சிங்கப்பூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிங்கப்பூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 29 அக்டோபர், 2022

உலகத்தமிழாராய்ச்சிமாநாடு, புதிய கால அட்டவணை

 அகரமுதல





செய்தி மடல் – Newsletter
 
  மதிப்பிற்குரிய தமிழறிஞருக்கு,

வணக்கம். சிங்கப்பூரில் நடைபெறவுள்ள பதினொன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் ஆய்வரங்கத்திற்கான புதிய கால அட்டவணையைத் தங்களுடன் பகிர்கின்றோம். இம்மாநாட்டில் பங்கேற்க ஆர்வத்துடன் உள்ள அறிஞர்களின் ஆர்வத்தையும் வேண்டுகோளையும் கருத்தில் கொண்டு ஆய்வுப் பணிகளுக்கான கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதிய கால அட்டவணை பின்வருமாறு

1. ஆய்வுச் சுருக்கம் வந்தடைய வேண்டிய தேதி: 15.நவம்பர்.2022.
2. ஆய்வுச் சுருக்கம் பற்றிய தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி: 30.நவம்பர்.2022.
3. முழு ஆய்வுக் கட்டுரை வந்தடைய வேண்டிய தேதி: 15.பிப்ரவரி.2023.
4. மாநாட்டில் படைக்கப்படுகின்ற கட்டுரை முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி: 28.பிப்ரவரி.2023.

இம்மாநாட்டில் பங்கேற்க ஆர்வத்துடன் ஆய்வுச் சுருக்கத்தை அனுப்பிய அறிஞர்களுக்கு நன்றி.

சிங்கப்பூரில் நடைபெறவுள்ள பதினொன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினைப் பற்றிய செய்திகளை www.icsts11.org என்ற மாநாட்டின் இணையதளத்தில் காணவும். ஆய்வுக் கட்டுரைகள் தொடர்பான வினாக்கள் மற்றும் கருத்துக்களை contact@icsts11.org என்ற மின்வரிக்கு அனுப்பவும்.

நன்றி.
ஆய்வுக்குழு – பதினொன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிங்கப்பூர்


 ஆய்வுச் சுருக்கம் அனுப்ப வேண்டிய மின்வரி 
E-mail address for submission of abstracts
academic-committee@icsts11.org 
 

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2022

பதினொன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிங்கப்பூர், மே 26-28,2023

 அகரமுதல



உலகத் தமிழ் ஆய்வு மன்றம்

International Association of Tamil Research (IATR)

பதினொன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு,

சிங்கப்பூர், வைகாசி 12-14, 2054 / மே 26-28,2023

ஆராய்ச்சிச் சுருக்கம் வரவேண்டிய நாள் 15.10.2022 ; அனுப்ப வேண்டிய மின்வரி: academic-committee@11.org

 தெரிவு முடிவு நாள் கார்த்திகை 29, 2053 /15.11.2022 இற்கு முன்னதாக

விரிவுக் கட்டுரை நாள் தை 17, 2054 / 31.01.2023

 கட்டுரையாளர் அனுமதிக் கட்டணம், தங்கும் செலவு, உணவுச் செலவு, மாநாடடின்போது ஏற்படுகின்ற உள்ளூர்ப் போக்குவரத்துச் செலவு விழாக் குழுவால் ஏற்கப்பெறும்.

முழுமையான விவரங்களைப் பின்வரும் அறிவிக்கையில் காண்க.

குறிப்பு:

மாநாட்டு அறிவிக்கையில்  தெரிவு முடிவு நாள் 15.11.2023 எனத் தவறாக இடம் பெற்றுள்ளது. திருத்திப் படித்துக் கொள்ளவும்.

மாநாட்டு அமைப்பாளர்கள், கலைச்சொற்கள்/சொல்லாக்கம் குறித்தும் ஆய்வுத் தலைப்பில் சேர்க்க வேண்டுகிறோம்.

சிலப்பதிகாரத்தை ஐந்தாம் நூற்றாண்டாகச் சேர்த்துள்ளது பெருந்துவறு. திருத்த வேண்டுகிறோம்.

கிரந்த எழுத்துகளை அகற்ற வேண்டுகிறோம்.












செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022

பதினோராம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிங்கப்பூர், மே 2023

 அகரமுதல


பதினோராம்

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு,

சிங்கப்பூர், மே 2023

 பத்தாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் படைத்த ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய முதல் தொகுப்பு சூலை 26, 2022 அன்று சென்னையில் வெளியிடப்பட்டது. எளிமையாகவும் சீரிய முறையிலும் நடைபெற்ற இந்த வெளியீட்டு விழாவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் முனைவர் பொன்னவைக்கோ தலைமையில், மன்றத்தின் துணைத்தலைவர் திரு. முனைவர். சுந்தரமூர்த்தி, செயற்குழு அலுவலர்கள் முன்னிலையில் சிறப்பு விருந்தினர்கள் திரு.கோ.விசுவநாதன் (வேந்தர், வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்) ,தொழிலதிபர் திரு. வி.சி. சந்தோசம் ஆகியோர் வெளியிடச் சிங்கப்பூரைச் சார்ந்த  பேராயிரமாண்டுத் தமிழர்கள் (The Millennial Tamils) அமைப்பின் தலைவர் திரு. மணியம் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

பதினோராம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இந்த நிகழ்வில் வெளியிடப்பட்டது. இந்த மாநாடு சிங்கப்பூர் நகரில் வரும் ஆண்டு வைகாசி 12-14, 2054  / 26-28.05.2023  வரை நடைபெறும். உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்துடன் சிங்கப்பூரைச் சார்ந்த ‘பேராயிரமாண்டுத் தமிழர்கள்’ (The Millennial Tamils)அமைப்பு இணைந்து இந்த மாநாட்டை நடத்தவுள்ளது.

11ஆவது மாநாட்டின் இணையத் தளம் :  https://icsts11.org ;   http://iatrofficial.org.

திங்கள், 30 நவம்பர், 2020

சிங்கப்பூரில் 10 ஆண்டுகளில் 100 நிகழ்ச்சிகள்

 அகரமுதல

சிங்கப்பூரில் 10 ஆண்டுகளில் 

100 நிகழ்ச்சிகள் நடத்திய

சமால் முகம்மது கல்லூரி

முன்னாள் மாணவர்கள் சங்கம்

 

சமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) அதன் 10ஆம் ஆண்டு நிறைவு விழாவை 28-11-2020 அன்று இணையம் வழி நடத்திக் கொண்டாடியது.

சிங்கப்பூரில் கல்வி சார்ந்த சமூக நல அறப்பணிகளை ஆற்றி வரும் இச்சங்கம், கடந்த 10 ஆண்டுகளில் 100 நிகழ்ச்சிகளை நடத்தி அருவினை படைத்துள்ளது. மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான இலவசப் பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகள், பொதுமக்களுக்கான மருத்துவச் சொற்பொழிவுகள், ஒற்றுமையை வளர்க்கும் குடும்ப நாள், நோன்புத் துறப்பு,  சமய இன நல்லிணக்க நிகழ்ச்சிகள், தமிழ் மொழி வளர்ச்சிக்கான விழாக்கள், இறகுப் பந்து விளையாட்டுப் போட்டிகள், மாணவர்களுக்கான ஓவியப் போட்டிகள், மாணவர்களுக்கான கல்வி உதவி நிதி வழங்குதல், முதியோர் இல்லத்தில் வசிப்போருக்கு ஆடைகள், சக்கர நாற்காலிகள் நன்கொடை வழங்குதல், மாணவர்களுக்கான எழுதுபொருட்கள் நன்கொடை வழங்குதல், பல்வேறு சமூக அமைப்புகளுடன் இணைந்து சமூக நலப் பணியாற்றுதல் முதலான சேவைகளைச் செய்து, சமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து அரும்பணி ஆற்றி வருகிறது.

சங்கத்தின் தலைவர் கணக்காய்வாளர் முனைவர் மு. அ. காதர் தலைமையில் நடைபெற்ற 10ஆம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டத்தில் சங்கத்தின் செயலாளர் கணிதப் பேராசிரியர் திரு அமானுல்லா, சங்கம் ஆற்றிய கல்வி, சமூக நலப் பணிகளை எடுத்துரைத்தார். 10 ஆண்டுகளில் நடத்திய 100 நிகழ்வுகளின் தொகுப்பு காணொளியாக வெளியிடப்பட்டது. நாகூர் உரூமி எழுதிய “மீண்டுமோர் கருவறை தந்த தாயே!” என்ற பாடலை மாணவிகள் சினேகா முரளி, அனுமிதா முரளி இணைந்து பாட, “சமால் சமால் நீ வாழ்கவே!” என்ற பாடல் இசைமணி பரசு கல்யாண் குரலில் ஒலித்தது. கல்லூரியின் செயலர் முனைவர் காசா நசீமுதீன் சாகிபு, பொருளாளர் சமால் முகம்மது சாகிபு, முதல்வர் முனைவர் இசுமாயில் முகைதீன், பேராசிரியர் சாகிர் உசைன், கல்லூரியின் உலகளாவிய முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பாளர்கள் வாழ்த்துரை வழங்கினர். சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் அத்துல் சுபஃகான் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

தமிழகத்தில் திருச்சியில் 1951ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சமால் முகம்மது கல்லூரி  கடந்த 70ஆண்டுகளாக உயர்கல்வி பட்டப்படிப்புகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

– முதுவை இதாயத்து

 

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, இணையத் தமிழ்க்கூடல் – 15 (28.08.2020): சிங்கப்பூரில் தமிழர் பண்பாடு

 அகரமுதல

ஆவணி 12, 2051 / 28.08.20 / மாலை 4.00

உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, இணையத் தமிழ்க்கூடல்

கூடலுரை : முனைவர் இரா.விமலன், சிங்கப்பூர்

தலைமை : முனைவர் ப.அன்புச்செழியன்

 பதிவுப்படிவம்
https://tinyurl.com/y3wgyvgd

இணைப்பு
https://tinyurl.com/ybkpa3oj

பின்னூட்டப் படிவம்
https://tinyurl.com/y5lrxhes

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

சிங்கப்பூரில் பெரியார் விழா 2019, தமிழ்மொழிப் போட்டிகள்

அகரமுதல

சிங்கப்பூரில்  பெரியார் விழா 2019,  தமிழ்மொழிப் போட்டிகள்

சிங்கப்பூர், ஆக.29  சிங்கப்பூர் பள்ளி மாணவர்களி டையே தமிழ்மொழி மீதான ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் பெரியார் சமூகச் சேவை மன்றத்தின் பெரியார் விழா 2019 தமிழ்மொழிப் போட்டிகள் ஆவணி 07, 2050 /ஆகத்து மாதம் 24ஆம் நாள் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்றது.
இதில் சிங்கப்பூரில் உள்ள பல்வேறு பள்ளிகளிலிருந்து எண்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டி மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது. தொடக்கநிலை (2,3) மாணவர்களுக்குப் பாடல் போட்டியும், தொடக்கநிலை (4,5) மாணவர்களுக்கு ஓவியப் போட்டியும், உயர்நிலை (1, 2) மாணவர்களுக்குப் பெரியார் பொன்மொழிகள் வாசிப்புப் போட்டியும் நடத்தப்பட்டன. போட்டிகளில் மாணவர்கள் துடிப்புடனும் உற்சாகத்துடனும் கலந்து கொண்டனர். ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவர்களை ஊக்கப்படுத்திப்  போட்டிகளில் கலந்துகொள்ள வைத்தமை பாராட் டுக்குரியது.
  • பங்கு பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் புரட்டாசி 05, 2050 / செட்டம்பர் மாதம் 22 -ஆம் நாள் நடைபெறவுள்ள பெரியார் விழாவில் வழங்கப்படும்.

வியாழன், 28 மார்ச், 2019

தமிழ்மொழி விழா 2019 – தமிழ்ச்சான்றோர் புகழ் போற்றும் தமிழவேள் முப்பெரு விழா

அகரமுதல


 தமிழ்மொழி விழா 2019 – தமிழவேள் நற்பணி மன்றம் ஏற்பாட்டில் சிங்கப்பூரின் இருநூற்றாண்டு நிறைவில்
தமிழ்ச்சான்றோர் புகழ் போற்றும் தமிழவேள் முப்பெரு விழா
பங்குனி 17, 2050 ஞாயிறு 31.3.2019  காலை 10.00 முதல்  11.30 மணி வரை
இந்திய மரபுடைமை நிலையம் (சிற்றிந்தியா) சிங்கப்பூர்
தலைமை: பேராசிரியர் சுப.திண்ணப்பன்
முன்னிலை:
இராசுகுமார் சந்திரா (தலைவர் – சிற்றிந்தியா கடைக்காரர்கள், மரபுடைமைச் சங்கம்)
சிறப்பு விருந்தினர்:
இரா.தினகரன் (நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர்)

நினைவுரை:

சிங்கப்பூரின் முதல் தமிழர் முன்னோடி  நாராயண(ப் பிள்ளை):
அருண் வாசுதேவு கிருட்டிணன் (தலைவர் – தமிழர் பேரவை இளையர் பிரிவு, இயக்குநர் – இளமை 2.0)
தமிழுக்குக் கட்டடம் தந்த வள்ளல் உ.இராமசாமி (நாடார்) :
செல்வி. இலக்கியா மதியழகன் (என்யுஎசு உயர்நிலைப்பள்ளி மாணவி, உயர்நிலை 5)
மலாயாப் பெரியார் அ.சி.சுப்பய்யா:
அரு சுப்பு அடைக்கலவன் (நன்யாங்கு தொழில்நுட்பப் பல்கலைக் கழக மாணவர் தலைவர் –  என்டியூ தமிழ் இலக்கிய மன்றம்

வியாழன், 21 மார்ச், 2019

சமால் முகம்மது கல்லூரி மு.மா.ச. குடும்ப நாள், சிங்கப்பூர்

அகரமுதல


சமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் குடும்ப நாள், சிங்கப்பூர்

 திருச்சி சமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), சென்ற ஞாயிற்றுக்கிழமை பங்குனி 03, 2050 / 17-03-2019 அன்று, சிங்கப்பூர் கிழக்குக் கடற்கரைப் பூங்காவில், சிங்கப்பூரின் சமூக ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் மேம்படுத்தும் வகையில், பல இன மக்களும் கலந்துகொண்ட குடும்ப நாள் விழாவைச்  சிறப்பாகக் கொண்டாடியது.
கவிமாலை சிங்கப்பூர் அமைப்பின் தலைவர் கவிஞர் திரு இறை மதியழகன்சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். சிங்கப்பூர் இந்திய முசுலிம் பேரவையின் தலைவர் திரு முகம்மது கௌசு வாழ்த்துரை வழங்கினார்.
“இது போன்ற நிகழ்வுகள், சிங்கப்பூரின் ஒற்றுமை, நல்லிணக்கம், பண்பாட்டுப் பண்புகளைக் கட்டிக் காப்பதற்கும், அதன் அவசியத்தை இளையர்களுக்கு எடுத்துக்காட்டவும் வழி வகுக்கின்றன” என்று குறிப்பிட்டார் சங்கத்தின் தலைவர் கணக்காய்வாளர் முனைவர் மு. அ. காதர்.
மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், புதிர் போட்டிகள், வண்ணம் தீட்டுதல் போட்டி, இல்லத்தரசிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், பெரியவர்களுக்கானப் போட்டிகள், பரிசுக் குலுக்கு போன்றவை விழாவில் இடம் பெற்றன. பெரியவர்கள், இல்லத்தரசிகள், குழந்தைகள் அனைவரும் இவ்விழாவில் கலந்து முதியோர்களைப் போற்றிச் சிறப்பித்தனர். சங்கத்தின் செயலாளர் கணிதப் பேராசிரியர் திரு அமானுல்லா நன்றி கூறினார்.
 முதுவை இதயாத்து

சனி, 16 பிப்ரவரி, 2013

சிங்கப்பூர் விமான நிலையத்தில் மறைந்து விட்ட "தமிழ்மொழி'

சிங்கப்பூர் விமான நிலையத்தில் மறைந்து விட்ட "தமிழ்மொழி'
 
திருப்புத்தூர் : சிங்கப்பூர் "சாங்கி' பன்னாட்டு விமான நிலைய அறிவிப்புப் பலகைகளில், "தமிழ்' மொழி நீக்கப்பட்டது. இது குறித்து தமிழக பயணிகளை கவலையடையச் செய்துள்ளது. சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு தமிழர்களின் பங்கு, இங்கிலாந்து ஆட்சி காலத்திலும், தற்போதும் அளவில்லாதது. அந்நாட்டின் அடிப்படை கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளில், நிரந்தரமாகவும், தற்காலிகமாகவும், தமிழர்கள் அதிகம் உள்ளனர். அங்கு சுற்றுலா செல்பவர்களிலும் தமிழர்களே அதிகம்.

வேலைக்கு செல்பவர்களுக்கு வழங்கப்படும் "தற்காலிக அனுமதி கடிதம்' கூட தமிழில் இருக்கும். அரசின் அலுவலக மொழிகளாக தமிழ், ஆங்கிலம், சீனா, மலாய் உள்ளதால், நகரின் பெரும்பாலான அறிவிப்பு பலகைகளில் நான்கு மொழிகளுமே காணப்படும்.

மேலும், சேமநலநதி,பொது பயன்பாட்டு பில்கள், மின் கட்டணம், தொலைபேசிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து அரசு பரிமாற்ற அச்சிதழ்களும் 4 மொழிகளில் இருக்கும். சிங்கப்பூருக்கு சென்னையிலிருந்து தினமும் 25 விமானங்களும், திருச்சியிலிருந்து 4 விமானங்களும் இயக்கப்படுகின்றன.

அங்குள்ள "சாங்கி' பன்னாட்டு விமான நிலையத்தில், இந்த 4 மொழிகளிலும் அறிவிப்புப் பலகைகள் காணப்பட்டன. ஆனால், அண்மை காலமாக, அந்த விமான நிலைய புதிய அறிவிப்பு பலகைகளில், தமிழ் தவிர மற்ற 3 மொழிகளும் இடம்பெறுகின்றன. இதனால் தொடர்ந்து சிங்கப்பூர் சென்று, வரும் தமிழர்கள் விமான நிலையத்தில் "தமிழ்' மறைக்கப்பட்டதைப் பார்த்து, கவலை தெரிவிக்கின்றனர்.