வெள்ளி, 27 ஜூலை, 2012

எனது மகளின் மரணம் பள்ளி நிருவாகிகளுக்கு ப் பாடமாக அமையும்: சுருதியின் தந்தை உருக்கம்

எனது மகளின் மரணம் பள்ளி நிருவாகிகளுக்கு ப் பாடமாக அமையும்: சுருதியின் தந்தை உருக்கம்



 தாம்பரம், ஜூலை 26: எனது மகளின் மரணம் பள்ளி நிர்வாகிகளுக்கு பாடமாக அமைய வேண்டும், இனியாவது இதுபோன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பஸ்ஸில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சிறுமி ஸ்ருதியின் தந்தை சேதுமாதவன் கூறினார்.  கடும் சோகத்தில் ஆழ்ந்திருந்த அவர் கூறியது: என் மகள் மறைந்துவிட்டாள் என்பதை என்னாலும் என் குடும்பத்தினராலும் நம்பவே முடியவில்லை. எனது நினைவில் தொடர்ந்து வலம் வந்து கொண்டு இருக்கிறாள். காலையில் அவளை பள்ளிக்கு அழைத்துச் சென்று முடிச்சூரில் இறக்கிவிட்டுச் செல்லும் நான், இரவில் வீடு திரும்பும்போது சமயங்களில் விழித்திருப்பாள். பெரும்பாலும் தூங்கி விடுவாள். இப்போது நிரந்தரமாகத் தூங்கச் சென்று விட்டாள்.  அவளது இழப்பு ஒருபுறம் எங்களை தாங்கமுடியாத துயரத்தில் ஆழ்த்தினாலும், சமூகத்திற்கு மிகப்பெரிய பாடத்தை தனது மரணம் மூலம் உணர்த்திவிட்டுச் சென்று விட்டாள். அவள் மூலம் தமிழ்நாட்டில், இந்தியாவில் பஸ்கள் மூலம் கலவி பயிலச் செல்லும் பள்ளிக் குழந்தைகளுக்கு சட்ட ரீதியான தார்மிகப் பாதுகாப்பு வளையம் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது.  குழந்தைகளை ஆசையோடு பெற்று, வளர்த்து மிகப்பெரிய கனவுகளுடன் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பெற்றோர்களுக்கும், பள்ளிகளுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்லும் வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கும் மறக்கமுடியாத பாடத்தை உணர்த்தி விட்டாள்.  வேறு எந்த ஒரு பள்ளிக் குழந்தைக்கும் இனி இதுபோன்றதொரு மரணம் நிகழாவண்ணம்மூலம் தடுக்கும் பாதுகாப்பு கேடயமாக என் மகள் ஸ்ருதி அமைந்து விட்டாள் என்பது தாங்கமுடியாத துயரத்திலும் ஆறுதலான விஷயம் என்று கண்ணீர் பெருகி வழிந்தோடியபடி கூறினார் சேதுமாதவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக