வெள்ளி, 28 அக்டோபர், 2011

தீக்குச்சிகளால் உருப்பெற்ற தாசுமகால் (படங்கள் இணைப்பு)

தீக்குச்சிகளால் உருப்பெற்ற தாஜ்மஹால் (படங்கள் இணைப்பு)

காதல் சின்னமான தாஜ்மஹாலை அறியாதவர்கள் எவருமில்லை. அத்தகைய சின்னம் பல்வேறுபட்ட ரீதியில் நமக்கு நினைவில் நிற்கிறது.
பரிசுப் பொருட்களாக, அலங்காரப் பொருட்களாக என பல விதத்தில் தாஜ்மஹால் நம்மிடையே வலம் வருகிறது.
உலக அதிசயமான தாஜ்மஹாலை நிர்மாணிப்பதற்கு 20,000 தொழிலாளர்களும் 1000 யானைகளும் சேர்ந்து 22 வருடகாலத்தில் கட்டி முடித்தனர்.
இத்தகைய தாஜ்மஹால் அமைப்பை ஒத்த உருவம் ஒன்றை கலைஞர் ஒருவர் தீக்குச்சிகளால் அமைத்துள்ளார்.
வட இந்தியாவில் 22வயதுடைய ஷேக் சலிம்பாய் என்ற கலைஞரே இந்த தீக்குச்சிகளால் ஆன தாஜ்மஹாலை உருவாக்கியுள்ளார்.
இவ் உருவை அமைப்பதற்கு அவருக்கு ஒரு வருடமும் 19நாட்களும் எடுத்தன. இத் தாஜ்மஹாலை உருவாக்குவதற்கு 75000 தீக்குச்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தீக்குச்சியால் மட்டுமன்றி தாஜ்மஹாலை உணவுப் பண்டங்களாலும் வடிவமைத்துள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக