சனி, 28 ஜூலை, 2012

காவிரி : தடுப்பணைகளுக்கு மத்திய உதவி: கூட்டாளி தி.மு.க.விற்கு உறக்கமா?

கருநாடகாவுக்கு ரூ.2,600 கோடி தருகிறது
 மத்திய அரசு
பெங்களூரு: ""காவிரி, கிருஷ்ணா நதிகளில் தடுப்பணைகள் கட்ட மத்திய அரசு, 2,600 கோடி ரூபாய் கொடுக்கவுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில், ஒரு லட்சத்து, 35 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயன் பெறும்,'' என்று கர்நாடக சட்டசபையில் நீர்வளத் துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறினார்.

கர்நாடக சட்டசபையில் பட்ஜெட் மீது எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஜெயசந்திர பேசியதாவது:
கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லததால், கிராமத்தினர் நகருக்கு வருகின்றனர். அனைவரும் பெங்களூரு வருவதால், பெங்களூருவில் இட நெருக்கடி ஏற்படுகிறது.இதை சமாளிக்க பெங்களூருவில் நான்கு இடங்களில் லே-அவுட் அமைக்க, பத்து ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. பி.டி.ஏ.,வின் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன. இதைச் சரிப்படுத்தினால், நம் மாநிலம் பெற்றுள்ள, ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனை அடைத்து விடலாம். அதற்கு சட்டசபை குழு ஒன்றை அமைத்து கண்காணிக்க வேண்டும். விவசாயிகள் பயிர் செய்யும் விளை பொருட்களுக்கு நல்ல விலை கொடுக்க வேண்டும். இதே நிலை நீடித்தால், வரும் நாட்களில் விவசாயிகள் இல்லாத மாநிலமாக மாறிவிடும்.

காவிரியிலிருந்து, தமிழகத்துக்கு, 192 டி.எம்.சி., தண்ணீர் கொடுக்க வேண்டும் என, மத்திய தீர்ப்பாயம் கூறியுள்ளது. நாம் அதற்கும் மேல் தண்ணீர் கொடுத்து வருகிறோம். ஆனாலும், தமிழகம், நம் விவசாயத்திற்கு தண்ணீர் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
அவர்களுக்கு, 192 டி.எம்.சி., தண்ணீருக்கு மேல் ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்கக் கூடாது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசுக்கு கடிதத்திற்கு மேல் கடிதம் எழுதி வருகிறார்.
இந்த விஷயத்தில் மாநில அரசு எடுக்கும் அனைத்து தீர்மானங்களுக்கு எதிர்க்கட்சியான நாங்கள் ஒத்துழைப்பு கொடுப்போம். காவிரி நம் தண்ணீர். இதில் எந்த ஒரு திட்டம் போடவும் நமக்கு உரிமையுள்ளது. தமிழகத்தில், மேட்டூர், ஒகேனக்கல் திட்டம் போல் நாம், "மேக்கேதாட்' பகுதியில் அணை கட்டுவோம். நீர் திட்டங்களுக்கு மத்திய அரசின் உதவி செய்யும்.தமிழகத்தில், காவிரி, வைகையில், 700 கோடி ரூபாயில் திட்டம் செயல்படுத்தவுள்ளனர். நாம் நம் மாநிலத்திற்கு, மத்திய அரசிடம் கேட்கலாம் என்றார்.

இதற்கு பதிலளித்து நீர்வளத் துறை அமைச்சர் பசவராஜ் மொம்மை பேசியதாவது:
மத்திய அரசு, வாட்டர் மிஷன் திட்டத்திற்கு, 9,000 கோடி ரூபாய் முதல்கட்டமாக கொடுத்துள்ளது. இந்த வாட்டர் மிஷன் திட்டம் செயல்படுத்த, 2,600 கோடி ரூபாய் தர மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் மூலம் காவிரி உட்பட நம் மாநில நதிகளில் தடுப்பணைகள் கட்டி, அதன் மூலம் நம் மாநில விவசாயிகளுக்கு தண்ணீர் கொடுக்க முடியும். இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால், நம் மாநிலத்தில், ஒரு லட்சத்து, 35 ஆயிரம் ஏக்கருக்கு சொந்தமான விவசாயிகள் பயன் பெறுவர் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக