ஞாயிறு, 3 ஜனவரி, 2010

செம்மொழிக்கான நிதியை பயன்படுத்த நம்மிடம் திட்டம் இல்லை:
பேராசிரியர் க.ராமசாமி



சிவகாசி, ஜன. 2: தமிழை செம்மொழியாக மத்திய அரசு அறிவித்தது அதற்கான நிதி ஒதுக்கியும் அந்த நிதியைப் பயன்படுத்த நம்மிடம் திட்டம் இல்லை என சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பொறுப்பு அலுவலர் பேராசிரியர் க.ராமசாமி கூறினார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சிவகாசி காளீஸ்வரி கல்லூரி தமிழ்த் துறை ஆகியவை இணைந்து, பண்டைய இலக்கியப் பாத்திரங்கள் என்பது குறித்து பயிலரங்கம் நடத்துகின்றன. சனிக்கிழமை நடைபெற்ற தொடக்க விழாவில், தொடக்கவுரை மற்றும் நோக்கவுரையும் ஆற்றி ராமசாமி பேசியதாவது: தமிழ் இலக்கியம் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும், தமிழ் படிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தென்மாநிலங்களில் இது போல பல பயிரலங்கங்களை நடத்திவருகிறோம். தமிழை செம்மொழியாக அறிவிக்க நூறு ஆண்டு காலம் போராட வேண்டியிருந்தது.சூரியநாராயண சாஸ்திரி பல போராட்டங்களை நடத்தினார். பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்தின. முதல்வர் கருணாநிதியும் 13 ஆண்டுகள் போராடிய பின்னர், தமிழை செம்மொழியாக மத்திய அரசு அறிவித்தது. தமிழ் வரலாற்றில் இது ஒரு மைல்கல் ஆகும். இது மத்திய அரசு நமக்குக் கொடுத்த அட்சயபாத்திரம். நாம் போராடிப் பெற்ற செம்மொழி உரிமையை பயன்படுத்த ஆள் இல்லாத நிலை உள்ளது. தமிழர்களுக்கு தமிழ் உணர்வு வேண்டும். தாய்மொழியின் அருமையை புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் இலக்கியங்களை எந்த மொழியிலும் மொழி பெயர்க்கலாம். அதற்கு நிதி உள்ளது. ஆனால் மொழி பெயர்க்க ஆள் இல்லை. தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட பின்னர் உலகம் நம்மை திரும்பிப் பார்க்கிறது. ஆனால் நம்மிடம் சரியான திட்டம் இல்லாமல் திண்டாடி வருகிறோம். தமிழ் படித்தால் வேலை கிடைக்குமா என மாணவர்கள் நினைக்கிறார்கள். இது தவறு. பல வேலைக்கு தகுதியான நபர்கள் தேவைப்படுகிறார்கள். தமிழ் ஆய்வுக்கு பெரும்பாலும் பெண்களே வருகிறார்கள். தமிழக முதல்வர் தமது சொந்தப் பணத்தில் ரூ. 1 கோடியில் அறக்கட்டளை அமைத்துள்ளார். அதன் மூலம் சிறந்த தமிழ் அறிஞர்களுக்கு பரிசு மற்றும் விருது வழங்க உள்ளார். கி.பி. 6 ஆம் நூற்றாண்டு வரை தமிழ் செவிவழி காலம் என தெரியவந்துள்ளது. அதற்கு முந்தைய நிலை குறித்த ஆய்வு வேண்டும். மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மடல்கள் வெளியிடுகிறோம். அதை மாணவர்கள் படிக்க வேண்டும். தமிழ் குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் வரவேண்டும் என்றார்.
கருத்துக்கள்

19 அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் இருந்த தமிழ் இரு்க்கைளில் 18 மூடப்பட்டு எஞ்சிய ஒன்றும் மூடப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது. எனவே, இவ்வலவரங்களைத் துடைப்பதற்குரிய நிதியுதவியையும் அதிகாரத்தையும் செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்துக்கு உடனே வழங்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/3/2010 2:49:00 AM

ஆய்வுகளுக்கும் கருத்தரங்கங்களுக்கும் போதிய திட்டங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் தமிழ் மொழியைப் பரப்ப எண்ணற்ற திட்டங்கள் உள்ளன. பிற மாநிலங்களிலும் பிற நாடுகளிலும் தமிழ்த்துறைகளை உருவாக்க வேண்டும். இதனை இந்திய மொழிகள் துறை என்ற பெயரில் இல்லாமல் தமிழ்ச் செம்மொழித் துறை என்றே உருவாக்க வேண்டும். செம்மொழி என்று அறிவிக்காமலேயே சமற்கிருதம், அரபி முதலான மொழிகளைக் கற்பிக்கவும் கற்கவும் மத்திய அரசு நிதி உதவிஅளிப்பது போல் தமிழ் மொழியைக் கற்பிக்கவும் கற்கவும் நிதி உதவி அளிக்க வேண்டும். இந்தி மொழி இலக்கிய இதழ்களுக்கு அரசு விளம்பரங்கள் தந்து ஊக்கப்படுத்துவது போல் தமிழ் இலக்கிய இதழ்களுக்கு விளமபரங்கள் தந்து ஊக்கப்படுத்த வேண்டும். சமற்கிருத, இந்தி வளர்ச்சிக்கு மேற்கொள்ளப்படும் திட்டங்களை அப்படியே பின்பற்றினால் போதும். செயலாற்றலும் ஆர்வமும் மிக்கப் பொறுப்பு அலுவலர் பேராசிரியர் முனைவர் இராமசாமி அவர்கள் நிறை வேற்றி விடுவார். ஆனால், மத்திய அரசு அதற் கெல்லாம் நிதி ஒதுக்க வில்லை. 19 அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் இருந்த தமிழ் இரு்க்கைளில் 18 மூடப்பட்டு எஞ்சிய ஒன்றும் மூடப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு

By Ilakkuvanar Thiruvalluvan
1/3/2010 2:48:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக