திங்கள், 4 ஜூன், 2012

தண்ணீர் குடிப்பது அவசியம்!'

 சொல்கிறார்கள்


தண்ணீர் குடிப்பது அவசியம்!'



முடி கொட்டும் பிரச்னைக்கு தீர்வு கூறும், அழகுக் கலை நிபுணர் பிரபா ரெட்டி: பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக் கும், முடி உதிர்வுப் பிரச்னை பொதுவானதாக உள்ளது. பலரும், அவரவர்களாக இது தான் முடி உதிர்விற்கான காரணம், என நினைத்து, "ஷாம்பூக்கள்,' "கண்டிஷனர்கள்' உபயோகித்து, பிரச்னையைப் பெரிதாக்கிக் கொள்கின்றனர். பொதுவாக, பொடுகு காரணமாகத்தான் நிறையப் பேருக்கு முடி உதிர்வது தொடங்கி, முடி மெலிந்து, முனை பிளவுபட்டு, முகத்தின் பொலிவையே கெடுப்பது வரை போகிறது. பொடுகு பிரச்னை, முடி உதிர்வு, புழுவெட்டு என முடி சம்பந்தப்பட்ட எந்த பிரச்னையாக இருந்தாலும், அதற்கென இருக்கும், நிபுணர்களிடம் செல்ல வேண்டும்.மூன்று நாளுக்கு ஒருமுறை தலைக்குக் குளிப்பது அவசியம். வாரம் ஒருமுறை அல்லது 15 நாளுக்கு ஒருமுறை எண்ணெய்க் குளியலும் செய்ய வேண்டும். முடிக்கு எண்ணெய் தடவும் வழக்கமே நிறையப் பேரிடம் குறைந்து விட்டது. எண்ணெய் தடவப் பிடிக்கவில்லை என நினைப்பவர்கள், "ஹேர் வைட்டலைசர்' உபயோகிக்கலாம். இதைப் பயன்படுத்தினால், எண்ணெய் தடவியது போன்று முடி பளபளப்பாக இருக்கும். எக்காரணம் கொண்டும், கூந்தலை எண்ணெய் தடவாமல், சீப்பு வைத்து வார கூடாது. இப்படிச் செய்வது, நாமே கூந்தலைப் பிடுங்கி எறிவதற்குச் சமம். தலைக்குக் குளித்து, முடித்து, கூந்தலைத் துவட்ட கடினமான துணியைப் பயன்படுத்தக் கூடாது. மென்மையான துணியைத் தான் பயன்படுத்த வேண்டும். முடியைக் கசக்கி, முறுக்கி, துவட்டுவதையும் தவிர்க்க வேண்டும். தினமும் தேவையான தண்ணீர் குடிப்பது, மிகவும் அவசியம். 20 கிலோ எடையுள்ள ஒருவருக்கு, ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியமாக இருக்கும். இதை ஒரு பொதுவான கணக்காக வைத்து, 60 கிலோ எடை உள்ளவர்களாக இருந்தால், குறைந்தபட்சம் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக