்பரப்பை பறித்திருக்கலாம். ஆனால் ராஜபட்சவால் தமிழர்களின் ஈழக்கோரிக்கையை பறிக்க முடியாது.
இலங்கையில் போரை நிறுத்துமாறு இந்தியாவும், பிற நாடுகளும் அழுத்தமாக கூறி நடவடிக்கை எடுக்காதது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
குடும்பமே அழிந்தாலும் தமிழீழத்துக்காக தொடர்ந்து போராடினார் பிரபாகரன். ஆனால் தமிழகத்தில் உள்ள சில அரசியல் தலைவர்கள், தமிழினம் அழிந்தாலும் என் குடும்பம் வளர பாடுபடுவேன் என்கிறார்கள். கர்நாடகத்தமிழர்களிடத்தில் உள்ளதமிழ்உணர்வு கூட தமிழக தலைவர்களிடம் இல்லை.
காங்கிரஸ் கூட்டணி அரசு இலங்கையில் தமிழினத்தை அழிக்க ஆயுதங்களை வழங்கியது மன்னிக்க முடியாத குற்றம் என்றார்.

ஞாயிறு, 31 மே, 2009

பிரபாகர‌ன் செ‌ய்த ஒரே தவறு, ந‌ல்லவனாக, ‌அ‌ற்புத ம‌னிதனாக இரு‌ந்ததுதா‌ன்: சீமா‌ன் ஆவேசம்

seeman

பிரபாகர‌ன் செ‌‌த்து‌வி‌ட்டார‌ா‌ம். மா‌வீரனு‌க்கு ஏதடா மரண‌ம். வா‌ர்‌‌த்தை‌யி‌ல் வே‌ண்டுமானா‌ல் அவ‌ர் மரண‌ம் அட‌ை‌ந்‌‌திரு‌க்கலா‌ம். வா‌ழ்‌க்கை‌யி‌ல் அவ‌ர் ஒருபோது‌ம் மரண‌ம் அடையமா‌ட்டா‌ர். பிரபாகர‌ன் செ‌ய்த ஒரே தவறு, ந‌ல்லவனாக, ‌அ‌ற்புத ம‌னிதனாக இரு‌ந்ததுதா‌ன் எ‌ன்று இய‌க்குன‌‌ர் ‌‌சீமா‌ன் கூ‌றினா‌ர்.

இயக்குனர் பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேற்‌று முன்தினம் இரவு பொதுக்கூட்டம் நடந்தது. இ‌ந்த கூ‌ட்ட‌த்‌தி‌ல் கல‌ந்து கொ‌ண்டு இய‌க்குன‌ர் ‌சீமா‌ன் பேசுகை‌யி‌ல்,”இய‌க்குன‌ர் பார‌திராஜா ஒரு மாபெரு‌ம் கலைஞ‌‌ன். பாலா, சேர‌ன், த‌ங்க‌ர்ப‌ச்சா‌ன் உ‌ள்‌ளி‌ட்ட எ‌ண்ண‌ற்ற கலைஞ‌ர்க‌ள் பூ‌த்து‌க்குலு‌ங்க காரணமாக உ‌ள்ள அடிமர‌ம். அவ‌ர் அலுவலக வாச‌லி‌ல் உ‌ள்ள வே‌‌ப்பமரமு‌ம் நா‌‌ங்களு‌ம் ஒ‌ன்றாக வள‌ர்‌ந்தவ‌ர்க‌ள். அவ‌ர் அலுவலக‌த்தை தா‌க்‌கியு‌ள்ளன‌ர்.

ஒரு த‌மிழ‌ன் த‌மிழனாக இரு‌ந்தத‌ற்காக ‌கிடை‌த்த ப‌ரிசு இது. ஈழ‌த் த‌‌மிழ‌ர்க‌ள் இல‌ங்கை‌யி‌ல் ‌மிர‌ட்ட‌ப்படு‌‌கிறா‌ர்க‌ள். அவ‌ர்களு‌க்கு ஆதரவாக இரு‌ப்பவ‌ர்க‌ள் இ‌ங்கு ‌மிர‌ட்ட‌ப்படு‌‌கிறா‌ர்க‌ள்.

எ‌ன்னை‌‌த் தொட‌ர்‌ந்து 4 முறை ‌சிறை‌யி‌ல் அடை‌த்தா‌ர்க‌ள். நா‌ன் எ‌ன்ன தவறு செ‌ய்தே‌ன். எ‌ன் இன‌ம் அ‌ழி‌க்க‌ப்படுவதை‌க் க‌‌ண்டு ந‌ல்ல அ‌‌ப்பனு‌க்கு‌ப் ‌பிற‌ந்த எ‌ன்னா‌ல் பொறு‌க்க முடிய‌வி‌ல்லை. நா‌ன் ‌சிறை‌யி‌ல் அடை‌க்க‌ப்ப‌ட்டதா‌ல் எ‌ன் தொ‌‌‌ழி‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டது. எ‌ன்னுடைய காரை எ‌‌ரி‌த்தா‌ர்க‌ள். உ‌யி‌ர் எ‌ன்பது உ‌திரு‌ம் ம‌யிரை‌ப் போ‌ன்றது. ஒரு ல‌ட்ச‌ம் து‌ப்பா‌க்‌கிகளை‌க் கட‌ந்து செ‌ன்று ‌பிரபாகரனை ச‌ந்‌தி‌த்தவ‌ன் நா‌ன். இத‌ற்கெ‌ல்லா‌ம் பய‌ப்பட மா‌ட்டே‌ன். பே‌சினா அடி‌ப்போ‌ம் இதுதா‌ன் ஜனநாயகமா?

தா.பா‌ண்டிய‌ன் காரை எ‌‌‌ரி‌த்தா‌ர்க‌ள். யாரை கைது செ‌ய்‌தீ‌ர்க‌ள். த‌மிழ‌ன் மன‌‌தி‌ல் இடி‌விழு‌ந்து ந‌ி‌ற்‌கிறா‌ன். த‌மி‌‌ழ்‌ச்சா‌தி உறை‌ந்து போ‌ய் ‌கிட‌க்‌கிறது. இ‌ந்‌தியா நட‌த்த‌ வே‌ண்டிய போரை நா‌ங்க‌ள் நட‌‌த்‌தியு‌ள்ளோ‌ம் எ‌ன்று ராஜப‌க்சே கொ‌க்க‌ரி‌க்‌கிறா‌ன். 25,000 ஈழ‌த் த‌‌மிழ‌ர்களை உ‌யிரோடு புதை‌த்து‌ள்ளன‌ர் ‌சி‌ங்கள‌வர்க‌ள்.

பிரபாகர‌ன் இற‌ந்து ‌வி‌ட்டா‌ர், அவ‌ர் உடலை எ‌‌ரி‌த்து சா‌ம்பலை கட‌லி‌ல் ‌வீ‌சி‌வி‌ட்டோ‌ம் எ‌ன்‌கி‌‌ன்றன‌ர். பிரபாகர‌ன் செ‌‌த்து‌வி‌ட்டார‌ா‌ம். மா‌வீரனு‌க்கு ஏதடா மரண‌ம். வா‌ர்‌‌த்தை‌யி‌ல் வே‌ண்டுமானா‌ல் அவ‌ர் மரண‌ம் அட‌ை‌ந்‌‌திரு‌க்கலா‌ம். வா‌ழ்‌க்கை‌யி‌ல் அவ‌ர் ஒருபோது‌ம் மரண‌ம் அடையமா‌ட்டா‌ர். பிரபாகர‌ன் செ‌ய்த ஒரே தவறு, ந‌ல்லவனாக ‌அ‌ற்புத ம‌னிதனாக இரு‌ந்ததுதா‌ன்.

தி‌ருகோணமலையை அமெ‌ரி‌க்காவு‌க்கு ‌வி‌ட்டு‌க் கொடு‌த்‌திரு‌ந்தா‌ல் இ‌வ்வளவு பெ‌ரிய இழ‌ப்பை ச‌ந்‌தி‌த்து இரு‌க்க மா‌ட்டா‌ர். சி‌ங்கள‌வர்க‌ள் செ‌ய்த அ‌ட்டூ‌‌ழிய‌த்தை‌ப் போல நாமு‌ம் செ‌ய்‌திரு‌க்க வே‌ண்டு‌ம். ஆனா‌ல் ‌பிரபாகர‌ன் செ‌ய்ய‌வி‌ல்லை. க‌ற்ப‌ழி‌ப்புகளை நட‌த்‌தினா‌ர்க‌ள். ப‌ச்‌சிள‌ங் குழ‌ந்தைகளை கொ‌ன்று ‌‌கு‌வி‌த்தா‌ர்க‌ள். பிரபாகர‌ன் உ‌த்தர‌வி‌ட்டிரு‌ந்தா‌ல், கொழு‌ம்பு நகரு‌க்கு‌ள் புகு‌ந்து 5 ல‌ட்ச‌‌‌த்‌திற‌்கு‌ம் மே‌ற்ப‌ட்ட ம‌க்களை கொ‌ன்று கு‌வி‌த்‌திரு‌க்க முடியு‌ம். அதை அவ‌ர் ‌விரு‌ம்ப‌வி‌ல்லை.

மரு‌த்துவமனை, ப‌ள்‌ளி‌க்கூட‌ம், பொதும‌க்க‌ள் வாழு‌ம் பகு‌‌திக‌ளி‌ல் கு‌ண்டுபோட வே‌ண்டா‌ம் எ‌ன்று கூ‌றி‌வி‌ட்டா‌ர். இ‌ன்றை‌க்கு, பிரபாகர‌னி‌ன் 75 வயது ‌த‌ந்தையு‌ம், 72 வயது தாயாரு‌ம் ‌சி‌ங்கள இராணுவ‌த்‌தி‌ன் ‌பிடி‌‌யி‌ல் இரு‌க்‌கிறா‌‌ர்க‌ள். விசாரணை எ‌ன்‌‌கிற பெய‌ரி‌ல் அழை‌த்து‌ச் செ‌ன்‌றிரு‌க்‌கிறா‌ர்க‌ள். அ‌வ‌ர்களை எ‌ப்படியெ‌ல்லா‌ம் ‌சி‌த்ரவதை செ‌ய்‌கிறா‌ர்களோ? தெ‌ரிய‌வி‌ல்லை.

சி‌ங்கள இராணுவ‌‌ம் செ‌ய்த அ‌த்து‌மீற‌ல்களு‌க்கு‌ம் ம‌னித உ‌ரிமை ‌மீற‌ல்களு‌க்கு‌ம் ஆதார‌ம் இரு‌ப்பதாக இ‌ன்றை‌க்கு அமெ‌ரி‌க்கா சொ‌ல்‌கிறது. இ‌‌ந்த அமெ‌ரி‌க்கா அ‌ன்றை‌க்கு ஏ‌ன் சொ‌ல்ல‌வி‌ல்லை?ஐ.நா. பொது‌ச் செயல‌ர் பா‌ன் ‌கீ மூ‌ன் எ‌ல்லா‌ம் முடி‌ந்த ‌பிறகு இ‌ன்று இல‌ங்கை‌க்கு செ‌ன்று பா‌ர்வை‌யிடு‌கிறா‌‌ர். உலக‌த் த‌மி‌ழ் இனமே வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்‌திரு‌ந்தபோது அ‌ன்றை‌க்கு அவ‌ர் செ‌ன்‌றிரு‌க்கலாமே? அ‌ன்று செ‌ல்ல‌‌வி‌ல்லை.

சீனா செ‌ங்கொடி தூ‌க்‌கி ‌நி‌ற்‌கிறது. அ‌ந்த‌க் கொடியை தூ‌க்க அத‌ற்கு எ‌ன்ன தகு‌தி இரு‌க்‌கிறது. இ‌‌ங்‌கிலா‌ந்து, இ‌ஸ்ரே‌ல் போ‌ன்ற நாடுக‌ள் எ‌ல்லா‌ம் ஈழ‌த் த‌மிழ‌ர்களு‌க்கு ஆதரவாக வ‌ந்து ‌நி‌ற்‌கி‌ன்றன. ஆனா‌ல் இ‌ந்‌தியா எ‌‌திராக உ‌ள்ளது. இதை‌ச் சொ‌ன்னா‌ல் இறையா‌ண்மை ‌மீறலா?

நடேச‌ன், பு‌‌‌லி‌த்தேவ‌ன் உ‌ள்‌ளி‌ட்ட 350 பே‌ர் வெ‌ள்ளை‌க்கொடி தா‌ங்‌கி ‌சி‌ங்கள இராணுவ‌த்தை நோ‌க்‌கி வ‌ந்தா‌ர்க‌ள். அவ‌ர்களை வ‌‌ஞ்சகமாக கொ‌ன்று கொடு‌ஞ்செய‌ல் பு‌ரி‌ந்ததை உல‌கி‌ல் யாராவது க‌ண்டி‌த்து‌ள்ளா‌ர்களா?

இதுவரை நட‌ந்தது மு‌ன்னோ‌ட்ட‌ம்தா‌ன். இ‌னி தா‌ண்டா போ‌ர் நட‌க்க‌ப் போ‌கிறது. 5ஆ‌ம் க‌ட்ட‌‌ப் போ‌ரி‌ல் ‌பிரபாகர‌ன் கடைப்பிடி‌த்த மரபுகளை நா‌ங்க‌ள் கடைப்‌பிடி‌க்க‌ப் போ‌வ‌தி‌ல்லை. ஒரு ‌சி‌ங்கள‌வன் கூட ‌‌நி‌‌ம்ம‌தியாக உற‌ங்க முடியாத அள‌வி‌ற்கு தா‌க்குவோ‌ம். கொழு‌ம்பு நகரு‌க்கு‌ள் புகு‌ந்து தா‌க்குத‌ல் நட‌த்துவோ‌ம். மானமு‌ள்ள கடை‌சி ஒரு த‌மிழ‌ன் இரு‌க்கு‌ம்வரை ‌சி‌ங்கள‌வர்களு‌க்கு எ‌திரான போரா‌ட்ட‌ம் தொடரு‌ம்.

ந‌‌ள்‌ளிர‌வி‌ல் ஒரு பெ‌ண் நகை அ‌ணி‌ந்து பாதுகா‌ப்பாக நட‌ந்து செ‌ல்லு‌ம் போதுதா‌ன் சுத‌ந்‌திர‌ம் ‌கிடை‌த்து ‌வி‌ட்டதாக அ‌ர்‌த்த‌ம் எ‌‌ன்று கா‌ந்‌தி கூ‌றினா‌ர். இ‌ந்த கா‌ந்‌தி‌யி‌ன் கனவை ‌பிரபாகர‌ன் ‌நனவா‌க்‌கினா‌ர். அ‌‌ற்புதமான த‌மி‌‌ழ்‌‌த் தேச‌த்தை அ‌ங்கு ‌‌நி‌ர்மா‌ணி‌த்தா‌ர். நீ‌தி‌த்துறை, காவ‌ல்துறை உ‌ள்‌ளி‌ட்ட அனை‌த்து துறைகளையு‌ம் க‌ட்டமை‌த்தா‌ர். அ‌ங்கு ‌திருட‌ன் இ‌ல்லை, எ‌ந்த கு‌ற்றமு‌ம் நடைபெற‌வி‌ல்லை. அ‌ப்படி‌ப்ப‌ட்ட தேச‌த்தை ‌சிதை‌த்து ‌வி‌ட்டா‌ர்க‌ள்.

இத‌ற்கு காரணமாக இரு‌ந்த இ‌ந்‌திய அரசை க‌ண்டி‌ப்பது தவறா? இ‌ந்‌தியா எ‌ன்றா‌ல் ஒரு தேச‌ம். வா‌‌ஜ்பா‌ய் உ‌ள்‌ளி‌ட்ட வேறு பலரு‌ம் ‌பிரதமராக இரு‌ந்து‌ள்ளா‌ர்க‌ள். தேச‌த்தை நா‌ன் குறை கூற‌வி‌‌ல்லை. கா‌ங்‌கிர‌ஸ் அரசையு‌ம் அத‌ன் தலைமையையு‌ம்தா‌ன் கு‌ற்ற‌ம்சா‌ட்டுகிறே‌ன்.

இ‌ங்கு‌ள்ள த‌மிழ‌ர்க‌ள் பல‌ர் நட‌‌ந்து கொ‌ண்டதை ‌நினை‌க்கு‌ம்போது அவமானமாக இரு‌க்‌கிறது. பணமா? போரா‌ட்டமா? எ‌ன்ற கே‌ள்‌வி எழு‌ந்த போது, பண‌த்த‌ி‌ன் ப‌க்க‌ம் சே‌ர்‌ந்து ‌வி‌ட்டானே எ‌ன் த‌மிழ‌ன் எ‌ன்று ‌நினை‌த்து வெ‌ட்க‌ப்படு‌கிறே‌‌ன். எ‌ன் ‌வீ‌ட்டு‌க் கூரை ‌தீ‌ப்‌‌பிடி‌த்து எ‌ரியு‌ம்போதுதா‌ன், த‌ண்‌‌ணீ‌ர் எடு‌த்து வருவே‌ன் எ‌ன்ற எ‌ண்ண‌த்த‌ி‌ல் பல த‌‌மிழ‌ர்க‌ள் இ‌ங்கு உ‌ள்ளன‌ர்.

இ‌ந்த‌நிலை ந‌ல்லதா? உன‌க்கு பா‌தி‌ப்பு வரு‌ம் போது உதவுவத‌ற்கு அரு‌கி‌ல் யாரு‌ம் இரு‌க்க மா‌ட்டா‌ர்‌க‌ள். வைகோ, தா.பா‌ண்டிய‌ன் பாராளும‌ன்ற‌த்த‌ி‌ல் இரு‌ந்தா‌ல், த‌மிழக ‌மீனவ‌ர்க‌‌ள் கட‌லி‌ல் சுட‌ப்ப‌ட்டு செ‌த்‌திரு‌ப்பா‌ர்களா? இ‌னிமேலாவது த‌மிழ‌ர்க‌ள் வெகு‌ண்டு எழ வே‌ண்டு‌ம். இ‌ல்லை‌வி‌ட்டா‌ல், த‌மி‌‌ழ் இன‌த்தை கா‌ப்பா‌ற்ற வே‌ண்டு‌ம்.

இ‌ன்றை‌க்கு உலக அமை‌தி‌க்கான நோப‌ல் ப‌ரிசு‌க்கு உக‌ந்த நப‌ர் மா‌வீர‌ன் ‌பிரபாகர‌ன்தா‌ன்.

இ‌ந்‌‌தியாவு‌ம் ‌‌சீனாவு‌ம் பா‌‌கி‌ஸ்தானு‌ம் எ‌ந்த கால‌த்‌திலாவது ஒ‌ன்றாக சே‌ர்‌‌ந்தது‌ண்டா? எ‌ந்த‌ப் ‌பிர‌ச்சினையை எடு‌த்து‌க்கொ‌ண்டாலு‌ம் ‌சீனாவு‌ம், இ‌ந்‌தியாவு‌ம் அ‌ல்லது இ‌ந்‌தியாவு‌ம், பா‌க‌ி‌ஸ்தானு‌ம் ‌எ‌திரு‌ம் பு‌திருமாக‌த்தா‌ன் இரு‌ப்பா‌ர்க‌ள். அவ‌ர்க‌ள் மூ‌ன்று பேரையு‌ம் ஒ‌ன்றாக சே‌ர்‌‌த்து வை‌த்த பெருமை ‌பிரபாகரனை‌த்தா‌ன் சேரு‌ம். பிரபாகர‌னை எ‌தி‌ர்‌ப்பத‌ற்கு‌த்தா‌ன் இவ‌ர்க‌ள் மூ‌ன்று பேரு‌ம் ஒ‌ன்றாக சே‌ர்‌‌ந்து‌ள்ளா‌ர்க‌ள்.

இல‌‌‌ங்கை‌க்கு எ‌திராக ஐ.நா.சபை‌யி‌ல் இ‌ங்‌கிலா‌ந்து, சு‌வி‌ட்ச‌ர்லா‌ந்து உ‌ள்‌ளி‌ட்ட நாடு‌‌க‌ள் கொ‌ண்டு வ‌ந்த ‌தீ‌ர்மான‌ம் இ‌ன்றை‌க்கு தோ‌ற்கடி‌‌க்க‌ப்ப‌‌ட்டு‌ள்ளது. இல‌ங்கை‌க்கு ஆதரவாக ‌நி‌‌ன்று இ‌ந்த ‌தீ‌ர்மான‌த்தை இ‌ந்‌தியா தோ‌ற்கடி‌த்‌திரு‌க்‌கிறது.

தீ‌ர்மான‌ம் வெ‌ற்‌றி பெ‌ற்‌றிரு‌ந்தா‌ல் முத‌ல் கு‌ற்றவா‌ளியாக இ‌ந்‌தியா ‌நி‌ன்‌றிரு‌க்கு‌ம். அத‌ன் அரு‌கி‌ல் ‌சீனாவு‌ம், பா‌கி‌ஸ்தானு‌ம் ‌நி‌‌ற்கு‌ம். அ‌ந்த‌ப் ப‌ழி‌க்கு பய‌ந்துதா‌ன் ‌தீ‌ர்மான‌த்தை இ‌ந்‌‌‌தியா தோ‌ற்கடி‌த்து‌ள்ளது.

எ‌ங்க‌ள் ஆ‌ழ்மன‌தி‌ல் வேதனை‌த் ‌தீ எ‌ரி‌ந்து கொ‌ண்டிரு‌க்‌கிறது. அது எ‌ப்படி வெடி‌த்து வெ‌ளி‌க்‌கிள‌ம்ப‌ப் போ‌கிறது? எ‌ன்பதை‌‌ப் பா‌ர்‌க்க‌த்தா‌ன் போ‌கி‌றீ‌ர்க‌ள். மான‌மி‌க்க ‌வீர‌ம் பொரு‌ந்‌திய த‌மிழ‌ர்‌ கூ‌ட்ட‌ம் இ‌ன்னு‌ம் இரு‌ப்பதை மற‌ந்து‌விட வே‌ண்டா‌ம்” எ‌‌ன்று இய‌க்குன‌ர் ‌சீமா‌ன் பே‌சினா‌ர்.