மனிதனின் பரிணாமத்தில் முக்கியமானது நாடோடி வாழ்க்கை. ஆதி மனிதன் அலைந்து திரிந்த போது நடந்த அரிய கண்டுபிடிப்புகள் தான், இன்று நாம் வாழும் சுபயோக வாழ்க்கை. மாடி மீது மாடி கட்டி குடியேறும் மிதமிஞ்சிய கலாசாரத்தின் இடையிலும், நாடோடி வாழ்க்கை தொடர்ந்து வருவது ஆச்சர்யம் தான். ஆடுகளை விளைநிலங்களில் "கிடை' போடும் கிராமவாசிகளின் வாழ்க்கை முறை, நவீன உலகின் மறுபக்கம். மதுரை மாவட்டம் சோழவந்தான் சென்ற போது, கொடிமங்கலம் கிராமத்தில் ஆடுகள் அடைக்கும் "குடில்'களில் மனித தலைகள் தெரிந்தன. நம்மையும் கேட்காமல் "பிரேக்' போட்டது பைக். அருகில் சென்று விசாரித்த போது, கிடைத்த தகவல்கள் ஆச்சர்யம் பிளஸ்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே காமாட்சி புரத்தை சேர்ந்த விவசாயிகள் தான் அவர்கள்.
பரம்பரையாக ஆடு கிடை போடும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். பெயர் சொல்ல ஊர் ஒன்று இருந்தாலும், இவர்கள் அங்கு செல்வது எத்தனை ஆண்டுக்கு ஒரு முறை என்பது அவர்களுக்கே தெரியாது. "ஆடு, தாங்கள் வாசிக்கும் கூடு,' இவைதான், இவர்களின் மூலதனம். உடமைகள் ஏற்ற சைக்கிள் இருந்தாலும், தங்கள் உடலை சுமந்து செல்வது நடை மூலமே. கிடைத்த கிராமத்தில் கிடை போட்டு, சம்பாதிப்பது தான் இவர்களின் தொழில். இதற்காக
இவர்கள் கொடுக்கும் விலை தூக்கம். பகல் முழுவதும் மேய்ச்சல் பணி, இரவில் கிடை போட்டதும், நரிகளிடமிருந்து ஆடுகளை பாதுகாக்க விடியும் வரை விழித்திருக்க வேண்டும். உடன் வரும் குடும்பத்திலிருந்து மனைவி, மகன், மகள், பேரன் என, அனைவரும் இத்தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். வேலைக்கு சென்ற சமயத்தில் உடமைகளை பாதுகாக்க, குடில்களுக்கு பூட்டு வசதி செய்துள்ளனர். திருமணம், பிரசவம், படிப்புக்கு மட்டுமே சொந்த ஊர்
செல்கின்றனர். இல்லற வாழ்க்கையும், இனிய தாம்பத்தியமும் அரங்கேறுவது இடைப்பட்ட நாடோடி வாழ்க்கையில் தான். பரிதாபத்திற்குரியவர்களாக இருந்தாலும், இவர்களின் வருமானம் கணிசமானது. ஏக்கர் ஒன்றிக்கு கிடை போட, நாள் ஒன்றிக்கு 400 ரூபாய் கட்டணம். இன்றைய நிலவரப்படி ஆடு விலை அபாரம் என்பதால், இருப்புகளை வைத்து பார்க்கும் போது, இவர்களும் லட்சாதிபதிகள் தான். இருந்தாலும் இவர்கள் வசிப்பது குடிலில்.
திசை தெரியாத இடத்தில் தீபாவளியும், பொல்லாத சூழலில் பொங்கலும் கொண்டாடிய அனுபவம் இவர்களுக்கு உண்டு. பிழைப்புக்காக ஒவ்வொரு பகுதிக்கு மாறினாலும், இவர்களின் வாழ்க்கை முறையில் எந்த மாற்றமும் இல்லை, வானத்தை போல.
-நவநீ

வாசகர் கருத்து (16)
John Britto - chennai ,இந்தியா
2011-10-28 14:52:54 IST Report Abuse
ஆடு கிடை போடுவது என்றால் - ஆடுகளை ஒரு அறுவடை முடிந்த வயலில் ஒன்று அல்லது ஒரு வாரம் தங்க வைப்பது. ஆட்டின் கழிவு ரோமம் போன்றவை இயற்கையான வுரம். முன்னோர்கள் இந்த விரத்தை பெரிதும் பயன்படுத்தி விவசாயம் செய்தார்கள். கி. ஜான் பிரிட்டோ, சென்னை
Share this comment
Swami Nathan - London,யுனைடெட் கிங்டம்
2011-10-27 16:58:39 IST Report Abuse
ஆடு கிடை போடுவது என்றால் என்ன ? தயவு செய்து யாராவது விளக்கவும்
Share this comment
kumar kullakkattakurichi - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
2011-10-28 12:51:50 IST Report Abuse
ஆடு கிடை போடுவது என்ன்பது வயல்காடில் 200 & 300 ஆட்டை மொத்தமாக நைட் புள்ள அடைத்து வைத்து இருப்பார்கள் இந்த ஆடு போடும் புலுக்கை ,கோமியம் போன்றவை வயலுக்கு சூப்பர் பவர் ,கிடை போட்ட மறு வருடம் இடத்தில பயிர் நல்ல விலையும்...
Share this comment
trp - coimbatore,இந்தியா
2011-10-28 09:03:20 IST Report Abuse
நண்பரே ஆடு கிடைபோடுவது என்னென்றால் ,ஆட்டின் சாணம் மற்றும் அது பெய்யும் சிறுநீர் விவசாயத்திற்கு நல்ல இயற்க்கை உரம் ஆகும் .அதனால் ஆடுகளை வயல் வெளிகளில் சிறுசிறு தடுப்புகள் அமைத்துஅதற்குள் ஆடுகளை இரவுநேரத்தில் அடைத்து பாதுகாப்பார்கள் ,அதற்க்கு வாடகையாக ஆட்டுக்கரருக்கு நிலசொந்தக்கரர் ஒரு தொகை கொடுக்கவேண்டும் .இதனால் ஆட்டுக்கரருக்கு ஒருவருமானம் ,நிலசொந்தக்கரரின் நிலத்துக்கு சொற்ப செலவில் நல்ல இயற்க்கையுரம் .இதுதான் ஆட்டுக்கிடை போடுவது .இதையேதான் கிராமத்தில் " ஆடு மேட்சதுமாத்ரி அண்ணனுக்கு பொண்ணு பார்த்தது மாதரியும் "என்று சொல்லுவார்கள்...
Share this comment
Krishnamoorthy - Singapore,சிங்கப்பூர்
2011-10-28 07:22:55 IST Report Abuse
சுவாமி அவர்களே.... ஆடு கிடை போடுவது என்றால்.... விவசாய நிலத்திற்கு இயற்கை முறையில் உரமிடுவது..... மலை சுமார் ஆறு மணியளவில் எந்த நிலத்திற்கு கிடை போடவேண்டுமோ... அதில் தடுப்பு அமைத்து.. ஆடுகள் அனைத்தையும் அடைத்து வைப்பார்கள்... மறு நாள் விடிந்ததும் சுமார் எட்டு மணிக்கு.. கிடை பிரிக்கப்படும்... ஒரு இரவு முழுவதும் ஆடுகள் வெளியேற்றும் சிறுநீர்.. மற்றும் புளிக்கைகள்... அந்த நிலத்திற்கு உரமாகும்.. இது இயற்கை ஆனது.. அதனால்.. இன்றளவும் விவசாயிகள் இதனை செய்துவருகின்றனர்.... இது போல மாட்டுகிடையும் உண்டு.... இன்னும் ஒங்களுக்கு புரியனும்னால்... சமீபத்தில் விருது வாங்கிய தென்மேற்கு பருவகாற்று திரைபடத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்....
Share this comment
Murugan K G - bangalore,இந்தியா
2011-10-27 16:23:39 IST Report Abuse
You guys do not know about the risk in this. They need to struggle a lot to save these sheeps from any disease which will wipe their investment in a day. Try to understand, In tamil nadu can you see a veterinary doctor anywhere and also to the places where they go. It looks simple. But that is not true. Thanks for seeing the concern in their life style. But the investment what they have is a virtual money and they need to struggle a lot to keep that.
Share this comment
Enna Ithu - Tooting,யுனைடெட் கிங்டம்
2011-10-27 16:22:15 IST Report Abuse
என்னப்பு இப்புடி சொல்லிப்போட்டியே.. உங்க வலைத்தளத்தை நம்ம அரசியல்வாதிகள் பார்த்தா இவங்க கதி என்ன ஆறது?
Share this comment
trp - coimbatore,இந்தியா
2011-10-27 10:23:51 IST Report Abuse
நம்மூர் அரசியல் வாதிகளை நினைக்கையில் இவர்கள் போற்றதகுந்தவர்கள் .உழைப்பைநம்பி உயருபவர்கள் .வாழ்க அந்த கொடிமங்கல வாசிகள்
Share this comment
Sekar - Muthukulathur,இந்தியா
2011-10-26 19:23:46 IST Report Abuse
நண்பரே! சந்தர்ப்பம் கிடைத்தால் அவர்களின் சொந்த ஊருக்கு ஒருமுறை சென்று வாருங்கள். வாயில் விரல் வைத்து அவர்களின் வீடுகளை காண்பீர்கள்.
Share this comment
muzeeb - melur,சவுதி அரேபியா
2011-10-26 17:29:34 IST Report Abuse
all the best
Share this comment
sundaram - Ruwais,ஐக்கிய அரபு நாடுகள்
2011-10-26 14:27:11 IST Report Abuse
1998 ல் சவுதியில் பணி புரிந்த போது மலையாண்டி என்ற பரமக்குடி நண்பரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. என் பதவிக்கும் அந்தஸ்துக்கும் , என் எதிரே நிற்கவே தயங்கிய அவரை இருவருக்கும் பொதுவான "தமிழ்" இணைத்தது. அவருக்கு ஊதியமோ மிகவும் குறைவு. பேச்சுவாக்கில் அவரிடமிருந்து சேகரித்த தகவல் எனக்கு ஆச்சரியம் அளித்தது. " நான் இங்க வேலைக்கு வந்து மூணு வருஷம் ஆச்சு. ஒரு குடிசை வீடு கட்டி முன் புறத்தில் ஒரு சிறிய பெட்டிக்கடை வைத்துக்கொடுத்துள்ளேன் என் பொஞ்சாதிக்கு. வருசா வருஷம் பத்து ஆட்டுக்குட்டி வாங்குவேன். இதுவரைக்கும் நாப்பது ஆடு வாங்கிட்டேன். கீழக்கரை பக்கம் பாய்கள் (இஸ்லாமியர்) இருக்குறதால ரம்சான் பக்ரீத் சமயத்துல நல்ல விலை போகும். அப்பப்போ ஆடுங்களை வயல்ல கிடைக்கு விட்டா நல்லா துட்டு கிடைக்கும். எப்படியும் ஐநூறு ஆடு சேத்துட்டா நான் இந்த வேலையை விட்டுட்டு ஊரை பாக்க போயி சொந்தமா விவசாயம் பண்ணி பொழச்சுக்குவேன்." அவரது நம்பிக்கை என்னை அசர வைத்தது
Share this comment
kumar kullakkattakurichi - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
2011-10-26 13:31:43 IST Report Abuse
நிம்மதியான வாழ்கை நிறைவான மகிழ்ச்சி சொந்த தொழில் வாழ்க வளமுடன்
Share this comment
Raj Raja - ruwais,ஐக்கிய அரபு நாடுகள்
2011-10-26 09:16:07 IST Report Abuse
நானும் இந்த நாடோடிகளை பார்த்து இருக்கிறேன்;;இவர்கள் பார்பதர்க்குதான் ஏழை மக்களை போல் தெரிவார்கள்;;;ஆனால் இவர்களிடம் இருக்கும் சொத்து மதிப்பு பல கோடிகள்;;;;நான் ஒரு ஆடு வாங்க போய் இருந்தேன்;;;;அவர்கள் சொன்ன விலையோ நாலு மாதத்திற்கு வேற ஆடை விற்காமல் இருந்து சாப்பிட கூடிய அளவிற்கு இருந்தது;;;;அன்று முதல் நானும் இவர்களை போல் ஆடு மேய்த்து பொழப்பு நடத்தாலாம் என்று துபாய்க்கு வந்து கஷ்ட்டபட்டு கொண்டு இருக்கிறேன்;;;;;இதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு இவர்களை போல் 100 ஆடு வாங்கி குடும்பத்துடன் சந்தோசமாக வாழனும் நம்ம தமிழ் நாட்டில்;;;வேற எந்த தொழில் தொடங்கியாலும் நாட்டில் வரி கட்டனும்;;;இதில் வரும் வருமானம் பல லச்சம் ஆனால் வரி கட்ட தேவை இல்லை.
Share this comment
CUMBUM P.T.MURUGAN - TRICHY,இந்தியா
2011-10-26 07:50:53 IST Report Abuse
கூடாரங்களில் மன்னர்கள் வசித்தற்கு,இதுவும் ஒரு காரணம் போல.
Share this comment
CUMBUM P.T.MURUGAN - TRICHY,இந்தியா
2011-10-26 07:18:41 IST Report Abuse
போர்காலங்களில் மன்னர்கள் இவர்களை பார்த்து தான்,' கூடாரம்' அமைத்திருப்பார்கள் போல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக