வெள்ளி, 14 அக்டோபர், 2011

மூவர் உயிர் காக்கும் உண்ணா நிலையில் நாங்கள் தமிழர்கள் - புகழ்ச்செல்வி [படங்கள்]

மூவர் உயிர் காக்கும் உண்ணா நிலையில் நாங்கள் தமிழர்கள் மற்றும் புகழ் செல்வி [படங்கள்]

சாவுத் தண்டனையிலிருந்து மூவர் உயிர் காக்க மரண தண்டனைக்கு எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் நடைபெறும், உண்ணா நிலை போராட்டத்தின் 21 நாளான இன்று நாங்கள் தமிழர்கள் தமிழர் விழிப்புணர்வு இயக்கத்துடன் புகழ் செல்வி திங்கள் இதழும் இணைந்து உண்ணா நிலையில் ஈடுபட்டன.
காலை 10 மணிக்கு உண்ணா அறப் போரை பெருந் தமிழர் சௌந்தராஜன் அவர்கள் துவக்கி வைத்து தமிழகத்தின் முதல் பெண் போராளி செங்கொடியின் புகைப்படத்திற்கு ஒளிசுடர் ஏற்றி வீரவணக்கம் செலுத்தி சிறப்புரை ஆற்றினார்.வரவேற்புரை மகேந்திர வர்மன் அவர்களும்,அவரை தொடர்ந்து புகழ் செல்வி ஆசிரியர் பரணி பாவலன்,நாங்கள் தமிழர்கள் தமிழர் விழிப்புணர்வு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ் தேவன்,கல்பாக்கம் தமிழ்மணி , அழகுமலை, புகழ்ச் செல்வி பன்னீர் செல்வம் உட்பட உண்ணா நிலையில் பங்கேற்ற பல்வேறு தோழர்கள் உரை ஆற்றினர்.
மதியம் செங்கொடியின் இறுதி கட்ட நிகழ்வின் ஒளி படம் திரையிடப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியாக புலவர் ரத்தினவேல் அவர்களும் தமிழர் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் அதியமான் ,மூசு ரத்தினசாமி உரை ஆற்ற பேரறிவாளன் தாய் அற்புதம் அம்மாள் பழச்சாறு கொடுத்து உண்ணா நிலையை முடித்து வைத்தார்.
சிறப்பாக நடத்தப்பட்ட இந் நிகழ்வில் பல்வேறு அமைப்பு தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
You might also like:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக