அகரமுதல
சிங்கப்பூரில் பெரியார் விழா 2019, தமிழ்மொழிப் போட்டிகள்
சிங்கப்பூர், ஆக.29 சிங்கப்பூர் பள்ளி மாணவர்களி டையே தமிழ்மொழி மீதான ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் பெரியார் சமூகச் சேவை மன்றத்தின் பெரியார் விழா 2019 தமிழ்மொழிப் போட்டிகள் ஆவணி 07, 2050 /ஆகத்து மாதம் 24ஆம் நாள் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்றது.
இதில் சிங்கப்பூரில் உள்ள பல்வேறு பள்ளிகளிலிருந்து எண்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டி மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது. தொடக்கநிலை (2,3) மாணவர்களுக்குப் பாடல் போட்டியும், தொடக்கநிலை (4,5) மாணவர்களுக்கு ஓவியப் போட்டியும், உயர்நிலை (1, 2) மாணவர்களுக்குப் பெரியார் பொன்மொழிகள் வாசிப்புப் போட்டியும் நடத்தப்பட்டன. போட்டிகளில் மாணவர்கள் துடிப்புடனும் உற்சாகத்துடனும் கலந்து கொண்டனர். ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவர்களை ஊக்கப்படுத்திப் போட்டிகளில் கலந்துகொள்ள வைத்தமை பாராட் டுக்குரியது.
- பங்கு பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் புரட்டாசி 05, 2050 / செட்டம்பர் மாதம் 22 -ஆம் நாள் நடைபெறவுள்ள பெரியார் விழாவில் வழங்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக