வெள்ளி, 26 நவம்பர், 2010

சீமான் வழக்கு: அரசை எதித்து ப் போராடுவோம்- வழக்கறிஞர் என். சந்திரசேகர்


சோனியா, இராசபக்சே ஆகியோரின் மனநிறைவிற்காகச் சீமானைக் கைது செய்து அடைத்து  வைத்திருப்பது பெரும் தவறுதான். எனினும் கவலைப்பட வேண்டா. மத்திய அரசிலிருந்து விலகலாம என எண்ணுவதாக முதல்வர் பேசியுள்ளார். அந்த நிலை வநதால் தானாகவே சீமான்  விடுதலை ஆவார். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


சீமான் வழக்கு: அரசை எதித்து போராடுவோம்- வழக்கறிஞர் என். சந்திரசேகர்

First Published : 26 Nov 2010 03:39:39 AM IST


சென்னை, நவ.25: நடிகரும், இயக்குநருமான சீமான் மீதான வழக்கில் அரசு சார்பில் வாய்தா வாங்குவது தொடர்ந்தால் போராட்டம் நடத்தப்படுமென்று சீமானின் வழக்கறிஞர் என். சந்திரசேகர் கூறினார்.  தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக பேசிதாக சீமான் மீது தொடரப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. இதில் ஆஜராக தமிழக அரசு வழக்கறிஞர் வரவில்லை. இதனால் வழக்கு டிசம்பர் 3-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.  இது குறித்து அவரது வழக்கறிஞர் சந்திரசேகர் நீதிமன்ற வளாகத்தில் கூறியது:  இந்த வழக்கு கடந்த 16-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, அட்வகேட் ஜெனரல் ஆஜராகுகிறார் என்று கூறி, அரசு தரப்பு நவம்பர் 25-ம் தேதிக்கு வாய்தா வாங்கியது.  அதன்படி, அந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வியாழக்கிழமையும் விசாரணைக்கும் அட்வகேட் ஜெனரல் வரவில்லை. இதையடுத்து டிசம்பர் 3-ம் தேதிக்கு வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.  அட்வகேட் ஜெனரல் அரசு தொடர்பான வழக்குகளில் ஆஜராவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். சீமான மீதான வழக்கில் அரசு சதி செய்கிறது. இந்த நிலை தொடர்ந்தால், தமிழக அரசை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்படும். அரசு வழக்கறிஞர்கள் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவோம். இந்த வழக்கில் அட்வகேட் ஜெனரல் ஆஜராக அரசு வலியுறுத்த வேண்டும். வாய்தா வாங்கும் அரசை கண்டிக்கிறோம் என்று வழக்கறிஞர் சந்திரசேகரன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக