செவ்வாய், 11 அக்டோபர், 2011

வெங்காயம் - உண்மையான திரைப்படம் - சேரன் நெகிழ்ச்சி

இதுதான் உண்மையான தமிழ் சினிமா : இயக்குநர் சேரன் நெகிழ்ச்சி

 1 vote, average: 5.00 out of 51 vote, average: 5.00 out of 51 vote, average: 5.00 out of 51 vote, average: 5.00 out of 51 vote, average: 5.00 out of 5 (1 votes, average: 5.00 out of 5, rated)
இரு நாட்களுக்கு முன்பு வெளியான படம் வெங்காயம். சேலம் மாவட்டம் சங்ககிரிக்கு அருகிலுள்ள பூலாம்பட்டியைச் சேர்ந்த இளைஞர் சங்ககிரி ராச்குமார் இயக்கிய படம். அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்களே நடித்துள்ளனர். ரொம்பவும் அனுபவசாலிகளைப் போல நடித்திருக்கிறார்கள். மூடநம்பிக்கைக்கு எதிரான இந்தப் படம் சினிமா இலக்கணங்களோடு சுவாரசியமாக இருக்கிறது. எல்லோருமே சேலத்து வட்டாரவழக்கைப் பேசி சிரிக்க வைக்கிறார்கள். நெகிழ வைக்கிறார்கள். அழ வைக்கிறார்கள். கௌரவத் தோற்றத்தில் வரும் சத்யராஜ் தவிர மற்ற அனைவருமே சினிமாவில் தலைகாட்டாத கிராமத்து பாமரர்கள். அந்த கிராமமும் பேச்சுவழக்கும் நம்மை அந்த திரைக்குள் கட்டிப் போடுகிறது. தமிழ் சினிமாவில் யாராவது திடீரென சிறு பொறியை போட்டுவிட்டுப் போவார்கள். அப்படியொரு சிறு பொறியாக வெங்காயம் வந்திருக்கிறது.

இப்படத்திற்கான போதிய விளம்பரம் இல்லாமல் சாதாரண தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதன் சிறப்புக் காட்சியை இயக்குநர் சேரன், நடிகை ரேவதி, ரோகிணி ஆகியோர் பார்வையிட்டனர். அனைவரும் நெகிழ்ந்து போய் கைதட்டிப் பாராட்டினார்கள். இயக்குநர் சேரன் நெகிழ்ச்சியுடன் இயக்குநரை கட்டியணைத்துக் கொண்டார். “இதுதான் உண்மையான தமிழ் சினிமா. எந்த நடிகர்களாலும் இப்படி நடிக்கமுடியாது. நான் பத்து படங்களை எடுத்துவிட்டேன். நான் வெட்கப்படுகிறேன். கிராமத்து வாழ்க்கையின் அசலான முகம் இந்தப் படத்தில் வெளிப்பட்டிருக்கிறது. இது மிகப்பெரும் சினிமாவாக பேசப்படும்” என்று சேரன் பாராட்டியதும் இயக்குநர் ராச்குமார் கண்ணீர் விட்டு அழுதே விட்டார். நீ பெரிய இயக்குநரா வருவய்யா. பெருமையாக இருக்குய்யா என்று கையைப் பிடித்துக்கொண்டு மீண்டும் சேரன் நெகிழ்ந்துபோய் பாராட்டிக் கொண்டிருந்தார். அப்படத்தின் இயக்குநரே ஒளிப்பதிவு, இயக்கம், நடிப்பு என சிறப்பாக செய்திருக்கிறார். அவரது தந்தையே படத்தின் தயாரிப்பாளர். அவரும் ஒரு கூத்துக்கட்டும் கலைஞானாக வெகு எதார்த்தமாக நடித்திருக்கிறார்.
தமிழ்த் திரைப்பட இயக்குநர்களுக்கு வெங்காயம் படத்தின் சிறப்புக் காட்சியை ஏற்பாடு செய்துவருகிறார் இயக்குநர் சேரன்.

1 கருத்து:

  1. சேரன் ஒரு மாபெரும் கலைஞர் .ஆரியர்கள் தான் இயக்குனர்களாக இருக்க வேண்டும் என்ற சட்டத்தை உடைத்து எறிந்தவர்.அற்புத நடிகரும் கூட .தவறு கண்டால் கண்டிப்பார். நல்லது என்றால் ஓடி வந்து பாராட்டுவார் .நெய்வேலியை சேர்ந்த டாக்டர் சிவகொகுல்ராஜன் எடுத்த திட்ட குடி இவர் பார்த்தார என்பது புரிய வில்லை .அதிலும் யதார்த்தம் நிறைய உள்ளது .சிவா ஏன் அருமை நண்பர் மிக பெரும் செல்வந்தர்.தன டாக்டர் தந்தையை மிகவும் எதிர்த்துக்கொண்டு இந்த படம் எடுத்து கையை சுட்டுக்கொண்டவர். சுட்ட புண்ணுக்கு சேரன் ஒத்தடம் கொடுக்கலாமே !

    பதிலளிநீக்கு