அதன் போது உரையாற்றிய மேஜர் திரு மஸ்சிமோ வியசேத்தி அவர்கள் நீண்டகாலமாக
திரிவேரோ நகரத்தில் மிகவும் ஒழுக்கமாக சமூகமாக வாழும் உங்களிற்கு
இனப்பிரச்சனை உண்டு என்பது தெரியும் ஆனால் இவ்வாறான கொடுமை நடந்ததென்பது
இன்றுதான் அறிய முடிந்ததை என்ணி கவலையடைகிறேன் என்று கூறி இனியும் இவ்வாறான
கொடுமைகள் தொடர்வதை அனுமதிக்க முடியாது. தங்களினுடைய அரசியல் பலம் சிறியது
என்றாலும் அதனூடாக செய்யக்கூடிய முயற்சிகளை செய்வதாக கூறினார். அதற்கு
அனைத்து கட்சிகளும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டன.
தொடர்ந்து உரையாற்றிய லேகா நோட் கட்சியைச்சேர்ந்த திரு சில்வானோ அவர்கள்
திறிவேரோ நகரசபை உரிமைகள் மறுக்கப்பட்ட இனங்களிற்கு ஆதரவாக இருப்பதாகவும்
அவர்களுடைய தேசியக்கொடிகளை நகரசபை ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் (உதாரணம்
தீபெத்) அந்த வகையில் தமிழீழத் தேசியக் கொடியையும் நாங்கள் அங்கீகரித்து
நகரசபையில் வைத்திருக்க வேண்டும் என்று மேஜரை கேட்ட போது அதனையும்
அனைத்துக் கட்சியினரும் ஏக மனதாக ஏற்றுக் கொண்டனர்.
20-05-2012 அன்று திறிவேறோவில் நடந்த முள்ளிவாய்கால் நிகழ்வில் கலந்து
கொண்ட துணை மேஜர் திரு மாரியோ அவர்களும் லேகா நோட் கட்சியை சேர்ந்த திரு
சில்வானோ அவர்களும் எமது தமிழீழ தேசியக் கொடியினை உத்தியோக பூர்வமாக
பியமொந்தே மக்களவை பிரதிநிதி அவர்களிடம் பெற்றுக் கொண்ட நிகழ்வானது
பல்லாயிரக்கணக்கான எமது மாவீரச்செல்வங்களின் அளப்பரிய தியாகத்தினாலும்
சொல்ல முடியாத துன்பங்களை சுமந்து எமது விடுதலைக்காக தங்களை இழந்து
பணிசெய்த மக்களுடைய அர்ப்பணிப்புக்கு கிடைத்த வெற்றியாகும்.
தமிழர்களின் வீரத்தை மீண்டும் உலகறியச்செய்த எங்கள் தேசியத் தலைவர்
எம்மினத்துக்கு கிடைத்த பெருங்கொடையாகும். துமிழ் மக்கள் வாழும் ஒவ்வொரு
பிரதேசமும், ஒவ்வொரு நாடும் எமது தேசியக்கொடியை உலகெல்லாம் பறக்கச்
செய்வதும் எமது வரலாற்றுக் கடமைகளில் ஒன்றாகும். இந்நிகழ்வில் கலந்து கொண்ட
மக்கள் மிகவும் உணர்வு பூர்வமாக கரகோசமிட்டு மகிழ்தனர்.
திறிவேறோ நகரசபையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் தமிழ் வடிவமும், இத்தாலி வடிவமும் இணைக்கப்பட்டுள்ளது.
Trivero மாநகர சபை கூட்டம்... இத்தாலி:
- Triveroமாநகரத்தில் பல வருடங்களாக பெரும் தொகையான தமிழ் மக்கள் வாழ்ந்து
வருகின்றார்கள். இலங்கை அரசாங்கம் தமிழ் இனம் இந்திய நாட்டில் இருந்து
குடியேறின கருத்துக்கு மாறாக இவ்வினம் இலங்கையில் வடக்கு கிழக்கில் 3000
ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றது.
- இம்மக்களின் பிரதிநிதிகள் கடந்த 26-03-2012 அன்று மாநகர சபையின்
கூட்டத்தில் பங்குபெற்றி தமிழ் மக்களுக்கு இலங்கையில் 1983ம் ஆண்டில்
இருந்து நடந்து வரும் மனித உரிமை மீறல்கள் பிரச்சனைகளை கானொளி ஊடாகவும்
விளக்கப்படுத்தினார்கள்:
� 2 தசாப்தங்களுக்கு மேலாக தொடர்ந்த போர் 100.000 தமிழ் பொது மக்களை
பலிகொண்டு குறிப்பாக இறுதிக் கட்டத்தில் (வைகாசி 2009) இலங்கை அரசாங்கம்
ஓர் திட்டமிட்ட இனப்படுகொலையை நடாத்தி விமானக் குண்டு தாக்குதல்களால்
குடும்பங்களை பதுங்குக்குளிக்குள் புதைத்து தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை
பாவித்து 40.000 தமிழ் பொது மக்களை கொலை செய்தது. மேலும் 300.000 க்கு
மேற்பட்ட பொது மக்களை பாதுகாப்பு வளையங்களுக்குள் அடைத்து இப்பொழுதும்
சித்திரவதைகள் காணாமல் போகுதல் பாலியல் வல்லுறவுகள் போன்றவை நடக்கின்றன.
பெரும்பான்மையான மக்கள் அவர்களது வீடுகளுக்கு திரும்பவில்லை நிறைய பேர்
காணாமல் போய் உள்ளார்கள் அதை அiசாங்கம் மறுக்கின்றது.
� இலங்கை இரானுவம் அரசாங்கம் மற்றும் காவல் துரையின் ஒத்துழைப்புடன் பல
குற்றங்கள் செய்துள்ளது: மருத்துவ மனைகள் பொது மக்கள் மீது தாக்குதல்கள்
பாலியல் வல்லுறவு தன்னிச்சையாக கைது செய்யுதல் கைதிகள் மீது சித்திரவதைகள்
தமிழர் நியாயத்தை எடுத்துக் கூறும் ஊடகவியலாளர்களை கொலை செய்யுதல். இவை
எல்லாம் சர்வதேசத்திற்கு மறைத்து சர்வதேச மற்றும் உள்ளுர் ஊடகங்களை மற்றும்
மனித நேய பணியாளர்களை அவ்விடங்களில் இருந்து துரத்தி அரசாங்கம் நடத்திய இன
அழிப்பு திட்டத்தில் அடங்கியவை.
� UNO வின் கணக்கெடுப்பின் படி இலங்கை உலக நாடுகள் வரிசையில் இரண்டாம்
இடத்தைப் பிடித்துள்ளது IRAQ க்கு அடுத்து காணாமல் போனோர் எண்ணிக்கைக்கு
மேலும் நிறைய மனித உரிமை மீறல்களும் காணப்படுகின்றன.
� இன்று வரை மனித உரிமைகள் மீறப்படுகின்றன: இரானுவ ஆதிக்கம் அதிகரித்துள்ளது மற்றும் பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களுக்கு நிகழ்ந்த இவ்விடயங்கள் அனைத்தும் கூடுதலான மக்களுக்கு
தெரியாத நிலையில் உண்மையில் இது ஊர் இனப்படுகொலை என்ற காரணத்தால் மேலும்
தங்களுடைய நியாயத்தை தமது நாட்டில் சொல்ல முடியாத நிலையினால் புலம்பேர்
தமிழ் மக்கள் இவ்விடயங்களை வெளிக்கொண்டு வந்து இதற்கு ஓர் சர்வதேச விசாரனை
நடத்தி அவர்களது மக்களுக்கு நீதி கூறி நிற்கிறார்கள்.
இது எல்லாம் கருத்தில் கொண்டு Trivero மாநகர சபை எடுத்த முடிவானது
1. இலங்கை தமிழ் மக்களுக்கு மனித உரிமை மீறல்கள் நடந்தன என்று ஏற்றுக்கொள்வது.
2. இலங்கை அரசாங்கத்தின் வன்முறையான அரசியலை கண்டிப்பதுடன் தமிழ்
மக்களுக்கு உரிமைகள் வழங்கி அவர்களது சுயநிர்ணய உரிமை அங்கிகரிக்கப்பட
வேண்டுதல்.
3. இதை இத்தாலிய வெளி விவகார அமைச்சுக்கும் இலங்கை தூதரகத்திற்கும் அனுப்பி
எவ்விதத்திலும் இலங்கை அரசாங்கத்திற்கு போய் சேருமாறு செய்யுதல்.
4. இதை ஐரோப்பிய யூனியன் மற்றும் UNO க்கும் அனுப்பி இலங்கையில் மனித
உரிமைகள் பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்குமாறு வலியுறுத்தல்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக