First Published : 25 Oct 2011 10:39:57 AM IST
Last Updated : 25 Oct 2011 01:16:57 PM IST
கொழும்பு, அக்.25: இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு எதிராக ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பிறந்து தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்துவரும் அருணாச்சல் ஜெகதீஸ்வரன் என்பவர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.ராஜபட்ச பொதுநலவாய உச்சிமாநாட்டுக்காக ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ள நிலையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இலங்கையில் வீடுகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், அநாதை இல்லங்கள் மற்றும் சமூக நிலையங்கள் மீது நடத்தப்பட்ட வான் வழி தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அந்த சம்பவம் தொடர்பாக நீதி வேண்டும் என்று கோரி அருணாச்சல் மனுத்தாக்கல் செய்துள்ளார். ராஜபட்ச செய்தவற்றால் மக்கள் இன்னமும் துன்பப்படுகிறார்கள். அதை உலகம் தெரிந்துகொள்ள வேண்டும் என எண்ணுகிறேன் என ஜெகதீஸ்வரன் 'த ஏஜ்' பத்திரிகைக்கு கூறியுள்ளார்.இவை அனைத்தையும் தான் பார்த்துள்ளதாக கூறும் ஜெகதீஸ்வரன் 2007 முதல்2009 வரை இலங்கையில் தொண்டர் உத்தியோகஸ்தராக செயற்பட்டதாக கூறியுள்ளார். இவை அனைத்துக்கும் பொறுப்பான நபர் முப்படைகளின் தளபதி அந்தஸ்தை வகிப்பவர் எனது நாட்டிற்கு வந்து சுதந்திரமாக செல்வதை சகித்துக்கொள்ள முடியவில்ல. அவர் குற்றவாளியா இல்லையா என்பதை தீர்மானிக்குமாறு ஆஸ்திரேலியாவின் அதிஉயர் நீதிமன்றத்தை நான் கோருகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.மெல்போர்ன் நீதிவான் நீதிமன்றில் தொடுக்கப்பட்ட இவ்வழக்கு நவம்பர் 29 ஆம் தேதி விசாரிக்கப்படவுள்ளதாக ஜெகதீஸ்வரனின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.63 வயதான ஜெகதீஸ்வரன் 1987 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்குச் சென்றார். 3 வருடங்களுக்குப் பின்னர் அவர் அந்த நாட்டுப் பிரஜையானார்.
கருத்துகள்
Always Dinamani works with more social responsibility. Its very important news for our people and world. Thanks Dinamani.
By அருண்
10/25/2011 12:40:00 PM
10/25/2011 12:40:00 PM
சங்கையா சுவிட்சர்லாந்த்...தெரியும் சுவாசிலாந்து தெரியும் அனால் தமிழ் நாடு பத்திரிகைகள் எழுதும் ஸ்விட்சர்லாந்து எங்கே உள்ளது? முதலில் ஒழுங்காக தமிழில் எழுத பேச தெரிந்துகொள்ளவும் நைனா சன் டிவி ...இக்கு என்ன தமிழ் ....??????
By KOOPU
10/25/2011 11:36:00 AM
10/25/2011 11:36:00 AM
தினமணி கவனத்திற்கு செய்தி ஒரு இடத்தில் ஆஸ்திரேலியா என்றும் இன்னோர் இடத்தில் அவுஸ்திரேலியா என்றும் இலங்கை தமிழில் உள்ளது. நீங்கள் போட்ட செய்தியா? அல்லது இலங்கை தமிழருக்கு விற்று விட்டீர்களா?அது கிடக்கட்டும். மன்மோகன் சிங் மீதும் ஒரு கேஸ் போடலாமே!
By சங்கையா
10/25/2011 11:13:00 AM
10/25/2011 11:13:00 AM