திரு இராமலிங்கம் போராட்டச் சிக்கல்களைப் புரியும்படி நன்றாக எழுதியுள்ளார். பாராட்டுகள்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நியூயார்க் "வால் ஸ்ட்ரீட்'டில் உள்ள வர்த்தக நடவடிக்கைகளை எதிர்த்த மக்கள் ஆவேசம், ஐரோப்பா, பிரிட்டன் உட்பட பல நாடுகளை ஆட்டுவிக்கிறது.
முன்பு அதிபர் கோர்பசேவ்' பின்பற்றிய"பிரஸ்டோரிகா' என்ற தாராளக் கொள்கையால், சோவியத் யூனியன் கரைந்ததும் கம்யூனிசம் என்ற வார்த்தைக்கு மவுசு குறைந்ததும் வரலாறு. அவர்களும் பொருளாதார தாராளமயக் கொள்கைக்கு ஆட்பட்டு வருகின்றனர்.காபிடலிசத்துக்கு எதிராக... ஆனால்,"காபிடலிசம்' என்ற முதலாளித்துவ தத்துவம் தற்போது இப்போராட்டங்களால் பெரிய கேள்விக்குறியாகி வருகிறது."காபிடலிசம்' என்ற வார்த்தைக்கு எதிராக மக்கள் ஆர்ப்பரித்து எழவில்லையே தவிர, பணக்கார நாடுகளில் வங்கிகள் நடைமுறை மற்றும் அரசு கையாளும் நிதிநிலை நடைமுறைகளை மக்கள் எதிர்க்கின்றனர்.சமூக சீர்திருத்தம் என்ற பெயரில் நிதித்துறை சீர்திருத்தச் சட்டங்கள் அல்லது நடைமுறைகள் மக்களை ஏழையாக்கிவிட்டன என்ற அடிப்படைக் கொந்தளிப்பு, இப்போராட்டங்களின் மையமாக இருக்கிறது.நியூயார்க் நகரில், லண்டனில், ரோம் ஆகிய நகர்களில் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்கதையாகி விட்டது.அமெரிக்க நெருக்கடியின் மையம்: அமெரிக்காவில் அதிபர் ஒபாமாவை நோக்கி இப்போது மக்கள் எழுப்பும் கேள்வி "பணக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கு இடையே இடைவெளி அதிகரிக்கக் காரணம் என்ன?' என்பதே.
வித்தியாசமாக வாஷிங்டன் ஸ்குயர் பூங்காவில் ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்கள், "படிக்க வாங்கிய வங்கிக் கடனை நாங்கள் எப்படி திருப்பிக் கட்டுவது, எங்களுக்கு வேலைவாய்ப்பு இனி கிடைக்குமா, அது எங்கே?' என்று கோஷம் எழுப்பினர். இது தான் இன்று அமெரிக்கா சந்திக்கும் பெரிய பொருளாதார நெருக்கடியின் அடிப்படையாகும்.அமெரிக்காவும் ஐரோப்பாவும்: ஆனால், அமெரிக்கா ஒன்றும் ஐரோப்பிய நாடுகள் அல்ல. அமெரிக்கா என்பது பல்வேறு மாகாணங்கள் கொண்ட கூட்டமைப்பு. ஒரே கரன்சியான "டாலர்' மற்றும் ஒரே மாதிரியான நிதிக்கொள்கை கொண்ட பலமான நாடு.ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் ஜெர்மனியும், பிரான்சும் சற்று பலமானவை. பொருளாதார நெருக்கடியில் கிரீஸ் சிக்கி நொறுங்குகிறது; இத்தாலி தவிக்கிறது. இந்த ஐரோப்பிய யூனியனை காக்க, ஒரே கரன்சியான "யூரோ' என்பது அமெரிக்க டாலர் போல பாதுகாக்கப்பட்ட கரன்சி அல்ல. இந்த வித்தியாசத்தை சுட்டிக்காட்டிய பொருளாதார அறிஞர் ஸ்டிக்லிட்ஸ், "அமெரிக்கா போல அல்ல ஐரோப்பிய நாடுகள். பொருளாதாரச் சுமை அந்த நாடுகளை வாட்டும்' என்கிறார்.
மக்களின் கருத்துக்கள்:இந்தப் பிரச்னையை அதிக ஜனநாயகம் காக்கும் பிரிட்டன் மக்கள் வெளிப்படையாகவே விமர்சிக்கின்றனர். லண்டனில் நடந்த ஆர்ப்பாட்டத்தில்,"வங்கிகள் அடிக்கும் கொள்ளை அதிகம். அதில் சம்பந்தப்படாத நாங்கள், மக்கள் தொகையில் 99 சதவீதம் பேர். நாங்கள் எதற்கு வங்கிகள் சந்திக்கும் நிதிநெருக்கடியை ஏற்க வேண்டும்' என்று, சிலர் தெரிவித்தனர். ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஒருவர், "நம்நாட்டில் நிதித்துறை செயல்படும் விதம் தார்மீகமற்றது. நஷ்டமடைந்த வங்கிகளை அரசு மீட்கக் கூடாது. கடன் சுமையில் வாழும் மக்களை காப்பாற்றுங்கள்' என்று கூறினார்.ரோமில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒருவர், "எங்கள் எதிர்காலமே இருண்டிருக்கிறது. இனிமேல் எங்களுக்கு பென்ஷன் கிடைக்காது. கடைசி மூச்சுவரை உழைத்து ஓடாகிச் சாக வேண்டும்' என்று கூறியுள்ளார்.
மாயத் தோற்றம்: வேறுவிதமாகச் சொன்னால், அமெரிக்க மக்கள் எழுப்பும் கேள்வி இது தான். "சம்பாதித்து வரிகட்டும் மக்கள் பணத்தை, நலிவடைந்த ஆட்டோமொபைல் நிறுவனங்கள், திவாலான வங்கிகளைக் காக்க பயன்படுத்த வேண்டுமா, அதுவா அரசின் முன்னுரிமை?' என்று கேட்கின்றனர். இது உலகம் முழுவதும் இன்று எழுப்பப்படும் கேள்வி. ரஷ்யாவின் நிலை வேறு. கடந்த ஐந்தாண்டுகளில் கச்சா எண்ணெய் விலை உயர்வால், அதன் தள்ளாட்டமான பொருளாதாரம் சற்று மேலோங்கி, தினசரி வாழ்வுக்கு வசதியாக வாழ வழிவகுக்கிறது. ஆனால், "ஓகோ' என்ற நிலை வருவது அவ்வளவு சுலபமல்ல.கடந்த சில ஆண்டுகளாக, வளர்ச்சியைப் போல மாயத்தோற்றம் காட்டிய "காபிடலிசம்' இன்று, சிலரைக் கொழு த்த பணக்காரர்கள் ஆக்கியதே தவிர, ஏழைகளின் எண்ணிக்கையை அதிகரித்து விட்டது. அது தான் அரசுகளை எதிர்த்து, உலகின் பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் அதிகரிக்கக் காரணம்.இதற்கு அந்தந்த நாடுகள் உள்ளூர் நிர்வாக, நிதி அம்சங்களின் அடிப்படையில் தீர்வு காண முயற்சிக்கின்றன.
அமெரிக்க துடைப்பம் :நியூயார்க்கில் உள்ள ஜார்டென் கம்பெனி, துடைப்பம் தயாரிக்கும் நிறுவனம். மீன்பிடி கருவிகள், கூடாரங்கள் அமைக்க உதவும் கயிறுகளையும் தயாரிக்கிறது இந்த நிறுவனம்.இந்த நிறுவனம், தனக்குத் தேவையான பல பொருட்களை, சீனாவில் இருந்து ஓரளவு தயார் செய்த நிலையில், வாங்குவதை இதுவரை வாடிக்கையாகக் கொண்டிருந்தது. அமெரிக்காவை விட, குறைந்த கூலியில் சீனாவில் இத்தயாரிப்புகள் செய்யப்படும். அமெரிக்கப் பொருளாதாரச் சரிவு காரணமாக, சீனாவிலும் பாதிப்பு ஏற்பட்டது. அதனால், இத்தயாரிப்பு பொருட்கள் மீது, விலையை உயர்த்தியது சீனா.அமெரிக்காவிலேயே, சற்று செலவு குறைவாக, இப்பொருட்கள் முழுவதுமாகத் தயாரிக்க வேண்டும் என்ற முனைப்பில், "அமெரிக்கத் தயாரிப்பாகவே இருக்கட்டும்' என்ற நடைமுறையை, தற்போது ஏற்படுத்தி விட்டது இந்த நிறுவனம்.சீனாவுக்கு, இனி ஆர்டர் தரப் போவதில்லை. இதனால், செலவு மிச்சமாகும் என்கிறது ஜார்டென் நிறுவனம். இது, அமெரிக்கப் பொருளாதாரப் பாதிப்பில் ஏற்பட்ட விளைவுக்கு, ஓர் அடையாளம்.
நீதிபதிகள் தலை வழுக்கையை இனி பார்க்க முடியும் :பிரிட்டனின் பொருளாதாரச் சுமை அதிகம். அங்கே, அதன் விளைவாகப் பல சிக்கனத் திட்டங்கள் அமலாகின்றன. பிரிட்டனின் அங்கமான அயர்லாந்தில், நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக உள்ள நடைமுறை, சிக்கனச் சீரமைப்பு என்ற பெயரில் மாற்றப்பட்டிருக்கிறது.பிரிட்டிஷ் கோர்ட் நடைமுறைகளின்படி, நீதிபதிகள் வெள்ளை நிறத்தில் உள்ள "விக்' அணிய வேண்டும். கழுத்து வரை அங்கிபோல, சுருள் சுருளாக அமைந்த இந்த "விக்' குதிரை வாலில் உள்ள முடியில் இருந்து தயாரிக்கப்படுவது.லண்டனில் உள்ள நிறுவனம் தயாரிக்கும், இந்த "விக்' ஒன்றின் விலை, ரூபாய் மதிப்பில் 1.48 லட்சம் ஆகும் ( யூரோ கரன்சியில் 2200 ஆகும்). அயர்லாந்து அரசுக்கு, இந்த தண்டச் செலவு இனி கிடையாது. கி.பி.1660 முதல் நீதிபதிகளுக்கான அதிகாரப்பூர்வ ஆடை வடிவமைப்பில், இந்த "விக்' முக்கியமாக இருந்தது. அயர்லாந்தின் முதலாவது பெண் தலைமை நீதிபதி சுசான் டென்ஹம், இந்த "விக்' நடைமுறையை ஒழித்து உத்தரவிட்டிருக்கிறார். இனி, நீதிபதி தலை வழுக்கையைக் கூட, சாதாரணமாக அனைவரும் காணலாம். அதே போல, நீதிபதியை வழக்கறிஞர்கள் இனி "ஜட்ஜ் அவர்களே' என்றழைத்தால் போதும், "மைலார்டு' என்ற ஆடம்பரச் சொல் கிடையாது. பொருளாதார வறட்சி, எத்தனை மாற்றத்தைக் கொண்டு வருகிறது பாருங்கள்!
- எம். ஆர்.இராமலிங்கம் - முன்பு அதிபர் கோர்பசேவ்' பின்பற்றிய"பிரஸ்டோரிகா' என்ற தாராளக் கொள்கையால், சோவியத் யூனியன் கரைந்ததும் கம்யூனிசம் என்ற வார்த்தைக்கு மவுசு குறைந்ததும் வரலாறு. அவர்களும் பொருளாதார தாராளமயக் கொள்கைக்கு ஆட்பட்டு வருகின்றனர்.காபிடலிசத்துக்கு எதிராக... ஆனால்,"காபிடலிசம்' என்ற முதலாளித்துவ தத்துவம் தற்போது இப்போராட்டங்களால் பெரிய கேள்விக்குறியாகி வருகிறது."காபிடலிசம்' என்ற வார்த்தைக்கு எதிராக மக்கள் ஆர்ப்பரித்து எழவில்லையே தவிர, பணக்கார நாடுகளில் வங்கிகள் நடைமுறை மற்றும் அரசு கையாளும் நிதிநிலை நடைமுறைகளை மக்கள் எதிர்க்கின்றனர்.சமூக சீர்திருத்தம் என்ற பெயரில் நிதித்துறை சீர்திருத்தச் சட்டங்கள் அல்லது நடைமுறைகள் மக்களை ஏழையாக்கிவிட்டன என்ற அடிப்படைக் கொந்தளிப்பு, இப்போராட்டங்களின் மையமாக இருக்கிறது.நியூயார்க் நகரில், லண்டனில், ரோம் ஆகிய நகர்களில் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்கதையாகி விட்டது.அமெரிக்க நெருக்கடியின் மையம்: அமெரிக்காவில் அதிபர் ஒபாமாவை நோக்கி இப்போது மக்கள் எழுப்பும் கேள்வி "பணக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கு இடையே இடைவெளி அதிகரிக்கக் காரணம் என்ன?' என்பதே.
வித்தியாசமாக வாஷிங்டன் ஸ்குயர் பூங்காவில் ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்கள், "படிக்க வாங்கிய வங்கிக் கடனை நாங்கள் எப்படி திருப்பிக் கட்டுவது, எங்களுக்கு வேலைவாய்ப்பு இனி கிடைக்குமா, அது எங்கே?' என்று கோஷம் எழுப்பினர். இது தான் இன்று அமெரிக்கா சந்திக்கும் பெரிய பொருளாதார நெருக்கடியின் அடிப்படையாகும்.அமெரிக்காவும் ஐரோப்பாவும்: ஆனால், அமெரிக்கா ஒன்றும் ஐரோப்பிய நாடுகள் அல்ல. அமெரிக்கா என்பது பல்வேறு மாகாணங்கள் கொண்ட கூட்டமைப்பு. ஒரே கரன்சியான "டாலர்' மற்றும் ஒரே மாதிரியான நிதிக்கொள்கை கொண்ட பலமான நாடு.ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் ஜெர்மனியும், பிரான்சும் சற்று பலமானவை. பொருளாதார நெருக்கடியில் கிரீஸ் சிக்கி நொறுங்குகிறது; இத்தாலி தவிக்கிறது. இந்த ஐரோப்பிய யூனியனை காக்க, ஒரே கரன்சியான "யூரோ' என்பது அமெரிக்க டாலர் போல பாதுகாக்கப்பட்ட கரன்சி அல்ல. இந்த வித்தியாசத்தை சுட்டிக்காட்டிய பொருளாதார அறிஞர் ஸ்டிக்லிட்ஸ், "அமெரிக்கா போல அல்ல ஐரோப்பிய நாடுகள். பொருளாதாரச் சுமை அந்த நாடுகளை வாட்டும்' என்கிறார்.
மக்களின் கருத்துக்கள்:இந்தப் பிரச்னையை அதிக ஜனநாயகம் காக்கும் பிரிட்டன் மக்கள் வெளிப்படையாகவே விமர்சிக்கின்றனர். லண்டனில் நடந்த ஆர்ப்பாட்டத்தில்,"வங்கிகள் அடிக்கும் கொள்ளை அதிகம். அதில் சம்பந்தப்படாத நாங்கள், மக்கள் தொகையில் 99 சதவீதம் பேர். நாங்கள் எதற்கு வங்கிகள் சந்திக்கும் நிதிநெருக்கடியை ஏற்க வேண்டும்' என்று, சிலர் தெரிவித்தனர். ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஒருவர், "நம்நாட்டில் நிதித்துறை செயல்படும் விதம் தார்மீகமற்றது. நஷ்டமடைந்த வங்கிகளை அரசு மீட்கக் கூடாது. கடன் சுமையில் வாழும் மக்களை காப்பாற்றுங்கள்' என்று கூறினார்.ரோமில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒருவர், "எங்கள் எதிர்காலமே இருண்டிருக்கிறது. இனிமேல் எங்களுக்கு பென்ஷன் கிடைக்காது. கடைசி மூச்சுவரை உழைத்து ஓடாகிச் சாக வேண்டும்' என்று கூறியுள்ளார்.
மாயத் தோற்றம்: வேறுவிதமாகச் சொன்னால், அமெரிக்க மக்கள் எழுப்பும் கேள்வி இது தான். "சம்பாதித்து வரிகட்டும் மக்கள் பணத்தை, நலிவடைந்த ஆட்டோமொபைல் நிறுவனங்கள், திவாலான வங்கிகளைக் காக்க பயன்படுத்த வேண்டுமா, அதுவா அரசின் முன்னுரிமை?' என்று கேட்கின்றனர். இது உலகம் முழுவதும் இன்று எழுப்பப்படும் கேள்வி. ரஷ்யாவின் நிலை வேறு. கடந்த ஐந்தாண்டுகளில் கச்சா எண்ணெய் விலை உயர்வால், அதன் தள்ளாட்டமான பொருளாதாரம் சற்று மேலோங்கி, தினசரி வாழ்வுக்கு வசதியாக வாழ வழிவகுக்கிறது. ஆனால், "ஓகோ' என்ற நிலை வருவது அவ்வளவு சுலபமல்ல.கடந்த சில ஆண்டுகளாக, வளர்ச்சியைப் போல மாயத்தோற்றம் காட்டிய "காபிடலிசம்' இன்று, சிலரைக் கொழு த்த பணக்காரர்கள் ஆக்கியதே தவிர, ஏழைகளின் எண்ணிக்கையை அதிகரித்து விட்டது. அது தான் அரசுகளை எதிர்த்து, உலகின் பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் அதிகரிக்கக் காரணம்.இதற்கு அந்தந்த நாடுகள் உள்ளூர் நிர்வாக, நிதி அம்சங்களின் அடிப்படையில் தீர்வு காண முயற்சிக்கின்றன.
அமெரிக்க துடைப்பம் :நியூயார்க்கில் உள்ள ஜார்டென் கம்பெனி, துடைப்பம் தயாரிக்கும் நிறுவனம். மீன்பிடி கருவிகள், கூடாரங்கள் அமைக்க உதவும் கயிறுகளையும் தயாரிக்கிறது இந்த நிறுவனம்.இந்த நிறுவனம், தனக்குத் தேவையான பல பொருட்களை, சீனாவில் இருந்து ஓரளவு தயார் செய்த நிலையில், வாங்குவதை இதுவரை வாடிக்கையாகக் கொண்டிருந்தது. அமெரிக்காவை விட, குறைந்த கூலியில் சீனாவில் இத்தயாரிப்புகள் செய்யப்படும். அமெரிக்கப் பொருளாதாரச் சரிவு காரணமாக, சீனாவிலும் பாதிப்பு ஏற்பட்டது. அதனால், இத்தயாரிப்பு பொருட்கள் மீது, விலையை உயர்த்தியது சீனா.அமெரிக்காவிலேயே, சற்று செலவு குறைவாக, இப்பொருட்கள் முழுவதுமாகத் தயாரிக்க வேண்டும் என்ற முனைப்பில், "அமெரிக்கத் தயாரிப்பாகவே இருக்கட்டும்' என்ற நடைமுறையை, தற்போது ஏற்படுத்தி விட்டது இந்த நிறுவனம்.சீனாவுக்கு, இனி ஆர்டர் தரப் போவதில்லை. இதனால், செலவு மிச்சமாகும் என்கிறது ஜார்டென் நிறுவனம். இது, அமெரிக்கப் பொருளாதாரப் பாதிப்பில் ஏற்பட்ட விளைவுக்கு, ஓர் அடையாளம்.
நீதிபதிகள் தலை வழுக்கையை இனி பார்க்க முடியும் :பிரிட்டனின் பொருளாதாரச் சுமை அதிகம். அங்கே, அதன் விளைவாகப் பல சிக்கனத் திட்டங்கள் அமலாகின்றன. பிரிட்டனின் அங்கமான அயர்லாந்தில், நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக உள்ள நடைமுறை, சிக்கனச் சீரமைப்பு என்ற பெயரில் மாற்றப்பட்டிருக்கிறது.பிரிட்டிஷ் கோர்ட் நடைமுறைகளின்படி, நீதிபதிகள் வெள்ளை நிறத்தில் உள்ள "விக்' அணிய வேண்டும். கழுத்து வரை அங்கிபோல, சுருள் சுருளாக அமைந்த இந்த "விக்' குதிரை வாலில் உள்ள முடியில் இருந்து தயாரிக்கப்படுவது.லண்டனில் உள்ள நிறுவனம் தயாரிக்கும், இந்த "விக்' ஒன்றின் விலை, ரூபாய் மதிப்பில் 1.48 லட்சம் ஆகும் ( யூரோ கரன்சியில் 2200 ஆகும்). அயர்லாந்து அரசுக்கு, இந்த தண்டச் செலவு இனி கிடையாது. கி.பி.1660 முதல் நீதிபதிகளுக்கான அதிகாரப்பூர்வ ஆடை வடிவமைப்பில், இந்த "விக்' முக்கியமாக இருந்தது. அயர்லாந்தின் முதலாவது பெண் தலைமை நீதிபதி சுசான் டென்ஹம், இந்த "விக்' நடைமுறையை ஒழித்து உத்தரவிட்டிருக்கிறார். இனி, நீதிபதி தலை வழுக்கையைக் கூட, சாதாரணமாக அனைவரும் காணலாம். அதே போல, நீதிபதியை வழக்கறிஞர்கள் இனி "ஜட்ஜ் அவர்களே' என்றழைத்தால் போதும், "மைலார்டு' என்ற ஆடம்பரச் சொல் கிடையாது. பொருளாதார வறட்சி, எத்தனை மாற்றத்தைக் கொண்டு வருகிறது பாருங்கள்!
மேலும் உலகம் செய்திகள்:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக