வெள்ளி, 27 ஜூலை, 2012

மனித நேயம் அற்றவர்கள் மருததுவமனை நடததலாமா?

 
ரூ.200 க்காக உயிர் காக்கும் கருவி அகற்றம்: பரிதாபமாக இறந்தது ஐந்து நாள் குழந்தை
தினமலர்
ஜலந்தர்: அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக, 200 ரூபாய் பணத்தை கட்ட, தந்தை தவறியதால், பிறந்து ஐந்து நாளே ஆன குழந்தைக்காக, இணைக்கப்பட்டிருந்த உயிர் காக்கும் கருவிகள் அகற்றப்பட்டன. இதனால், குழந்தை பரிதாபமாக இறந்தது.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சீவ் குமார். இவரது மனைவி அனிதா. கர்ப்பமாக இருந்த இவருக்கு, 21ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, ஜலந்தர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பெண் குழந்தையை பெற்றெடுத்தார். ஆனால், அக்குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் தொற்று இருந்ததால், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, உயிர் காக்கும் கருவிகள் மூலம், செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. அப்போது, உயிர் காக்கும் கருவிகளுக்கான கட்டணமாக, 200 ரூபாய் செலுத்தும்படி, சஞ்சீவ் குமாரிடம், மருத்துவமனை செவிலியர்கள் தெரிவித்தனர். அந்தப் பணத்தைக் கட்ட சஞ்சீவ் குமாரால் முடியவில்லை. அதனால், குழந்தைக்கு செயற்கை சுவாசம் அளிக்க இணைக்கப்பட்டிருந்த, உயிர் காக்கும் கருவிகளை, செவிலியர்கள் அகற்றினர். இதனால், பிறந்து ஐந்து நாளே ஆன, சஞ்சீவ் குமாரின் குழந்தை இறந்தது. இதையறிந்த, சஞ்சீவ்குமாரும், அவரின் மனைவியும் கதறி அழுதனர். சம்பவம் குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் இக்பால் சிங்கிடம் கேட்டபோது, ""நான் வெளியூரில் இருக்கிறேன். இந்த சம்பவம் குறித்து எனக்கு தெரியாது. சம்பவத்தில் யார் ஈடுபட்டிருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். பஞ்சாப் சுகாதாரத்துறை அமைச்சர் மதன்மோகன் மிட்டல் கூறுகையில், ""இது எனக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக