school bus லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
school bus லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 28 ஜூலை, 2012

மழலையர் உயிர்கள் மலிவா? பள்ளிப் பேருந்தில் மற்றொரு பலி!


பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி எல்.கே.ஜி., மாணவி பலி

வேலூர்:வேலூம் மாவட்டம், ஆம்பூர் அருகே பள்ளி பஸ் மோதியதில், அதே பள்ளி எல்.கே.ஜி., மாணவி இதாறந்ர்.

ஆம்பூர் அடுத்த உம்மராபாத் அருகே, ஈச்சம்பட்டு மீனாட்சி காலனியைச் சேர்ந்தவர் குமார். கூலித் தொழிலாளி. இவர் மகள்கள் ஸ்விதா,10, சுஜிதா, 3, உறவினர் மகன் அசோக், 12, ஆகியோர் மாரப்பட்டு எம்பாசோ (இ.எம்.பி. ஏ.எஸ்.எஸ்.ஓ.,) மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில்
படிக்கின்றனர்.

சுஜிதா, எல்.கே.ஜி., படிக்கிறார். பள்ளியின் சார்பில், 20க்கும் மேற்பட்ட எய்ச்சர் மினி பஸ்கள் உள்ளன. நேற்று வாணியம்பாடியைச் சேர்ந்த டிரைவர் கிருஷ்ணன், 35, பள்ளி பஸ்சை ஓட்டி வந்தார். மாலை, 5 மணிக்கு மாணவ, மாணவியரை பள்ளியில் இருந்து ஏற்றிக் கொண்டு, ஒவ்வொரு கிராமமாகப் போய் இறக்கி விட்டு வந்து கொண்டிருந்தனர். மாலை, 5. 15 மணிக்கு, ஸ்விதா, சுஜிதா வை, அவர்கள் வீட்டுக்கு அருகில் அருகன் துருகம் என்ற இடத்தில் உள்ள முருகன் கோயில் அருகே, பஸ்சில் இருந்து இறக்கி விட்டனர். இறங்கிய உடன் வீட்டுக்கு போகும் ஆவலில், ஸ்விதா, சுஜிதா ஆகியோர் பஸ்சுக்கு முன் பக்கமாக ஓடி, எதிர் புறமும் இருந்த சாலையை கடக்க முயன்றனர்.

அப்போது டிரைவர் வேகமாக, பஸ்சை எடுக்க, பஸ்சின் முன் பக்க டயரில் சுஜிதா சிக்கிக் கொண்டார். இதை கவனிக்காத டிரைவர் பஸ்சை வேகமாக ஓட்டினார். சுஜிதாவின் உடலில் முன்புற சக்கரம் ஏறி இறங்கியது. சுஜிதா உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.அப்பகுதியினர், பஸ் சக்கரத்தில் சிக்கிய சுஜிதாவை மீட்கப் போராடினர். இதை பார்த்த டிரைவர் கிருஷ்ணன் தப்ப முயன்ற போது, பொது மக்கள் அவரை பிடித்து மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.

பின் மாணவி சாவுக்கு காரணமான பஸ்சை கொளுத்த அப்பகுதியினர் மண்ணெண்ணெய் கேன்களுடன் வந்தனர். சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த உம்மராபாத் போலீசார் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.பின் பஸ் டிரைவர் கிருஷ்ணனை கைது செய்தனர். பள்ளி தாளாளர் சண்முகத்திடம் விசாரணை செய்து வருகின்றனர். பள்ளி பஸ் டிரைவர் கிருஷ்ணன், மண்பாடி லாரி ஓட்டிக் கொண்டு இருந்தார் என்றும், அவரை பகுதி நேரமாக பஸ்சை ஓட்டச் சொன்னதால் விபத்து நடந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டியுஉள்ளனர்.


வெள்ளி, 27 ஜூலை, 2012

கடந்த 3 ஆண்டுகளில் நடந்த பள்ளி ஊர்தி நேர்ச்சிகள்

கடந்த 3 ஆண்டுகளில் நடந்த பள்ளி வாகன விபத்துகள்

First Published : 27 Jul 2012 12:30:12 AM IST


 2010 ஜனவரி 21: சென்னை ஆலந்தூரில் தனியார் பள்ளி வாகன பஸ், விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 வயது சிறுமி அஃப்ரின் உயிரிழந்தார்.  பிப்ரவரி 10: ராமேசுவரம் அருகில், ராமணாதபுரம் மரக்கையூர் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவ, மாணவிகள் 42 பேரை ஏற்றிச் சென்ற வேன் விபத்துக்குள்ளானதில் 22 குழந்தைகள் காயமடைந்தனர்.  டிசம்பர் 20: கடலூர் மாவட்டம் பெரியபட்டுவில் பள்ளி மாணவிகளை ஏற்றிச் சென்ற வேனும், தனியார் ஆயில் நிறுவன ஊழியர்கள் பஸ்ஸýம் மோதிக் கொண்டதில், வேனில் பயணம் செய்த இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் பி. அகிலாண்டீஸ்வரி, பி. அபிராமி மற்றும் ஆர். பவித்ரா, ஆர். திவ்யா ஆகியோர் உயிரிழந்தனர்.  2011 மே 4: காரைக்கால் பிள்ளைபேருவாசலில் 30 மாணவர்கள் மற்றும் ஓர் ஆசிரியரை ஏற்றிக்கொண்டு சென்ற பள்ளி வேன் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், டிரைவரும் 21 பள்ளி குழந்தைகளும் காயமடைந்தனர்.  ஜூலை 1: தருமபுரி அருகில் பள்ளி வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 5 வயது சிறுமியின் கை துண்டானது. 20 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.  செப்டம்பர் 14: சென்னையை அடுத்த திருநின்றவூரில் 20 பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் எஸ். திவ்யஸ்ரீ (4) என்ற யுகேஜி மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் பயணித்த 19 குழந்தைகள் காயமடைந்தனர்.  அக்டோபர் 29: சேலம் எடப்பாடி அருகே தனியார் பள்ளி வேன் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 14 மாணவ, மாணவிகள் படுகாயமடைந்தனர்.  நவம்பர் 28: பொன்னேரி அருகே காக்குமேடுவில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 20 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.  டிசம்பர் 6: கோவை கேவில்மேடு அருகில் பள்ளி வேனும் மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த 8 வயது பள்ளிச் சிறுமி உயிரிழந்தாள்.  2012 ஏப்ரல் 9: கடலூர் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் நைநான்குப்பத்தில் பள்ளி வேன் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 5 வயது யுகேஜி மாணவி அஞ்சனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேனில் பயணித்த மற்ற 25 மாணவிகள் படுகாயமடைந்தனர்.  ஜூலை 25: சென்னையை அடுத்த தாம்பரம் சேலையூரில் தனியார் பள்ளிக்கு குத்தகை அடிப்படையில் இயங்கி வந்த பஸ்ஸின் துவாரம் வழியாக கீழே விழுந்த 2-ம் வகுப்பு மாணவி ஸ்ருதி பஸ்ஸின் பின் சக்கரம் ஏறி உயிரிழந்தார்.

உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள விதிகள் என்னென்ன?

உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள விதிகள் என்னென்ன?

dinamani First Published : 27 Jul 2012 12:31:15 AM IST


சென்னை, ஜூலை 26: பள்ளி வாகனங்கள் தொடர் விபத்துக்கு உள்ளாகி வருவதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டு, தீவிரமாகப் பின்பற்றப்பட வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் நடைமுறையில் பெரும்பாலான பள்ளிகள் இந்த விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை.  தமிழகத்தில் ஆண்டுக்கு 300-க்கும் மேற்பட்ட விபத்துகளில் பள்ளி வாகனங்கள் சிக்கி, மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டு வந்தபோதும், தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டமும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களும் கடுமையாக்கப்படவில்லை என சமூக ஆர்வலர்களும், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.  இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது, அதிகாரிகள் சட்டத்தைப் பின்பற்றுகிறார்களா என்ற சந்தேகத்தை பெற்றோரிடையே ஏற்படுத்தியுள்ளது.  கவனக்குறைவு, போதிய பராமரிப்பு இல்லாதது, அதிக நபர்களை ஏற்றுவது என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பள்ளி பஸ்கள் மற்றும் மாணவர்களை ஏற்றிச் செல்லும் தனியார் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இந்த விபத்துகளைக் குறைத்து பள்ளிச் சிறுமிகள் இறப்பதைத் தடுக்கும் வகையில் மோட்டார் வாகனச் சட்டம் மேலும் கடுமையாக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.  உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள்:  * பள்ளி பஸ்களில் மஞ்சள் நிற வர்ணம் அடிக்க வேண்டும்  * பஸ்ஸின் முன்புறமும், பின்புறமும் -பள்ளி வாகனம்- என எழுத வேண்டும். தனியார் வாகனம் என்றால் -பள்ளி பயன்பாட்டுக்காக- என எழுத வேண்டும்  * பஸ்ஸில் முதலுதவிப் பெட்டி இருக்க வேண்டும்  * பஸ்ஸில் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்தப்பட வண்டும்  * பஸ் ஜன்னல்களில் படுக்கை வாக்கில் கம்பிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்  * விபத்தின்போது பஸ்ஸிலிருந்து எளிதாக வெளியேறும் வகையில் -அவசர வழி- ஒன்று பொருத்தப்பட வேண்டும்  * பஸ்ஸின் மீது பள்ளியின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் எழுதப்பட வேண்டும்  * பஸ்ஸின் கதவுகளில் முறையான பூட்டுகள் இருக்க வேண்டும்  * பஸ்ஸில் பயணம் செய்யும் குழந்தைகள் தங்களுடைய உடைமைகளை பத்திரமாக வைக்கும் வகையில் இருக்கைகளுக்கு அடியில் கேரியர்கள் வைக்க வேண்டும்  * பஸ்ஸில் குழந்தைகளுக்கு உதவ உதவியாளர் ஒருவர் இருக்க வேண்டும்  * பஸ்ஸில் அனைத்து பாதுகாப்பு வசதிகளும் இருப்பதை பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ உறுதி செய்யவேண்டும். அல்லது, ஆசிரியர் ஒருவர் அந்த பஸ்ஸில் பயணிப்பது சிறந்தது  * பள்ளி பஸ்ஸின் டிரைவராக நியமிக்கப்படுபவர், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் கனரக வாகனங்கள் ஓட்டிய அனுபவம் இருக்க வேண்டும்  * ஓர் ஆண்டில் சிக்னலை மதிக்காதது, சாலையில் பஸ் வழித் தடத்தில் செல்லாதது உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்தில் இரண்டு முறை சிக்கிய டிரைவரை பணிக்கு வைக்கக் கூடாது  * இதுபோல் அதிகவேகமாக வாகனத்தை ஓட்டியது, குடித்துவிட்டு பஸ்ûஸ ஓட்டியது உள்ளிட்ட குற்றங்களில் ஒரு முறை சிக்கிய டிரைவரை பணியில் தொடர அனுமதிக்கக் கூடாது.  * பள்ளி பஸ் ஒவ்வொரு ஆண்டும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தகுதிச் சான்று பெறுவது கட்டாயம்.  இந்த வழிகாட்டுதல்கள் அனைத்தையும், கேரள மாநில அரசு அம்மாநில மோட்டார் வாகனச் சட்டம் 1988-ல் இடம்பெறச் செய்யும் வகையில், சட்டத் திருத்தம் கொண்டுவந்து அதை 2010 மே மாதத்தில் நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது.  ஆனால், ஆண்டுக்கு 300 பள்ளி வாகன விபத்துகளுக்கு மேல் நடைபெறும் தமிழகத்தின் மோட்டார் வாகனச் சட்டத்தில் இதுபோன்ற சட்டத் திருத்தம் இதுவரை கொண்டுவரப்படவில்லை. மாறாக உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள், சுற்றறிக்கையாக மட்டுமே அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

வியாழன், 26 ஜூலை, 2012

கடமை தவறிய பள்ளி :கடமை தவறாத மிதியூர்தி ஓட்டுநரான சுருதியின் தந்தை

கடமை தவறிய பள்ளி :கடமை தவறாத  ஆட்டோ ஓட்டுநரான சுருதியின் தந்தை



தாம்பரம், ஜூலை 26 : தாம்பரத்தில் தனியார் பள்ளி பேருந்தில் வந்த பள்ளி மாணவி சுருதி, பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்து உயிரிழந்தாள்.இந்த சம்பவம், ஆட்டோ ஓட்டுநரான சுருதியின் தந்தை சேதுமாதவனுக்கு உடனடியாக போனில் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர் பள்ளிக் குழந்தைகளை தனது ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். தகவல் கிடைத்த உடன் உடைந்து போன சேதுமாதவன், தனது ஆட்டோவில் இருந்த பிள்ளைகளை பத்திரமாக அவரவர் வீடுகளில் இறக்கிவிட்டுவிட்டு, மருத்துமனைக்கு விரைந்துள்ளார்.மிகப்பெரிய பள்ளி, தனது பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றி வரும் பேருந்தை கவனிக்காமல் அலட்சியம் செய்துள்ளது. ஆனால், ஆட்டோ ஓட்டுநர், மிகத் துயரமான நேரத்திலும் தனது கடமையை ஆற்றியுள்ளது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.
கருத்துகள்

நல்ல மனிதருக்கு இப்படி நடந்து இருக்க கூடாது. கடவுள் இந்த இழப்பை தாங்கும் சக்தியை அவருக்கும் அவரது மனைவிக்கும் கொடுக்க வேண்டும். குழந்தை ஆத்மா சாந்தி அடையட்டும்.
By மு.ஞான சேகரன்
7/26/2012 5:32:00 PM