சிங்களம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிங்களம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 4 அக்டோபர், 2013
செவ்வாய், 23 ஜூலை, 2013
தமிழும் சிங்களமும்
தமிழும் சிங்களமும்
உலக மொழிகளின் தாய், தமிழே என்னும் செந்தமிழ் மாமணி
பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் இந்திய மொழிகளின் வரி வடிவ
எழுத்துக்களின் தாய் , தமிழ் நெடுங்கணக்கின் வரி வடிவமே என்கிறார்.
எழுத்துகள் நெடுங்கணக்கின் நிலையை அடைவதற்கு முந்தைய காலங்களில்
பெற்றிருந்த உருவங்களைப் பற்றிய குறிப்புகள். தமிழைத் தவிர வேறு இந்திய
மொழிகளில் உள்ள இலக்கியங்களில் காணப்படவில்லை என்கிறார்
முனைவர்.சுப்பிரமணிய ஐயர். தமிழ் எழுத்து முறையே ஆரிய எழுத்தின் முன்னோடி
என்கிறார் அறிஞர் இரைசு டேவிட்சு. அனைத்து மொழிகளையும் ஈன்ற அன்னையாய்
அருந்தமிழ் விளங்குகையில் தமிழ் நிலத்தில் கலந்து தோன்றிய சிங்களவர்களின்
மொழியாகிய சிங்களமும் தமிழில் இருந்துதான் தோன்றியது என்பதிலும் ஆதலின்
அதன் வரி வடிவம் தமிழ் வரிவடிவத்தில் இருந்து தோன்றியது என்பதிலும் வியப்பு
ஏதும் இல்லை.
மதுரையில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற பொழுது (1981) இலங்கையில் இருந்து வந்த பேராளர் ஒருவர் தமிழ் வரிவடிவங்களில் இருந்தே சிங்கள வரி வடிவங்கள் தோன்றின என்பதைப் படங்கள் மூலம் அருமையாய் விளக்கினார். (அவர் ஓய்வு பெற்ற அஞ்சல் அலுவலர் என்பது மட்டும் நினைவில் உள்ளதே தவிர அவர் பெயர் நினைவில் இல்லை.) அவரிடம் இத்தகைய ஆராய்ச்சி எண்ணம் எவ்வாறு வந்தது என்று கேட்டேன். அதற்கு அவர் தற்செயலாகச் சில ஒற்றுமை அமைப்பைக் கண்டறிந்ததாகவும் சிங்களர் தமிழர் நாட்டில் குடியேறிய பின்பே தம் மொழியை வளர்த்து வரிவடிவத்தை உருவாக்கியிருக்க வேண்டும் என்றும் உணர்ந்து முழுமையாக ஆராயத் தொடங்கியதாகவும் அதன் பயனே இக்கட்டுரை என்றும் கூறினார். அவ்வாறாயின் சொற்பிறப்பு அடிப்படையில் தமிழில் இருந்து சிங்களம் தோன்றியது என்பதை நிறுவ முயலலாமே என்று கேட்டேன். இனி அவ்வாறு முயல்வதாகவும் ஆனால் இலங்கையில் தமிழுக்கு எதிரான வெறியைக் கிளப்பும் அரசியல்வாதிகளும் அரசும் உள்ளதால் தன்னால் இதை வெளிப்படையாகச் செய்ய இயலாது என்றும் கூறினார். மேலும் மூத்த தலைமுறையினரில் ஒரு சாராரேனும் சிங்கள வெறிக்கு எதிரான நடுநிலை மனப் போக்கில் இருந்தாலும் இளைய தலைமுறையினர் அனைவரும் நடுநிலை உணர்வு அற்றவர்களாக இருப்பதாகவும் வேதனைப்பட்டார். இருப்பினும் அவரைச் சந்தித்ததன் விளைவாக நான், தமிழ் - சிங்களம் குறித்துச் சிறிதேனும் அறிய முற்பட்டேன். அடிப்படைச் சொற்கள் பலவும் தமிழில் இருந்தே சிங்களத்திற்குச் சென்றுள்ளது எனவும் இலக்கண அமைப்பு முறை தமிழைச் சார்ந்தே உள்ளது எனவும் மேலோட்டமாகப் பார்தாலே நன்கு தெரிய வருகிறது. இரு மொழி அறிஞர்கள் ஆராய்ந்து தமிழில் இருந்து சிங்களம் தோன்றியது என்பதைத் தெளிவு படுத்தல் நன்று. எனினும் நான் அறிந்த வரையில் சுருக்கமாகச் சிலவற்றைக் கூற விரும்புகிறேன்.
தமிழ்ச் சொற்கள் எவ்வகை வடிவ மாற்றமுமின்றி இடம் பெறுதல், முதற்குறை இடைக்குறை கடைக்குறை போன்று அமைதல், தமிழ்ப் பேச்சு வழக்கு திருந்தியசொல் வடிவாக இடம் பெறுதல், ‘யா’ என்னும் எழுத்தொலி சேர்ந்து சிங்களத்தில் இடம் பெறுதல், சிதைந்து மாறுதல் , யகரம் சகரமாக மாறுவது போன்று போலியாய் இடம் பெறுதல் எனத் தமிழ் இலக்கணத்திற்கு ஏற்றாற் போல் தமிழ்ச் சொற்கள் பல்வகை மாற்றமடைந்துசிங்கள மொழியில் இடம் பெற்றுள்ளன.
1.வடிவம் மாறாமல் இடம் பெற்றுள்ள சொற்கள்:
தமிழ் சிங்களம்
பொடி (சிறிய) - பொடி
பாலம் - பாலம்
அக்கா - அக்கா
குமாரன் - குமாரன்
சுதை (வெண்மை) – சுதை
2. கடைக்குறையான சொற்கள்
கணிகை - கணி
மலர் - மல
பாத்து ( உணவு) - பாத்
தூம(ம்) (புகை) - தூம
கரம் - கர (தோள்)
(பொருள் சுருங்கிக் கையின் ஒரு பகுதியைக் குறிக்கிறது)
விசாலம் - விசால
மனிதன் - மனி
உயரம் - உசரம் உச
3.கடைசியல் யா என்னும் ஒலி சேர்த்து மாற்றமடைந்த சொற்கள்
நாதம் - நாதய
வீரன் - வீரயா
நீதி - நீதியா
பூமி - பூமிய
தூது - தூதயா
சூரன் - சூரயா
பூதம் - பூதயா
இதயம் - இருதயம் இருதயா
நரி - நரியா
பெட்டி - பெட்டிய
ஆகாயம் - ஆகாசம் ஆகாசய
கோப்பை - கோப்ப (கோப்பைகள்) /கோப்பய (கோப்பை)
4. திருந்தாச் சொல்வழக்கால் ஏற்பட்ட மாற்றங்கள்
மேசை - மேசே
கரு(ப்பு) - களு
இரத்தம் (சிவப்பு) - ரத்து
(சிவப்பு என்னும பொருளும் உண்டு)
பாதை - பாற
கத்தி - கத்த
திசை - திசாவ
உருவம் - ரூபம்
மயில் - மயூர
பூசை - பூசாவ
கோ (எருது ) - கொனா
பொத்தகம் -பொத /பொதக் (ஒரு பொத்தகம்)
(தமிழில் பொத்தகம் என்பதுதான் புத்தகம் என மாறிற்று)
தேநீர் - தே
கன்னம் - கண
(தொளையுடையது என்னும் பொருளில் முதலில் காது என்றே பொருள் வழங்கியது)
அங்குலி - அங்கிலி
(அங்குல் என்றால் வளைதல் என்று பொருள் வளைத்து மடக்கக் கூடிய உறுப்பான விரல் அங்குலி எனப்பட்டது. அங்குலியால் அளக்கப்படும் அளவு அங்குலம் எனப்பட்டது)
இரவு / இரா - ரா / றா
நீலம் – நீல் > நில்
தமிழில் சுட்டெழுத்து அ, இ, உ என மூன்று ஆகும். எனவே, அது, இது, உது; அவை, இவை, உவை; அவன், இவன், உவன்; அவள், இவள், உவள்; அவர், இவர், உவர் என்று சொல்லும் மரபு பழந்தமிழில் இருந்துள்ளது. கேட்பவனுக்கு அருகே இருப்பின் ‘அ’, சொல்லுபவன் அருகே இருப்பின் ‘இ’, இருவருக்கும் பொதுவான தொலைவில் இருப்பின் ‘உ’ பயன்படுத்தப்பட்டது. தமிழில் இருந்து தோன்றிய சப்பான், சிங்களம் முதலான பழ மொழிகளிலும் இவ்வழக்கு இன்றும் உள்ளது. சிங்களத்தில்
அர - அவர் / அது
மே - இவர் / இது
ஒய - உவர் / உது
என முவ்வகைச் சுட்டும் இன்றும் பழக்கத்தில் உள்ளன.
சிங்களத்தில் சுட்டுப் பெயர்கள் மூலம் உயர்திணை, அஃறிணை குறிக்கப்படாமல் பயன்பாட்டு அடிப்படையில் புரிந்து கொள்ளப்படுகிறது.
தமிழில் உள்ள இலக்கண அமைப்பைச் சிங்களமும் பின்பற்றுகிறது
. ‘நான் கடைக்குச்சென்றேன்’ என்னும் தொடர் ஆங்கிலம் முதலான பிற மொழிகள் சிலவற்றில் நான் சென்றேன் கடைக்கு என்பது போல் வரும். சிங்களத்தில் தமிழில் உள்ள அதே அமைப்புதான் உள்ளது.
அர கவுத? - அவர்கள் யார்?
மே கவுத? - இவர்கள் யார்?
ஒய கவுத? - உவர்கள் யார்?
மே ஒபே பொதத? - இது உன்னுடைய புத்தகமா?
மம தொர அரிவனா. - நான் கதவைத் திறக்கிறேன்.
(திறப்பதற்குரிய கதவு திற > தொர எனப்பட்டது)
இரு மொழியும் நன்கறிந்த அறிஞர்கள் இது குறித்து நன்கு முழுமையாக ஆராய்வது நன்று. தமிழ் நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆண்டிற்கு ஒரு மொழி என்ற முறையில் வெவ்வேறு மொழிகளுடன் தமிழுக்குள்ள ஒப்புமையை ஆராய்வது உலக மொழிகளின் தாய் என இதுவரை அறிஞர்கள் பலரும் சொல்லி வரும் கருத்திற்கு வலு சேர்ப்பதாக அமையும். இவ்வாறு பிற நாட்டுப் பல்கலைக் கழகங்கள் அந்தந்த நாட்டு மொழிகளுடன் தமிழுக்குள்ள ஒப்புமையை ஆராய நடுவணரசு செம்மொழிஉயராய்வு மையம் மூலம் போதிய பொருளுதவியை அளிக்க முன் வரவேண்டும். தமிழக அரசும் தமிழக மக்களும் அதற்குத் தூண்டுதலாய் இருக்க வேண்டும். சிங்களர்கள் தம் இனமும் மொழியும் தமிழர் கூட்டுறவால் ஏற்பட்டதே என்பதைஉணர்ந்து நல்லுறவோடு பழக வேண்டும். தனித்தனி உரிமையுடைய (இலங்கை நாடு, ஈழ நாடு என்னும்) இரண்டு நாடுகளின் கூட்டமைப்பாக இலங்கை - ஈழக் கூட்டமைப்பு தோன்றி இத்தீவு யாருக்கும் அடிமையாக இராமல் யாரையும் அடிமைப்படுத்தாமல் வளம்பெற வேண்டும்!
(கட்டுரையாளர்: தலைவர், தமிழ்க்காப்புக்கழகம்)

ஞாயிறு, 16 ஜூன், 2013
இந்திய அரசின் அகங்காரமான திமிர்: வைகோ
இந்திய அரசின் அகங்காரமான திமிர்: வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலட்சக்கணக்ககான ஈழத் தமிழர்களைக் கொடூரமாகப் படுகொலை செய்த சிங்கள
இராணுவத்தினருக்கு மீண்டும் மீண்டும் இந்தியாவிலேயே, அதிலும்
தமிழ்நாட்டிலேயே பயிற்சி கொடுத்த இந்திய அரசு, கடந்த மே 27 ஆம் தேதி முதல்
குன்னூர் வெலிங்டனில் உள்ள இந்திய இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் இலங்கை
இராணுவத்தின் விங் கமாண்டர் தச நாயகேவுக்கும், மேஜர் ஹரிச்சந்திராவுக்கும்
பயிற்சி கொடுத்து வருகிறது.
தமிழ்நாட்டில் நாங்கள் பயிற்சி கொடுப்பதில்லை என்று தஞ்சையில் இந்திய
இராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி அறிவித்தது, தமிழக மக்களை எப்படி
வேண்டுமானாலும் வஞ்சிக்கலாம், ஏமாற்றலாம் என்ற ஆணவத்தின் பிரதிபலிப்பாகும்.
தமிழக முதலமைச்சர் அவர்கள், சிங்கள இராணுவத்தினரை உடனே வெளியேற்ற வேண்டும்
என்று இந்தியப் பிரதமருக்குக் கடிதம் எழுதினார். குன்னூர் வெலிங்டன்
பயிற்சிக் கல்லூரியை அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும்
முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தின. ஆனாலும் மத்திய அரசு, சிங்கள
இராணுவத்தினரை வெளியேற்றவில்லை.
மத்திய அரசின் இந்த மமதைப் போக்கு தமிழக மக்களின் மான உணர்ச்சிக்கும்,
சுயமரியாதைக்கும் விடப்பட்டுள்ள சவால் ஆகும்.இந்த மண்ணில் தான்
மொழிப்போரில் இந்திய இராணுவத்தினரின் துப்பாக்கிகளையே தமிழ் இளைஞர்கள்
எதிர்கொண்டனர் என்பதும், ஈழத் தமிழர்களைக் காக்க முத்துக்குமார் உள்ளிட்ட19
வீரத் தமிழ் இளைஞர்கள் மரணத் தீயை அணைத்துக் கொண்டனர் என்பதும்
தமிழகத்தின் வீர வரலாறு ஆகும். ஆனாலும் இதனை எல்லாம் துச்சமாகக் கருதி
தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக துரோகம் இழைத்து வினை விதைத்து வரும்
மத்திய காங்கிரஸ் அரசு, அதற்குரிய வினையை அறுவடை செய்யும் காலம் வந்தே
தீரும்.
சிங்கள இராணுவத்தினரை வெளியேற்ற 18 ஆம் தேதி செவ்வாய்கிழமை காலை 11 மணி
அளவில் முற்றுகையிட குன்னூர் வெலிங்டன் இராணுவ பயிற்சிக் கல்லூரியை
முற்றுகையிட பல்வேறு அரசியல் கட்சிகளும், தமிழ் உணர்வு அமைப்புகளும் முடிவு
செய்து அறிவித்துள்ளன.இந்த அறப்போரில் நீலகிரி, கோவை மாநகர், கோவை புறநகர்
மாவட்டங்களைச் சேர்ந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச்
செயலாளர்களும், கழக முன்னணியினரும், கழகத் தோழர்களும், ஈழத் தமிழர் உரிமை
காக்கும் உணர்வாளர்களும், வணிகப் பெருமக்களும், மாணவர்களும் பெருமளவில்
பங்கேற்க வேண்டுமென கூறியுள்ளார்.
திங்கள், 8 ஏப்ரல், 2013
தேசியகீதம் சிங்களத்தில் மட்டுமே : இராசபக்சே
இலங்கை த் தேசியகீதம் சிங்களத்தில் மட்டுமே இருக்கும்: இராசபக்சே அறிவிப்பு
பதிவு செய்த நாள் :
திங்கட்கிழமை,
ஏப்ரல் 08,
10:01 AM IST
கொழும்பு, ஏப்.8-
இலங்கை அமைச்சரவை கூட்டம் கொழும்பில் கடந்த வாரம் நடந்தது. இதில் அதிபர் மகிந்த ராஜபக்சே மற்றும் மந்திரிகள் கலந்து கொண்டனர். அப்போது, இலங்கை தேசிய கீதத்தில் சிங்கள மொழியுடன் தமிழ் மொழியையும் சேர்த்து கொள்வது குறித்து அமைச்சர் வாசுதேவ நாணயக்கார் கோரிக்கை விடுத்தார்.
அதை கேட்டதும் அதிபர் ராஜபக்சே ஆத்திரம் அடைந்தார். ஒரு நாட்டின் தேசிய கீதத்தை இரு மொழிகளில் பாடும் நாடு ஏதேனும் உண்டா? அவ்வாறு இருந்தால் அந்த நாட்டின் பெயரை எனக்கு தெரிவியுங்கள். இலங்கை தேசிய கீதத்தை தமிழில் பாட முடியாது. சிங்களத்தில் மட்டுமே பாடப்படும் என காட்டமாக தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும்போது, தேசிய கீதத்தில் தமிழ் மொழியையும் சேர்த்தால் சிங்கள புத்த தலைவர்களுடன் பிரச்சினை ஏற்படும். இல்லாத ஒரு பிரச்சினையை உருவாக்க நான் தயார் இல்லை'' என்றும் ராஜபக்சே கூறினார்.

புதன், 23 ஜனவரி, 2013
இந்துக் கோவில்களை இடிக்கிறது இலங்கை : கருணாநிதி
இந்து க் கோவில்களை இடிக்கிறது இலங்கை : தடுக்க கருணாநிதி கடிதம்
சென்னை: "தமிழ் கலாச்சாரத்தை அழிக்க, இலங்கை அரசு முயற்சிப்பதை, மத்திய
அரசு தடுத்து நிறுத்த வேண்டும்' என, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ்
தலைவர் சோனியா ஆகியோருக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி கடிதம்
எழுதியுள்ளார். அவரது கடித விவரம்:
இலங்கையில்
தமிழ் மொழி, கலாச்சாரம், மதம் போன்றவைகளை அழிக்க, இலங்கை அரசு திட்டமிட்டு,
உள்நோக்கத்தோடு செயல்படுகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும். அங்குள்ள
தமிழர்கள், ஒடுக்கப்பட்ட நிலையில் வாழ்கின்றனர். கொல்லைப்புற வழியாக,
மிகப்பெரிய கலாச்சாரத்தையும், பழமை வாய்ந்த மதத்தையும் அழிக்கும்
முயற்சியில், இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது.
இலங்கையில் உள்ள, 89
தமிழ் கிராமங்களுக்கு, சிங்கள பெயர் சூட்டுதல், மாவட்ட, நகர, கிராம
எல்லைகளை மாற்றி அமைத்தல், 367 இந்து கோவில்கள் இடித்தல் போன்ற பணிகளில்,
இலங்கை அரசு ஈடுப்பட்டுள்ளது. உலகின், மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற
முறையில், தமிழர்கள் மீதான இந்த கொடுமைகளை உடனடியாக தடுத்து நிறுத்தும்,
தார்மீக கடமை இந்தியாவுக்கு உள்ளது. இதற்கான, உரிய நடவடிக்கையை எடுக்க
வேண்டும்.
இவ்வாறு, அந்த கடிதங்களில் கூறியுள்ளார்.
ராகுலுக்கு வாழ்த்து :
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின், துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட, உங்களை வாழ்த்துகிறேன். இளைஞரான நீங்கள், நாட்டின் கிராமப் பகுதிகளையும், விவசாயிகள் பற்றியும் நன்கு தெரிந்தவர். உங்கள் திறமையால், காங்கிரஸ், மேலும், புதிய வெளிச்சத்தை அடையும். - கருணாநிதி, தலைவர், தி.மு.க.,
சனி, 13 நவம்பர், 2010
வெளிநாட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை முறைப்படுத்த புதிய சட்டம்: இலங்கை அரசு
Last Updated :
கொழும்பு, நவ. 10: இலங்கையில் செயல்படும் வெளிநாட்டு அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை முறைப்படுத்த புதிய சட்டம் ஒன்றை அந்நாட்டு அரசு கொண்டுவர உள்ளது.இதன்படி தொண்டு நிறுவனங்களுக்கு 1961-ம் ஆண்டு வியன்னா ஒப்பந்தத்தின்படியான ராஜதந்திர சட்டப் பாதுகாப்பு மறுக்கப்படும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் சில நிறுவனங்கள் இலங்கையில் தீவிரவாதத்தை வளர்க்கும் செயல்களில் மறைமுகமாக ஈடுபட்டிருப்பதாகவும் அதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை என்றும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அரசு பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களுக்கு வெளிநாடுகளில் சிவில் வழக்குகளில் இருந்து சட்டப் பாதுகாப்பு அளிக்கப்படுவது வழக்கம். ஏதேனும் சிவில் வழக்குகளில் அவர்கள் சிக்கினாலும் அவர்களை வெளியேற்றலாமே தவிர உள்நாட்டுச் சட்டங்களின்படி அவர்களை தண்டிக்க முடியாது.அந்த வகையில் இலங்கையில் செயல்பட்டுவரும் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தீவிரவாத நடவடிக்கைகள் தலைதூக்க மறைமுக ஆதரவு அளித்து வருவதாக இலங்கை அரசு சந்தேகிக்கிறது. இதை அடுத்து இலங்கை அரசின் அதிகாரப் பூர்வ இணையதளத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள தகவலில், "வெளிநாட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுவரும் ராஜதந்திர சட்டப் பாதுகாப்பு இனி வழங்கப்பட மாட்டாது. அந்த நிறுவனங்களை பதிவு செய்ய புதிய நடைமுறை ஒன்றும் வகுக்கப்படும். அதன்படி அந்த தொண்டு நிறுவனங்கள் அனைத்தும் முறைப்படி பதிவுசெய்யப்பட்ட வேண்டும். அதன் பின்னர் ராணுவ அமைச்சகத்திடம் அனுமதிச் சான்றிதழ் பெற்ற பின்னரே இலங்கையில் அந்த நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படும்.இப்போது இலங்கையில் சுமார் 1250 தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சுமார் 250 நிறுவனங்கள் சர்வதேச நிறுவனங்களாகும். உள்நாட்டு, வெளிநாட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இரண்டையுமே முறைப்படுத்த விரைவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்ற ஆண்டு விடுதலைப்புலிகளுடன் நடந்த சண்டையில் இலங்கை ராணுவம் வெற்றி பெற்றது. சண்டை நடந்தபோது சில தொண்டு நிறுவனங்கள் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டன என அதிகாரிகள் தெரிவித்தனர்.விசா கெடுபிடி: மேற்கத்திய நாடுகள், தெற்காசிய நாடுகள் உள்ளிட்ட உலகின் 85 நாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் இலங்கைக்கு வருவதற்கான விசாக்கள் வழங்குவதை நிறுத்தி வைக்கவும் இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் மீண்டும் இலங்கைக்கு வந்து அணி திரண்டு விடக் கூடும் என்ற அச்சத்தால் இலங்கை அரசு இந்த முடிவை மேற்கொள்ள இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/13/2010 4:04:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English11/13/2010 4:04:00 AM
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)