செவ்வாய், 5 ஜூன், 2012

சொல்கிறார்கள்

 சொல்கிறார்கள்

"உத்தரவாதமுள்ள தொழில்!'
"பேஷன்' நகை செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள ரம்யா நாயக்: பள்ளியில் படிக்கும் போதே, ஓவியம், கை வேலைப்பாடுகளில், எனக்கு ஆர்வம் அதிகம். கல்லூரியில் சேர்ந்ததும், என் ஆடைகளுக்கு ஏற்ற ஆபரணங்களை, கடையில் வாங்காமல், நானே வடிவமைத்துக் கொள்வேன். என் கற்பனைத் திறனைப் பார்த்து ரசித்த, நண்பர்களின் பாராட்டுகள் தான், என்னை, சொந்தமாக தொழில் செய்யத் தூண்டின. அதற்காக, "பேஷன் ஜுவல்லரி மேக்கிங்' படித்தேன். நம்பிக்கையும், ஆர்வமும் தான், இந்த தொழிலுக்கான முதலீடு.என் கல்லூரி தோழிகளே, ஆரம்ப கட்ட வாடிக்கையாளர்கள். நான் தயாரித்த நகைகள், "ஜெட்' வேகத்தில் விற்றுத் தீர்ந்ததால், இன்னும் ஆர்வத்துடன் செய்தேன். நான் வியாபாரத்தில் முன்னேறுவதைப் பார்த்த என் பெற்றோர், அவர்கள் நடத்தும் பேக்கரியின் ஒரு பகுதியை, எனக்கு, கடை நடத்தத் தந்தனர். இதனால், தொழில், அடுத்த கட்டத்தை எட்டியது.எதிர்பார்ப்புகளுடன் வரும் வாடிக்கையாளர்களை பூர்த்தி செய்வேன். அதே சமயம், வாடிக்கையாளர்கள், பொருத்தமான நகைகளை தேர்வு செய்ய, உதவி செய்வேன். இதனால், தொழிலைத் தாண்டி, எனக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையே, நம்பகமான இணைப்பு உண்டானது. பெங் களூரு, மும்பை உள்ளிட்ட, பல இடங்களில் இருந்து, மரம், கண்ணாடி, ஜெர்மன் சில்வர், பவளம் போன்ற பொருட்களை வரவழைத்து, தரமான நகைகள் செய்வதால், விற்பனை அதிகரித்து, கடை அடுத்த கட்டத்திற்கு சென்றது.இந்த தொழில் மூலம், மாதம் 20 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன். கல்லூரிப் பெண்கள், இல்லத்தரசிகள், அலுவலகப் பெண்கள் என, வாடிக்கையாளர் வட்டத்தை, நாம் தான் உருவாக்க வேண்டும். உயர்ந்து வரும் தங்கம் விலை, பாதுகாப்பு என, பல காணங்களால், "பேஷன்' நகைகள் மேல், பெண்களின் கவனம் திரும்பியுள்ளது. அதனால், உத்தரவாதமுள்ள தொழில் இது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக