வெள்ளி, 27 ஜூலை, 2012

கடந்த 3 ஆண்டுகளில் நடந்த பள்ளி ஊர்தி நேர்ச்சிகள்

கடந்த 3 ஆண்டுகளில் நடந்த பள்ளி வாகன விபத்துகள்

First Published : 27 Jul 2012 12:30:12 AM IST


 2010 ஜனவரி 21: சென்னை ஆலந்தூரில் தனியார் பள்ளி வாகன பஸ், விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 வயது சிறுமி அஃப்ரின் உயிரிழந்தார்.  பிப்ரவரி 10: ராமேசுவரம் அருகில், ராமணாதபுரம் மரக்கையூர் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவ, மாணவிகள் 42 பேரை ஏற்றிச் சென்ற வேன் விபத்துக்குள்ளானதில் 22 குழந்தைகள் காயமடைந்தனர்.  டிசம்பர் 20: கடலூர் மாவட்டம் பெரியபட்டுவில் பள்ளி மாணவிகளை ஏற்றிச் சென்ற வேனும், தனியார் ஆயில் நிறுவன ஊழியர்கள் பஸ்ஸýம் மோதிக் கொண்டதில், வேனில் பயணம் செய்த இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் பி. அகிலாண்டீஸ்வரி, பி. அபிராமி மற்றும் ஆர். பவித்ரா, ஆர். திவ்யா ஆகியோர் உயிரிழந்தனர்.  2011 மே 4: காரைக்கால் பிள்ளைபேருவாசலில் 30 மாணவர்கள் மற்றும் ஓர் ஆசிரியரை ஏற்றிக்கொண்டு சென்ற பள்ளி வேன் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், டிரைவரும் 21 பள்ளி குழந்தைகளும் காயமடைந்தனர்.  ஜூலை 1: தருமபுரி அருகில் பள்ளி வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 5 வயது சிறுமியின் கை துண்டானது. 20 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.  செப்டம்பர் 14: சென்னையை அடுத்த திருநின்றவூரில் 20 பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் எஸ். திவ்யஸ்ரீ (4) என்ற யுகேஜி மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் பயணித்த 19 குழந்தைகள் காயமடைந்தனர்.  அக்டோபர் 29: சேலம் எடப்பாடி அருகே தனியார் பள்ளி வேன் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 14 மாணவ, மாணவிகள் படுகாயமடைந்தனர்.  நவம்பர் 28: பொன்னேரி அருகே காக்குமேடுவில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 20 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.  டிசம்பர் 6: கோவை கேவில்மேடு அருகில் பள்ளி வேனும் மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த 8 வயது பள்ளிச் சிறுமி உயிரிழந்தாள்.  2012 ஏப்ரல் 9: கடலூர் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் நைநான்குப்பத்தில் பள்ளி வேன் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 5 வயது யுகேஜி மாணவி அஞ்சனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேனில் பயணித்த மற்ற 25 மாணவிகள் படுகாயமடைந்தனர்.  ஜூலை 25: சென்னையை அடுத்த தாம்பரம் சேலையூரில் தனியார் பள்ளிக்கு குத்தகை அடிப்படையில் இயங்கி வந்த பஸ்ஸின் துவாரம் வழியாக கீழே விழுந்த 2-ம் வகுப்பு மாணவி ஸ்ருதி பஸ்ஸின் பின் சக்கரம் ஏறி உயிரிழந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக