வெள்ளி, 2 மே, 2014

Hijacked-nominated-installed ‘leadership’ silences TNA’s struggle

Hijacked-nominated-installed ‘leadership’ silences TNA’s struggle

[TamilNet, Thursday, 01 May 2014, 13:45 GMT]
Tamil National Alliance (TNA) councillors and parliamentarians were summoned to Trincomalee Town Council on Wednesday to discuss two issues, the UN Human Rights Council resolution on Sri Lanka and the so-called South African initiative. In order to defend its approach, a hijacked-nominated-installed section of the TNA was instructing the silent majority of the TNA not to speak anything against the ‘international’ effort by South Africa. In order to make the remaining not to rebel against R Sampanthan, MA Sumanthiran and CV Wigneswaran, a so-called high-level committee of 8 members was floated instructing all the members to toe in line in expressing opinion on internal and external matters by consulting the committee.

The move comes as the trio was seeking a path contradictory to what has even been achieved in the Geneva discourse, political observers in the island said.

Whatever the little seen at the face value of the Geneva Resolution basically contradicts the ‘behind the screen’ manoeuvring of South Africa.

The Geneva Resolution called for OHCHR investigation, even though it sabotaged the freedom of such an investigation by allowing the genocidal military occupation to continue. The South Africa manoeuvring pivots around bailing out the genocide criminals for crumps thrown at a newly groomed, simulated, Tamil leadership.

While progressive forces in the UN and in the other international organisations are keen in making a point through the Geneva Resolution by taking it beyond the agenda of the USA or any other power, but are worried how to get evidence, and are disillusioned at the bankruptcy of the kind of Tamil ’activists’ they see in the pockets of the powers, the line taken by the TNA trio is a further blow to the Tamil cause, commented Tamil activists for alternative politics in the island.

By an opportunistic politics of power-centric and Colombo-centric interests, Tamils lose a historic opportunity of universalising their struggle into a landmark struggle of humanity, and the chance of getting a solution of self-respect setting the paradigm for all similar nations in the world, comment progressive sections of international observers.

* * *

The lone target of the TNA trio at the Trinco meet was Ms Ananthi Sasitharan for her bold presentation at Geneva, of nothing but what had already been resolved by the NPC. This means that either the TNA trio didn’t like that resolution in their heart or it has been asked to withdraw the resolution in practice, Tamil political observers in the island said.

Sampanthan was also scuttling the vital relationship between the Eezham Tamils and the Tamil Nadu polity by saying that New Delhi was important, despite the hostile approach exposed in Geneva where India was arrogantly backing the sovereignty claim of the genocidal Sri Lankan State by taking a position against the internationalisation of the investigation process. The resolution itself was literally backing the sovereignty claim, but wanted an international enquiry mechanism through the Office of the High Commissioner for Human Rights. South Africa chose to remain silent.

While an international fault line has been created in Geneva following the discourse between the Establishments of India and the UK-USA, both of them sabotaging the Tamil national question for their own geopolitical purposes, the Colombo-centric trio of the TNA is creating a local fault line by silencing and suppressing the democratically elected voices in the North and East, Tamil activists for alternative politics told TamilNet.

While Mr Sampanthan maintained that the TNA would not enter into an All Party Committee (APC) discourse as Rajapaksa Establishment was insisting upon, he was particular in maintaining a good rapport with the Indian Establishment stating that India had its ‘limitations’ in taking a principled stand in favour of international investigations in Geneva.

The parliamentary group leader of the TNA Mr R. Sampanthan and the nominated parliamentarian on TNA’s national list Mr M.A. Sumanthiran chose to launch a joint verbal assault on Ms Ananthi Sasitharan, the councillor who had polled most votes next to the chief minister of the Northern Provincial Council, for having addressed the Human Rights Council’s 25th Session without seeking ‘permission’ from the ‘party leadership’.

The Chief Minister of the NPC Mr C.V. Wigneswaran, who had proposed Ms Ananthi Sasitharan to address the Geneva session on behalf of the NPC, maintained silence, while the duo was castigating the mother of three who has been seeking justice for the missing persons including her husband Elilan, who was the political head of Trincomalee during the times of the LTTE.

None of the other politicians, including Suresh Premachandran and S. Sritharan, came to the defence while E. Saravanapawan joined Sumanthiran in attacking Ananthi, news sources in Trincomalee told TamilNet.

Tamil people question South Africa’s appearance after the Geneva resolution, whether the process deviates the issue into an internal discourse and seals off the international dimensions. In the invitation to the Trinco meet, Mr Sampanthan had asked to present the demands in written form and Ms Sasitharan went to the meeting preparing her demands after consulting supporters and activists.

However, when Ananthi was reading her statement, Sumanthiran interrupted, launching a personal attack disrupting Ananthi. There was no one to defend her. Even those who criticise the conduct of Sumanthiran maintained silence.

There should be no talk on genocide was the position of Sumanthiran at the Trincomalee meeting, as he openly rejected the initial demand of Ananthi.

Ms Ananthi was present in Geneva twice, first with MA Sumanthiran, and later alone on her own for a second time, after revealing that she had been asked to remain silent at a crucial meeting in Geneva, where Mr Sumanthiran came down from demanding an international investigation, which disappointed even some of the European diplomats who were present at the meeting. International investigation or not, didn’t matter, the only thing important was to get a resolution passed, was the position of Sumanthiran when he addressed 18 countries in a closed-door meeting.

Following are the six demands put forward by TNA councillor Ananthi at the Trincomalee meeting (full text in Tamil is also provided at the end):


  1. The Tamil National Alliance should openly demand international investigations on Tamil genocide.
  2. The TNA should demand the international community to move forward to the next step as the potential witnesses are already under threat and intimidation, and are subjected to an accelerated militarisation of the SL military disrupting further the possibility of witnesses cooperating with any investigation. The IC should take responsibility for creating a situation conducive for conducting an international investigation.
  3. The TNA should establish political trust with Tamil Nadu and its Chief Minister, who remain the only hope at the moment. The TNA should evaluate itself with self-criticism and take seriously the criticism being levelled against the Colombo-centric mindset that is blocking the rapport with Tamil Nadu. The TNA should be genuine and transparent in its approach on the matter.
  4. While the militarisation is destabilising the local environment to conduct any investigation possible, there is a fear among the Tamils that South African move is aimed at scuttling the furtherance of the international dimension of the Geneva resolution. There is no problem with TNA engaging with all the international actors including South Africa. But, there should be no duplicity. A way to achieve this is making the stand open and public without allowing space for contradictory manoeuvrings.
  5. The structural genocide is being taking forward in full force in the Eastern Province similar to the Northern Province. Therefore, all democratically elected representatives of the TNA from local civic bodies, both the provincial councils and the parliamentarians, should be summoned to take a democratic decision.
  6. In order to ensure timely participation in producing evidences and statistics to the Office of the High Commissioner on Human Rights, the TNA should constitute a work group to conduct the necessary work with immediate effect.


* * *

The original Tamil text by Ananthi Sasitharan follows:

ஜெனீவாவில் நிறைவேறியுள்ள இலங்கை தொடர்பான மனித உரிமை அறிக்கை தொடர்பாகவும் தென்னாபிரிக்க நகர்வு தொடர்பானதுமான நிலைப்பாடு

ஐ.நா.வின் மனித உரிமை அவையில் ஈழத்தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு குறித்தும் சர்வதேச சமூகம் எவ்வாறான முறையில் எமது மக்கள் மீதும் மண் மீதும் தொடரும் கட்டமைப்புரீதீயான இன அழிப்பைப் பற்றியும், அவையின் அமர்விலும், என்னால் பங்கெடுக்கக்கூடியதாகவிருந்த ஓர நிகழ்வுகளிலும் கருத்துக்களை முன்வைத்திருந்தேன்.

இங்கே கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் பயங்கரமான கைதுகள், சுற்றிவளைப்புகள், மனித உரிமைக்காகக் குரல்கொடுப்போர் மீது மேற்கொள்ளப்பட்டிருக்கும் பயங்கரமான நடவடிக்கைகள் குறித்தும், முக்கியமாக காணாமற்போயிருப்போரின் உறவுகள் சார்பாகவும், கருத்துகளை முன்வைத்திருந்தேன்.

உண்மையானதொரு சர்வதேச விசாரணையை நோக்கிய நகர்வாக மனித உரிமைகள் அவையின் நிலைப்பாடு அமையவேண்டும். இன அழிப்பு தொடர்பான குற்றச்சாட்டை இனியும் நிராகரித்துக்கொண்டு செல்லாமல், தட்டிக்கழிக்காமல் நேர்மையான, சுயாதீனமான, சர்வதேச விசாரணை ஒன்று போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இன அழிப்பு குற்றம் என்ற மூன்று விடயங்களையும் உள்ளடக்கியதாக அமையவேண்டும் என்ற எமது மக்களின் நிலைப்பாட்டை நான்கு தடவை சபையின் அமர்வில் நேரடியாக முன்வைத்தேன்.

ஐ.நா. மனித உரிமை உயர் ஸ்தானிகர் வட கிழக்குக்கு வந்து சந்திப்புகளை மேற்கொண்டபின்னர், கொழும்பில் வைத்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய வீடியோ நேர்காணலில் தான் வடக்குக்கும் கிழக்குக்கும் வருகை தந்த போது இன அழிப்பு என்ற சொல்லை தனக்கு எவரும் குறிப்பிடவில்லை என்று கூறியிருந்தார்.

இது குறித்த கவலை பல மட்டங்களில் இருந்தும் வெளியாகியிருந்தது. குறிப்பாக மலேசிய பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்கள் வெளிப்படையாகவே அம்மையாரின் இந்தக் கூற்று பற்றிய விமர்சனத்தை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், வடமாகாண சபையில் இன அழிப்பு குறித்த சர்வதேச விசாரணை வேண்டும் என்று ஒரு தீர்மானம் ஜனநாயக ரீதியாக தெரிவான பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டது. இந்தத் தீர்மானம் திரிபுக்குள்ளாக்கப்பட்டாலும் இன அழிப்புக்கு ஒப்பான குற்றம் குறித்த சர்வதேச விசாரணை வேண்டும் என்ற அளவில் முதல்வரால் நிறைவேற்றப்பட்டது. அது மட்டுமல்ல இந்த விடயம் தொடர்பாக ஜெனிவா சென்று கருத்தை முன்வைக்கும் ஆணையும் எனக்குத் தரப்பட்டிருந்தது.

ஜெனிவா சென்று இரு முறை நேரடியாக பார்த்தபோது தான் அங்கு எவ்வாறு விடயங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதை ஆழமாக புரிந்துகொள்ள முடிந்தது.

உண்மையில் ஒட்டுமொத்தமான தமிழ்த் தேசிய இனம் தனது கருத்தை சரியான முறையில், கண்கூடான முறையில் முன்வைப்பதற்கான ஜனநாயக வெளியை நாம் ஏன் இதுவரை சரியாக பயன்படுத்தவில்லை என்ற கேள்வியே அங்கு சென்று நிலைமையை அவதானித்தபோது எனக்கு ஏற்பட்டது.

அதைச் சரியாகச் செய்யத் தவறினால் வரலாற்றுக்குத் தவறிழைத்தவர்கள் ஆவோம் என்பதைப் புரிந்து கொண்டு வரலாற்றுக்கு நேர்மையாக எமது தேசிய இனத்தின் கருத்தை அங்கு பதிவு செய்தேன்.

ஜெனீவாவில் கொண்டுவரப்பட்ட நகலில் தமிழ் என்ற சொல்லே கிடையாது.

சிறிலங்கா ஒற்றையாட்சி அரசுக்கும் ஈழத்தமிழ்த் தேசிய இனத்திற்கும் இடையிலான தேசிய இனப் பிரச்சனை குறித்த தெளிவின்றி அந்த நகல் வரையப்பட்டிருந்தாலும் அதில் இராணுவ-விலக்கு என்று ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அதுவும் பின்னர் அதில் இருந்து நீக்கப்பட்டு விட்டது.
இது குறித்த பகிரங்கமான அதிருப்தியை நாம் வெளியிடத் தவறுவோமென்றால் வரலாற்றுக்குத் தவறிழைத்தவர்களாகவே நாம் அடையாளங்காணப்படுவோம்.

அதேவேளை, ஐ.நா. மனித உரிமை உயர் ஸ்தானிகரின் அலுவலகத்தின் ஊடான ஒரு சர்வதேச பொறிமுறையுடனான விசாரணைக்கான தேவை இருக்கிறது என்பதை இந்த தீர்மானம் அங்கீகரித்திருக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு, அதை மேலும் பலப்படுத்துவத்றகாவன செயற்பாடுகளிலும் நாம் ஈடுபடவேண்டும்.

இந்தத் தீர்மானத்தையே சிறிலங்கா அரசு அப்பட்டமாக நிராகரித்திருக்கிறது.

இன அழிப்பு குறித்த விசாரணை என்று சொன்னாலும் சிறிலங்கா அரசு நிராகரிக்கும், அது இல்லாத எந்த ஒரு சர்வதேச விசாரணையையும் அது நிராகரிக்கும் என்றால், தமிழ்த் தரப்பில் இன அழிப்பு என்ற அரசியற் கோரிக்கையை முன்வைக்காது தவறுவதை இனியும் எந்தவகையிலும் எவரும் நியாயப்படுத்த முடியாது.

இந்த நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். இன அழிப்பு குறித்த சர்வதேச விசாரணை வேண்டும் என்று நாம் இனியும் தெளிவாகவும், பகிரங்கமாகவும், நேர்மையாகவும் கூறத் தவறினால் அது நாம் எமது தேசிய இனத்திற்கு இழைக்கும் மாபெரும் வரலாற்றுத் துரோகமாகும்.

தேர்தல் காலத்திலேயே மழுங்கடித்த வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கி, தேர்தலுக்குப் பின்னர் எமது அரசியல் அரங்குகளில் அதை மேலும் நீர்த்துப்போகச் செய்து, இறுதியில் நடைமுறையில் மேலும் நீர்த்துப்போகவைக்கும் செயற்பாடு எமது தேசிய இனத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் செயலாகிவிடும்.

எனவே, எனது முதலாவது கோரிக்கை:
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆணித்தரமாக இன அழிப்பு மீதான சர்வதேச விசாரணையைப் பகிரங்கமாகக் கோரவேண்டும்.

இந்தக்கோரிக்கைக்குப் பின்னரே எமது அடுத்த கோரிக்கைகளை முன்வைக்கவேண்டும்.

எனது இரண்டாவது கோரிக்கை:
ஐ.நா. மனித உரிமை ஆணையரின் அலுவலகத்தால் மேற்கொள்ளப்படக்கூடிய விசாரணையை சிறிலங்கா அரசு மறுப்பது மட்டுமல்ல, இராணுவக் கெடுபிடிகளை நடைமுறைப்படுத்தி எந்த ஒரு சாட்சியமும் சுயாதீனமான முறையில் பயமின்றி எந்த ஒரு விசாரணைப் பொறிமுறைக்கும் ஒத்துழைக்கமுடியாத சூழல் நிலவுவதால், சர்வதேச சமுகம் இனியும் காலம் தாழ்த்தாது அதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கான பொறிமுறைக்கு நகரவேண்டும் என்ற கோரிக்கையை பகிரங்கமாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கவேண்டும்.

எனது மூன்றாவது கோரிக்கை:
ஈழத் தமித் தேசிய இனத்துக்கு இன்று இருக்கும் ஒரு நம்பிக்கை தமிழ்நாட்டு அரசும் அதன் முதல்வரும். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் செயற்பாடுகள் இனியாவது மனச்சுத்தியுடன் இந்த அரசியல் உறவைப் பலப்படுத்துவதாக அமையவேண்டும். இது குறித்த சுய விமர்சனத்தை நேர்மையோடு அணுகும் தன்மை கொழும்பை மையப்படுத்திச் சிந்திக்கும் ஒரு வட்டத்தினால் தடுக்கப்படுகிறது என்ற கருத்து மக்கள் மத்தியில் பலமாக இருக்கிறது. எனவே இனியாவது இந்த ஒளித்து மறைத்து செயற்படும் அரசியலைத் தவிர்த்து நேர்மையான, வெளிப்படையான கருத்தை முன்வைக்கவேண்டும்.

எனது நான்காவது கோரிக்கை:
ஜெனிவா தீர்மானத்தை நடைமுறையில் பலமிழக்கச் செய்யும் ஒரு காரியம் வடக்கிலும் கிழக்கிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இராணுவ ஆட்சி. இது இலங்கைத்தீவின் உள்ளிருக்கும் நிலை. இதே போல சர்வதேசப் பரப்பில் இந்தத் தீர்மானத்தின் செல்நெறியை வேறுதிசைக்குத் திருப்பும் ஒரு நகர்வாகவே பூடகமாக முன்வைக்கப்பட்டுவரும் தென்னாபிரிக்க நகர்வு எமது மக்களாலும் எமது மக்களில் கரிசனை கொண்டுள்ள சர்வதேச நட்புச் சக்திகளாலும் பார்க்கப்படும்.

அதிலும் குறிப்பாக, மக்களுக்குத் தெரியப்படுத்தப்படாத, பூடகமான நகர்வுக்காக மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கழுதை தேய்ந்து கட்டெறும்பாகும் நலிவு அரசியலை கடைப்பிடிக்கக்கூடாது.

எந்த சர்வதேச தரப்போடும் நாம் பேசலாம். பேச வேண்டும். ஆனால், அதைச் செய்யும் போது எமது பகிரங்க நிலைப்பாடு குறித்து நாம் தெளிவாக இருந்தவாறு அதைச் செய்யவேண்டும். ஒரு நிலைப்பாட்டை இன்னொரு நிலைப்பாடு முரண்படுத்தும் நிலையை அப்போது தான் நாம் தவிர்க்கலாம்.

ஆகவே, எல்லாவற்றையும் இணைத்துப் பார்த்த நிலையில் எமது நிலைப்பாடு அமையவேண்டும்.

எனது ஐந்தாவது கோரிக்கை:
வடக்கு மாகாணத்துக்கு ஒப்பாக கிழக்கு மாகாணத்திலும் கட்டமைப்பு ரீதியான இன அழிப்புச் செயற்பாடு நடைபெறுகிறது. இது குறித்து சர்வதேச தரப்புகள் தொடக்கம் தமிழ்த் தரப்புகள் வரை குறித்த கவனம் செலுத்த முடியாதிருக்கின்றன. இது தொடர்பான தெளிவான ஒரு செயற்பாடு அவசியம். ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட வடக்கு கிழக்கின் அனைத்து உள்ளூராட்சி, மாகாண சபை, பாராளுமன்ற தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதிகளை ஓரிடத்தில் ஒன்றுகூட்டி சில முடிவுகளை வட கிழக்கை சமமாக மையப்படுத்திய நிலையில் மேற்கொள்ள வேண்டும்.

எனது ஆறாவது கோரிக்கை:
ஐ.நா. மனித உரிமை ஆணையரின் அலுவலகம் தனது நடவடிக்கையை முன்னெடுக்கும் போது தமிழ்மக்களாகிய நாம் அதற்கு எந்த வகையில் சரியான ஆதாரங்களையும், புள்ளிவிபரங்களையும் முன்வைப்பது என்ற விடயத்திற்கான ஒரு செயற்குழுவையும் அதற்கான செயற்பாட்டை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்தும் உடனடியான முடிவை மேற்கொள்ளவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக