வியாழன், 26 ஜூலை, 2012

காய்கறி விற்று மன்பதைப் பணி : பெண்ணுக்கு மகசேசே விருது

காய்கறி விற்று சமூக சேவை : பெண்ணுக்கு மகசேசே விருது

First Published : 26 Jul 2012 02:27:11 PM IST


மணிலா, ஜூலை 26 : தாய்வான் நாட்டைச் சேர்ந்த காய்கறி விற்கும் பெண்ணான சென் ஷு-சூ, இந்த ஆண்டு மகசேசே விருது பெற தேர்வான ஆறு பேரில் ஒருவராவார்.இவர் தினமும் காய்கறிகளை விற்பனை செய்து அதில் வரும் பணத்தைக் கொண்டு பல அறக்கட்டளைகளுக்கும், அனாதை இல்லங்களுக்கும் நன்கொடை வழங்கி பலரது வாழ்க்கைக்கு ஆதாரமாக இருந்துள்ளார்.சாதாரண எளிய வீட்டில் வசிக்கும் சென், தனக்காக எந்த ஆடம்பரப் பொருட்களையும் வாங்காமல், தரையில் படுத்துத்தான் உறங்குகிறார். தனக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல், ஆதரவற்றவர்களுக்கும், பேரிடர்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவுவதையே வாடிக்கையாக வாழ்ந்துள்ளார். இவரை கௌரவிக்கும் வகையில் மகசேசே விருது வழங்கப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக