பிரின்சஸ் கிருஸ்டீனா உண்மையில் புலிகளின் கப்பல்தானா?
உலகளாவிய ரீதியில் சில நிறுவனங்கள் மட்டுமே கடல்போக்குவரத்தில் ஈடுபடும் சரக்குக் கப்பல்களின், உரிமையாளர், அது தாங்கும் கொடி அது எப்போது முதன்முதல் பதிவுசெய்யப்பட்டது என்பன போன்ற விபரங்களைச் சேகரித்து வைத்திருக்கின்றனர். இதற்கமைவாக வெசல் ரக்கர் நிறுவனத்தின் இணையத் தளத்தில் இக் கப்பல் தொடர்பாக சில விடயங்கள் இருப்பதை அதிர்வு இணையம் அறிந்தது.
முதலில் இலங்கை அரசு கூறுவதுபோல இது பிரின்சஸ் கிருஸ்டீனா என்ற பெயருடைய கப்பல் அல்ல. அதன் உண்மையான பெயர் ""பிரின்சஸ் கிரிஷாந்தா"" அதற்கான ஆதாரம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் சரக்குக் கப்பல்களை அடையாளம் காணும் சுட்டென்: IMO: 812993100 தேடுதலின் போது, இக் கப்பல் எப்போது பதிவுசெய்யப்பட்டது, மற்றும் அது குறித்த அனைத்து விபரங்களும் குறிப்பிட்ட இணையத்தில் மறைக்கப்பட்டுள்ளது. சரி வேறு சில கப்பல்களின் தகவல்களும் மறைக்கப்பட்டுள்ளபோதும், இக் கப்பல் குறித்து தாம் எதுவித கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.
இது இவ்வாறு இருக்க ஆசிய அல்லது மத்திய கிழக்கு நாடொன்றில் பனாமா நாட்டுக் கொடியுடன் கடல்பயணத்தில் இருந்தவேளையே தாம் இந்தக் கப்பலை மடக்கியதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்தது. இருப்பினும் பிரேசிலின் வடபகுதியில் லத்தீன் அமெரிக்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உள்ள ஒரு சிறிய நாடான செயின் வின்சன்ட் கிராண்டினீஸ் என்ற நாட்டுக் கப்பலாக இது பதியப்பட்டதுடன், அக் கொடியுடனே இது பயணிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இக் கப்பல் முதல் முதலில் வாங்கப்பட்ட தேதி மற்றும் கடைசியாக விற்கப்பட்ட தேதி என்பனவற்றை பெறும் முயற்சியில் நாம் ஈடுபட்டுள்ளோம். இத் தகவல்கள் கிடைக்கப்பெறும் போது மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை அரசானது தனது தேர்தல் பிரசார நடவடிக்கையின் ஓர் அங்கமாகவே இக் கப்பலை இங்கைக்குக் கொண்டுவந்தது எனப் பலராலும் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.
சோமாலியக் கடற்கொள்ளையர்கள் காரணமாக இந்துமகா சமுத்திரத்திலும், பசுபிக் சமுத்திரத்திலும் சர்வதேச காவற்படையினர் பலர் கடமையில் ஈடுபட்டுள்ள இந்தவேளை, ஒரு கப்பலை உரிமைகோராமல், அல்லது அதற்கான தகுந்த ஆவணங்கள் இல்லாது அக் கப்பலை கைப்பற்றுவது அவ்வளவு சுலபம் அல்ல. கப்பல் மாலுமி தனக்கும் கப்பலுக்கும் ஆபத்து என்று தொலை அழைப்பை மேற்கொண்டால், சிறிது நேரத்திலேயே அங்கு சர்வதேச காவல் படையினர் வரும் சாத்தியக்கூறுகள் இருப்பதையும் நாம் மறுக்க முடியாது.
Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 14196
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக